Followers

Thursday, April 30, 2020

முடக்கத்தான் போதும்!


நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களையும் நடக்க வைக்கும் அற்புத மூலிகையான, முடக்கறுத்தான் பற்றி, சித்த மருத்துவர், 'அல்மா' வேலாயுதம்: நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டால், உயர் ரத்த அழுத்தம் குறையும்; உடல் எடை குறையும்; எலும்புகள், தசைகள் வலுப் பெறும்.ஆனால், முடக்குவாதம் பாதிப்பு உடையவர்களுக்கு, நடமாட முடியாது; நடைபயிற்சி மேற்கொள்ள முடியாது. முடக்குவாதம், ஆண்களை விட, பெண்களையே அதிகமாக தாக்குகிறது. இந்த நோய், கால்களை மட்டுமின்றி, இதயம், நுரையீரலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இத்தகைய கொடுமையான முடக்குவாதத்தை கட்டுப்படுத்தும் திறன், படர்ந்து கிடக்கும், முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் செடிக்கு உள்ளது. ஆரோக்கிய சமையலில் இடம்பிடித்துள்ள இந்த முக்கிய மூலிகையை, சூப் ஆக தயாரித்தும், தோசையாக வார்த்தும், துவையலாக அரைத்தும், கஷாயமாக மாற்றியும் பயன்படுத்தலாம்.

முடக்கத்தான் தோசைக்கு அரைக்க, அரிசி மாவுடன் உளுந்து சேர்க்க தேவையில்லை. உளுந்து அளவுக்கு இந்த கீரையை சேர்த்து அரைத்து, தேசையாக சாப்பிடலாம். இதை, அடையாகவும் தயாரித்து சாப்பிடலாம். உடல் வலி, அலுப்பு காணாமல் போய் விடும்.இதன் இலையை, தேநீர் போல தயாரித்து அருந்தினால், உடல் சோர்வு மறைந்து, உற்சாகம் பிறக்கும். துவையலாக அரைத்து சாப்பிட, முடக்கத்தான் கீரை மூன்று கைப்பிடி, தேவையான அளவு மிளகாய் வற்றல், புளி, வெந்தயம், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை அரைத்து, விளக்கெண்ணெயில் வதக்கி, நன்கு அரைத்து, சாதத்துடன் தொட்டு அல்லது பிசைந்து சாப்பிட முடியும்.சூப் ஆக தயாரிக்க, இரண்டு கைப்பிடி முடக்கத்தான் இலை தேவைப்படும்.

அவித்து வரும் தண்ணீருடன், வெங்காயம், தக்காளி, சோள மாவு, உப்பு ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கொதிக்க விட்டு, சூப் போல வந்ததும் பருக வேண்டியது தான்.உடல் சோர்வு, இடுப்பு வலி போன்ற பிரச்னைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, முதுகுத்தண்டு தேய்மானம், எலும்பு தேய்மானம், மூட்டு தேய்மானம் போன்ற பிரச்னைகள் வராமல் வாழலாம். 40 வயதைத் தாண்டியவர்கள், வாரம் ஒரு முறையாவது, முடக்கத்தான் கீரையை பயன்படுத்துவது, நல்ல பலனைத் தரும். மிகவும் எளிமையான முறையில், இந்த மூலிகையை பயன்படுத்த முடியும். இந்த கீரையை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் குணமாகும்!


courtesy;Dinamalar.
=======================================

 முடக்கத்தான் போதும்!

புதிய வைரஸ் உருவாகும்

' கணித்து சொன்ன பஞ்சாங்கம்.

 
 'புதிய வைரஸ், உருவாகும், கணித்து, சொன்ன ,பஞ்சாங்கம்

'உலகில், புதிய வைரஸ் நோய் உருவாகும்' என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து
கூறியுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும், 'கொரோனா' வைரஸ், மக்களை பீதியடைய செய்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும், தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.இதுபோன்ற, புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து சொல்லியுள்ளது.

விகாரி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில், 'குரு பகவான் உடன்- சனி கூட்டணி ஏற்பட்டு,
பிரம்மஹத்தி தோஷம் பெற்று இருப்பதால், உலகத்தில், புதிய கிருமி நோய் உருவாகும். எந்த கெட்ட பழக்கம் இல்லாதவர்களுக்கும், சிறுநீரக நோய், 'கேன்சர்' கடுமையாக பாதிக்கும்.
அதனால், மக்கள் கடும் அவஸ்தைப்படுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019 ஏப்., மாதம் வெளியான இந்த ஆற்காடு பஞ்சாங்கத்தில், உலகில் ஏற்பட்டவுள்ள
பல்வேறு மாற்றம் குறித்து முன்னரே, துல்லியமாக கணித்து கூறப்பட்டுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- நமது நிருபர் --
எல்லாமனிதரையும் இருகேள்விகேளுங்கள்!
"விடியும் பொழுது மலச்சிக்கலில்லாமல் விடிகிறதா?
உறங்கும் போது மனச்சிக்கலில்லாமல் உறங்க முடிகிறதா?"
-கவிஞர் வைரமுத்து
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: இளம் வயதிலேயே கனக சுப்புரத்தினத்திற்கு கவிதை மீது மிகுந்த ஆர்வம். பாரதியார் எழுதிய சில பாடல்கள், 'சுதேச கீதங்கள்' எனும் தலைப்பில், சிறு பிரசுரமாக வெளியாகி, பலருக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. பாரதியின் சீடர் குவளை கிருஷ்ணமாச்சாரி, அப்பாடல்களை சுப்புரத்தினத்திற்கு கொடுத்தார். அதைப் படித்ததும், பாடல்களில் மயங்கிப் போனார் சுப்புரத்தினம்.
என்றும் அன்புவணக்கம் சகோ தோழமை களே......................
ஆரோக்கியத்தின் அடையாளம்!................
மாற்றத்திற்கு உட்பட வேண்டியவன் மனிதன். சில மாற்றங்கள் நம்மை ஆரோக்கியமாக்கும்; சில அர்த்தமுள்ளதாக்கும்; சில, நம்மை அழிக்கவும் கூடும். மூன்றாவது வகையான மாற்றங்களால் தான், இன்றைய சமுதாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை, நம் பழக்க வழக்கங்கள் நவீனமாகி போனதால், உடல் உழைப்பு குறைந்து, இயல்பாக கிடைக்கும் நல்ல விஷயங்களையும், நாகரிகத்தின் பெயரில் இழந்து வருகிறோம். அதற்கு மிக பெரிய உதாரணம், வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும், மேற்கத்திய முறை கழிப்பறைகள்!
இதைக் கேட்டு பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறையை பயன்படுத்துவதில் ஒரு மனிதனின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.
ஆதிகாலத்தில், மனிதன் தன் உடல் கழிவுகளை வெளியேற்ற பயன்படுத்தியது தான், குத்த வைக்கும் முறை! காலைக் கடன் கழிக்கும் இந்த ஆசனத்திற்கு, 'மலாசனம்' எனப் பெயர்.
இந்த ஆசனத்தால் குண்டலினி சக்தி மேல் எழும்பி, மலச்சிக்கல் பிரச்னைகள் தீருவதுடன், கால் மற்றும் முதுகு உறுதியடைகிறது.
கடந்த 19ம் நூற்றாண்டில், நாற்காலியில் உட்காரும் அமைப்பை கொண்ட கழிப்பறைகள், மேற்கத்திய நாடுகளில் பரவின. ஆரம்பத்தில், உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்காக, இத்தகைய கழிப்பறை உருவாக்கப்பட்டது. பின், சவுகரியம் கருதி, அனைவரும் பயன்படுத்த துவங்கினர்.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த வசதி, தற்போது, சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் விதமாக அனைத்து இல்லங்களிலும், குடியேறி விட்டது.
இந்திய முறை கழிப்பறையில், குத்த வைத்து அமரும் முறையில், இயற்கையான அழுத்தத்தால் கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், வெஸ்டர்ன் டாய்லெட்டில் இயற்கை அழுத்தம் ஏற்படாததால், கழிவுகளும் முழுமையாக வெளியேறுவதில்லை.
வெளியேறாத கழிவுகள், மலக்குடலில் தேங்கி, நோய் தொற்றை ஏற்படுத்துவதுடன், இந்த கிருமிகள், அதை சுற்றியிருக்கும் திசுக்களிலும் பரவுவதால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். டாக்டர் புக்ரிட் மற்றும் டாக்டர் ஹென்றி போன்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் முடிவில், 'இந்திய கழிப்பறையே சிறந்தது...' என்று கூறியுள்ளனர்.
மேலும், கருவுற்ற பெண்கள், இந்திய கழிப்பறையை பயன்படுத்தினால், கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப்பிரசவமாகும் என, ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரோக்கிய வாழ்க்கை முறையை உலகிற்கு பயிற்றுவித்த இந்தியர்கள், இன்று மேற்கத்திய நாகரிகத்துக்கு அடிமையாகி விட்டனர்.
ஒரு காலத்தில், நம் நாட்டில் கரி மற்றும் உப்பில் பல் துலக்கியவர்களை பார்த்து, அநாகரிகம் என்றவர்கள், 'இன்று உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா, கரி இருக்கிறதா...' என்கின்றனர். நாம் கடவுள் முன் போட்ட தோப்புக்கரணம் தான், இன்று மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும், 'சூப்பர் பிரைன்' யோகாசனம்!
பெரும்பாலான நேரத்தை நாற்காலியில் செலவிடும் நாம், இயற்கையாக கிடைக்கும் உடற்பயிற்சிகளை, இழந்து விட கூடாது. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும், ஆரோக்கியத் தத்துவத்தையும், உடற் பயிற்சிகளையும் கற்றுக் கொடுப்பது தான் நம் பாரம்பரியம்.
மனிதனுக்கு மனச்சிக்கலும், மலச்சிக்கலும் இருக்கவே கூடாது; இருந்தால், அவன் வாழ்வே போராட்டம் தான்.
யோசிப்போம்!
ஷோபனா திருநாவுக்கரசு
அன்பு நன்றி சகோ.
======================================
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: இளம் வயதிலேயே கனக சுப்புரத்தினத்திற்கு கவிதை மீது மிகுந்த ஆர்வம். பாரதியார் எழுதிய சில பாடல்கள், 'சுதேச கீதங்கள்' எனும் தலைப்பில், சிறு பிரசுரமாக வெளியாகி, பலருக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. பாரதியின் சீடர் குவளை கிருஷ்ணமாச்சாரி, அப்பாடல்களை சுப்புரத்தினத்திற்கு கொடுத்தார். அதைப் படித்ததும், பாடல்களில் மயங்கிப் போனார் சுப்புரத்தினம்.
ஒருமுறை, பாண்டிச்சேரி வீதியில் முதன்முதலாக, பாரதியை பார்த்தார் சுப்புரத்தினம்; ஆனால், அவர் தான் பாரதி என்பது அவருக்கு தெரியாது. அவரைப் பார்த்ததும், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மா வரைந்த, 'பரமசிவம்' எனும் ஓவியமே அவரது நினைவுக்கு வந்தது. அதனால், அன்று முதல் அவரது மனதில், பாரதியின் முகம், 'ரவிவர்மா பரமசிவம்' என்ற பெயரால் பதிந்து விட்டது.
பின், வேணு நாயக்கர் என்பவரின் திருமண விழாவில் நடந்த பாட்டுக் கச்சேரியில், பாரதியாரின், 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ...' எனும் பாடலை கணீர் குரலில் பாடினார் சுப்புரத்தினம். அந்நிகழ்ச்சிக்கு பாரதியும் வந்திருந்தார்.
பாடி முடித்ததும், சுப்புரத்தினத்திற்கு, பாரதியை காட்டி, 'இவரை யார் என்று தெரியுமா?' என்று கேட்டார் வேணு நாயக்கர்.
'தெரியாது...' என்றார் சுப்புரத்தினம். அப்போது பாரதி குறுக்கிட்டு, 'தமிழ் வாசித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். 'கொஞ்சம் படித்திருக்கிறேன்...' என்றார் சுப்பு ரத்தினம். 'அதனால தான், பாடலை உணர்ந்து பாடுறீங்க...' என்று அவரை பாராட்டினார் பாரதி.
'சுப்பு... இப்ப நீ பாடினாயே... இந்த பாட்டையெல்லாம் எழுதின பாரதி இவர் தான்...' என்று கூறி, பாரதியை அறிமுகப்படுத்தினார் வேணுநாயக்கர்.
அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர அடைந்த சுப்புரத்தினத்திடம் சிறிது நேரம் பேசிய பாரதி, வேணு நாயக்கரிடம், சுப்புரத்தினத்தை தம் வீட்டிற்கு ஒருமுறை அழைத்து வருமாறு அழைப்பு விடுத்தார்.
இருவரும், ஒருநாள் பாரதி இல்லம் சென்றனர். அன்று முதல் சுப்புரத்தினம், பாரதியின் சீடராகவும் ஆனார். பாரதி சொல்வதை எழுதுவதும், அவர் எழுதியதை பிரதி எடுப்பதும் அவரது பணியாயிற்று.
பாரதி மீது கொண்டிருந்த அன்பு மிகுதியால், தன் பெயரை, 'பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டார்.
மறைந்த நடிகர் டி.எஸ். பாலையா, 'குண்டூசி' சினிமா இதழில் (1954) எழுதியது: என் முழுத் திறமையையும், உற்சாகத்தையும் திரட்டி, என்றென்றும் மறவாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, நானும் மகிழ்ந்து, மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே, என் நீண்ட நாளைய கனவு; லட்சியம். அதற்கேற்ற வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ என்ற ஆங்கில படத்தில் வரும், மாண்டி கிறிஸ்டோ போன்ற கதாபாத்திரத்தை, தமிழில் சிருஷ்டிக்க வேண்டும்; முடியும் என்றே நினைக்கிறேன். இதுவரை, நான் நடித்த எந்தப் படமும் எனக்கு முழு திருப்தியைத் தராத போதிலும், என் லட்சியத்தை ஒருவாறு எட்டிப்பிடித்த படங்களுள், வேலைக்காரி படத்துக்குத் தான் முதலிடம்! அப்படத்தில், பழி தீர்க்கும் படலக் காட்சி, சினிமா ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
பணத் திமிரால், மனிதத் தன்மையை இழந்த வேதாசல முதலியாரின் கொட்டத்தை அடக்க, நான், ஆனந்தனுக்கு (கே.ஆர்.ராமசாமி) சூழ்ச்சி சொல்லிக் கொடுக்கும் காட்சி வருகிறதல்லவா? நான் படங்களில் தோன்றிய எல்லா காட்சிகளையும் விட, அக்காட்சி தான், ஏ ஒன்!
நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி சகோ.....
============================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=================================

மாமன்னன் மனுநீதிச் சோழன்............


மாமன்னன் மனுநீதிச் சோழன்

வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.

மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.

அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.

பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.

"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும். என்று முடிவு செய்தான்.

உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .

.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.

என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.

விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.

நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!

திருவாரூரில் மனுநீதி சோழன் கல் தேர், திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட வளாகத்தில் இருக்கும் கல் தேர் மண்டபம்.

'வாயில்லா ஜீவனின் உணர்வும், தன் மகனின் உயிருக்கு இணையானது' என்று மதித்தவன் மனுநீதி சோழன். அப்படிப்பட்ட அரசர்கள் ஆண்ட நாடு நம் தமிழகம்.✍
----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

====================================
'வாயில்லா ஜீவனின் உணர்வும், தன் மகனின் உயிருக்கு இணையானது' என்று மதித்தவன் மனுநீதி சோழன். அப்படிப்பட்ட அரசர்கள் ஆண்ட நாடு நம் தமிழகம்.
மீண்டும் பள்ளிப்பருவத்தில் படித்த நீதிக்கதையில் ஒன்று, அருமையான பகிர்வு ஐயா.

அன்புடன்
விக்னசாயி.
=============================

பெரும்பாலான ஆண்கள், தங்கள் மதுப் பழக்கத்திற்கு காரணம் பெண்கள் தான் என்று கூறுகின்றனரே...
'நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு...' என்பதைப் போல், இவர்களுக்கு தன்னை மறந்த போதையில் மிதக்க வேண்டும்; அதற்கு இது ஒரு சாக்கு!
எல்லோர்க்கும் என்றும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே.............................பலதும் பத்தும், நாட்டு நடப்பு உங்களுடன்...............................
என்.வேணுகோபாலன், கிருஷ்ணகிரி: பெரும்பாலான ஆண்கள், தங்கள் மதுப் பழக்கத்திற்கு காரணம் பெண்கள் தான் என்று கூறுகின்றனரே...
'நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு...' என்பதைப் போல், இவர்களுக்கு தன்னை மறந்த போதை வேண்டும்; அதற்கு இது ஒரு சாக்கு!
எஸ்.எம்.பவுன்ராஜ், தல்லாகுளம்: ஆண்களை விட, பெண்களுக்கு, 'ஹியூமர் சென்ஸ்' குறைவு என்கிறேன்... சரி தானே!
சரியில்லை; பள்ளிக்கூட பாப்பா துவங்கி, கல்லூரி கன்னியர் வரை அடிக்கும் ஜோக்குகளும், 'இன்டர்நெட்'டில் பெண்கள் அவிழ்த்து விடும் தமாசுகளும் வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவற்றில், 'ஏ'ஜோக் சொல்வதில் ஆண்களை மிஞ்சி விடுகின்றனர் சில பெண்கள். உங்கள் ஏரியாவிலும், அத்தகைய பெண்கள் இருக்கலாம். சமுதாயம், சொந்தக்காரர்கள், அடுத்த வீடு, தெரு என, பயந்து அடக்கி வாசிப்பவர்களாக இருக்கும்; ஆராய்ந்து பாருங்கள்!
வி.கல்யாண், தேனி: வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்புடன் கல்வியை இழந்தவன் நான். என்னால், வாழ்க்கையில் முன்னேற முடியாதா?
மூளையை பயன்படுத்தாதவனால் தான் முன்னேற முடியாது. உங்கள் ஊரையே எடுத்துக் கொள்ளுங்களேன்... இன்று, அங்கு பணத்திலும், புகழிலும் பிரபலமாக இருப்பவர்களில் எத்தனை பேர் பள்ளிப் படிப்பை தாண்டியவர்கள் எனக் கணக்கெடுத்தால், . வெகு சொற்பமே தேறுவர். படிக்காத மேதைகளாக திகழ்ந்தோர், உலகில் பலர் உண்டு. அந்நிலையை அடைய, அவர்கள் பயன்படுத்தியது தம் மூளையை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
டி.ஆரோக்கியசாமி, தாம்பரம்: அன்போடு சிரித்து பேசினால், கடன் கேட்கின்றனரே...
உண்மைதான்; அதனால் தான், முக்கால்வாசி தமிழன், பானை போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதில் பிரகாசமே இல்லாமல் போய் விட்டது முகம்! இவ்வாறு செய்யாமல், 'நோ' சொல்லும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 'இவனால் முடியாது...' என்று சொல்லும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது ஒன்றும் சிரமம் இல்லை!
ந.சத்தியநாரயணன், சென்னை: ஒவ்வொரு பரபரப்பான விஷயமும் நான்கு நாட்களுக்கு மட்டுமே பரபரப்பாக பேசப்படுவதும், பின்னர் அதை சுத்தமாக மறந்து போவதும் ஏன்?
புதிய புதிய பரபரப்புகளை பார்க்க, படிக்க, பேச பழகி கொண்டு விட்டோம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஐந்தாவது நாளும், வேறு பரபரப்பு செய்தி வந்து விடுகிறதே!
வி.சதீஷ்குமார், கடலூர்: தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்க முடியவில்லை. என் வயதோ, 35... இனி, என்ன செய்யலாம்?
எம்.ஜி.ஆர்., முதன் முதலாக நடித்த படத்திற்கு வாங்கிய சம்பளம் வெறும், 300 ரூபாய்! அவருக்கு தன் திறமை மீதும், தான் ஈடுபட்டு வந்த தொழில் மீதும் நம்பிக்கை இருந்தது. ஏழாவது படத்தில், 1,000 ரூபாய் சம்பளம் பெற்றார். 16வது படத்தில், 2,500 ரூபாயும், 45வது படத்தில், ஒரு லட்சம் ரூபாயும் வாங்கினார். இது, அவரது 40 வயதிற்கு மேல்! உங்களுக்கு நம்பிக்கையாவது இருக்கிறதா... இனியாவது, அதிக லாபம் வருமென்று இருந்தால், தொழிலை தொடருங்கள் இல்லையேல், 'ரூட்'டை மாற்றுங்கள்!
=================================================
பெரியோர்கள் வாழ்விலே' நூலிலிருந்து: கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், ஒருமுறை கேரளாவுக்கு செல்லும் போது, வழியில், கோவையில், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கினார். அப்போது, தன் தமிழ் ஆசிரியரான பலராம ஐயர், அவ்வூரில் வாழ்ந்து வரும் தகவலை அறிந்தார்.
உடனே, ஆசிரியரை சந்திக்க விரும்பி, கைப்பட கடிதம் எழுதி, தன் ஊழியரிடம் கொடுத்து, அவரை அழைத்து வரச் சொல்லி, தன் காரை அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தை வாங்கி படித்த ஆசிரியர், உடனே பதில் கடிதம் தந்தார். அதில், தன் மாணவன் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்து, மூன்று காரணங்களால், அவரை சந்திக்க வருவது, சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அது, 'முதலாவதாக, நான் வயோதிகன்; நீ இளைஞன். இரண்டாவதாக, நான் ஆசிரியன்; நீ மாணவன். மூன்றாவதாக, நான் வறியவன்; நீ செல்வந்தன். எனவே, நான் வந்து உன்னை பார்ப்பது பெருமையல்ல...' என்ற, பொருள்பட ஆசிரியரின் கடிதம் இருந்தது.
அதைப் பார்த்ததும், பதறி, ஆசிரியரை பார்க்க, தானே அவர் இல்லத்திற்கு புறப்பட்டார் அழகப்ப செட்டியார்.
பூ மற்றும் பழங்கள் வாங்கி சென்ற அழகப்பர், கையில் தயாராக வைத்திருந்த மாலையை ஆசிரியருக்கு அணிவித்து வணங்கி, 'இங்கிதம் அறியாமல், தங்களை அழைத்து வருமாறு கூறி விட்டேன்...' என்று வருத்தம் தெரிவித்தார். ஆசிரியரும் மனம் நெகிழ்ந்து, தன் மாணவரோடு மனம் விட்டு அளவளாவினார்.
அழகப்பர் விடை பெறும்போது, ஒரு வெள்ளி தட்டில், 100 ரூபாய் கட்டுகளை வைத்து, அதை ஏற்று கொள்ளுமாறு ஆசிரியர் முன் சமர்ப்பித்தார்.
ஆசிரியரோ, புன்சிரிப்பை உதிர்த்து, 'உன் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால், இந்த பணத்தால், பலனடையும் வயதை தாண்டி விட்டேன். எனவே, என்னை வற்புறுத்தாமல் நீயே இதை எடுத்துக் கொள்...' என்றார்.
ஆசிரியருக்கு அவரும், மாணவருக்கு இவரும் உதாரணம்!
ராஜாஜி எழுதிய, 'ஆற்றின் மோகம்' நூலிலிருந்து:
சித்திர கலைஞர்கள், மனிதர்களை வரையும் போது, உடலமைப்பிலும், தெய்வங்களை வரையும் போது, முகத்தில், குணங்கள் தோன்ற செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.உடைகள், மூடியும் மூடாமலும் உடலின் அவயவங்களை எடுத்து காட்டுவது, தேவ ஜாதிக்கு சரியாகாது. மானிட ஸ்திரீகளுக்கும், தேவதைகளுக்கும் உள்ள பேதம் இதுவே! தற்போது, நம் சித்திரக்காரர்கள் வரைவதில், அந்த வித்தியாசம் காணப்படுவதில்லை. பொய் புருவங்களும், மையிட்ட கண்களும், தலைமுடியும் மற்ற அவயவங்களும் சினிமா நட்சத்திரங்களைப் போன்றே அமைகின்றன.
தெய்வங்களை சித்தரிப்பது கடினம்; முகத்தில் பவித்திரமும், சாந்தமும் தோன்றுமாறு வரைய தெரிந்த பின்னரே தெய்வங்களை வரைய வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். கோபத்தையும், சிரிப்பையும் எளிதில் எழுதி விடலாம். சாந்தமும், புனித உள்ளமும் முகத்தில் விளங்கும் சித்திரம் எழுதுவதற்கு, அதிக பயிற்சி வேண்டும். ஆண் - பெண் இருபால் விக்ரகங்களுக்கும் இது பொருந்தும். நடராஜர் மற்றும் புத்த விக்ரகங்களில் உயிர்ப்புடன் கூடிய சாந்த நிலையை காணலாம்.
'
ஜென் கதைகள்' என்ற நூலிலிருந்து: ஜென் குரு ஒருவர், காலையில் எழுந்ததும், சீடர்களில் ஒருவனை அழைத்து, 'நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது; அதைக் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் சொல், பார்ப்போம்...' என்றார்.
உடனே சீடன், 'குருவே... சற்று பொறுங்கள்; நான் தண்ணீர் கொண்டு வருகிறேன். முதலில் முகம் கழுவுங்கள். கனவிலிருந்து விடுபட்டு இப்போது, தானே விழித்துள்ளீர்கள்...' என்று கூறி, அகன்றான்.
அவன் சென்றதும், இன்னொரு சீடனை அழைத்து, அதே போல் கூறினார் குரு. உடனே, அவன், 'நான் உங்களுக்கு தேனீர் தயாரித்து, எடுத்து வருகிறேன்...' என்று கூறி, சென்றான்.
இருவரும் சென்றதும், பலமாக சிரித்த குரு, 'இவர்கள் இருவரும், என் கனவுக்கு அர்த்தம் கூறியிருந்தால், அவர்களை தடியால் அடித்து விரட்டியிருப்பேன். நல்ல வேளை, தப்பித்தனர்...' என்றார்.
'கனவு என்பது அடி மனதின் ஆசாபாசங்களின் வெளிப்பாடு; கனவுகளுக்கு பொருள் கூறுபவன் முட்டாள்...' என்பது ஜென் கொள்கை!
நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி சகோ...........
==========================================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............

================================================================
கல்லூரிப் படிப்பை முடித்த மகன் 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் உள்ள கம்ப்யூட்டர் படிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் பெற்றோர்களிடம் கேட்டான். அவர்களும் மிக மிக கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டி அவனை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டார்கள்.

முதலில் ஆர்வமாக வகுப்புக்குச் சென்ற மகன், திடீரென்று சோர்வானான். வீட்டில் அனைவரிடமும் எரிந்து விழுந்தான். கம்யூட்டர் பாடங்களை வீட்டில் சரியாக பயிற்சி எடுக்கவில்லை. வீட்டுப் பாடம் செய்யாமல் தவிர்த்தான். வகுப்புகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான். அப்பாவும் அம்மாவும் தவித்துப் போனார்கள்.

அப்பா ஒருநாள், ‘‘ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாய்?’’ என்று மகனை அடிக்கப் போய்விட்டார். அம்மா குறுக்கே விழுந்து தடுக்க, அப்பா என்ன செய்வதென்று தெரியாமல் தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். 40 ஆயிரம் ரூபாய் என்பது அவருக்கு மிகப்பெரிய காசாக இருந்தது.

அம்மா பொறுமையாக கணவரை சமாதானப்படுத்தினார். மகன் கம்யூட்டர் வகுப்பை புறக்கணித்த நாளில், பயிற்சி நிலையத்துக்குச் சென்று அங்குள்ள பயிற்சியாளர்களிடம் மகனைப் பற்றி விசாரித்தார். இன்னொரு நாள் மகன் வகுப்பில் இருக்கும்போது, அவனுக்குத் தெரியாமல் பின்னால் நின்று ஐந்து நிமிடங்கள் கவனித்தார். மகனின் பிரச்னையை அம்மா புரிந்து கொண்டார்.

மறுநாள் மகனோடு ஒரு திருமண விழாவுக்குச் சென்றார். இனிப்பு, வடை, பாயசம், பொரியல், அவியல், பச்சடி, ஐஸ்க்ரீம் என சிறப்பான விருந்து பரிமாறினார்கள். பெரிய இலைகளை விரித்திருந்த பந்தியில் அம்மாவும் மகனும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று அம்மா விருந்து நடக்கும் இடத்தை இப்படியும் அப்படியுமாய் பார்த்தார். பின் சோர்வடைவதாய் காட்டிக் கொண்டார். ‘‘எனக்கு பசிக்கல’’ என்று சொல்லி எழுந்து வந்து விட்டார். மகனுக்கோ ஒரே குழப்பம், அவனும் வேக வேகமாக சாப்பிட்டு மண்டபத்துக்குள் வந்தால் அங்கே அம்மா தனியே ஒரு சேரில் அமர்ந்திருந்தார்.

‘‘என்னம்மா ஆச்சு? ஏன் சாப்பிடாம வந்துட்டீங்க?’’
‘‘மனசு சரியில்லப்பா!’’
‘‘என்னாச்சுன்னு சொல்லிருங்கம்மா ப்ளீஸ்!’’
‘‘நான் சாப்பிடவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள சிலர் சாம்பார் முடிச்சிட்டு காரக்குழம்புக்கு போறாங்க. சிலர் ரசம் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சிலர் அப்பளம், பழம் பாயசம் போட்டு ஒண்ணா சாப்பிட்டு விருந்தையே முடிச்சிட்டாங்க!’’
‘‘அதனால என்னம்மா?’’
‘‘அதனால என்னவா? அவங்க என்ன முந்திட்டு சாப்பிடும்போது எனக்கு மனசு கஷ்டமா இருக்காதா? அதனாலதான் சாப்பிடல!’’

‘‘அம்மா! காமெடி பண்ணாதீங்க. உங்க குறிக்கோள் உங்களுக்கு இலையில் போட்டிருக்கிற விருந்தை ஒழுங்கா சாப்பிடுறதுதான. ஏன் மத்தவங்க சாப்பிடறதோட உங்களை ஒப்பிட்டு சாப்பிடாம வந்துட்டீங்க? இப்ப யாருக்கு நஷ்டம். உங்களுக்குத்தானே?’’
அம்மா மகனைக் கூர்ந்து ஒரு நிமிடம் பார்த்தார்.

‘‘ஒரு நூறு ரூபாய் சாப்பாடு வீணா போறதுக்கே நீ இவ்ளோ கவலைப்படுறியே? ஆனா நீ உன் கல்லூரி நண்பர்கள் கம்ப்யூட்டர் வகுப்புல உன்னை விட நல்லா படிக்கிறதப் பார்த்து, உன்ன அவங்களோட வீணா ஒப்பிட்டு, உங்கப்பா கஷ்டப்பட்டு கொடுத்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வீணடிக்கிறியே... அதைப் பற்றி என்னைக்காவது யோசிக்கறியா?’’ என்றார்.

மகன் திகைத்தான். பிறகு வருத்தத்துடன் தலைகுனிந்தான்.
அம்மா அவன் முகத்தை உயர்த்திப் பிடித்தார். ‘‘உனக்கு ஒரு பாடத்திட்டம் இருக்கு. அதைப் படிச்சி முடிக்கிறது மட்டும்தான் உன் லட்சியமா இருக்கணும். பக்கத்துல இருக்கிற உன் நண்பர்கள் ஒருவேளை வேகமா படிக்கலாம். உன்னைவிட நல்லா கூட படிக்கலாம்.

ஆனா அவங்களோடு நீ உன்னை ஒப்பிட்டு எப்பவும் குழம்பக்கூடாது. உனக்கான நேரத்தை எடுத்துக்கோ. மெதுவா படி, புரிஞ்சிக்கிட்டு படி. உன்னோட குறிக்கோள் உன் இலையில போட்டிருக்கிற கல்வி சாப்பாடை சாப்பிடுறது மட்டும்தான். அடுத்தவங்க வேகமா சாப்பிடறதைப் பார்த்து சாப்பிடாம எந்திரிக்கிறது இல்லை!’’

‘‘புரியுதும்மா! இனிமே யார் கூடவும் என்னை ஒப்பிடாம, என் அறிவை வளர்த்துக்கிறதுக்கு மட்டும் படிக்கிறேன்’’ என்றான் மகன்.
‘‘கல்வியில் மட்டுமில்லை, வாழ்க்கையிலும் அப்படித்தான். உன் வாழ்க்கையை நீ வாழு. அடுத்தவங்களோட ஒப்பிட்டு சோர்ந்து போயிடாதே! சரி, நான் வர்றேன்...’’
‘‘எங்கம்மா போறீங்க?’’

‘‘ம்ம்ம்... உனக்கு பாடம் கத்துக் குடுக்குறேன்னு நல்ல சாப்பாட்டை சாப்பிடாம வந்துட்டேன். இன்னொரு முறை போய் சாப்பிட்டுட்டு வர்றேன்’’ என்று பந்தியை நோக்கிப் போனார் அம்மா.
மகனுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்த திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

Wednesday, April 29, 2020

"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத் கீதையின் தத்துவப்படி மனப் பக்குவம் அடை.................
குரு தெளிவிற்கு அதிபதி. ஆக, துவர்ப்பும் இனிப்பும் உள்ள நெல்லிலிக்கனிபோல உங்களுக்கு எல்லாம் தெரியலாம். ஆனால், எதைப் பின்பற்ற வேண்டுமென்ற தெளி வில்லாத நிலையில் தவிக்கலாம். அங்கேதான் உங்களுடைய பூர்வபுண்ணியம் உங்களை இயக்கிவைக்கும்.
ஆதி என்ற பெண்ணும், பகவன் என்ற ஆணும் விரும்பித் திருமணம் செய்துகொண்டு தேசாந்திரம் போகிறார் கள். அப்போது தங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த இடத்திலேயே விட்டுச்செல்ல வேண்டுமென்று ஒப்பந்தம் செய்கிறார்கள். ஏழு குழந்தைகள் பிறந்ததாக வரலாறு. அவ்வையார், வள்ளுவர், பாரி, அதியமான் என்று சொல்லப்படுவார்கள். வள்ளுவர் "ஆதிபகவன் முதற்றே உலகு' என்று பாடியதாக வும், அவ்வையாரைவிட்டுப் பிரிய மனமில்லாத ஆதிக்கு,
""இட்டமுடன் என் தலையில் எழுதிவிட்ட சிவனும் செத்துவிட்டானோ முட்டமுட்ட அவனுக்கே அன்றி உனக்கேன் பாரம் அன்னாய்!''
என்று உணர்த்திவிட்டு வாய்மூடிக்கொண்டதாம் (பிறந்த குழந்தை யாக இருந்தபோது!)
இதைத்தான் வள்ளுவர் "ஊழிற்பெருவலி யாவுள மற் றொன்று சூழினும் தான் முந்துறும்' என்று உணர்த்தினார். ஆக, எல்லாவற்றுக்கும் காரணம் ஊழ்வினை. பகவத்கீதையில் கண்ணனும் இதைத்தான் உணர்த்தினார்...............
"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத் கீதையின் தத்துவப்படி மனப் பக்குவம் அடை.................
================================
உங்களைத் தெளிவடையச் செய்வது குரு உபதேசம். "கு"- என்றால் இருட்டு. "ரு'- என்றால் போக்குவது. ஒருவருடைய அறியாமை என்னும் இருட்டைப் போக்குவது குருதான். சனகாதி முனிவர்களின் சந்தேகங்களை சின்முத்திரைகாட்டி தெளிவுபடுத்தியவர் தட்சிணாமூர்த்தி.
அதனால்தான் அவரை குரு தட்சிணாமூர்த்தி என்று வணங்கினார்கள்.
"தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்- தெளிவு குருவின் திருநாமம் செப்பல்- தெளிவு குரு திருமேனி காணல்- தெளிவு குருவின் திருவுருவைச் சிந்தித்தல்தானே!'
என்பது திருமூலர் வாக்கு.
================================
courtesyNakkiran/balajothidam/subramaniam ayya.
"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத் கீதையின் தத்துவப்படி மனப் பக்குவம் அடை.................
நான் சுமக்கிறேன் 🙏
துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.உங்கள் கர்மத்தை உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன்.
---ஷிரிடி சாய்பாபா
எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் நான்னறியேன் பராபரமே!
🌹ஓம் ஸ்ரீ சாயிராம்... 🌹
ஸ்ரீ சாயின் திருவடி சரணம்
அனைவருக்கும் இந்த நாள் மகிழ்ச்சியுடன் இனிதாகட்டும்!!இனிய காலை மதிய/ மாலை இரவு வாழ்த்துக்கள்...சகோ 🌹
🌹Om Sri Saranam... 🌹Om Sri Sai Baba Saranam... 🌹
🌹OM Sri Sairam... 🌹
==========================

Tuesday, April 28, 2020

அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக...
ஆமோதித்து மறுக்கும் அரிய கலை!
எவர் ஒருவரிடமும் எப்பேர்ப்பட்ட விஷயங்களையும், பலமான வாதங்களையும், எதிர்மறை கருத்துகளையும் முன்னெடுத்து வைத்து விட முடியும். ஆனால், இதற்கென்று சில அணுகுமுறைகள் உள்ளன.
நீதிபதியின் முன் விரல் நீட்டிப் பேச மண்ணில் எவருக்கும் உரிமையோ, திராணியோ இல்லை. மறுப்பாரும், எதிர்ப்பாரும் இல்லாதிருக்கும் இவர்களிடம் கூட, 'கனம் நீதிபதி அவர்களே...' என ஆரம்பித்து, அவர் கடந்து வராத வழக்குகளையும், அறிந்திராத சில தீர்ப்புகளையும் ஒரு இளம் வழக்கறிஞர், தம் திறமையான அணுகுமுறையால் நீதிபதியையே கேட்க வைத்து, தம் கட்சிக்காரருக்கு எதிராக திரும்ப இருந்த தீர்ப்பை, சாதகமாக வாங்கி விடுகிறார் என்றால், நாம் சந்திக்கிற மற்ற மனிதர்கள் நம் முன் எம்மாத்திரம்?
'நீங்க சொல்றது கரெக்ட் முதலாளி; அப்படியே ஆகட்டும் முதலாளி...' என்று ஆரம்பித்து, 'அதில் ஒரு கஷ்டம் இருக்கு முதலாளி; அது என்னன்னா முதலாளி...' என்று ஆரம்பிக்கிற தொழிலாளி, புத்திசாலி.
உடன்பட்டு மறுக்கிற கெட்டிக்காரத்தனம் என்னமாய் வேலை செய்யும் தெரியுமா?
'அதெப்படி முடியும்... இதெல்லாம் நடக்கிற காரியமா... நீங்க இறங்கிப் பாத்தால் தான் உங்களுக்கு அதில் உள்ள கஷ்டம் தெரியும்....' என்று எதிர்மறையாக ஆரம்பித்து, சீட்டுக்கிழிந்து விடும் என்கிற பயம் வந்த பின், ஜகா வாங்கும் ஊழியர் பத்தாம்பசலி.
பட்டிமன்றத்தில் சிலர் கையாளுகிற உத்தி, நடுவரை கவர்கிறதோ இல்லையோ, பார்வையாளர்களை ஏகமாய் கவர்ந்து விடும். அது, 'மாற்று அணியை சேர்ந்த அம்மையார், அருமையான வாதம் ஒன்றை முன் வைத்தார்; நானே அசந்துபோய் விட்டேன். ஆனால், இந்த வாதம் யாருக்குப் பொருந்தும் என்கிறீர்கள்...' என ஆரம்பித்து, ஆணித்தரமாக பேச ஆரம்பித்ததும், அது, பார்வையாளர்களையும், நடுவரையும் வெகுவாக கவர்ந்து விடும். அக்கணமே தீர்ப்பின் போக்கும் மற்றவர்களுக்கு பிடிபட்டு விடும்.
'என்ன அறிவுகெட்ட வாதம் இது... ஏன் இப்படி உளர்றீங்க, இதெல்லாம் ஒரு வாதமா, நீங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்க, எனக்கென்ன கிறுக்கா பிடிச்சுருக்கு...' என்று ஆரம்பிக்கிற எதிரணி மறுப்பாளர், பார்வையாளர்கள் மதிப்பில், 'சரசர'வென்று மைனஸ் மதிப்பெண் வாங்கி விடுகிறார்; நடுவரும் கடுப்பாகி விடுவார்.
இப்படிப்பட்ட வார்த்தைகள், தனிப்பட்ட இருவரின் வாதத்தின் போது, காயப்படுத்தி விடவும், இதன் விளைவாக, நட்பும், உறவும் கெட்டு விடவும் வாய்ப்புகள் உண்டு. அத்துடன், இது, கவுரவப் போராக மாறி, கை கலப்பில் முடிந்து விடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.
'நீங்க சொல்ற கோணம் ரொம்ப வித்தியாசமா இருக்கு; ஆனா பாருங்க...' என ஆரம்பித்தால், அங்கே அனலுக்கு வேலையில்லை; அப்புறம், புனல்(நீர்) தான்.
வாக்குவாதங்கள், எதிர்வாதங்கள் ஏனோ இந்த மண்ணில் ஆரோக்கியமாக நிகழ்வதில்லை. வாத, பிரதிவாதங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே நடக்குமானால், அவற்றை அறிவின் விருத்திக்கே என்று மேலை நாட்டவர்கள் ஆக்கப்பூர்வமாக பார்க்கின்றனர்.
இங்கு என்ன நடக்கிறது... 'மூஞ்சியில கரியப் பூசிட்டான், அவமானப்படுத்திட்டான், எல்லார் முன்னாலயும் அசிங்கப் படுத்திட்டான்...' என்று தனிப்பட்ட விஷயமாகவும், கவுரவப் போராகவும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர்.
தவறான செய்திகளை, ஆதாரமற்ற, ஊகமான விஷயங்களை ஆணித்தரமான குரலில் எதிராளி பேசுகிறார் என்றால், மனிதர் சூடாகி விட்டார் என்பதை எளிதில் கண்டு விடலாம்.
'நீங்க சொல்றதை இந்தக் கோணத்திலிருந்தும் பார்க்கலாமான்னு கொஞ்சம் பரிசீலனை செய்யுங்க...' என்று பொய் மூட்டைகளை அவிழ்ந்தோட வைக்கும் வெளிச்சக் கீற்றினை, மென்மையாக பற்ற வையுங்கள்.
எதிர்வாதமாக இருந்தாலும், இதை ஏற்றுக் கொள்ள முன்வருவர். ஆமோதித்து மறுக்கும் கலை, அரிய கலை; இது கைவரப் பெற்றால், உறவுகளுக்குள் துறவு வர வாய்ப்பு இல்லை.
நன்றி சகோ;-- லேனா தமிழ்வாணன்

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...