ஈழத்தில் மறந்த துலாகிணற்று பாரம்பரியம் மறைந்து வரும் ஓர் வாழ்வியல் பண்பாடு!
அன்றைய தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை கோலங்களில் நீரியல் தேவைகளை பூர்த்தி செய்த எளிய பொறி என்பதன் அடிப்படையில் துலாக் கிணறுகள் அமைகின்றன.
உண்மையில் மனிதனின் அன்றைய வாழ்வின் வெற்றிகளில் இதுவும் ஒன்றாகின்றது. இன்று மோட்டார் பம்பிகள் மற்றும் குழாய் கிணறுள் மூலம் நீரை பெறுகின்றனர் அன்று துலாவே அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் உதவியது. இன்று யாழ்பாணத்தில் துலாவினை காண்பதென்பது அரிதிலும் அரிது.
தமிழர் வாழ்வோடு ஒன்றிப்பிணைந்த இதுவும் இன்று மறக்கப்பட்டு விட்டது. எனினும் ஊர்ப்புறங்களில் இதை இன்றும் காணும் போது மெய் சிலிர்க்கும் சில நினைவுகள் மனதுள் பரவுகிறது. இதைவிட இந்த விவசாயம் என்பது கிணற்றில் இருந்து நீரை இறைப்பதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது.
இன்றும் காணும் போது மெய் சிலிர்க்கும் சில நினைவுகள் மனதுள் பரவுகிறது. இதைவிட இந்த விவசாயம் என்பது கிணற்றில் இருந்து நீரை இறைப்பதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு பயன்பட்ட எளிய சாதனமே துலா ஆகும். இலங்கையில் வடமாகணத்தில் பெரிதும் இது பயன்படுத்த்ப்பட்டதாக காணப்பட்டது மேலும் அதிகம் யாழ்ப்பாணத்தில் அதிகம் பயன்படுதப்பட்ட ஒன்றாக உள்ளது. இன்று ஒருசில இடங்களிலே காணக்கூடியதாக உள்ளது சிறிய கிணறுகள் மற்றும் ஆழமான கிணறுகளில் இது பயன்பாட்டில் இருந்தது.
இந்த துலா அமைப்பு தொடர்பாக நோக்கும் போது ஒரு நீளமானதும், நேரானதுமான பனை மரம் சீவப்பட்டு முன்னுக்கு கூரியதாகவும் பின் பக்கம் அகன்றதாகவும் அமையும். ஆனால் தற்கால துலா மரங்களுக்கு பதிலாக இரும்பு கேடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. காலம் மாறியதன் செயற்பாடுகள் தான் இவை. இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும்.
இம்மர்த்தின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு அமைகப்பட்டிருக்கும் இவ்விடம் அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் மரம் அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால்எனவும் அழைக்கப்படும்.
பெரும்பாலும் ஆடுகால் பூவரசம் மரத்தினால் ஆக்கப்படும். ஆனால் காலங்கள் மாறி சீமேந்து கட்டிடங்களாகவே ஆடுகால் விளங்குகின்றது. ஆடுகால் துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். சமனிலைப்பட்டால் துலா கிணற்றுக்கு ஏறி இறங்க கடினப்படும் என்பதாலே சற்று தள்ளி அமையும்.
இதனால் ஆடுகால் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம்உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும்அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும்.
கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது மூங்கில் கம்பை ஒன்றை ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் அல்லது வாளி கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது வாளி கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும்.
பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும். நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர்.
துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம் அதிலும் இந்த விவசாய நிலங்களில் இருந்த கிணறுகள் மிகவும் ஆளமானவை. இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்துக்கு பாய்ச்சுவதற்கு துலா மூலம் அள்ளி ஊற்றுவது, சூத்திரப் பொறிமுறையை பயன்படுத்தி இறைப்பது என்ற இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன.
துலா மூலம் அள்ளி ஊற்றும் போது துலா கயிற்றை பிடித்து தண்ணீரை அள்ளி ஊற்றவதற்கு ஒருவரும் துலாவின் மேல் ஏறி நின்று முன்பின் அசைந்து துலா மிதித்தல் தண்ணீர் அள்ளுவதை இலகுவாகக் இருவரும் அதை பயிருக்கு வாய்க்கால் மடைகளை திறந்து பாய்ச்சவதற்கு ஒருவரும் என்று குறைந்த பட்சம் நான்கு பேர் தேவைப்பட்டார்கள்.
பொதுவாக அந்தக் காலகட்டத்தில் துலா மிதிக்கும் வேலையை பஞ்சமர்களே செய்தார்கள். அன்றைய காலத்தில் விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்ட ஆடுகால் துலா பயன்பட்டது இறைக்கும் மரபினை புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள இளஞ்சந்ததியினர் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
இந்த துலா குறித்த சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. 2ம் உலக யுத்த காலங்களில் ஜப்பான் யுத்த விமானங்கள் இலங்கையின் கொழும்பு மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் குண்டு வீசப்பட்டாலும் யாழ்பாணம் மீது நாட்டு யுத்த விமானங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பறந்தபோது அங்கு நிமிர்ந்து நின்றதுலாக்களைப் பெரிய பீரங்கிக் குழாய்கள் என்று நினைத்து அஞ்சி யாழ்ப்பாணத்தில் குண்டு போடவில்லை என ஒரு கதை உண்டு.
அன்று விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்ட ஒன்றாகவே இது காணப்பட்டது. அன்றைய காலத்தில் துலா வைத்திருந்த வீட்டுகாரர்கள் விவசாய நிலவுடமையாளர்களாக காணப்பட்டனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் நான் இன்று இது பற்றி அறிய ஆர்வங்கொண்ட பொழுது காணக்கிடைத்தல் மிக மிக அரிது உண்மையில் வேதனைக்குரிய விடயம் தான் இவ்வாறான பொருட்கள் அந்தக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வளவு பயன்பட்ட ஒரு பொருள் ஆனால் இன்று அதை கவனியாமலும் மற்றும் கால மாற்றத்துக்கும் எம்மவர்கள் மறந்து விட்டார்கள். துலா கிணற்று பாரம்பரியங்களை எனது அப்பப்பா வீட்டில் அதை பாதுக்காக்கின்றனர் என்பதில் பெருமை அடைகின்றேன்.
இவ்வாறான பொருட்கள் எம் வரலாற்று பொக்கிஷங்கள் அடுத்து வரும் சந்த்ஜதியினருக்கு இதனை தெரியப்படுத வேண்டும் எனில் வைத்திருப்பவர்கள் கூட இதனை பாதுகாத்து கொள்ளுங்கள். பழைய பொக்கிஷங்கள் வாழ்வின் நினைவுகளை எடுத்துக்காட்டும் ஊக்குவிக்கும் ...
No comments:
Post a Comment