காதல் துயர் தீர்க்கும் பரிகாரம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.'
இது திரைப்படப் பாடலென பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், இது மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளிலிருந்து, காதல் என்னும் உணர்வு உயிரையும் எடுக்குமென உணரமுடிகிறது.
உலகம் தோன்றியது முதல் காதல் இருந்தாலும், இந்த நவநாகரிக உலகில் நடக்கும் காதல் பிரச்சினைகள் மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.
ஒருவரின் உணர்வைத் தூண்டும் காதலை, முறையான காதல், முறை தவறிய காதல் என வகைப்படுத்தலாம்.
அறியாத இளம்பருவத்தினர் இனக் கவர்ச்சியால்- பருவக்கோளாறினால் செய்யும் காதலைக்கூட அறியாப் பருவமென மன்னிப்பு கொடுக்கலாம். முறையற்ற- கீழ்த்தரமான காதல் பல குடும்பங்களைக் கூறுபோடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முறையற்ற காதலால் எத்தனையோ கணவர்கள், மனைவிகள், குழந்தைகள், பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புனிதமான இந்தியாவில்- அதுவும் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு இந்த அந்நிய நாட்டுக் கலாசாரம் ஒத்துவருமா? அடுத்த வரின் குடும்பத்தைக் கெடுக்கும் தவறான நட்பு போற்றுதலுக்குரியதா? அடுத்தவரின் மனைவியை பெற்ற தாய்க்குச் சமமாக நினைக்கவேண்டும். சக பெண்ணின் கணவரை உடன்பிறந்தவராக பாவிக்க வேண்டுமென்பதே தமிழர்களின் மரபு. ஒருவர் செய்யும் தவறால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்னும் உணர்வு வராதா?
பருவ வயதினர்கள்முதல் வாழ்நாளை எண்ணும் முதியவர்கள்வரை ஏதாவது ஒரு காதல் உணர்வு ஆழ்மனதில் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
எந்த வகைக் காதலாக இருந்தாலும், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தைப் பார்த்த கிரகம், ஐந்தாமதிபதியுடன் இணைந்த கிரகங்கள் மற்றும் புதன்- கேது சம்பந்தமுமே காதலுக்கு காரக கிரகங்களாகும்.
புதனும் கேதுவும் வைத்த புள்ளியைக் கோலமாகவும், அலங்கோலமாகவும் செய்வது உடனிருக்கும் மற்ற கிரகங்களின் கோலாட்டம் எனில் மிகைப்படுத்தலாகாது. ஒரு நாளைக்கு பத்து ஜாதகம் பார்த்தால், ஐந்து ஜாதகத்தில் காதல் பிரச்சினைதான் பிரதானமாக இருக்கிறது.
பன்னிரண்டு பாவகங்களில் ஏன் ஐந்தாம் பாவகத்தை காதலுக்கு ஒப்பிடுகிறார்களென ஆய்வுசெய்தால், ஐந்தாமிடம் என்பது உள்ளுணர்வு, ஆழ்மனம் மற்றும் பூர்வஜென்மத் தொடர்ச்சி. பூர்வஜென்ம வினையின் தாக்கத்தால் தொடர்ந்துவரும் உணர்வென்பதால்தான், யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சமுதாய வியாதியாகப் பரவியிருக்கிறது.
ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தால் ஏற்படும் காதலைப் பற்றிப் பார்க்கலாம்.
சூரியன்
ஒருவரின் கனவுக்கும் கற்பனைக்கும் காரக கிரகம் சூரியன். அதாவது ஒருவரின் ஆழ்மனதிலிருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை சந்தித்தால் காதல் வந்துவிடும். ஆனால் அது கௌரவக்காதலாக இருக்கும். எளிதில் தன் மனதிலுள்ள உணர்வை வெளிக்காட்டுவதில்லை.
சந்திரன்
மனோகாரகன், உடல்காரகன். மனசஞ்சலம், திருட்டுத்தனம், ஈர்ப்பு ஆகியவற்றுக்கு காரக கிரகம் சந்திரன். மனசஞ்சலத்தால் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வந்துவிடும். பாலுணர்வு தூண்டுதலால் நடுத்தர வயதினருக்கு ஏற்படும் முறையற்ற காதல். எளிதில் தன் உணர்வை எதிர்பாலினருக்குத் தெரிவிப்பவர்கள்.
செவ்வாய்
எந்த செயலாக இருந்தாலும், அதை செயல்படுத்த தைரியம் மிக அவசியம். அதன்படி, காதலுக்கும், காதல் திருமணத் திற்கும் தைரியத்தை வழங்குபவர் செவ்வாய்.
புதன்
காதலுக்கு காரக கிரகம் புதன். ஒருவருக்கொருவர் புரிதலை ஏற்படுத்து பவர் புதன். புதன் இல்லாத காதல் இல்லை. நல்ல காதல், தீய காதல் இரண் டுக்கும் புதனே காரணம். புதனுடன் இணையும் கிரகத்துக்கேற்ப காதலின் தன்மையில் மாற்றம் இருக்கும்
குரு
ஒருவரின் ஆச்சாரம், அனுஷ்டானம் பார்த்து வரும் காதல். பிரம்மிக்கத் தக்க செயல்களைச் செய்தவர்கள்மீது வரும் பண்பான காதல். எளிதில் வெளியே தெரியாத மதிப்பான காதல்.
சுக்கிரன்
ஒருவரின் ஆடம்பரம், அழகு, அலங் காரத்தால் ஈர்க்கப்பட்டு வரும் காதல். வசதி வாய்ப்பைப் பார்த்து வரும் காதல். இளம்வயது, ஆடம்பரக் காதலுக்கு சுக்கிரனே காரணம்.
சனி
வாலிப வயதுக்குப் பிறகு வரும் காதலுக்கும், காதலால் ஏற்படும் அவமானத் திற்கும் சனியே காரணம்.
ராகு
மதம் மாறிய, குலம் மாறிய காதல் மற்றும் தவறான உறவுக்கும், சட்டத்திற்குப் புறம் பான செயல்களுக்கும் காரக கிரகம் ராகு.
கேது
வலை கிரகம். காதல்வலையை வீசும் கிரகம். சட்டரீதியான பதிவுத் திருமணத்தை நடத்தும் கிரகம்.
இனி, ஐந்தாமதிபதி 12 பாவகங்களில் நிற்பதால் ஏற்படும் காதல் உணர்வுகளைக் காணலாம்.
ஐந்தாமதிபதி லக்னத்தில் அமர, காதல் உணர்வு மிக அதிகமாக இருக்கும். திருமணமானாலும் மீண்டும் மற்றவரிடம் காதல் உணர்வு ஏற்படும்.
ஐந்தாமதிபதி இரண்டில் அமர, சம்பாதிக்கும்பொழுது அல்லது சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலத்தில் காதல் வரும். காதலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினர் இவருடைய காதலுக்கு உதவுவர். காதல் திருமணத்தில் முடியும். திருமணத்திற்குப் பிறகும் நண்பர்கள் என்னும் போர்வையில் ஒரு காதல் இருக்கும்.
ஐந்தாமதிபதி மூன்றில் இருந்தால், இனக்கவர்ச்சியாலும், போகத்திற்காகவும் ஒன்றுக்குமேற்பட்ட காதல் வரும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் "சாட்' செய்வார்கள். மூன்றாம் பாவகம் காதலை வளர்க்கும் என்பதால், காதலுக்கான ஆதாரத்தை வைத்து மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடக்கும். இந்த அமைப்பிருக்கும் கௌரமான குடும்பப் பெண்கள், பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இளம்பருவத்தினருக்கு தகவல் தொடர்பால் நட்பு ஏற்படுகிறது. இதன் உச்சகட்டமாக தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.
ஐந்தாமதிபதி நான்காம் வீட்டில் அமர, தாய்வழி சொந்தத்தில் அல்லது தன் வீட்டுக் கருகில் பழகும் நண்பர்கள் வட்டாரத்தில் காதல் வரும். ஒருவரின் ஒழுக்கத்தின்மேல் மற்றவருக்கு வரும் சந்தேகம் பிரிவினைக் குக் காரணமாக அமைகிறது. சிலர் முன்னாள் காதலியை மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
ஐந்தாமதிபதி ஐந்தில் அமர, அடுத் தடுத்து காதல் ஏற்படும். இவர்கள் எந்த வயதிலும் காதல் உணர்வுடனே இருப்பார் கள். ஆழ்மன உணர்ச்சியைத் தூண்டும் சம்பவங்கள் இவர்களின் அடுத்தடுத்த காதலுக்குக் காரணமாக அமைகின்றன. தான் ரோல்மாடலாக நினைக்கும் நபர்கள், சமுதாய அந்தஸ்துள்ள நபர்கள், சினிமா நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என மிகப்பெரிய "காதல் லிஸ்ட்' வைத்திருப்பார்கள். அவர்களுடன் மனதால் மானசீகமாக குடும்பம் நடத்துவார்கள். இவ்வளவு ஏன், இவர்கள் கடவுளைக்கூட காதல் உணர்வுடன்தான் பார்ப்பார்கள்.
ஐந்தாமதிபதி 6-ல் அமர, காதல் திருமணத்தில் நிறுத்தாமல் வம்பு, வழக்கு களில் நிறுத்தும். இவர்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர் கள் குடும்பத்துடன் பழகி, இரண்டு குடும்பத்துக்கும் தீராத பகையை ஏற்படுத் துவார்கள். இந்த அமைப்புள்ள பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்டிப் பது கிடையாது. எதிர்பாலினத் தவருடன் பிரச்சினை செய்வார்கள்.
ஐந்தாமதிபதி ஏழில் அமர, காதலை உரிய அங்கீகாரம் பெறச்செய்து திருமணத்தில் முடியும். பூர்வஜென்ம கர்ம பந்தத்தால் தொடர்ந்த காதல் திருமணம் எனவும் கூறலாம். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு குடும்பத்தின் நெருங்கிய உறவுகள் மற்றும் நட்பு வட்டாரத்தில் பெரியோர்களால் முடிவுசெய்யப்பட்ட திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு காதலர்களாக மாறுவார்கள். எது எப்படியிருந்தாலும் 5, 7 சம்பந்தமிருப்பவர்கள் ஆதர்ஷ தம்பதிகள். வாழ்நாள் முழுவதும் காதலர்களாக வாழ்வார்கள். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட திருமணம் எனவும் கூறலாம்.
ஐந்து மற்றும் எட்டாமிட சம்பந்த மிருப்பவர்கள் காதலிப்பது தவறு, அவமானம் எனக் கருதுபவர்கள். இவர்கள் எளிதில் காதலிக்கமாட்டார்கள்.
ஐந்தாமதிபதி ஒன்பதில் அமர, அந்நிய மொழி மற்றும் அந்நிய மதத்தினருடன் காதல், கலப்புத் திருமணம் நடக்கும். உயர்கல்வி கற்கப்போகும் இடங்களில் காதல் வரும். தன்னைவிட தகுதியானர் களிடம் காதல் வரும்.
ஐந்தாமதிபதி பத்தில் இருப்பவர்களுக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில், தொழில் பார்க்குமிடத்தில் காதல் வரும். காதலுக்குக் கடுமையான எதிர்ப்புகள் வரும். விரோதிகள் இருப்பார்கள். நெருங்கிய உறவினர்கள்கூட பகைவராக மாறுவர்.
ஐந்தாமதிபதி 11-ல் அமர, ஜாதகரின் காதல் திருமணத்தில் முடியும். காதலால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான திருமண வாழ்க்கையாக இருக்கும்.
ஐந்தாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தால், முறைகேடான உறவை மட்டுமே அடைய நினைப் பார். காதலால் அசிங்கம், அவமானம், நிம்மதியின்மை நீடிக்கும். இதன் உச்சகட்டமாக தற்கொலைகூட நடக்கும்.
காதலிப்பதும், காதலிக்கப் படுவதும் சுகமான அனுபவம் தான். தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் வயப்படாதவர்கள் இருப்பது அரிது. காதல் என்பது மனம் சார்ந்த உணர்வா? வம்சம் தழைக்க இயற்கை வழங்கிய கொடையா என்னும் கேள்விக்கு எத்தனை யுகங்கள் கடந்தாலும் பதில் சொல்லமுடியாது. ஜோதிடரீதியாக இந்தக் கேள்விக்கு விதிப் பயன், வினைப் பதிவு என எளிதாகக் கூறிவிடலாம். மனிதர் களுக்கு மட்டுமல்ல; உலகில் தோன்றி மறையும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வுண்டு.பகுத்தாயும் திறன் கொண்ட மனிதர்கள் உணர்வை அடக்க முயலவேண்டும்.
உலகின் ஒவ்வொரு மூலை யிலும் தன்னைச் சார்ந்தவர் களின் நலன் கருதி காதலர்கள் நண்பர்களாக வாழ்கிறார் கள் அல்லது எந்தத் தொடர்பு மின்றி மனதளவில் தனிமை யில் அழுது வாழ்கிறார்கள். முறையற்ற மற்றும் குல கௌரவத்திற்கு விரோதமான காதல் நிச்சயமாக தவறுதான்.
தன் சுகத்தைவிட தன்னைச் சார்ந்தவர்களின் உணர்வு மிக முக்கியம்.பெற்றோர், உடன்பிறந்தவர்கள் உங்கள் மேலுள்ள காதலால்தான் உங்களை இழக்க மனமின்றித் தவிக்கிறார்கள். ஒருவரின்மேல் உண்மையான காதல் வைத்திருந்தால் உள்ளுணர்வுடன் கலந்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஆன்மாவுடன் இணைப்பிலிருக்கும்.
அதனால் காதலிக்கும் முன்பு குடும்பச் சூழலுக்கு இது ஒத்துவருமா என யோசிக்கவேண்டும். தன் சுகத்தை மட்டும் யோசிக்கக் கூடாது. பெற்றோர் தேர்ந்தெடுத்த வரைத் திருமணம் செய்வது நல்லது.
பரிகாரம்
மனவேதனையுடன் ஜோதிடரை அணுகும் பெற்றோரின் விருப்பம்- என்ன பரிகாரம் செய்தால் என் பிள்ளையை நான் மீட்கமுடியும் என்பதாகவே இருக்கிறது. ஜோதிடரீதியாக இந்தக் கேள்விக்குத் தீர்வு தரமுடியும்.
courtesy; Nakkiran/ Balajothidam.
==============================
காதலுக்கு காரக கிரகம் புதன். காதலுக்கான தைரியத்தைத் தந்தாலும் காதல் பிரிவினையைத் தரக்கூடிய கிரகங்கள் செவ்வாய் மற்றும் ராகு.கோட்சார புதன்- ஜனனகால செவ்வாய் மற்றும் ராகுவுடன் சம்பந்தம் பெறும் காலங்களில், பிள்ளைகளுடன் முறையற்ற நட்பில் இருப்பவர்களுடன் பேசும்போது நல்ல தீர்வு கிடைத்து பிரச்சினை முடிவுக்கு வருகிறது.
கோட்சாரத்தில் லக்னாதிபதி பன்னிரண்டில் மறையும்போது அல்லது கோட்சாரத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகள் லக்னாதிபதி மேல் சஞ்சரிக்கும்போது எடுக்கும் முயற்சிகள் பாதிக் கப்பட்டவர்களின் மனதில் தெளிவை ஏற்படுத்துகிறது.
உளவியல்ரீதியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றால், பத்தாவது கிரகமான- தகவல்தொடர்பு சாதனமான செல்போல்தான் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக மிதுனத்தில் சஞ்சாரம் செய்த கோட்சார ராகு கல்வி நிறுவனங்களை மூடச்செய்து, அனைத்துப் பிள்ளைகளுக்கும் "ஆன்லைன் வகுப்பு' என்னும் போர்வையில் செல்போனை பரிசாகத் தந்துவிட்டது. கிரகங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். பெற்றோர் தங்களின் பங்களிப்பாக செல்போனை அவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள் செல்போனைப் பயன்படுத்தும்போது வீட்டுப் பெரியவர்கள் கண் காணிக்க வேண்டும்.
தவறான பிரச்சினைக்காக தகாத வார்த்தைகளால் பிள்ளைகளைத் திட்டக் கூடாது, அடிக்கக்கூடாது, சபிக்கக் கூடாது. அன்பால் திருத்த முயலவேண்டும்.
புதன்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.30 மணிவரையான ராகுகால வேளையில் வெள்ளைப் பசுவுக்கு பசும்புல்லை உண்ணத் தரவேண்டும்.
இரவில் உறங்கும்போது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர்நிரப்பி வைக்கவும். காலை யில் அந்த நீரை செடிக்கு ஊற்றவும்.
தவறான உறவுகளால் வரும் பிரச் சினைகள் தீர கருட பகவானை வழிபட லாம்.
செல் 98652 20406
No comments:
Post a Comment