Followers

Sunday, May 17, 2020


காளிதாசன் பல இடங்களுக்கு நடந்து சென்றவன். பல மன்னர்களை பல தேசங்களில் சந்தித்து பரிசு பாராட்டு பெற்றவன். பல பண்டிதர்களை வென்றவன். கவிதையுலகில் காவிய உலகில் முடிசூடா மன்னன்.
ஒருநாள் பகலில் எங்கோ பட்டை தீர்க்கும் வெயிலில் மாட்டிக்கொண்ட காளிதாசனுக்கு தொண்டை வறண்டு தாகம் .. தண்ணீரை தேடினான்...
சற்று தூரம் சென்றது ஒரு கிராமம் வந்தது. அதில் ஊர்க் கோடியில் ஒரு கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் நெஞ்சு வறட்சியும் தாகமும் அவளை நோக்கி செல்ல வைத்தது.
''அம்மா கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?''
''ஆஹா தருகிறேன்.. நீ யாரப்பா?''
இவள் பார்த்தால் பாமரப்பெண் போல் இருக்கிறாளே. இந்த படிக்காத பட்டிக்காட்டு பெண்ணிடம் தனது பாண்டித்யம் பற்றி எதற்கு சொல்லவேண்டும். அவசியமே இல்லையே என்று நினைத்த காளிதாசன் ''அம்மா நான் ஒரு யாத்ரீகன்' என்றான்.
'அதென்னப்பா அப்படி சொல்கிறாய்? இந்த உலகத்திலேயே ரெண்டே ரெண்டு பேர் தானே யாத்ரீகர்கள். ஒருவன் சூரியன் மற்றவன் சந்திரன். இவர்கள் தானே காலையில் எழுந்ததிலிருந்து மாலை மறையும் வரை ஒருவன், இரவில் எழுந்தது முதல் மறுநாள் விடியற்காலை வரை இன்னொருவன் என்று விடாமல் குறித்த நேரத்தில் ஒருவர் மாற்றி இன்னொருவர் யாத்திரை செய்பவர்கள்.
''சரிம்மா, அப்படியென்றால் நான் ஒரு விருந்தாளி, அதிதி என்று வைத்துக் கொள்ளேன். என்றான் காளிதாசன் .
''தம்பி, நீ ஏதோ அர்த்தம் புரியாமல் நீ ஒரு அதிதி என்கிறாய் . இந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு பேர் தான் டெம்பரரி அதாவது அதிதி விருந்தாளிகள் வந்து போய்விடுபவர்கள். இளமையும் செல்வமும் தான் அது . நிரந்தரமில்லாதவை'' என்றாள் அந்த பெண்.
காளிதாசன் திகைத்தான். ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. ஒரு நாட்டுப்புற பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? இவளை மேலும் சோதிக்க அடுத்து தன்னை யார் என்று எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன் ''அம்மா அப்படி யென்றால் நான் ஒரு ''பொறுமைசாலி'' என்று வைத்துக் கொள் '' என்றான்.
அவள் சிரித்தாள். நீ விவரம் தெரியாதவனாக இருக்கிறாயே. இந்த உலகில் ரெண்டே ரெண்டு தான் பொறுமைக்கு இலக்கணம். ஒன்று பூமி, அகழ்வாரை தாங்கும் நிலம். தன்னை ஆழ தோண்டினாலும் இடம் கொடுப்பது. மற்றொன்று விருக்ஷம், மரம். வெட்டுபவனுக்கே, கல்லால் அடிப்பவனுக்கே நிழலும் கனியும் கொடுப்பது. நீ அப்படி ஒரு பொறுமைசாலியா? சொல்வதானால் ஏதாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். நீ யார் சொல்?'' என்றாள் அந்த பெண்.
காளிதாசன் யோசித்தான். தனது திறமையை உபயோகிக்க ஆரம்பித்தான் ''அம்மா நான் இந்த உலகிலேயே ரொம்ப பிடிவாதக்காரன் சளைக்காதவன் ' புரிந்துகொள் ' என்றான் காளிதாசன்.
குடத்து நீரில் எடுத்து கொஞ்சம் அவன் மேல் தெளித்து சிரித்தாள் அந்த பெண். உனக்கு உலகிலேயே பிடிவாதமாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்படுவது ரெண்டு தான் என்று தெரியாதா ? ஒன்று நமது நகங்கள், மற்றது தலை முடி. வெட்ட வெட்ட துளிர்த்து வளர்பவை. ஓயாமல் தொடர்ந்து இப்படி செய்பவை. நீ அவ்வளவு பிடிவாதக்காரன் என்று என்னை நம்ப சொல்கிறாயா?'' என்றாள் அவள்.
கோபம் வந்துவிட்டது காளிதாசனுக்கு. உரக்க அவளிடம் சொன்னான் ''சரி சரி நீ என்னை உலகிலேயே சிறந்த ஒரு முட்டாள் என்று எடுத்துக்கொள்'' என்றான். அதற்கும் அவள் தயாராக பதில் வைத்திருந்தாள் .
''அப்பனே உலகில் ரெண்டு முட்டாள்கள் தான் சிறந்தவர்கள். ஒன்று ஞானமில்லாமல், திறமையில்லாமல் ஆளும் ஒரு அரசன். இன்னொருவன் அவனது அடிவருடி மந்திரி. அரசன் எது சொன்னாலும் செய்தாலும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு அவனையே புகழ்ந்து கொண்டு அவன் பின் செல்பவன். உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லையே'' என்றாள் .
''அம்மா என்னை மன்னித்துவிடு. நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன். நீ யார் என்று என்னை கேட்டாய் எனக்கு பதில் தெரியவில்லை, இப்போது நான் கேட்கிறேன் உன்னை . இவ்வளவு சாதுர்யமாக எனக்கு பதில் சொன்ன நீ யாரம்மா? '' என்று அவள் காலில் விழுந்தான் காளிதாசன். எழுந்திரப்பா என்று அவனை தொட்டெழுப்பியவள் முகத்தை பார்த்த காளிதாசன் அங்கே அந்த பெண்ணை காணவில்லை, சாக்ஷாத் சரஸ்வதி தேவியே புன்னகைத்து நின்றாள். அவன் இரு கைகளையும் கோர்த்து பரவசத்துடன் கும்பிட அவனை பார்த்து
''காளிதாஸா நீ அறிஞன், நீ யார் என்று உன்னை உணர்ந்தால் நீ ஒரு சாதாரண மனுஷ்யஜீவன் என்று புரிந்து கொள்வாய்.'' என்ற வாக்தேவி மறைந்தாள். அப்போது உருவானதே காளிதாசனின் சியாமளா தண்டகம்...
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் , நாம் ஓரு நித்யமான ஆத்மா என்று அறிவதும் நமது உண்மையான அறிவு பரம புருஷ பகவானை சரணடைந்து அவருக்கு அன்பு தெண்டாட்டுவது நமது இயல்பு என்றும் அறிவது மிகவும் முக்கியம். இது தான் உண்மையான அறிவு...
இதை விட்டு நான் யார்? என்னிடமே? இவ்வாறு நம்மை நாமே பெரிய ஆளாக நினைத்து மற்றவர்களை இழிவு படுத்தி நாம் அந்த கணம் அடையும் சந்தோஷம் எவ்வளவு நாட்களுக்கு ? அடுத்த வினாடி நிரந்தமற்ற இந்த வாழ்வில் வீண் அகங்கரம் நமக்கு ஏன்? அன்பை பொழிவோம் ...
அரவணைத்து வாழ்வோம் ...
இந்நாள் இன்ய நாளாக அமைய நல் வாழ்த்துகள் ...
==============




முதியோர் காதல்!

பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்வது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் இரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே பேசுகிறார்.

குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதல்!’
மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!

மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.
தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…

”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்.

இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியையே பார்த்துக்கொண்டிருக்கிறார். இளமையும் அழகும் கொலுவிருந்த அவளுடைய அன்றைய தோற்றமும், மூப்புவந்து முகச்சுருக்கம் கண்டுவிட்ட இன்றைய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.
காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போல அந்த எழில்முகம் உருமாறிவிட்டது!” எனப் பெருமூச்செறிகிறார்!

“மேனியழகு குலைந்துவிட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இன்னும் இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!
நமக்கும்தான்! 😥

புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம் குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!


எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது! உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தான்!

உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல் மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!
’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.

அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடன் ஒன்றாகவே இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும், ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே!
இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!

’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை நடைமுறைக்குவந்துவிட்ட இன்றைய சூழலில் முதிய இணையர் தம் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!
வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கது.


நன்றி;Ponidhazhl - Prabhulingam Rajavelan.

குடும்ப விளக்கு - One of the must-read books of Bharathidasan! 

Tuesday, May 12, 2020


12.5.20





எது சிவத்தொண்டு?

1)
பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார்  ஆனார்.
2)
பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார்  ஆனார். (மீனவர் குலத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)
3)
மாட்டின் தோலை உரித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.
4)
சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
5)
சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
6)
சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.
7)
சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
8)
குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
9)
ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
10) 
ஈசனுக்கு பூ பறித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
ஆக…… சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த  கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.


ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.
அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்—-அவரே சிவனடியார்.

எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்….ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு
ரொம்ப பிடிக்கும்.

சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர்
பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.
ஆக….. சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.
சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே  வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லும் சொல்இன்மை யறிந்து. சிவசிவ ,
------------------------------------------------------
2
""
பிறப்புக்கு முன்னாலும்; இறப்புக்குப் பின்னாலும்; பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் இறைவா! உன்னை நான் வணங்குகிறேன்.
மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு; காற்றால் அலைக்கழிக்கப்படுவதுபோல்;மண்ணில் விழுந்த நானும் அலைக்கழிக்கப்படுகிறேன்.

எனக்கு வரும் துன்பங்கள் யாவும் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல.
அப்படியே நான் உண்டாக்கியிருந்தால் ;
அது பூர்வஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால்
என்மீது கருணை வைத்து எடுத்துக் கொண்டுவிடு.
நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன்.அப்படியே இருந்திருக்கலாம்; என் அறியாமையை மன்னித்துவிடு. நல்லது என்று நான் நினைத்து செய்வதெல்லாம் தீமையாக முடியும் என்றால்; அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது.

என் அறிவு சிறியது உன் ஆட்சிபீடம் பெரியது. அகந்தை; ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால்; இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும் ""என இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.''''... கண்ணதாசன்
...
அர்த்தமுள்ள இந்து மதம்
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===========================================

Monday, May 11, 2020

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?

*தர்ம நெறி *

*அசைவம் சாப்பிடலாமா?*
*ஓஷோ அவர்களின் விளக்கம்*

இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                         

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .

*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*

உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*
------------
1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*

2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*

மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?

அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.

*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*
------------------ --------------
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.

இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...

பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...

7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.

ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. *உடலால் மனித பிறவி சைவம்.*
*உயிரால் மனித பிறவி சைவம்.*
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*

*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*

என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
courtesy;வாத்தியார் ayya tq.
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Sunday, May 10, 2020

“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்.
உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.
‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ என்றாள் – அம்மா.............................
எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும்..........சகோ தோழமைகளே...
மனவலிமை எப்படி உண்டாகும்?
‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.
‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா
‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக்குடித்தனம் போயிடுன்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.
‘ரொம்ப மகிழ்ச்சி. இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்ன?’
‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’
அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை
சுமையாக பார்க்கிறது.
1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி –
என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்.
2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்.
3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும்
ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. *கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.
4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும்
தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.
5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.
6. பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகி
விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்.
7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்.
8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்.
9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.
10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப்போது செயல்படுகின்ற மனநிலை
மகிழ்ச்சியை பெருக்கும்.
11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை
எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.
12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன
அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.
13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு
கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை
ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடுவதே சிறந்த அணுகுமுறை.
14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு.
15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு
முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும். மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.
16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு
நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை
கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்.
17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ
முடியும்.வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.
18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற
ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்.
19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல்
இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்.
20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு
செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை
சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்.
*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அன்பு நன்றி ஐயா.
எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும்..........சகோ தோழமைகளே........
===============================

ஷேர் மார்க்கெட் யோகம் யாருக்கு?


ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னத்திலிருந்து நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது லக்னத்திலிருந்து ஐந்து, ஒன்பது. பணபரம் என்பது இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு, பதினொன்று. ருணம், ரோகம், சத்ரு ஆறாம் இடம். விரயம் பன்னிரெண்டாம் இடம். ஆதாயம் எனும் தனவரவு, பணம் வரும் வழிகள் பற்றி பேசும் இடம் தனஸ்தானம் எனும் லக்னத்திற்கு இரண்டாம் இடம். தனம், வாக்கு சாதுர்யம், உடல் உழைப்பு இல்லாமல் மூளையைப் பயன்படுத்தி வாய், வார்த்தை ஜாலம், பேச்சு, எழுத்து மூலம் பணம் சேரும் வழியைச் சொல்கிறது.

ஐந்தாம் இடம் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், யோசனை சொல்வது திட்டங்கள் தீட்டிக் கொடுப்பது. நான்காம் வீட்டிற்கு இரண்டாம் இடம் கற்ற கல்வியின் மூலம் பணம் சம்பாதிப்பதைக் குறிக்கும். எட்டு, இரண்டு, பதினொன்றாம் வீட்டுத் தொடர்புகள் மூலம் உழைப்பில்லாத செல்வம், மறைமுக பண வரவு, ரேஸ், லாட்டரி, பங்குத்தொகை திடீர் ஏற்றம் என எதிர்பாராத வருமானத்தைக் குறிக்கும். பங்கு மார்க்கெட் வர்த்தகம் பற்றித் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாருக்கும் கிரக பலம்தான் முக்கியம். தனபாக்கிய யோகம், குருட்டு அதிர்ஷ்டம் காரணமாக பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டிவிடும். பணம் என்றவுடன் முதலில் முந்திக்கொண்டு நிற்பது தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம்.

சிலமணி நேரங்களில் பல ஆயிரங்களை, லட்சங்களை மொத்தமாக அள்ளித்தரும் தொழில். உங்களுக்கு பங்குச்சந்தையில் அதாவது ஷேர் மார்க்கெட்டில் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று அல்லது பங்கு பத்திரங்களில் முதலீடு செய்து அதிலிருந்து லாபம் கிடைக்குமா? உங்களுக்கு அதிக உழைப்பில்லாத மூலதனத்தைக் கொண்டு திடீர் அதிர்ஷ்டம் மூலம் செல்வம் சேருமா அல்லது ஏற்ற இறக்கம் இருக்குமா என்பதை உங்கள் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்கள், கோரிக்கைகள், தற்காலம் நடைபெறும் தசாபுக்திகளின் பலம்தான் தீர்மானிக்கும். தற்கால கிரக சஞ்சார பெயர்ச்சிகள் மூலமும் சில அனுகூலங்கள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ், போட்டிகள், உயில் சொத்து, தான சொத்து, எதிர்பாராத வருமானம், பினாமி யோகம் என நாம் அனுபவிக்க ஜாதகத்தில் அனுபவிக்கின்ற பாக்கிய யோகம் இருக்கவேண்டும்.

கிரக அமைப்பு அம்சங்கள்

ஷேர் மார்க்கெட்டில் நுழைந்து பங்கு வர்த்தகப் பரிவர்த்தனை செய்து பணம் சம்பாதிக்க கொஞ்சம் கணக்கு, புள்ளி விவரங்கள், சிறிது சாதுர்யம், நிதானம், நிறைய அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு எளிதான வகையில் பணத்தை வாரித்தரும்.

புதன் சுக்கிரன் குரு சந்திரன்

ஜாதகத்தில் புதனின் அமைப்பு மிகவும் முக்கியம். வர்த்தக வியாபார கிரகம் புதன். புதனுக்கு இன்னொரு பெயர் கணக்கன். புத்திசாலித்தனம், திறமை, சமயோசிதமாக கணிப்பது எல்லாம் புதன் தரும் வரமாகும். சுக்கிரனும் பொன், பொருள், செல்வ வளத்தை அருள்பவன். குரு தனகாரகன் நிதி, வங்கி, பணப் பரிவர்த்தனைக்கு அதிகாரம் செலுத்துபவர். சந்திரன் தினக்கோள் இவரின் சஞ்சாரம் காரணமாக வர்த்தகம் ஏற்றம், இறக்கம், ஸ்திரத்தன்மை போன்றவற்றை தன் கையில் வைத்திருப்பவர். ஆக இந்த நான்கு கிரகங்கள் நமக்கு அனுகூலமாக இருந்தால் நிச்சயமாக பண மழையில் நனையலாம். பொதுவாக ஜாதக கிரக அமைப்புக்கள் யோகமாக இருந்தாலும் நடைபெறும். தசா புத்திகள்தான் ஒருவருக்கு ஐஸ்வர்யத்தைத் தந்து பணத்தில் புரள வைக்கிறது.

ராகு தசையில் யோகாதிபதிகளின் புக்திகளில் பெருமளவு பொன், பொருள் சேரும். கேது தசை நல்ல யோக அம்சத்தில் இருந்தால் ஒருவரை கோடிகளில் புரள வைக்கும். தர்மகர்மாதிபதி எனும் 9, 10க்கு உடையவர்களின் தசையில் பங்கு வர்த்தகத்தில் பணம் சேரும். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம், விபரீத ராஜயோகத்தைத் தரும். எட்டாம் இடத்திற்கும், தனஸ்தானமான இரண்டாம் இடத்திற்கும் சம சப்தம பார்வை தொடர்பு உண்டு. இந்த இடத்து சம்பந்தமான தசைகளில் கோடி, கோடியாய் பணம் புரளும். பத்தாம் அதிபதி ஐந்தாம் இடத்திலும், ஐந்தாம் அதிபதி பத்தாம் இடத்திலும் இருந்து தசா புக்திகள் நடைபெறும்போது பிரபலமான வணிக வர்த்தக யோகம் அமையும். ஒருவருக்கு 7½ சனி நடைபெறும்போது திடீர் ராஜயோகத்தைக் கொடுத்துவிடும். விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் வந்து அமரும் சனி ஒருவருக்கு பண வரவைத் தந்து சுப விரயத்தை ஏற்படுத்தும். இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக அமரும்போது அளப்பரிய தனத்தையும் பொன், பொருள் யோகத்தையும் கொடுக்கும்.

நன்றி;தினகரன்.
================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...