முடக்கத்தான் போதும்!
நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களையும் நடக்க வைக்கும் அற்புத மூலிகையான,
முடக்கறுத்தான் பற்றி,
சித்த மருத்துவர்,
'அல்மா' வேலாயுதம்: நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டால்,
உயர் ரத்த அழுத்தம்
குறையும்; உடல் எடை
குறையும்; எலும்புகள்,
தசைகள் வலுப் பெறும்.ஆனால்,
முடக்குவாதம் பாதிப்பு
உடையவர்களுக்கு, நடமாட முடியாது;
நடைபயிற்சி மேற்கொள்ள
முடியாது. முடக்குவாதம், ஆண்களை விட,
பெண்களையே அதிகமாக
தாக்குகிறது. இந்த நோய், கால்களை
மட்டுமின்றி, இதயம், நுரையீரலிலும் பாதிப்பை
ஏற்படுத்துகிறது.இத்தகைய கொடுமையான முடக்குவாதத்தை கட்டுப்படுத்தும் திறன்,
படர்ந்து கிடக்கும்,
முடக்கத்தான் எனப்படும்
முடக்கறுத்தான் செடிக்கு உள்ளது. ஆரோக்கிய சமையலில் இடம்பிடித்துள்ள இந்த முக்கிய
மூலிகையை, சூப் ஆக
தயாரித்தும், தோசையாக
வார்த்தும், துவையலாக
அரைத்தும், கஷாயமாக
மாற்றியும் பயன்படுத்தலாம்.
முடக்கத்தான் தோசைக்கு அரைக்க, அரிசி மாவுடன் உளுந்து சேர்க்க தேவையில்லை. உளுந்து அளவுக்கு இந்த கீரையை
சேர்த்து அரைத்து, தேசையாக
சாப்பிடலாம். இதை, அடையாகவும்
தயாரித்து சாப்பிடலாம். உடல் வலி, அலுப்பு காணாமல் போய் விடும்.இதன் இலையை, தேநீர் போல தயாரித்து அருந்தினால், உடல் சோர்வு மறைந்து, உற்சாகம் பிறக்கும். துவையலாக அரைத்து சாப்பிட,
முடக்கத்தான் கீரை மூன்று
கைப்பிடி, தேவையான அளவு
மிளகாய் வற்றல், புளி, வெந்தயம், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை அரைத்து, விளக்கெண்ணெயில் வதக்கி, நன்கு அரைத்து, சாதத்துடன் தொட்டு அல்லது பிசைந்து சாப்பிட
முடியும்.சூப் ஆக தயாரிக்க, இரண்டு கைப்பிடி
முடக்கத்தான் இலை தேவைப்படும்.
அவித்து வரும் தண்ணீருடன், வெங்காயம், தக்காளி, சோள மாவு, உப்பு ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கொதிக்க
விட்டு, சூப் போல
வந்ததும் பருக வேண்டியது தான்.உடல் சோர்வு, இடுப்பு வலி போன்ற பிரச்னைகளில் இருந்து உடனடி
நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.இந்த கீரையை தொடர்ந்து உணவில்
சேர்த்து வர, முதுகுத்தண்டு
தேய்மானம், எலும்பு
தேய்மானம், மூட்டு தேய்மானம்
போன்ற பிரச்னைகள் வராமல் வாழலாம். 40 வயதைத் தாண்டியவர்கள், வாரம் ஒரு முறையாவது, முடக்கத்தான் கீரையை பயன்படுத்துவது, நல்ல பலனைத் தரும். மிகவும் எளிமையான முறையில்,
இந்த மூலிகையை பயன்படுத்த
முடியும். இந்த கீரையை, நிழலில் உலர்த்தி,
பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் குணமாகும்!
courtesy;Dinamalar.
=======================================
No comments:
Post a Comment