இணைபிரியா இல்லறத்திற்கு
ஜோதிட சூட்சுமம்! -
திருமணம் என்பது ஆண், பெண் இருவரையும்
இணைத்து நல்லுறவை நெடுங்காலம் உறுதிப் படுத்தும் சுபநிகழ்வாகும். கணவன்- மனைவி
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, எந்த சூழ்நிலையிலும் அனுசரித்து நடந்துகொள்வதே மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு
அவசியம். எனினும் சமீபகாலங்களில் மணமுறிவுகளை அதிகமாகக் காணமுடிகிறது. இவற்றுக்கு
சமூக, பொருளாதாரரீதியாக பலவித காரணங்கள் கூறப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரரீதியாகவும் சில காரணங்களையும், தவிர்த்திடும்
வழிமுறைகளையும் காண்போம்.
ஜோதிடசாஸ்திரப்படி, அண்ட வெளியில்
நட்சத்திரக் கூட்டங்கள், ராசி மண்டலங்களாகக் கருதப் பட்டு, நிலையாக நின்று பிரகாசிக் கின்றன. மேஷம் முதல் மீனம் வரை யிலான இந்த 12 ராசி மண்டலங் களையே
நவகிரகங்களும் தத்தம் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழல் கின்றன. இந்த கிரகங்களிடமிருந்து
வெளிப்படும் மின்காந்த ஒளிக் கதிர்கள் பூமியில் வாழ்பவர்களிடம் தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன என்பதை உலக நாகரிகங்கள் அனைத்தும் ஒப்புக் கொள்கின்றன. இதையே
ஜோதிட சாஸ்திர மேலைநாட்டு மாமேதை ஷீரோ அவர்களும் (ஈட்ங்ண்ழ்ர் 1866லி1936) தனது நூல்களில்
வலிலியுறுத்திக் கூறுகிறார்.
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில்தான்
பிறக்கிறார்கள். அந்த தேதிகள் 1 முதல் 31 வரையே அமைய முடியும். இந்த தேதிகளை அடிப்படை பிறவி எண்களான 1 முதல் 9 வரை மாற்றமுடியும்.
உதாரணமாக, ஒருவர் 15-ஆம் தேதி பிறந்தால் அவரது பிறவி எண் 1+5=6. விண்ணில் சுழலும் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
எண்ணில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை எண்கணித சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
1- சூரியன்; 2- சந்திரன்; 3- குரு; 4- ராகு; 5- புதன்; 6- சுக்கிரன்; 7- கேது; 8- சனி; 9- செவ்வாய்;
பிறந்ததேதி அடிப்படையில், இருவருக்கி டையேயான
உறவுமுறையைக் கணித்துவிட முடியும். இந்த கணிப்பிலும் கிரகங்களை ஒட்டி, நட்பு- பகை என்ற
நிலைப்பாடு அமைந்து வருகிறது.
பிறவி எண் நட்பு எண் பகை எண்
1
1, 2, 3, 9
6, 8
2.
2, 1, 5
4, 7
3.
3, 1, 2, 9
5, 6
4.
6, 8, 4
2, 9
5.
1, 6,
5 2
6.
6, 5, 8, 4, 7
1, 2
7.
6, 7, 8
2, 9
8.
6, 8, 4, 7
1, 2, 9
9.
1, 2, 3, 9
5
வேறுசில நூல்களில் 2-9, 6-3, 8-5, 9-2 பகை என்று கூறப்பட்டுள்ளது.
ஷீரோ அவர்கள் கருத்துப்படி ஒரே எண்ணைச் சேர்ந்த ஆண்-
பெண் இணைவதே மிகவும் சிறப்பானது. அதாவது ஆண் பிறவி எண் 3 என்றால். (பிறந்த
தேதிகள் 3, 12, 21, 30) பெண் பிறவி எண்ணும் 3 ஆகவே (பிறந்த தேதிகள் 3, 12, 21, 30) இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆண், பெண் பிறவி எண்கள்
ஒரேமாதிரியாகவோ, அடுத்த பட்சமாக பகை இல்லாமலோ அமைந்து விடும். எனில், இதற்கு அந்த கிரகம்
துணை புரியும். எனினும் இந்த இணைப்புத் தொடர்பு மனதளவே அமைந்துவிடும். ஏனெனில், அந்த கிரகம்
இருவருக்கும் ஒரேமாதிரி எண்ண ஓட்டங்களைத் தரும்.
திருப்திகரமான திருமண வாழ்க்கைக்கு மன ஒற்றுமை
மட்டும் போதாது; உடல்ரீதியான இணைப்பும் அவசியம்.
இப்படி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும்
ஒற்றுமை அமைவதையே ஷீரோ "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்ற பழமொழிக்கு
ஒப்பிடுகிறார்.
அந்த உடல்ரீதியான இணைப்பு நிகழ்வது எப்படி? இதற்கு இயற்கை
பஞ்சபூதத் தத்துவங்கள் துணைபுரிகின்றன. பஞ்சபூதங்களில் ஆகாய தத்தவத்தைத் தவிர, மற்ற நான்கு
தத்துவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அவை நீர், நிலம், நெருப்பு, காற்று. முன்பு
விளக்கிக் கூறிய அந்த 12 ராசி மண்டல வீடுகள் இந்த நான்கு தத்துவங்களிலும் அடங்கிவிடுகிறது.
மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு தத்துவம். ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நிலத் தத்துவம். மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்றுத் தத்துவம். கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை
நீர்த் தத்துவம்.
பஞ்சபூதத் தத்துவக்கலவையில் உருவான மனிதன், உடல்ரீதியான
இணைப்பு ஒரே தத்துவத்தில் அமையும்போது முழுமை அடை கிறது என்று ஷீரோ கூறுகிறார்.
அதாவது ஒருவர் (ஆண்) நெருப்புத் தத்துவம் என்றால் மற்றவர் (பெண்) நெருப்புத்
தத்துவத்தில் அமைவதே மிகவும் சிறந்த தாகும். அதன்படியே மற்ற தத்துவங்களும்
அமையவேண்டும் என்று கூறலாம். தத்துவங் கள் மாறி அமைந்தால், அவை உண்மையான
இணைப்பென்று கூறமுடியாது. ஒருவர் காற்று தத்துவமாகவும் மற்றவர் பூமி, அக்னி என்றால், காற்றுத் தத்துவ
நபரே அதிக ஆதிக்கம் செலுத்துவார். பூமி மற்றும் நீர்த் தத்துவங்கள் இணைந்தால், அது உலக சுகங்களை
நாடுவதில் அதிக நாட்டம் தரும். ஆன்மிக உடன்பாடு இருக்காது. அதேசமயம் நெருப்புத்
தத்துவமும் நீர்த் தத்துவமும் இணைவது தவிர்க்கப்படவேண்டும். இரண்டுமே ஒன்றுக்கொன்று
இயற்கை எதிரிகள். அப்படியே விதிவசத்தால் இணைய நேரிட்டால் நாளடைவில் வெறுப்புண்டாகி, பிரிவதுடன்
பகையாளிகளாகவும் மாறக் கூடும்.
மேற்கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு திருமணங்கள்
நடைபெற்றால் நீடித்து நிலைக்கும் என்று கூறலாம். தவிர்க்கப் படவேண்டியவற்றை தவிர்த்தலே
நன்மைபயக்கும் இந்த இணைப்பு கணவன்- மனைவி என்ற உறவு முறைக்கு மட்டுமல்லா மல், மற்ற தொழில்
பங்குதாரர், நெருங்கிய நண்பர் ஆகியோருக்கும் பயன்படுத்தலாம். இவை அனுபவத்தில் கண்ட உண்மை
களாகும்.
ஆர். சுப்பிரமணியம்
courtesy;balajothidam/nakkiran.
செல்: 74485 89113
====================================
No comments:
Post a Comment