இனிமையற்ற வாழ்வுபெறும் பெண்கள்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்.........
ஒவ்வொரு பெண்ணும் திருமணம் முடிந்து, கணவனுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்னும் எண்ணத்தில்தான் கணவன்வீடு செல்கிறார்கள். ஆனால் சில பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததுபோல கணவனது பாசமும், கணவன் வீட்டாரின் பாசமும் பாதுகாப்பும் கிடைக்காமல் போய்விடுகின்றன.
சில பெண்கள் கணவன் வீட்டாரால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். சிலர் கணவனாலேயே ஒதுக்கப்படுகிறார்கள். சில பெண்கள் திருமணம் முடிந்த சிறிது காலத்திலேயே கணவனைப் பிரிந்துவிடுகின்றனர். இன்னும் சில பெண்கள் குழந்தை பிறந்தபிறகு கணவனால் கைவிடப்பட்டு, பெற்ற குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கே வந்துவிடுகின்றனர். இன்னும் சிலரோ கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும், அவனது பாசம் கிட்டாமல் கணவன்- மனைவி இருவரும் அவரவர் விருப்பம்போல் வாழ்கின்றனர். சில பெண்கள் திருமணம் நடக்காமலேயே கன்னியாக வாழ்கின்றனர்.
இதுபோன்று இனிமை கிட்டாத இல்லற வாழ்வை அடையும் பெண்களை, அவர்களது பிறப்பு ஜாதகத்தைக்கொண்டு சித்தர்கள் கூறிய தமிழ்ஜோதிட முறையில் அறிவோம்.
உதாரண ஜாதகம் 1-ல் புதன், கேது கிரகங்கள் கும்ப ராசியிலும், அதற்கு இரண்டாவது ராசியான மீனத்தில் ஜாதகியைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சுக்கிரனும் உள்ளன. இத்தகைய அமைப்பில் பிறந்த பெண்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. (மற்ற கிரகங்கள் எப்படி இருப்பினும் பலன் ஒன்றுதான்.)
உதாரண ஜாதகம் 2-ல் புதன் ரிஷப ராசியிலும், அதற்கு இரண்டாவது ராசியான மிதுனத்தில் ஜாதகியைக் குறிப்பிடும் சுக்கிரனும் அமைந்திருந்து, சாப கிரகமான கேது புதனுக்கு 5-ஆவது ராசியான கன்னியில் இருந்தால், இத்தகைய ஜாதகம் சாப தோஷமுள்ள நிலையை உடையதாகும்.
உதாரண ஜாதகம் 3-ல் ஜாதகியைக் குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் கன்னி ராசியில் உள்ளது. அதற்கு இரண்டாவது ராசியான துலா ராசியில் புதன், கேது கிரகங்கள் உள்ளன. இந்த அமைப்பு அந்தப் பெண்ணின் முற்பிறவி சாப வினையைக் குறிப்பிடுகிறது.
பெண்களின் பிறப்பு ஜாதகத்தில் இதுபோன்று கும்பம், மீனம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் புதன், சுக்கிரன் இருந்து, புதனுக்கு 1, 5, 9-ஆம் ராசிகளில் கேது இருந்தால், அந்தப் பெண்களின் திருமணத்திற்குப் பின்பு சில பாதிப்புகளை அடையச்செய்யும். இந்த கிரகங்களுடன் சூரியன் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டால், அந்தப் பெண் தன் குழந்தையுடன் பிறந்தவீட்டிற்கு வந்துவிடுவாள்.
இதுபோன்ற கிரக அமைப்புகளுடன் பிறந்த பெண்களின் குடும்ப வாழ்க்கை குலைந்து மகிழ்ச்சியில்லாத நிலை ஏற்பட்ட போதும், இவர்கள் தங்கள் சுய உழைப்பு, நிர்வாகத் திறமையால் உயர்ந்த வேலை, தொழில் என அமைந்து நிறைய பணம் சம்பாதித்து வீடு, வாகனம், ஆபரணம் என சொத்துகளை அடைந்து வாழ்வார்கள். பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தாலும், மனநிம்மதி இல்லாமல் வாழ்வார்கள்.
இதுபோன்ற கிரக அமைப்பில் பிறப் பதற்கும், இல்லற வாழ்வு குலைந்துபோவதற் கும், கனவனிடம் கருத்து வேறுபாடு, விவாகரத்து என ஏற்படுவதற்கும் முற்பிறவி களில் செய்த பாவமும், அதனால் உண்டான சாபமும்தான் காரணமென்பது சித்தர்கள் வாக்கு.
கனவனிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்துவாழும் பெண்கள் தங்கள் பிறப்பு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால் இதுபோன்ற கிரக அமைப்பு இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.
courtesy; balajothidam /nakiran.
============================================
No comments:
Post a Comment