Followers

Tuesday, May 12, 2020


12.5.20





எது சிவத்தொண்டு?

1)
பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார்  ஆனார்.
2)
பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார்  ஆனார். (மீனவர் குத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)
3)
மாட்டின் தோலை உரித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.
4)
சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
5)
சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
6)
சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.
7)
சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
8)
குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
9)
ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
10) 
ஈசனுக்கு பூ பறித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
ஆக…… சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த  கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.


ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.
அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்—-அவரே சிவனடியார்.

எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்….ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு
ரொம்ப பிடிக்கும்.

சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர்
பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.
ஆக….. சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.
சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே  வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லும் சொல்இன்மை யறிந்து. சிவசிவ ,
------------------------------------------------------
2
""
பிறப்புக்கு முன்னாலும்; இறப்புக்குப் பின்னாலும்; பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் இறைவா! உன்னை நான் வணங்குகிறேன்.
மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு; காற்றால் லைக்கழிக்கப்படுவதுபோல்;மண்ணில் விழுந்த நானும் அலைக்கழிக்கப்படுகிறேன்.

எனக்கு வரும் துன்பங்கள் யாவும் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல.
அப்படியே நான் உண்டாக்கியிருந்தால் ;
அது பூர்வஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால்
என்மீது கருணை வைத்து எடுத்துக் கொண்டுவிடு.
நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன்.அப்படியே இருந்திருக்கலாம்; என் அறியாமையை மன்னித்துவிடு. நல்லது என்று நான் நினைத்து செய்வதெல்லாம் தீமையாக முடியும் என்றால்; அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது.

என் அறிவு சிறியது உன் ஆட்சிபீடம் பெரியது. அகந்தை; ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால்; இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும் ""என இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.''''... கண்ணதாசன்
...
அர்த்தமுள்ள இந்து மதம்
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...