பணக் கஷ்டம் தீர எளிமையான வழிபாட்டு முறை........................
பணக் கஷ்டம் தீர 8 வாரங்கள் வாராஹி அம்மனை விரதம் அனுஷ்டிக்கலாம்
வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, எட்டு வாரங்கள் வாராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்தாலே போதும். எப்பேர்பட்ட பணக் கஷ்டமும் நீங்கும்.
இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான். பார்ப்பதற்கு உக்கிரமாக இருக்கும் இந்த அம்பாளின் மனது குழந்தை போன்றது. பாசத்தோடு நீங்கள் வேண்டி விரும்பி எதை கேட்டாலும் அந்த வரத்தினை அள்ளிக் கொடுத்து விடுவாள். ஆனால், உங்களுடைய மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இருக்கக்கூடாது. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் கள்ளம் கபடம் இல்லாமல், நன்மைக்காக எதை விரும்பி கேட்கிறீர்களோ, அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. தவறு செய்பவர்களுக்கு முதலில் தண்டனை கொடுப்பவளும் இவள்தான்.
வாராஹி அம்மனை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். உங்களுக்கு வீட்டில் அந்த அம்மனின் திருவுருவ படத்தை வைத்து வழிபாடு செய்ய, மனதில் சிறிய உறுத்தல் இருந்தால் கூட, மன சங்கடத்துடன் வீட்டில் அம்பாளை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. நீங்கள் ஏற்றி வைக்கும் தீபத்தை வாராகி அம்மனாக நினைத்து இந்த பூஜையை மனத் திருப்தியோடு செய்யலாம்.
வாராஹி அம்மன் படம் இருந்தால் அவளுக்கு அரளிப் பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு பூக்களைச் சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். கருநீல நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சமாக வெண் கடுகை போட்டு சிறிய முடிச்சு போல கட்டி, மண் அகல் தீபத்தில் வைத்து, அந்த முடிச்சின் மேல் நல்லெண்ணெய்யை ஊற்றி, இந்த முடிச்சை தீபமாக ஏற்ற வேண்டும். வீட்டிலேயே இந்த தீபத்தை தாராளமாக ஏற்றலாம்.
இந்த பூஜையை செய்யும் போது வாராஹி அம்மனுக்கு பிடித்த மரவள்ளிக் கிழங்கை நைவேத்தியமாக வைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு கிடைக்காதவர்கள், வெண் பூசணியை வாங்கி, அதை வேக வைத்து சாதத்துடன் கலந்தும் வைக்கலாம். தவறு கிடையாது. இப்படியாக ஒவ்வொரு வாரம் வரும் சனிக்கிழமை விரதம் இருந்து காலை 6 மணி யிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையைச் செய்யவேண்டும். முடியாதவர்கள் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். தொடர்ந்து 8 வாரம் சனிக்கிழமைகளில் இப்படி உங்களுடைய வீட்டிலும் இந்த விரத வழிபாட்டை செய்யலாம். அல்லது கோவிலுக்குச் என்றும் இதேபோல் வழிபாட்டை செய்யலாம்.
இழந்த செல்வம், பொன், பொருள், இவைகளை மீட்டுத் தரும் சக்தி இந்த பூஜைக்கு உண்டு. வாழ்க்கையில் உங்களுக்கு எதிரி தொல்லை இருந்தால் அதில் இருந்தும் விடுபடலாம். தீராத மன கஷ்டம், தீராத துன்பங்கள், தீராத வேதனைகள், இவைகளிலிருந்து கூடிய விரைவில் வெளி வரும் வழியை அந்த வாராகி அம்மன் உங்களுக்கு காட்டிக் கொடுப்பாள்.
SRI VARAHI MAALAI FOR PROTECTION ஸ்ரீ வராஹி மாலை துன்பங்கள் நீங்க
வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்".
என்ற காயத்ரி மந்திரத்தை
தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி oodum.
=========================
=========================
12 - சக்தி வாய்ந்த வாராஹி நாமங்கள்
1. ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ .
2. ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
3. ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
4. ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.
5. ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
6. ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
7. ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
8. ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.
9. ஓம் ஐம் க்ளெளம் வார்த்தாளியை நமஹ.
10. ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
11. ஓம் ஐம் க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை நமஹ.
12. ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த வாராஹியின் நாமாக்கள். தினமும் குறைந்தபட்சம் இவற்றை அர்ச்சனை செய்வோம்.
வாராஹியின் பேரருளை பெறுவோம்.அகசத்ருக்கள், புறச்சத்ருக்களை அழிக்கக்கூடியவள் வாராஹி. நம்மை மட்டுமல்ல, நம்முடைய தேச பாதுகாப்பையும் அரணாக நின்று பாதுகாப்பவள் இவளே.
நம் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்து நல்ல வழியில் தொடர்ந்து செல்ல அருள்பாலிப்பவள் அன்னை வாராஹி !
குழந்தைகளுக்கும் இந்த எளிய நாமாக்கள் கற்றுத்தந்து லகு பூஜைகள் செய்ய உற்சாகப்படுத்துவோம் !
எல்லா வித சம்பத்துக்களையும் அள்ளித்தருபவள் இவளே !
1. ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ .
2. ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
3. ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
4. ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.
5. ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
6. ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
7. ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
8. ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.
9. ஓம் ஐம் க்ளெளம் வார்த்தாளியை நமஹ.
10. ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
11. ஓம் ஐம் க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை நமஹ.
12. ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.
ஓம்
ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!
ஓம் குண்டலினி
புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
ஓம் அஷ்டலக்ஷ்மி
ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த வாராஹியின் நாமாக்கள். தினமும் குறைந்தபட்சம் இவற்றை அர்ச்சனை செய்வோம்.
வாராஹியின் பேரருளை பெறுவோம்.அகசத்ருக்கள், புறச்சத்ருக்களை அழிக்கக்கூடியவள் வாராஹி. நம்மை மட்டுமல்ல, நம்முடைய தேச பாதுகாப்பையும் அரணாக நின்று பாதுகாப்பவள் இவளே.
நம் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்து நல்ல வழியில் தொடர்ந்து செல்ல அருள்பாலிப்பவள் அன்னை வாராஹி !
குழந்தைகளுக்கும் இந்த எளிய நாமாக்கள் கற்றுத்தந்து லகு பூஜைகள் செய்ய உற்சாகப்படுத்துவோம் !
எல்லா வித சம்பத்துக்களையும் அள்ளித்தருபவள் இவளே !
No comments:
Post a Comment