Followers

Thursday, April 30, 2020

பெரும்பாலான ஆண்கள், தங்கள் மதுப் பழக்கத்திற்கு காரணம் பெண்கள் தான் என்று கூறுகின்றனரே...
'நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு...' என்பதைப் போல், இவர்களுக்கு தன்னை மறந்த போதையில் மிதக்க வேண்டும்; அதற்கு இது ஒரு சாக்கு!
எல்லோர்க்கும் என்றும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே.............................பலதும் பத்தும், நாட்டு நடப்பு உங்களுடன்...............................
என்.வேணுகோபாலன், கிருஷ்ணகிரி: பெரும்பாலான ஆண்கள், தங்கள் மதுப் பழக்கத்திற்கு காரணம் பெண்கள் தான் என்று கூறுகின்றனரே...
'நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு...' என்பதைப் போல், இவர்களுக்கு தன்னை மறந்த போதை வேண்டும்; அதற்கு இது ஒரு சாக்கு!
எஸ்.எம்.பவுன்ராஜ், தல்லாகுளம்: ஆண்களை விட, பெண்களுக்கு, 'ஹியூமர் சென்ஸ்' குறைவு என்கிறேன்... சரி தானே!
சரியில்லை; பள்ளிக்கூட பாப்பா துவங்கி, கல்லூரி கன்னியர் வரை அடிக்கும் ஜோக்குகளும், 'இன்டர்நெட்'டில் பெண்கள் அவிழ்த்து விடும் தமாசுகளும் வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவற்றில், 'ஏ'ஜோக் சொல்வதில் ஆண்களை மிஞ்சி விடுகின்றனர் சில பெண்கள். உங்கள் ஏரியாவிலும், அத்தகைய பெண்கள் இருக்கலாம். சமுதாயம், சொந்தக்காரர்கள், அடுத்த வீடு, தெரு என, பயந்து அடக்கி வாசிப்பவர்களாக இருக்கும்; ஆராய்ந்து பாருங்கள்!
வி.கல்யாண், தேனி: வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்புடன் கல்வியை இழந்தவன் நான். என்னால், வாழ்க்கையில் முன்னேற முடியாதா?
மூளையை பயன்படுத்தாதவனால் தான் முன்னேற முடியாது. உங்கள் ஊரையே எடுத்துக் கொள்ளுங்களேன்... இன்று, அங்கு பணத்திலும், புகழிலும் பிரபலமாக இருப்பவர்களில் எத்தனை பேர் பள்ளிப் படிப்பை தாண்டியவர்கள் எனக் கணக்கெடுத்தால், . வெகு சொற்பமே தேறுவர். படிக்காத மேதைகளாக திகழ்ந்தோர், உலகில் பலர் உண்டு. அந்நிலையை அடைய, அவர்கள் பயன்படுத்தியது தம் மூளையை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
டி.ஆரோக்கியசாமி, தாம்பரம்: அன்போடு சிரித்து பேசினால், கடன் கேட்கின்றனரே...
உண்மைதான்; அதனால் தான், முக்கால்வாசி தமிழன், பானை போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதில் பிரகாசமே இல்லாமல் போய் விட்டது முகம்! இவ்வாறு செய்யாமல், 'நோ' சொல்லும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 'இவனால் முடியாது...' என்று சொல்லும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது ஒன்றும் சிரமம் இல்லை!
ந.சத்தியநாரயணன், சென்னை: ஒவ்வொரு பரபரப்பான விஷயமும் நான்கு நாட்களுக்கு மட்டுமே பரபரப்பாக பேசப்படுவதும், பின்னர் அதை சுத்தமாக மறந்து போவதும் ஏன்?
புதிய புதிய பரபரப்புகளை பார்க்க, படிக்க, பேச பழகி கொண்டு விட்டோம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஐந்தாவது நாளும், வேறு பரபரப்பு செய்தி வந்து விடுகிறதே!
வி.சதீஷ்குமார், கடலூர்: தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்க முடியவில்லை. என் வயதோ, 35... இனி, என்ன செய்யலாம்?
எம்.ஜி.ஆர்., முதன் முதலாக நடித்த படத்திற்கு வாங்கிய சம்பளம் வெறும், 300 ரூபாய்! அவருக்கு தன் திறமை மீதும், தான் ஈடுபட்டு வந்த தொழில் மீதும் நம்பிக்கை இருந்தது. ஏழாவது படத்தில், 1,000 ரூபாய் சம்பளம் பெற்றார். 16வது படத்தில், 2,500 ரூபாயும், 45வது படத்தில், ஒரு லட்சம் ரூபாயும் வாங்கினார். இது, அவரது 40 வயதிற்கு மேல்! உங்களுக்கு நம்பிக்கையாவது இருக்கிறதா... இனியாவது, அதிக லாபம் வருமென்று இருந்தால், தொழிலை தொடருங்கள் இல்லையேல், 'ரூட்'டை மாற்றுங்கள்!
=================================================
பெரியோர்கள் வாழ்விலே' நூலிலிருந்து: கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், ஒருமுறை கேரளாவுக்கு செல்லும் போது, வழியில், கோவையில், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கினார். அப்போது, தன் தமிழ் ஆசிரியரான பலராம ஐயர், அவ்வூரில் வாழ்ந்து வரும் தகவலை அறிந்தார்.
உடனே, ஆசிரியரை சந்திக்க விரும்பி, கைப்பட கடிதம் எழுதி, தன் ஊழியரிடம் கொடுத்து, அவரை அழைத்து வரச் சொல்லி, தன் காரை அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தை வாங்கி படித்த ஆசிரியர், உடனே பதில் கடிதம் தந்தார். அதில், தன் மாணவன் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்து, மூன்று காரணங்களால், அவரை சந்திக்க வருவது, சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அது, 'முதலாவதாக, நான் வயோதிகன்; நீ இளைஞன். இரண்டாவதாக, நான் ஆசிரியன்; நீ மாணவன். மூன்றாவதாக, நான் வறியவன்; நீ செல்வந்தன். எனவே, நான் வந்து உன்னை பார்ப்பது பெருமையல்ல...' என்ற, பொருள்பட ஆசிரியரின் கடிதம் இருந்தது.
அதைப் பார்த்ததும், பதறி, ஆசிரியரை பார்க்க, தானே அவர் இல்லத்திற்கு புறப்பட்டார் அழகப்ப செட்டியார்.
பூ மற்றும் பழங்கள் வாங்கி சென்ற அழகப்பர், கையில் தயாராக வைத்திருந்த மாலையை ஆசிரியருக்கு அணிவித்து வணங்கி, 'இங்கிதம் அறியாமல், தங்களை அழைத்து வருமாறு கூறி விட்டேன்...' என்று வருத்தம் தெரிவித்தார். ஆசிரியரும் மனம் நெகிழ்ந்து, தன் மாணவரோடு மனம் விட்டு அளவளாவினார்.
அழகப்பர் விடை பெறும்போது, ஒரு வெள்ளி தட்டில், 100 ரூபாய் கட்டுகளை வைத்து, அதை ஏற்று கொள்ளுமாறு ஆசிரியர் முன் சமர்ப்பித்தார்.
ஆசிரியரோ, புன்சிரிப்பை உதிர்த்து, 'உன் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால், இந்த பணத்தால், பலனடையும் வயதை தாண்டி விட்டேன். எனவே, என்னை வற்புறுத்தாமல் நீயே இதை எடுத்துக் கொள்...' என்றார்.
ஆசிரியருக்கு அவரும், மாணவருக்கு இவரும் உதாரணம்!
ராஜாஜி எழுதிய, 'ஆற்றின் மோகம்' நூலிலிருந்து:
சித்திர கலைஞர்கள், மனிதர்களை வரையும் போது, உடலமைப்பிலும், தெய்வங்களை வரையும் போது, முகத்தில், குணங்கள் தோன்ற செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.உடைகள், மூடியும் மூடாமலும் உடலின் அவயவங்களை எடுத்து காட்டுவது, தேவ ஜாதிக்கு சரியாகாது. மானிட ஸ்திரீகளுக்கும், தேவதைகளுக்கும் உள்ள பேதம் இதுவே! தற்போது, நம் சித்திரக்காரர்கள் வரைவதில், அந்த வித்தியாசம் காணப்படுவதில்லை. பொய் புருவங்களும், மையிட்ட கண்களும், தலைமுடியும் மற்ற அவயவங்களும் சினிமா நட்சத்திரங்களைப் போன்றே அமைகின்றன.
தெய்வங்களை சித்தரிப்பது கடினம்; முகத்தில் பவித்திரமும், சாந்தமும் தோன்றுமாறு வரைய தெரிந்த பின்னரே தெய்வங்களை வரைய வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். கோபத்தையும், சிரிப்பையும் எளிதில் எழுதி விடலாம். சாந்தமும், புனித உள்ளமும் முகத்தில் விளங்கும் சித்திரம் எழுதுவதற்கு, அதிக பயிற்சி வேண்டும். ஆண் - பெண் இருபால் விக்ரகங்களுக்கும் இது பொருந்தும். நடராஜர் மற்றும் புத்த விக்ரகங்களில் உயிர்ப்புடன் கூடிய சாந்த நிலையை காணலாம்.
'
ஜென் கதைகள்' என்ற நூலிலிருந்து: ஜென் குரு ஒருவர், காலையில் எழுந்ததும், சீடர்களில் ஒருவனை அழைத்து, 'நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது; அதைக் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் சொல், பார்ப்போம்...' என்றார்.
உடனே சீடன், 'குருவே... சற்று பொறுங்கள்; நான் தண்ணீர் கொண்டு வருகிறேன். முதலில் முகம் கழுவுங்கள். கனவிலிருந்து விடுபட்டு இப்போது, தானே விழித்துள்ளீர்கள்...' என்று கூறி, அகன்றான்.
அவன் சென்றதும், இன்னொரு சீடனை அழைத்து, அதே போல் கூறினார் குரு. உடனே, அவன், 'நான் உங்களுக்கு தேனீர் தயாரித்து, எடுத்து வருகிறேன்...' என்று கூறி, சென்றான்.
இருவரும் சென்றதும், பலமாக சிரித்த குரு, 'இவர்கள் இருவரும், என் கனவுக்கு அர்த்தம் கூறியிருந்தால், அவர்களை தடியால் அடித்து விரட்டியிருப்பேன். நல்ல வேளை, தப்பித்தனர்...' என்றார்.
'கனவு என்பது அடி மனதின் ஆசாபாசங்களின் வெளிப்பாடு; கனவுகளுக்கு பொருள் கூறுபவன் முட்டாள்...' என்பது ஜென் கொள்கை!
நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி சகோ...........
==========================================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............

================================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...