தீயவை அறிந்து நன்மைகள்
பெறுவோம்! - க. காந்தி முருகேஷ்வரர்
நம்மிடம் இருக்கும்
கெட்ட குணங்களை நாம் என்று உணர் கிறோமோ அன்றுதான் முழு மனிதனாகிறோம். எல்லா
நேரமும், எல்லாரும்
நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. சூழ்நிலை என தப்பித்துக் கொள்வதைவிட, சுயநலம்தான்
தெரிந்தே பல தவறுகளைச் செய்யவைக்கிறது.
"நான் நல்லவன், என்னைப்போல நீ இரு' என யாரும், யாரிடமும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறோம்.
நல்லவன், கெட்டவன் என்பதற்கு எந்த விதிமுறைகளையும் வகுத்து வைக்கவில்லை; வகுத்துவைக்கவும்
முடியாது. ஏனெனில், நிரந்தரமான நல்லவருமில்லை கெட்டவருமில்லை. ஒருவர் நல்லதைச் சொன்னால் அதை
மற்றொருவர் கடைப்பிடிக்கமாட்டார். எல்லாம் சிலகாலம்தான்.
எங்காவது, எப்போதாவது, யாரிடமாவது நல்லவர் கெட்டவராகவும், கெட்டவர் நல்லவராகவும் இருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடும். வாழ்க்கையைப்
பற்றி சிந்தித்து எந்தப் பயனுமில்லை. ஏனெனில், விதியை மாற்றமுடியாது. ஆனால் நம்மால் நம்மை மாற்றிக்கொள்ளமுடியும். அதிகபட்சம்
பிறர் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கக்கூட வேண்டியதில்லை. குறைந்தபட்சம் பிறர்
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நிற்காமல் ஒதுங்கமுடியும். தன்னை உணர்தல்
என்பது நம்மிடமிருக்கும் கெட்டவனைத் தெரிந்து, "வேண்டாம், கொஞ்சம் நல்லவ னாக வாழ ஆசைப்படுறேன், உதவுங் களேன்' என தனக்குள் திருத்திக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்.
நம்மைத் திட்டிக்கொண்டிருப்பவர் நம்மிடம் திருடமாட்டார். காரணமின்றி நம்மைப்
புகழ்பவரும், நாம் செய்யும் தவறுகளைத் திட்டாமலிலிலிலிலிலிலிலிருப்பரும் நம்மிடம் எதையோ
திருட திட்டமிட்டு விட்டனர் என்பதே நிஜம்.
இருபத்தேழு நட்சத்திரக்காரர் களுக்குள் இருக்கும் கெட்டகுணங்களை ஜோதிட நூல்கள்
விவரிக்கின்றன.
அதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் பேசும் அனைவரும்
நம்மிடமிருக்கும் கெட்டகுணங்களைச் சொல்லத் தயங்குவது, நாம் நல்லவர்கள்
என்பதாலல்ல. வீணாகப் பகைத்துக்கொள்ள விரும்பாமலும், அதனால் தனக்கு பாதிப்பு வராததாலும் கண்டுகொள்ளா மலிருப்பர். அன்பு என்கிற
அற்புதம் பல கெட்ட வர்களுக்கும் நண்பர்களை உருவாக்கித் தருகிறது. எல்லாரிடமும்
குரூர குணமிருக்கும். எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொள்பவர்கள் நல்ல வர்களாகவும், அடக்கமுடியாதவர்கள்
கெட்டவர் களாகவும் மாறிவிடுகின்றனர். பிறரை பாதிக்கக் கூடிய நமக்குள் இருக்கும்
கெட்டகுணங்கள் எவை?
ஒரே ராசியில் பலர் இருந்தாலும், பல்வேறு குணங்கள் கொண்ட வித்தியாச மானவர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு ராசியிலும்
மூன்று நட்சத்திரங்கள், அதன் பாதங்கள் இருக்கின்றன. லக்னாதிபதி, ராசியதிபதியின் பலத்தைவிட, நட்சத்திர அதிபதிகளின் பலமே குணத்தையும், பலன்களையும் தருகிறது. ஒரு ராசியைப் பார்க்கும் கிரகம், ராசியில் இணையும்
கிரகங்கள், நின்ற நட்சத்திர அதிபதிகள் பலன்களையே மாற்றிவிடும். ஆதலால் நட்சத்திரங்களின்
குணங்களை அறிந்துகொள்ளுதல் அவசியம். நற்குணங்கள் என்பது யாரையும் பாதிக்காத செயல்.
தீய குணங்கள் என்பது நாம் பேசும் பொய்யான ஒரு வார்த்தைகூட ஒருவரின் வாழ்க்கையையே
அழித்துவிடும் செயலாகும்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள். பிறர் எரிச்சலடையும்படி பேசுபவர்கள்.
நெருங்கிவந்தால் விலகியும், விலகிவந்தால் நெருங்கியும் நிற்கக்கூடியவர்கள். வலியவந்து பேசவேண்டுமென
நினைப்பவர்கள். வீண்வாதம், வெட்டிப்பேச்சு பேசுவதில் ஆசைகொண்டவர்கள். பொறுமை பற்றிப் பேசி, பெருமைபேசித்
திரிபவர்கள். அவசர புத்தி கொண்டவர்கள். தனக்கேற்றாற்போல் நேர்மை, நீதி
வகுத்துக்கொள்பவர்கள். எளிதில் முடியும் ஒரு காரியத்தைத் தன் சுயநலத்திற்காக, தன்னை
மதிக்கவேண்டும் என்பதற்காக அலையவிடுபவர்கள். இவர்களிடம் பழிவாங்கும்
எண்ணமிருக்கும். எல்லாவற்றிலும் தன்னைவிட பெரியவர் யாருமில்லை என்கிற
உறுதியிருக்கும். முடிந்தவரை தனக்கு நெருக்கமானவர்களின் முன்னேற்றத்தைத்
தடுப்பவர்கள். தன்னைவிட உயரக் கூடாதென்பதற்காக எதையும் செய்வார்கள். பிறர் மனதை
நோகடித்துவிட்டு தன்னை தியாகிபோல் எண்ணிக்கொள்வார்கள். தான் செய்யும் உதவியைப்
பெரிதுபடுத்துவர். பிறர் தனக் குச் செய்ததைப் பெரிதாக எண்ண மாட்டார்கள்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்கள். பயந்து பதுங்கிப் பாயக்கூடியவர்கள். எப்போது
அமைதியாக இருப்பார்- எப்போது கோபப் படுவார் என்பதைக் கண்டறிய முடியாது.
நடக்காததையெல்லாம் நினைத்து வருத்தப் படுபவர்கள். முடிவுகள் எடுப்பதில் தயக்கம்
கொண்டவர்கள். எல்லாம் முடியுமென நம்பிக்கை கொடுத்து ஏமாந்து போகக்கூடிய வர்கள்.
இவர்களுக்குத் தூண்டுகோலாக ஒருவர் இருந்தால்தான் முன்னேற்ற சிந்தனை ஏற்படும்.
இவர்களுக்கு எதிரி இவர்களேதான். பிறரைக் கெடுப்பதைவிட தன்னையே கெடுத்துக்
கொள்வார்கள். விதண்டாவாதம் செய்பவர்கள். இவர்களுக்கு வீண்வாதம், ஊர் புரளி
பேசுவதில் அலாதிப் பிரியமிருக்கும். இல்லாததை இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள்.
கனவில் மிதப்பவர்கள். எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்கிற திருப்தியற்ற மனநிலை
கொண்டவர்கள். சிந்தனைத் தடுமாற்றம் மிக்கவர்கள். யாரையும் நம்பி நானில்லை எனக்
கூறி, எதிர்பார்ப்பவர்கள்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர் களிடம் எதிலும் முதன்மையாக வேண்டும்
என்கிற எண்ணம் இருக்கும். பிடிவாத குணம் உண்டு. நினைத்ததை சாதிக்கப் போராடுவார்கள்.
எதற்கும் எதிர்மறை கருத்துகளும், அவசர புத்தியும் உண்டு. இவர் களுக்கு ஒருவரை அனுசரித்து அடிமையாக வாழவேண்டிய
நிர்பந்தம் ஏற்படும். நேரடியாக ஒருவரைப் புகழ்ந்து பேசுவதும், மறைமுகமாக
எதிர்ப்பதிலும் வல்லவர்கள். வாழ்க்கைத்துணையை வார்த்தைகளால் வதைப்பவர்கள்.
சுயநலவாதியாக வாழக் கூடியவர்கள். இவர்களுக்கு, எதையும் தன்னிடமிருந்தே பெறவேண்டும் என்கிற புத்தி இருக்கும். பிறர் பொருளை
அபகரித்து, அவர்களுக்கு சிறிதாகக் கொடுத்து வள்ளலா கக் காட்டிக் கொள்வதில் வல்லவர்கள்.
ஊர்மெச்ச வாழும் இவர்களுக்கு தன் குறை தெரியும். ஆனால், தன்னையும்
திருத்திக் கொள்ளமாட்டார்கள்- பிறரையும் திருந்தச் சொல்லமாட்டார்கள். யாரை, எப்படி மடக்க
வேண்டும் என்கிற வழிதெரிந்தவர்கள். கொடுப்பதைக் கொடுத்து எடுப்பதை எடுப்பவர்கள்.
கூட்டுக் குடும்பத்தில் ஆசை இருப்பதாகச் சொல்லும் தனிமை விரும்பிகள்.
திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகு ஆதிக்கம் பெற்றவர்கள். மனிதத் தலையும், பாம்பின் உடலும் கொண்டதால், மனித உடலைத் தேடுபவராகவும், உடலுக்குத் தேவையான ஆடம்பர- அலங் காரப் பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம்
கொண்டவராகவும் இருப்பவர்கள். எதிலாவது ஆர்வமும் தேடலும் மிக்கவர்கள். திருப்தியடையாதவர்கள்.
சுயநலத்திற்கேற்ப திடீர்திடீரென எண்ணங்களை மாற்றிக் கொள்பவர்கள். தேவைக்கு
செலவழிப்பதாக எண்ணி சிக்கனமாய் சேமித்து, வட்டிக்குக் கொடுத்து அற்ப ஆசையால் சேமிப்பைத் தொலைப்பவர்கள் புகழ்ச் சிக்கு
ஏமாறுபவர்கள். நேரிடை யாக எதிர்க்கத் திராணியற்றவர்கள். வாய் திறந்த நிலையில் ராகு
இருப்பதால், ஏதாவது விழுங்கிக்கொண்டே இருக்க விரும்புபவர்கள். பிரம் மாண்டமான சிந்தனை
கொண்டவர்கள். பொய் பேசுவார்கள். தெய்வ நம்பிக்கையற்றவர்கள். தீய செயல்களில்
செயல்பட யோசிக்க மாட்டார்கள். தேவைக்கேற்ப தன்னை தகவ மைத்துக் கொள்பவர்கள். கெட்டது
செய்து முடித்துவிட்டு, செய்தது தவறெனச் சொல்லி வருந்துவதுபோல் பாசாங்கு செய்பவர்கள். தெரிந்தே
ஏமாறுபவர்கள். ஏமாற்ற அஞ்சாதவர் கள். தனக்குக் கிடைக்காத வாழ்க்கை யாருக்கும்
கிடைக்கக்கூடாதென எண்ணுபவர்கள்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குரு ஆதிக்கம் பெற்றவர்கள். உபதேசம் செய்யத் தெரிந்த அளவு பின்பற்றத் தெரியாத
வர்கள். கொஞ்சம் வெற்றி கிடைத்தால் பெரிய சாதனை செய்ததாய் எண்ணிப் பெருமைப்பட்டு
முன்னேறத் தயங்குபவர்கள். சோம்பல் என்பது தெரியாத அளவு பார்த்துக் கொள்வார்கள்.
ஒழுக்கம் நீதி, நேர்மை, நியாயம் பற்றிப் பேசுபவர்கள். நடைமுறைக்கு சாத்தியமற்றவற்றை சாதிக்கத்
துடிப்பவர்கள். வாழ்க்கையை வாழத்தெரியாதவர்கள். காலம்தாழ்த்திக் காலத்தைத்
தொலைப்பவர்கள். சந்தேக குணம் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்த- எல்லாம்
தெரியாதவர்கள். கற்பனை யில் பிறரை நீந்தவிடுபவர்கள். ஏமாற்றத்தைத் தாங்க முடியாதவர்கள்.
எப்படியும் நல்லது நடக்குமென நம்பி ஏமாறுபவர்கள். எதிர்த்துப் பேசி சாதிக்கும்
திராணியற்று சாபம் தருபவர் கள். ஏமாந்துவிட்டு ஏமாற்றியவரைப் பழிப் பார்கள்.
வறுமையை ஏற்படுத்தி வாழ்க்கைத் துணையின் தன்மானத்தைக் கெடுப்பார்கள். சுறுசுறுப்பு
என்கிற பெயரில் அலைந்து திரிந்து பலனின்றி வருந்துவார்கள். வெட்டியாக வீராப்புக்
காட்டுவார்கள்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
சனி ஆதிக்கம் பெற்றவர்கள். எதிர்த்துப் பேசக் கூடியவர்கள். உழைத்து முன்னேற
ஆசைப்படுவார்கள். தேவையான நேரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு, கடைசிநேரம்
அவசரப்படுத்தி அவதிப்படுத்துவார்கள். வீணான உழைப்பும், தேவை யற்ற
உறவுகளுக்காக சேவை செய்தும் காலநேரத்தை வீணடிப்பார்கள். எடுத்தெறிந்து பேசக்
கூடியவர்கள். குத்திக்காட்டிப் பேசக் கூடியவர் கள். பின்னால் நடப்பதை முன்பே
தெரிந்து கொண்டதுபோல் பேசுவார்கள். மறைமுகமாக பல கெட்ட காரியங்கள்
செய்யக்கூடியவர்கள். அப்பாவிபோல் காட்டிக்கொள்பவர்கள். தெரிந்தே தவறுகள்
செய்வார்கள். தன்னால் அனைவரையும் கவரமுடியும் என்கிற கர்வமே இவர்களைக்
கெடுத்துவிடும். தெளிவாகப் பேசுவதாக எண்ணி வாழத்தெரியாதவர்கள். ஊருக்கு நல்லது
செய்ய நினைத்து தன்னை நம்பி வந்தவரையும், தன்னோடு இருப்பவரின் அன்பையும் இழக்கக்கூடியவர்கள்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
புதன் ஆதிக்கம் பெற்றவர்கள். தனக் குத் தெரியாத விஷயங்களே இல்லை என
வாதிடக்கூடியவர்கள். கற்பனைக் கோட்டை களைக் கட்டித் தானாக வாழ்ந்துகொண்டி ருப்பவர்கள்.
வாழ்க்கைத்துணையை வஞ்சிப் பவர்கள். துணை அடிமையாக இருக்க ஆசைப் படுபவர்கள்.
குடும்ப வாழ்க்கைக்குத் தகுதி யற்றவர்கள். தேவையெனில் அக்கறையாகவும்
தேவையில்லையெனில் யார் நீ என்பதுபோல் கண்டும்காணாமலும் செல்பவர்கள். காரியவாதி
என்பதைவிட கர்வத்தால் தன்னைத் தாழ்த்திக்கொள்பவர்கள். தான் மறைக்கும் விஷயங்கள்
தனக்கு மட்டுமே தெரியுமென எண்ணுபவர்கள். அடுத்தவரை இளக்காரமாக நினைத்து
எகத்தாளமாகப் பேசக்கூடியவர்கள். ஏமாளி கிடைத்தால் மனசாட்சியின்றி ஏமாற்றுவார்கள்.
நண்பர்கள் குறைவாய் வைத்துக்கொள்வதாச் சொல்லும் இவர்களிடம் நிலையான நண்பராக யாரும்
இருக்கமாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொண்டவர்கள் விலகி விடுவார்கள்.
அஸ்வினி, மகம், மூலம்
கேது ஆதிக்கம் பெற்றவர்கள். சரியோ- தவறோ தான் சொல்வதை பிறர் எதிர்கேள்வி
கேட்காமல் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். அறிவுரை சொல்வதைக் கேட்காமல்
பட்டுத் திருந்துபவர்கள். பிறரிடம் ஞானிபோல் பேசுவார்கள். வீட்டிக்குள்
இருப்பவர்களிடம் வெட்டிகௌரவம் எதிர்பார்ப்பவர்கள். தானே முதன்மை; தன்னைவிட எல்லாரும்
கீழ் என்கிற மனநிலையில் எல்லாரையும் இழப்பவர்கள். இவர்களிடம் சொன்னாலும்
கேட்கமாட்டார் என, இவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்லத் தயங்குவர். ஓரிடத்தில் நிற்கப்
பிடிக்காதவர்கள். அடுத்தவரை வேலை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். தன் காரியம்
முடியும்வரை குடைச்சல் கொடுப்பார்கள். இந்த நட்சத்திரத்தார் விசுவாசமற்றவர்கள்.
ஆனால், பிறரிடம் நன்றியும், விசுவாசமும்
எதிர்பார்ப்பார்கள். பிறருக்காக வாழ்வதாகக் காட்டிக்கொண்டு தாங்களும்
வாழமாட்டார்கள். குறுகிய சிந்தனை கொண்டவர்கள். தலைமைக்குத் தகுதியற்றவர்கள். பிறர்
மனம் அறியாதவர்கள். அடிமைகளை வளர்த்து அடிமைகளால் அழிவார்கள். தேவைக்குத் தேவையான
நேரம் பழகி, காரியம் சாதித்ததும் விலகுபவர்கள். உதவி பெறும்போது கௌரவப் பிச்சை எடுக்கும்
இவர்கள், உதவியை
எதிர்பார்த்துச் சென்றால் அலைக்கழிப்பார்கள். ஆணவம் மிக்கவர்கள்.
பரணி, பூரம், பூராடம்
சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். தன்னை அழகு பிம்பமாக எண்ணிக் கொள்பவர்கள்.
அழகுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். நகைச்சுவையாகப் பேசுவதாக சொல்லிக்கொண்டு
பிறர் மனம் புண்படும்படி பேசுவார்கள். எல்லாரும் தனக்கு அடிமையாக
இருக்கவேண்டுமென்கிற எண்ணம் நிறைந்தவர்கள். இவர்கள் நிதானம் என்கிற பெயரில், ஆடியசைந்து
வருவதற்குள் நிறைய இழப்புகள் வந்துவிடும். சொன்னதையே சொல்லிச்சொல்லி இம்சை
தருவார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என தடுமாறுபவர்கள். குரங்கு கையில் கிடைத்த
பூமாலையாய், அப்பாவி கிடைத்தால் ஆட்டிவைப்பவர்கள். அடுத்தவரை உற்றுநோக்குவதில் கவனம்
செலுத்தி, தன்னிலை
மறப்பவர்கள். அதிக இழப்புகள் ஏற்பட்டாலும் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ள
மாட்டார்கள். சுத்தமாக இருப்பதாக எண்ணி, தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மனநிலையை மாற்ற நினைப்பார்கள். காரியம்
முடியும்வரை வேறெதுவும் இவர்கள் காதில் விழாததுபோல் நடந்துகொள்வார்கள். காரியம்
முடிந்தால் அந்தப் பக்கமே தலைகாட்டமாட்டார்கள். நன்றி மறந்து, குற்றம்கூறி
விலக்கிவைப்பார்கள். ஏமாற்றுபவர், போலியாகப் பாசம் காட்டுபவரிடம் ஏமாறுவார்கள். ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ள
மாட்டார்கள். நல்லவர்கள் தன்னை விமர்சித்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
பரிகாரம்
ஒவ்வொரு ராசிக்கும் இருக்கும் கெட்டகுணங்களைத் தெரிந்துகொண்டு, கெட்டவர்கள்
தங்களைத் தெரிந்து, கெட்டதைத் திருத்தினால் கிட்டிடும் ராஜயோகம். கெட்டவராக வாழ்ந்தால் கஷ்டமே
மிஞ்சும் என்பதைப் புரிந்து கொண்டால் கெட்டதுசெய்ய. மனம் அஞ்சும். கெட்டது
செய்தவர்களுக்கு சொகுசான வாழ்க்கை கிடைத்தால், எவரும் நல்லவராக வாழ பயப்படுவார் கள். பிறர் வாழப் பொறுக்காமல் வாழ்தல் நரகம்.
பிறரை வாழவைத்துப் பார்ப்பதை விட, தன்னளவில் தீயவற்றை சிந்திக்காமல் வாழ்தலே சொர்க்கம். கெட்டகுணங்களை ஒதுக்கி, கீழ்ப்படியக்
கற்றுக் கொண்டு நல்லது செய்தால், கட்டளையிடும் பணிதானாகக் கிடைக்கும்.
courtesy;nakkiran/balajothidam.
செல்: 96000 53748
No comments:
Post a Comment