Followers

Monday, May 10, 2021

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL M...

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL...........


மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.

இத்தகு சிறப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார். இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள். ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். பாடியவர் :ராகுல் ரவீந்திரன் இசை : வாரஸ்ரீ படத் தொகுப்பு : வாரஸ்ரீ ஸ்ரீ பக்தி Vel Maaral Sthothram, on the Powers of Lord Muruga's Vel, is written by VaLLimalai Sri Satchithaananda Swamigal, based on Sri Arunagirinaathar's Vel Vakuppu. It is a Sthothram which wards off and mitigates the effects of diseases. SAINT ARUNAGIRI NATHAR COMPOSED THREE VAGUPPU NAMELY SEERPAADHA VAGUPPU, DEVENDRA SANGA VAGUPPU, AND VEL VAGUPPU WHICH ARE RESPECTIVELY MANI, MANTRA,AUSHADHAVAGUPPU RECITEDFOR HEALTH AND WELLBEING IN THIS WORLD. SUNG BY : RAHUL RAVEENDRAN MUSIC : VAARASREE VIDEO POWERED BY : VAARASREE
நன்றி; SRE BAKTH


வேல்மாறல் மகா மந்திரம்:- வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil

இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து கொள்ளவும். தினமும் இருமுறை காலை மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும். அதிவேக சூப்பர் பாஸ்ட் ரயில் என்பது போல் அதிவிரைவில் இந்த மந்திரம் பலன் அளிக்கும்.

வேலும் மயிலும் சேவலும் துணை

1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.

2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…

6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…

7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். – திருத்தணியில்…

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்…

alagendra sollukku

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…

12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்…

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…

15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…

16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…

18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் – திருத்தணியில்…

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…

22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் – திருத்தணியில்…

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் – திருத்தணியில்…

25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் – திருத்தணியில்…

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் – திருத்தணியில்…

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்…

28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். – திருத்தணியில்…

35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…

36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…

38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…

39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…

40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்..

 

Murugan smile

41. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்..

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..

45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்..

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்..

51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…

52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..

55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…

57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்..

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்..

60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்..

61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…

62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்..

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். – திருத்தணியில்….

நன்றி;

https://aanmeegam.co.in/blogs/lyrics/vel-maaral-lyrics-in-tamil/



சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

   மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்

      வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்

         கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன்  கையெழுத்தே.

 

......... சொற்பிரிவு .........

 

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில்

தேம் கடம்பின்

   மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

      வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

         கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

 

......... பதவுரை .........

 

சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள

வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது

சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்

அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய

திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்

கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்

திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்

எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.

 

The Kaumaram Team       

===============================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...