Followers

Wednesday, November 4, 2020

 

பெற்றோரைத் தவிக்க விடுபவருக்குப் பரிகாரம் உண்டா?

 

 

 

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதைக் கேட்கும்போது "என்ன பெரிய நோய்?' என்கிற அலட்சியமான தொனியில் இளமையில் பேசுவோம். ஆனால், தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதன் அர்த்தம், தனக்கு நோய்த் தாக்கும்போதே எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியவரும்.

இளமையில் வறுமை கொடியதுபோல, முதுமையில் தனிமை கொடியது. நோய் வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகத் தானும் துன்பப் பட்டு, தான் பெற்ற பிள்ளைகளையும் கஷ்டப் படுத்தி பலர் இறக்கிறார்கள். நோயுள்ள பெற்றோரை கவனிக்காத மருமகளை துரோகிபோலவும், கவனிப்பவர்களை "சும்மாவா பார்க்கிறார்கள்? சொத்துக்காகத் தானே பார்க்கிறார்கள்?' எனவும் ஏளனமாகப் பேசுவர். உண்மையில் இரண்டுமே தவறானது.

 



முதுமையில் யாரையும் கஷ்டப்படுத்தாமல் நடமாடி, பேசிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைவது புண்ணியம் செய்தவர்களுக்கே வரம்போல அமைகிறது. தாயார் உடல்நிலை சரியில்லாமல் படுத்தால், தாயாரையும் கவனிக்கமுடியாமல், தாரத்திற்கும் பதில் சொல்லமுடியாமல் தவிக்கும் ஆண்கள் சாபம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

பெற்றோருக்கு நோய் வந்தால் அவர் களும் துன்பப்பட்டு, அவர்களைச் சார்ந்தவர் களையும் கஷ்டப்படுத்த வேண்டியதாகி விடுகிறது. அதற்காக நோயின்றி எந்த மனிதனின் வாழ்க்கையும் முடிவடையாது. இன்று ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை வாழாமல், அடுத்தவரோடு ஒப்பிட்டு அவர் களின் வாழ்க்கையை வாழவே விரும்புகிறார் கள். இதனால் மனநோய் மக்களுக்கு அதிகரித்து விட்டது. தன் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேள்விப்படுகிற நோய் தனக்கும் வந்து விடுமோ என்கிற பயமே பலரை நோயாளி யாக்கிவிடுகிறது.

அந்த காலத்தில் தாய் மீது பாசம் கொண்ட வரைத்தான் திருமணம் செய்துகொள்ள பெண்கள் விரும்பினார்கள். தாய்ப் பாசம் கொண்டவருக்குதான் குடும்பப்பற்று அதிகமிருக்கும் என்பதால், கட்டிய மனைவி யைக் கைவிட மாட்டார் என்னும் நம்பிக்கை யுடன் பெண் கொடுப்பர். ஆனால், இன்று தாய்மீது பாசம் கொண்டவரை, "அம்மா பிள்ளை என்றால் வரன் வேண்டாம்' எனவும், தாய்மீது பாசமிருந்தால், "உங்க அம்மாதான் முக்கியம் எனில் அவளுக்கு தாலியைக் கட்டி குடும்பம் நடந்து. என்னை எதற்குத் திருமணம் செய்தாய்?' என அருவருக்கத்தக்க கேள்விகேட்டு, அதற்கான நியாயத்தையும் சொல்கின்றனர். அம்மாவுக்குப் பணிவிடை செய்பவரை "பொம்பளபோல் வேலை செய்கிறான்' எனவும், "திருநங்கைபோல் இருக்கிறான்' எனவும் அவமானப்படுத்தி ஏளனப்படுத்துகிறார்கள்.

"
என் சூழ்நிலை என்னால் பெற்றோரைப் பார்க்க முடியவில்லை' என்கிற வேதனையும், "என் உடன்பிறப்பு பார்த்துக் கொள்கிறார்;

அவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்' என்கிற மனநிலையும் இல்லை. தனக்கு, பெற்றோருக்குப் பணிவிடை செய்ய மனமில்லை என்பதை மறைத்தும், பெற்றோ ருக்கு கடமை செய்யும் உடன்பிறந்தவர் களுக்கு நற்பெயர் வரக்கூடாதெனவும் குடும்பத் திலுள்ளவர்களே புரளி கிளப்புகிறார்கள்.

ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்படும் கல்வி சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைத் தரும் என்றார் கள். ஆனால், இன்று பொறுமை, நிதானம், மனிதம், சகிப்புத் தன்மை பெண்களிடம் குறைந்துவிட்டது. பெண்கள் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டியவுடன் திமிராக நடக்கிறார்கள் என பேசுவதும் தவறு. யாரையும் குறைசொல்லாமல், குடும்பத்தில் யார் யாருக்கு எப்படிப்பட்ட நோய் எப்போது வருமென்பதை அறிந்து, அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

முதுமையில் பெற்றோர், மாமனார்- மாமியாரைத் தனியாக தவிக்கவிடுவதால் உண்டாகும் தோஷத்திற்குப் பரிகாரம் உண்டா?

ஆறாமிடம்.........................

ஒரு மனிதனுக்கு நோயைப் பற்றி அறிந்து கொள்ளுமிடம் ஆறாமிடம். ஆறில் அமர்ந் திருக்கும் கிரகம், ஆறாம் அதிபதி கிரகம், ஆறாம் அதிபதியுடன் இணைந்த, பார்த்த கிரகம், ஆறாம் அதிபதி பெற்ற சாரத்திற்கேற்ற நோய் தான் ஒருவருக்கு ஏற்படும். ஆறாம் அதிபதி ராசி, ஆறாம் அதிபதி நின்ற ராசிக்குரிய உடல் அவயங்களில் நோய் உருவாகும். பொதுவாக, ஆறாம் அதிபதி தசா புக்திக் காலங்களிலும், ஆயுள்காரகன் சனியின் பிடியிலிருக்கும்போதும் நோய், திடீர் விபத்தால் உடல் நலம் பாதிக்கப்படும்.

ஆறாம் அதிபதி, ராசியால் நோய் தாக்கும் உறுப்புகள்:

மேஷம்: தலை, முகம், மூளை.

ரிஷபம்: உள்நாக்கு, கழுத்து, தொண்டை.

மிதுனம்: மூக்கு, நெஞ்சு, நுரையீரல், தோள்பட்டை, கை, விரல்.

கடகம்: வயிறு, மார்பு.

சிம்மம்: முதுகு, முதுகுத்தண்டு, இதயம்.

கன்னி: குடல் சார்ந்த பாதிப்பு.

துலாம்: சிறுநீரகம், தோல் வியாதி.

விருச்சிகம்: ரத்தம், மர்ம ஸ்தானம், காது, மூலநோய்.

தனுசு: இடுப்பு, கல்லீரல், தொடை.

மகரம்: எலும்பு, மூட்டு, பல், தோல்.

கும்பம்: கணுக்கால், காலின் கீழ்ப்பகுதி, ரத்த வியாதி.

மீனம்: நுரையீரல், குடல், கழிவு நீர், பாதம், பாத விரல்கள்.

ஆறாமிடத்தில் நிற்கும் கிரகங்களால் உண்டாகும் நோய்கள்:

சூரியன்: பித்தம், எலும்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்.

சந்திரன்: சைனஸ், ஆஸ்துமா, நீர் சம்பந்தப்பட்ட நோய்.

செவ்வாய்: ரத்தப் புற்றுநோய், வெட்டுக்காயம், எலும்பு மஜ்ஜை, விபத்து, அறுவை சிகிச்சை.

புதன்: நரம்புத் தளர்ச்சி, வாயுத் தொல்லை, தோல் வியாதி.

வியாழன்: கழுத்து வலி, மூளை பாதிப்பு, ஜல தோஷம், சர்க்கரை வியாதி, உடல்நலக் குறைவு.

சுக்கிரன்: நீரிழிவு நோய், பிறப்புறுப்புக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை.

சனி: விஷத்தால் பாதிப்பு, நரம்பு நோய்.

ராகு: எலும்பு முறிவு, விஷம், எதிர்பாலினத்த வரால் நோய்.

கேது: செரிமானக் கோளாறு, அறுவை சிகிச்சை, விஷ பாதிப்பு.

நோய் தரும் ஆறாம் அதிபதி தசாபுக்திகள்

மேஷம், மகர லக்னங் களுக்கு புதன் தசாபுக்தி; ரிஷபம், தனுசு லக்னங்களுக்கு சுக்கிரன்; மிதுனம், விருச்சிக லக்னங்களுக்கு செவ்வாய்; துலாம், கடக லக்னங்களுக்கு குரு; சிம்மம், கன்னி லக்னங்களுக்கு சனி; கும்ப லக்னத்திற்கு சந்திரன்; மீன லக்னத்திற்கு சூரியன் தசாபுக்திக் காலங்களில் நோயுண்டாகும் வாய்ப்புகள் அதிகம். ஆறாமிடம், ஆறாமிடத்தில் நின்ற கிரகம், ஆறாமதிபதியுடன் இணைந்த- பார்த்த கிரகங்களின் வலுத் தன்மையைப் பொருத்து நோயும், நோயின் தாக்கமும் ஏற்படும்.

இன்று பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய்தான் பெரிய சவாலாக இருக்கிறது. குரு, சுக்கிரன், சந்திரன் ஆகியோர் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீன ராசிகளில் நின்றால் நீரிழிவு நோயுண்டாகிறது. கிரக வலிமையைப் பொருத்து அதன் வீரியமும், 6, 8 அதிபதி தசாபுக்திகளின் வலுத்தன்மையைப் பொருத்து நோய்த் தாக்கமும் இருக்கிறது. குரு, செவ்வாய், ராகு பாதிப்பு புற்றுநோயைத் தருகிறது. ஆறில் சந்திரன், ராகு இணைவு, சந்திரன் நீசம் ஏற்பட்டு, 3, 5, 7, 8-ஆம் வீடுகளில் குரு, ராகு எந்த வீட்டில் இணைவு பெறுகிறதோ, அந்த இடத்தின் உறுப்புகளில் புற்றுநோய் வருகிறது. சனி நீசம்பெற்றா லும், சூரியன், செவ்வாய், ராகு- கேது ஐந்தில் இருந்தாலும் வயிற்றுவலி, கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்படுத்தும்.

சந்திரன், செவ்வாய் பலம் குறைந்தால் செரிமான மண்டலம் பாதிக்கும். ஏனெனில், சந்திரன் மனநிலை காரகன். மனநிலை சரியில்லாமல் இரவில் தூங்காமலிருந்தால் உடல் வெப்பம் அதிகமாகி செரிமானம் தடைப்படும். அதனால் மலச்சிக்கலில் தொடங்கி அனைத்து நோய்களும் வந்துவிடும். அதனால்தான் "எது நடந்தாலும் மனதை விட்டுவிடக்கூடாது' என தைரியம் சொல்வர்.

சந்திரன், ராகு, சனி வெண்குஷ்டத்தையும், மூன்றாமிட புதன் பலம் குறைந்து தசாபுக்தி நடந்தால் ஆஸ்துமா சம்பந்தப்பட்ட வியாதியும், சனி பக்கவாதம், முடக்குவாதத்தையும் தரும். இரண்டாம் அதிபதி 6, 8, 12-ல் இருப்பது பேச்சை பாதிக்கும். 6, 8-ஆம் வீடுகளில் சந்திரன், ராகு, கேது இருப்பது சளித்தொல்லையைத் தரும்.

பொதுவாக, பாவகிரகங்கள் லக்னம், ராசியைப் பார்ப்பது, 6, 8-ஆமிடங்களின் கெட்ட நிலை உடல்நலத்தையும், ஆயுளையும் பாதிக்கும்.

கடமை தவறுபவர்களுக்கு உண்டாகும் தோஷம் இன்று பெற்றோருக்கு செய்வது புண்ணியம் என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. தனக் கும் முதுமையில் நோய் வரும், நாம் எப்படி பெற்றோரை கவனிக்கிறோமோ, அப்படிதான் நம் பிள்ளைகள் நம்மை கவனிப்பார்கள் என நினைப்பதில்லை. "எனக்குக் கொடிய நோய் வராது. என்னைபோல் இல்லாமல் என் பிள்ளைகள் என்னைக் கைவிடமாட்டார்கள் . அதைமீறி வந்தால் வரட்டும், எதையும் பார்த்துக்கொள்வோம். இன்றைய சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்' என வாழ்கின்றனர்.

தொடர் தோல்விகளால் மனம் நொந்து போகக்கூடாது என்பதற்காக, "நேற்று என்பது முடிந்துபோனது. நாளை என்னாகும் என யாருக்கும் தெரியாது. ஆனால், இன்று மட்டும்தான் நிஜம். அதனால் இன்றைய தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடு' என, அவர்களை ஊக்குவிப்பதற்காக சொல்லப்படும் தத்துவங்களை எல்லாம் தனக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு, குடும்பத்தில் யாரோ, எப்படியோ போகட்டும் என வாழ்க்கையை சுயநலமாக வாழ்ந்து கெடுத்துக்கொள்கின்றனர். இன்று செய்யும் செயல்தான் தன் வாரிசுகளுக்கான பலன் என்பதை நினைக்கத் தெரியவில்லை. அதை சொல்லிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைய பெற்றோருக்குண்டு என்பதை மறந்து, தானும் கெட்டு, தலைமுறையையும் கெடுக்கிறார்கள்.

பெற்றோரை தவிக்கவிடுபவர்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்கான பாவம் வந்து சேரும். ஏழு தலைமுறை வாரிசுகள் புத்திர தோஷம், களத்திர தோஷம், இளமையில் வறுமை, வசதியிருந்தும் அனுபவிக்க முடியாத சூழல், நோயால் பாதிக்கப்படுவர். பெற்ற பிள்ளைகளின் இறப்பைப் பார்க்கும் சூழலும் ஏற்படும். அதேபோல், மாமனார்- மாமியாரை தவிக்கவிடுபவர்களின் வாரிசுகள் முடமாகவும், ஊமையாகவும், திருநங்கையாகவும், ஏதாவது குறையுடன் பிறந்து மன வேதனை தருவர். கோவில் கோவிலாகச் சென்றாலும் தீராத நோய் தொற்றும். புத்திரர்களால் கண்ணீர் சிந்தி, மனம் வெறுத்து இறப்பர். மேலோகத் திலும் அதிகபட்ச தண்டனை பெறுவர். சாப விமோசனம் பெறமுடியாமல் தவிப்பர்.

பரிகாரம்

பெற்றோரை கவனிப்பவர்கள் நன்றாக வாழவேண்டும்; அப்போதுதான் அதைப் பார்த்து தலைமுறை திருந்தும். நல்லது செய்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போவதால்தான் பலர் நல்லவற்றை ஒதுக்க வேண்டிய சுயநலச் சூழல் வந்துவிட்டது. நாம் செய்த வினை நம் பிள்ளைகளைப் பாதிக்கும் என்கிற சித்தாந்தம், கடமை, நன்றி ஆகியவற்றை இந்த தலைமுறை மறக்கிறார்கள். அதனுடைய பலனை அடுத்த தலைமுறையில் பட்டுத் தெரிந்துகொள்வார்கள். அதுவரை பாசம், பந்தம், சொந்தம் இதெல்லாம் கடந்துபோக வேண்டும் என அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பர். உறவுகளைப் பகைத்து, ஊரோடு ஒத்துவாழாமல்போனால் பெற்ற பிள்ளைகளாலும் கைவிடப்பட்டு, அநாதையாக்கப்படும் நிலை வரும்.

பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்துவைத்து, பேரன், பேத்தி பார்க்கத்தான் தனிமனிதன் ஒவ்வொரு வரின் முயற்சியும், போராட்டமும் இருக்கிறது.

தனக்கு வரும் ஒரு பெரிய நோய் அத்தனைக் கனவுகளையும் ஒரேநாளில் அழித்துவிடுகிறது. தன் பிள்ளைகளுக்கு கடமை செய்துமுடிக் காமல் இறந்துபோகும் சூழல் அமையும் போதுதான் ஆரோக்கியத்தின் முக்கியத் துவத்தை பலர் உணர்கிறார்கள். அப்போது மனம் மட்டும் நொறுங்கிப் போவதில்லை. பலரின் குடும்பமும் சிதைந்து போய்விடுகிறது .

நம் முன்னோர்கள் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வியாதி ஏற்படும் எனக் கண்டறிந்துள்ளனர். "நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்பதை உணர்ந்து, பெற்றோர் தன் உடல்நலத்திற்கேற்ற, வாழும் சுற்றுச்சூழலுக்கேற்ற உணவுப்பழக்கத்தை தானும் கடைப்பிடித்து, பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பதுதான் மிகச்சிறந்த பரிகார மாகும்.


 -க. காந்தி முருகேஷ்வரர்
செல்: 96003 53748

courtesy;balajothidam.

================================

 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...