Followers

Tuesday, April 20, 2021

 

பூர்வஜென்மம்! -ஆர். மகாலட்சுமி



வ்வொரு ஜாதகத்திலும் 12 கட்டங்கள் இருக்கும். இவற்றை பாவங்கள் என்பர். ஒவ்வொரு பாவமும் பல விஷயங்களைக் குறிக்கும்.

லக்ன பாவம் ஜாதகரையும், இரண்டாம் பாவம் தனம்; மூன்றாமிடம் வீரம்; நான்காமிடம் வீடு, வாகனம்; ஐந்தாமிடம் புத்திரர்; ஆறாமிடம் நோய், கடன்; ஏழாமிடம் களத்திரம்; எட்டாமிடம் விபத்து; ஒன்பதாமிடம் அதிர்ஷ்டம்; பத்தாமிடம் தொழில்; பதினொன்றாமிடம் லாபம்; பன்னிரண்டாமிடம் விரயம் எனும் முக்கிய செயல்களின் குறியீடாக விளங்கும்.

s



இவற்றுள் ஐந்தாமதிபதி, ஐந்தாமிடம் மிகமிக சிறப்புவாய்ந்தது. இந்த 5-ஆமிடம்தான் ஒருவரது லக்னம், லக்னாதிபதியின் அமைப்புக்கு, சுப- அசுபத் தன்மைக்குக் காரணம்.

5-
ஆமிடம் என்பது பூர்வபுண்ணிய ஸ்தானம். அதாவது ஜாதகர்கள் கடந்த ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் தொகுப்பு அல்லது செய்த பாவமூட்டையின் சுமை என அறிந்துகொள்ளலாம்.

புண்ணியம் செய்திருக்கும் அமைப்பு:

ஐந்தாமதிபதி சுபராக இருத்தல்; ஐந்தாமதிபதி சுபர் சாரம் பெறல்; ஐந்தா மதிபதி சுபர் சேர்க்கை; ஐந்தாம் வீட்டில் சுபர்; ஐந்தாம் வீட்டை சுபர் பார்த்தல்.

பாவம் செய்த அமைப்பு: ஐந்தாமதி பதி பாவராக இருத்தல்; ஐந்தாமதிபதி அசுபரின் சாரத்தில் அமர்தல்; ஐந்தாமதி பதி பாவர் சேர்க்கை; ஐந்தாம் வீட்டில் அசுப கிரகம்; ஐந்தாம் வீட்டை அசுபர் பார்த்தல்.

ஒருவர் ஜாதகத்திலுள்ள இவ்வமைப் புகள், ஜாதகர் பாவம் செய்துள்ளாரா- புண்ணியாத்மாவா என தெளிவுபட கூறும். மேற்கண்ட அமைப்புகளில் ஐம்பதுக்கு ஐம்பது சதவிகிதம் கலந்திருப் பின் பாவம்- புண்ணியம் இரண்டிலும் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் செய்திருக்கிறார் என்று புரிந்துகொள்ள லாம். பல ஜாதகங்கள் பாவ- புண்ணிய கலப்பாகத்தான் அமைந்திருக்கும்.

ஐந்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடானது ஒன்பதாம் வீடு எனும் அதிர்ஷ்ட தர்ம ஸ்தானம். ஐந்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடானது லக்ன ஸ்தானமாகும்.

இதன்மூலம் கடந்த ஜென்ம பாவ- புண்ணியங்களின் அளவுப்படி அதை அனுபவிக்க ஏற்ற நேரத்தில்- அதாவது கோட்சாரம் அந்தநிலையில் இருக்கும் போது இறைவன் ஜாதகரைப் பிறக்கச் செய்கிறார்.

இனி 5-ஆமிடமும், அங்குள்ள கிரகங் களும் குறிப்பிடும் பாவ- புண்ணியங்கள் பற்றிக் காணலாம்.

சூரியன்

சூரியன் சுபத் தன்மையுடன் 5-ஆமிட சம்பந்தம் பெற்றால் ஜாதகர் முற்பிறவியில் தந்தையை நன்கு கவனித்திருப்பார். அரசு சார்ந்த செயல்கள், அரசியல் போன்றவற்றில் மிக நியாயமாக நடந்து அனைவருக்கும் ஒளிபொருந்திய வாழ்வைக் கொடுத்திருப் பார். மலை, காடுகள் சார்ந்த இடங்களில் வெகு நன்மை செய்திருப்பார். அந்தணர் களுக்கு உதவியும், மருத்துவ சேவையும் புரிந்திருப்பார். இதே சூரியன் அசுபத் தன்மையுடன் இருப்பின், ஜாதகர் கடந்த ஜென்மத்தில் தந்தைக்கு துரோகம் செய்திருப்பார். அரசு நிலம், அரசு கஜானாவை அபகரித்திருப் பார். காடுகளில் அநியாயமாக வேட்டை நடத்தி விலங்கினங்களை அழித்திருப்பார். அந்தணர்களை கலங்கவைத்திருப்பார். கோவில்களில் விளக்கெரியாமல் வினை புரிந்திருப்பார்.

சந்திரன்

ஐந்தாமிடம் சுபச் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தால், ஜாதகர் கடந்த ஜென்மத்தில் தாயை தெய்வமாகப் போற்றி கவனித்திருப்பார். ஏராளமான அன்னதானம் வழங்கியிருப்பார். தன்னுடைய சிறந்த கற்பனை வளம், ஓவியத் திறமை போன்றவற்றால் ஆன்மிகத் தொண்டு புரிந்திருப்பார். குழந்தைப்பேறு சமயத்தில் பிறருக்கு உதவிசெய்திருப்பார். தான் பெறாத பிள்ளைகளுக்கும் தாயாக இருந்திருப்பார். சந்திரன் பாவத் தன்மை பெற்று 5-ஆமிட சம்பந்தம் அமைந்தால், பெற்ற தாய்க்கு உணவு கொடுக்காமல் விரட்டியிருப்பார். குழந்தைகளுக்கு- அதுவும் பெண் குழந்தை களுக்கு துன்பம் இழைத்திருப்பார். நீர்நிலை களைப் பாழாக்கியிருப்பார். பிறரை பைத்தியமாக்கி இருப்பார். வயதான பெண் களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியிருப்பார். ஆன்மிகப் பயணங்களில் அனாச்சாரம் செய்திருப்பார்.

செவ்வாய்

5-
ஆமிட செவ்வாய் பாவ கிரகம் என்றா லும், சுபத்தன்மை பெற்று 5-ஆமிட சம்பந்தம் கொண்டால், ஜாதகர் தனது துணிவான செயலால் பல குழந்தைகளைக் காப்பாற்றி இருப்பார். விவசாயம்மூலம் நிறைய மக்களுக்கு வாழ்வும் உணவும் அளித்திருப்பார். தன்னைச் சார்ந்த மக்களுக்கு உடற்பயிற்சி போன்றவைமூலம் உடல்நல மேன்மை வழங்கியிருப்பார். தனது மருத்துவத் திறமையால் பலருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்திருப்பார். தன் பெயரிலுள்ள நிலத்தை பிற குழந்தைகளின் கல்வியின் பொருட்டு தானம் தந்திருப்பார். செவ்வாய் அசுபத் தன்மை பெற்று 5-ஆமிட சம்பந்தம் கொண்டால் ஜாதகர் தனது வீரம், துணிச்சலைக் காட்டி கொள்ளை யடித்திருப்பார். விவசாயிகளை வாட்டி வதைத்து துன்பப்படுத்தியிருப்பார். போலி மருத்துவராக இருந்து பணம் ஈட்டியிருப் பார். குழந்தைகளின் கல்விக்குக்கூட நிலத்தைப் பறித்துத் தனதாக்கி இருப்பார். மொத்தத்தில் சிறிதும் இரக்கமில்லாத கொடூரனாக இருந்திருப்பார்.

புதன்

புதன் சுபராகி 5-ஆமிடத் தொடர்பு கொண்டால், ஜாதகர் தனது அறிவாலும், வேடிக்கை விளையாட்டாலும் குழந்தை களை மலர சிரிக்க வைத்திருப்பார். பல குழந்தைகளின் கல்வி மேன்மைக்குத் தூணாக விளங்கியிருப்பார். தனது சிற்ப சாஸ்திரம், ஜோதிடம், நகைச்சுவை போன்ற திறமைகளை அனைவருக்கும் கற்றுத் தந்திருப்பார். மொத்தத்தில் இவர் ஞானதானம் செய்திருப்பார். குறிப்பாக கணிதம் சம்பந்தமான விஷயங்களில் பலருக்கு அறிவு உதவி செய்திருப்பார். புதன் அசுபராகி 5-ஆமிட சம்பந்தம் பெற்றால், ஜாதகர் கடந்த ஜென்மத்தில் மனக்குழப்பம் உடையவராக இருந்து சுற்றியுள்ளவர்களை பெரும்பாடு படுத்தி யிருப்பார். கள்ளக் கணக்கெழுதி பிள்ளை களின் மேன்மைக்குத் தடை போட்டிருப் பார். குலதெய்வக் கோவிலில் "குறி சொல்கிறேன்' என்று சொல்லி ஏமாற்றி யிருப்பார். வேதங்களை சரியாகக் கற்காமல் ஏமாற்றிப் பிழைத்திருப்பார். அல்லது வேத மந்திரங்களைக் கொண்டு தர்மமில்லாமல் அதிக செல்வம் சேகரித்திருப்பார்.

குரு

குரு சுபத் தன்மையோடு 5-ஆமிடத் தொடர்பில் இருந்தால், நல்ல உள்ளத்தோடு மாணவர் களுக்கு உண்மையாக கல்வி போதித்திருப்பார். வேதங்களை நன்றாகப் பயிற்றுவித்து பல ஆன்மிக வள்ளல்களை உருவாக்கியிருப்பார். மந்திரங்களைத் தெளிவாக உச்சரிக்கவும், அதனை அவ்வாறே கற்றுக் கொடுக்கவும் மிகவும் பிரயத்தனப்பட்டிருப்பார். பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்திருப்பார். பலருக்கு அவர்களது எதிர்காலம் பற்றி யூகித்தறிந்து, வாழ்வை செம்மைப் படுத்தியிருப்பார். அரசர்களுக்கு தக்க தருணத்தில் தக்க அறிவுரை கூறி, அவர்களையும் மக்களையும் பண்படுத்தியிருப்பார். எந்தவித பிரதிபலனும் பாராமல் ஒரு யோகியைப்போல பெருவாழ்வு வாழ்ந்திருப்பார். குரு அசுபராகி 5-ஆமிட சம்பந்தம் பெற்றால், கல்விக் கட்டணமாக அதிக தொகை கேட்டு கொள்ளையடித்திருப்பார். தனது வேத அறிவைப் பிறர் வாழ்வின் தாழ்வுக்குப் பயன் படுத்தியிருப்பார். சிலர் அறிவே இல்லாமல் அறிவுள்ளவர்போல் நடித்து ஏமாற்றி இருப் பார்கள். ஆலயங்களுக்கு, கல்விச் சாலைகளுக்கு கெடுதல் செய்திருப்பார். ஆகமொத்தத்தில் துரோகியாக இருந்திருப்பார்.

சுக்கிரன்

சுபரான சுக்கிரன் 5-ஆமிட இணைவில் இருப்பின், ஜாதகர் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாத்திருப்பார். மனைவியை மதிப்புடன் நடத்தியிருப்பார். கடவுள்மேல் பல கவிதைகள், மந்திரத் தொகுப்புகள், பாடல்கள் என தனது கவிதைத் திறமையை தெய்வத்துக்கு அர்ப்பணித்திருப்பார். தனது சிற்பம், ஓவியத் திறமைமூலம் தெய்வீக உணர்வை எங்கும் நிரப்பியிருப்பார். குழந்தைகளுக்கு சுவையான உணவுகளைக் கொடுத்திருப்பார். குழந்தைகளை அழகாக அலங்காரம் செய்திருப்பார். குல தெய்வக் கோவிலுக்கு நிறைய நகைகள், சங்கீதக் கருவிகள் போன்றவற்றை தானமளித்திருப்பார். சுக்கிரன் அசுபராகி ஐந்தாமிடத்தில் இருப்பின், நிறைய காதல் செய்து பலரையும் ஏமாற்றியிருப்பார். மனைவியைப் பாடாய்ப் படுத்தியிருப்பார். பெண் குழந்தைகளை அலட்சியப்படுத்தி இருப்பார். தங்களது கவித் திறமையால் மக்களை கீழ்த்தரமான ரசனைக் குச் செல்ல வழிவகுத்திருப்பார். மொத்தத்தில் இவர்களும் ஒழுக்கமின்றி வாழ்ந்து, தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் படுகுழியில் தள்ளியிருப்பார்கள். கலைத்துறையில் ஈடுபட்டு பல குடும்பங்களை கண்ணீர்விட வைத்திருப்பார்கள். சிறிதும் உழைக்காமல் செல்வம் சேர்த்திருப்பார்கள். மதுபானம் சம்பந்தமாக பெரும் தீங்குசெய்து கெட்டு அழிந்திருப்பார்கள்.

சனி

சனி பாவரானாலும் அவர் சுபத்தன்மை பெற்று 5-ஆமிட சம்பந்தம் பெற்றிருந்தால், ஜாதகர் தனது கடுமையான உழைப்பால் தன்னைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத் திற்குப் பாடுபட்டிருப்பார். மிகவும் கீழ்நிலையிலுள்ள குழந்தைகளின் கல்விக்கும், அறிவு மேன்மைக்கும் மிக முயற்சியெடுத்திருப்பார். தனது தனித்துவமான தவ வலிமையால் பலரை மரண விளிம்பிலிருந்து காப்பாற்றியிருப்பார். பள்ளி, கல்விச் சாலைகளைத் தனது சொந்த பலத்தினால் கட்டித் தந்திருப்பார். வயதான காலத்திலும் பிறரது நன்மைக்குப் பாடுபட்டிருப்பார். சனி அசுபத் தன்மை பெற்று 5-ஆமிட சம்பந்தம் பெற்றால், பள்ளியை இடித்துவிட்டு தனது சொந்தப் பயனுக்கு மாற்றியிருப்பார். குடும்பத்தின் செல்வத்தை மது, பந்தயம், சூதாட்டம் என விரயமாக்கி குடும்பத்தினரை நிர்க்கதியாக்கி இருப்பார். இரக்கமே இல்லாமல் வாழ்ந்திருப்பார். மனைவி சொத்தை விலைமாதர்களுக்குக் கொடுத்து, மனைவியை நிர்க்கதியாக விட்டிருப்பார். சுயநலமாக வாழ்ந்து அனைவரின் சாபத்திற்கும் ஆளாகியிருப்பார். ராகு- கேது எங்கிருந்தாலும் நற்பலனைக் கொடுக்கமாட்டார்கள். ஐந்தாமிடத்திலும் ராகு- கேதுக்களால் நற்பலன் தர இயலாது.

இதிலிருந்து ஒரு ஜாதகரின் கடந்த ஜென்ம பாவ- புண்ணியத்திற்கேற்ப, அதன் பூர்வபுண்ணிய வீடான 5-ஆமிடத்திற்கு அதிர்ஷ்ட வீடான லக்னம், லக்னாதிபதி அமையப் பெறுகிறது. இதனால்தான் ஐந்தாமிடத்தின் காரகமான வாரிசுகளின் நிலை நல்லதாகவோ கெட்டதாகவோ அமைகிறது. வாரிசுகள் தங்கள் பெற்றோரை அனுசரணையாக பார்த்துக்கொள்வதற்கும், அழ வைப்பதற்கும் இதுவே காரணமாகும். ஐந்தாமிடம் குறிக்கும் அறிவுகூட இந்த நிலை சார்ந்தே அமைகிறது. கடந்த ஜென்மத்தில் பலரை ஏமாற்றி இருப்பின், இந்த ஜென்மத்தில் லக்னாதி பதி 5-ல் அல்லது ஐந்தாமதிபதி லக்னத்தில் நீசமாக அமர்கிறார்கள்.

இதனால் ஜாதகருக்கு புத்திசாலித் தனம், சாதுரியம் என எவையுமே இல்லாமல் முட்டாளாக இருப்பார் கள்.

இதுபோல ஐந்தாமிடத்தின் மற்ற செயல்களான கலையுலகம், காதல், பங்குப் பத்திரம், அமைச்சர் பதவி, யூகம், கர்ப்பம், ஆரோக்கியம், நுணுக்கமான விஷயங்கள் என இவைபோன்ற செயல்களுக்கும் லக்னாதிபதியும் 5-ஆமதிபதியும் நல்ல நிலையில் இணைந்து அமைகிறார் களா அல்லது 'கெமிஸ்ட்ரி' ஒத்துப் போகாமல் எதிரெதிராக அமைகின் றதா என்பதை ஐந்தாமிடத்தின் அதிர்ஷ்டமே முடிவுசெய்யும்.

ஜோதிடத்தின் முதல் பாடமே, எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னம், லக்னாதி பதி கெடக்கூடாது என்பதாக இருக்கும். அதன் பொருள் என்னவென்பது இக்கட்டுரையில் விளங்கி யிருக்கும். கடந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் லக்னம், லக்னாதி பதியை சுபத் தன்மையாக அமைந்திருக் கச் செய்யும். கடந்த ஜென்ம பாவத் தொகுப்பு லக்னம், லக்னாதிபதியை நீசம் மற்றும் மறைவிடத்தில் அமைந் திருக்கச் செய்யும்.

மிகவும் சுலபம். கடந்த பிறவியில் முழு புண்ணியாத்மாவாக இருந்திருந்தால் மனிதப் பிறவியே இருந்திருக்காதே! தெய்வ நிலை யல்லவா கிடைத்திருக்கும்! எனவே இந்த பிறவியிலாவது கொஞ்சம் புண்ணியம் செய்ய முயற்சி செய்வோம்.

செல்: 94449 61845

 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...