குலதெய்வ அருளைப்
பெற்றுத் தரும் பரிகாரம்!-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
மனித வாழ்வை
முறைப்படுத்த, பிரபஞ்ச சக்தியை உணர முன்னோர்களால் உருவாக்கப்பட்டது இறைநம்பிக்கை, வழிபாடு. ஓர் ஆன்மா
பூமியில் தன் வினைப்பயனைக் கூட்டவோ, குறைக் கவோ தன் பயணத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறது. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும்
தன் வினைப்பயனே எல்லாவற்றுக்கும் காரணமென்பதை உணரும் ஆன்மா பாக்கியப் பலனை
அதிகரித்து, முக்திக்கு வழிதேடும் முயற்சியில் ஈடுபடும்.
ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் என்பது ஆன்மா. ஜென்ம லக்னம் என்பது உயிர். ஜென்ம
ராசி என்பது உடல். சுருக்கமாக, ஐந்தாமிடம் இல்லையெனில் லக்னம், ராசிக்கு வேலையில்லை. ஓர் ஆன்மாவுக்கு உயிர்கொடுக்க தந்தையே மூலகாரணம். லக்னத்
திற்கு ஒன்பதாமிடம் ஜாதகரின் தந்தையைக் குறிக்குமிடமாகும். ஓர் ஆன்மாவுக்கு
உயிர்கொடுத்த தந்தையும், உடல்கொடுத்த தாயும் கடவுளுக்குச் சமமானவர்கள்.
ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடம் என்பது தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக்
குறிக்குமிடம் என்பதாலும், ஒருவரின் தெய்வ அனுக்கிரகத்தைப் பற்றிக் கூறுமிடம் என்பதாலும் முன்னோர்கள்
வழிபட்ட குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலத்தைக் காக்கவும், தனது வாரிசுகளின்
நலனைக் காக்கவும் முக்தியடைந்த ஆன்மாக்களே குலதெய்வமாகி ஆசி வழங்குகிறார்கள்.
தெய்வங்களுள் மிகவும் வலிமையானது குலதெய்வமே. மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும்
குலதெய்வ வழிபாடு பெற்றுத் தரும்.
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற
கிரகம், ஐந்தாமிடத் தைப்
பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம் மற்றும் சனி பகவானே ஒருவரின்
குலதெய்வத்தை நிர்ணயம் செய்யும் காரணிகளாகும்.
ஐந்தாம் அதிபதி லக்னத்தில் சுபகிரக சம்பந்தம் பெற்றிருந்தால் பூர்வீகத்திலேயே
பிறந்து, பூர்வீகத்தில்
பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடிவரும். உற்றார்- உறவினர் என
பந்துக்களோடு வாழும் பாக்கியம் பெற்றவர். குலதெய்வ அருள்மிக்கவர். குலதெய்வக்
கோவில் நிர்வாகி.
ஐந்தாம் அதிபதி இரண்டில் இருந்தால், குலதெய்வக் கோவிலில் வாக்கு சொல்பவர்கள். குலதெய்வம் நாவில் வந்து பேசும்.
ஐந்தாம் அதிபதி மூன்றில் இருந்தால், பிடிமண் எடுத்து வந்து, பிறந்த ஊருக்கு அருகில் கோவில்கட்டிக் கும்பிடுவார்கள் அல்லது நினைத்தவுடன்
பூர்வீகத்திற்கு வந்துபோகும் தூரத்தில் குலதெய்வக் கோவில் இருக்கும்.
ஐந்தாம் அதிபதி நான்கில் இருந்தால், சொந்த மண்ணைவிட்டுச் சென்று பிழைப்பு நடத்துவார்கள். ஆனால், குலதெய்வம் பிறந்த
ஊரில் இருக்கும்.
ஐந்தாம் அதிபதி ஐந்தில் இருந்தால், குலதெய்வ அருள் உண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவப் பதவியில்
இருப்பார்கள். பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ், அந்தஸ்து உடன்
வரும்.
ஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால், முன்னோர்கள் குலதெய்வக் கோவில் வரவு- செலவில் குளறுபடி செய்தவர்கள். அல்லது
குலதெய்வச் சொத்தின்மூலம் பொருளீட்டியவர்கள். இதன்பலனாகக் கடன்பட்டு குலதெய்வக்
கோவிலுக்குச் சென்றுவர நேரும். சாமி கும்பிடும்போது பங்காளிகளுடன் சண்டை ஏற்படும்.
ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால், பூர்வீகத்தைவிட்டுப் படிப்புக்காக வெளியூர் சென்று, அங்கேயே காதல்
திருமணமாகி தங்கிவிடுவார்கள்.மனைவியின் குலதெய்வத்தைக் கும்பிடுபவர்கள்.
ஐந்தாம் அதிபதி எட்டில் இருந்தால், பூர்வீகத்தைவிட்டு மனக் கஷ்டத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு
செல்வார்கள். கடைசிக்காலத்தில் பூர்வீகம் திரும்ப விரும்புபவர்கள். குலதெய்வக்
கோபம் உண்டு. கோவிலுக்குச் செல்லும்போது விபத்து, கண்டம் ஏற்படும். பல வருடங்களாகப் பூட்டிவைத்த குல தெய்வம் அல்லது மறைந்துபோன
குலதெய்வம். குலதெய்வக் கோபத்தால் வாழ்நாள் முழுவதும் துன்பம் இருந்துகொண்டே
இருக்கும்.
ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தால், வெளியூர், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்பவர். அங்கேயே குடியுரிமை பெற்று வாழவிரும்புபவர்கள்.
குலதெய்வக் கோவில், வாழும் இடத்திலிருந்து வெகுதொலைவில் உண்டு. குலதெய்வ அருள் உண்டு. குலத்தினர்
ஒற்றுமையாக இணைந்து கும்பிடுவார்கள்.
ஐந்தாம் அதிபதி பத்தில் இருந்தால், உள்ளூரில் வீட்டுக்கருகில் தொழில் செய்வார். குலதெய்வத்தின் பெயரில் தொழில்
இருக்கும். குலதெய்வத்திற்கு தொழில் லாபத்தில் பங்கு கொடுப்பவர்கள் அல்லது
குலதெய்வக் கோவிலுக்கு அதிக தானம், தர்மம் செய்பவர்கள்.
ஐந்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால், குல தெய்வ அனுகிரகம், ஆசி எப்பொழுதும் உண்டு.
ஐந்தாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தால், வெளிநாடு சென்று திரும்பமுடியாத நிலை ஏற்படும்.
குலம் மாறிய திருமணம் அதிகமாக இருக்கும். பணவசதி மிகுதியாக இருக்கும்.
மனநிம்மதி இருக்காது. குலதெய்வ வழிபாட்டை மறந்ததால் சாபம் நிரம்பப் பெற்றவர்கள்.
ஐந்தாம் அதிபதி மற்றும் சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கும் ஐந்தாமதிபதி பலம் பெற்றிருந்தாலும், ஐந்தாமிடத்திற்கு
ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கும் குலதெய்வ அனுக்கிரகம் கிடைப்பதரிது.
ஜாதகத்தில் சனி, 1, 5, 9-ஆம் பாவகாதிபதி வலிமை யாக இருப்பவர்களின் குரலுக்கு குலதெய்வம் முன்வந்து
நிற்கும். குலதெய்வ அருள் உண்டு. ஐந்தாம் அதிபதிக்கு செவ்வாய், ராகு- கேது
சம்பந்தம், சனி- கேது சம்பந்தம், சனி- ராகு சம்பந்தம் இருந்தால் குலதெய்வ வழிபாட்டைத் தடைசெய்யும். ஐந்தாம்
அதிபதி நீசம், அஸ்தங்கமடைய, குலதெய்வம் இருந்தும் வழிபாடுசெய்யும் ஆர்வமிருக்காது.
பலருக்கு குலதெய்வம் எதுவென்பது ஏன் தெரியாமல் உள்ளது?
குலதெய்வம் தெரியாமல் போவதற்கு மூன்று காரணங்களைப் பிரதானமாகக் கூறலாம்.
1. குலம் மாறிய திருமணம்
பொதுவாக, குலதெய்வம் ஒவ்வொரு குலத்திற்கு மட்டுமே சொந்தமான தெய்வம். ஒரு குறிப்பிட்ட
குலத்தவர்கள் மட்டும் சேர்ந்து கும்பிடும் தெய்வம். கலாச்சார மாற்றத்தால், மிகுதியான குலம்
மாறிய திருமணத்தில் ஏற்பட்ட குளறுபடியில் தந்தையின் குலதெய்வத்தைக் கும்பிடுவதா? தாயின்
குலதெய்வத்தைக் கும்பிடுவதா என்னும் குழப்பத்தில் குலதெய்வத்தை வணங்காமல்விட்டு
நாளைடைவில் மறந்து விடுவது. வேறு குலத்துடன் சம்பந்தம் ஏற்பட்டாலே குலதெய்வத்தின்
சக்தி குறைந்து விடும். அதனால்தான் இன்றும் பல சமூகத்தினர் குலத்திற்கு மாறாகத்
திருமணம் செய்தவர்களை குலத்துடன் சேர்ப்பதில்லை.
2. இடப்பெயர்ச்சி
தொழில் நிமித்தம் மற்றும் வேறேதேனும் காரணத்தினால் பூர்வீகத்தைவிட்டு இடம்
பெயர்ந்தவர்கள் அங்கேயே தங்கிவிடுவதால், காலப் போக்கில் ஏற்பட்ட நாகரிக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள்
பூர்வீகம், குலதெய்வம் என்னும் கருத்தை மறந்துவிடுகிறார்கள். விடுமுறை நாட்களிலும் தமது
குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகிவிட்டது. ஆனால், சில வருடங்களுக்கு ஒருமுறையாவது குலதெய்வ ஆலயத்துக்குச் சென்று
வணங்கவேண்டுமெனும் எண்ணம் ஏற்படுவதில்லை.
3. பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கத் தவறுவது
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வீட்டிலுள்ள பெரியவர்கள் தங்களின்
மகன்களுக்கு தாம் வணங்கும் குலதெய்வம் யார்? அந்த ஆலயம் எங்குள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒருமுறையாவது
தமது குலதெய்வ ஆலயத்துக்குச் சென்று பூஜித்துவிட்டு வருவார்கள். வீடுகளில்
குலதெய்வ உண்டியல் இருக்கும்.
அதில் தமது காணிக்கைகளைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது தாம்
போகமுடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த
காணிக்கைப் பணத்தைத் தந்து உண்டியலில் சேர்த்துவிடுமாறு கூறுவார்கள். தமது
பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குலதெய்வம் யார் என்பதைக்கூறி
குலதெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அதுமட்டுமல்ல; எந்தவொரு நல்ல
காரியம் வீட்டில் நடக்கும்போது முதல் பிரார்த்தனை குலதெய்வத்திற்குத்தான்
நடைபெறவேண்டும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகளைத் துவங்கவேண்டும் என்பதையும்
கூறுவார்கள். ஆனால், கலாச்சார மாற்றத்தால் இதுபோன்ற நல்ல விஷயங்களைத் தாங்களும் கடைப்பிடிக்கவில்லை, தங்கள்
குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை.
குழந்தைகள் பிறந்து, அவர் களுக்கு மொட்டையடிக்கும் போது மட்டுமே குலதெய்வத் தைத் தேடுவார்கள். அது
தெரிய வில்லையெனில், அதுவும் ஒரு சடங்குபோல பழனி, திருப்பதி என எங்காவது சென்று மொட்டை போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அது
மட்டு மல்லாமல், காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முடிவுதேட புதுப்புது சாமியார், சந்நியாசிகள்
மற்றும் தெய்வப் பிறவிகளை நாடி ஓடுகிறார்கள்.
அவர்கள் கூறுவதைச் செய்வார்கள். ஆனால், தம்முடைய குலதெய்வத்தை நினைக்க மாட்டார்கள்.
கோட்சாரமும் குலதெய்வமும்
ஆரம்பம் என ஒன்றிருந்தால், முடிவும் உண்டுதானே? மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
தீர்வுகொடுக்கும் சக்தி கோட்சார குருவுக்கு உண்டு. அதனடிப்படையில் திருக்கணிதப்படி
20-11-2020 அன்று
மகரத்துக்குச் செல்லும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால்
கடக ராசியையும், ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்கிறார்.
பல வருடங்களாகக் குலதெய்வம் தெரியாதவர்கள் மற்றும் குலதெய்வ அனுக்கிரகம்
இல்லாதவர்கள், கோட்சார குருவின் பார்வைமூலம் குலதெய்வக் குற்றத்தை சரிசெய்யக்கூடிய
சந்தர்ப்பம் ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய லக்னத்தினருக்கு (ராசிக்கு அல்ல) உள்ளது.
இந்த லக்னத்தினர், குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள்
தொடர்ந்து 21 வாரம் நெய்தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் படைத்து, தீபத்தைக் குலதெய்வமாக பாவித்து, வேண்டும் வரம்கேட்கக் குலதெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல்
கிடைக்கும்.
பரிகாரம்
ஜனனகால ஜாதகத்தில் ஐந்தாமதிபதி எட்டில் மறைந்தவர்கள் கோவிலை சரியாகப்
பராமரித்து, முறையான அபிஷேக ஆராதனைசெய்து, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, உணவு படைக்கக் குலதெய்வக் குற்றம், கோபம் சரியாகும். அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒருமுறையாவது சென்று
வழிபாடுசெய்து தானதர்மம் செய்யவேண்டும். இவை யெல்லாவற்றுக்கும்மேல் குலதெய்வத்தின்
திருமேனி பழுதடையாமல் காக்கவேண்டும்.
ஐந்தாமதிபதி 12-ல் இருத்தல் அல்லது பாதகாதிபதியுடன் சம்பந்தம் பெறுவது குலதெய்வ சாபமாகும்.
அத்துடன் சூரியன், சந்திரன் சம்பந்தப்படுவது பரம்பரை பரம்பரையாகத் தீர்க்கப்படாத சாபமாக
இருக்கும். சாபம் ஏற்படக் காரணம் கோவில் சொத்து, வருமானத்தை அபகரிப்பதால் மட்டுமே ஏற்படும். இதன்பலனாக பூர்வீகத்தில் குடியிருக்கமுடியாத
நிலை, பூர்வீகச் சொத்தை
இழக்கும் நிலை, கஷ்ட ஜீவனம், நல்ல வேலை, தொழில் அமையாத நிலை, தீராத கடன், கர்மவினை நோய், தொடர் துர்மரணம், ஊனமுள்ள குழந்தை பிறப்பது போன்றவை இருக்கும். இவர்கள் ஐந்தாமதிபதி நின்ற
இடத்திற்கேற்ற வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
மேஷம், சிம்மம், தனுசு லக்னத்தினர் (நெருப்புத் தத்துவம்) கோவிலில் நடைபெறும் யாகத்திற்குத்
தேவையான பொருட்களை வாங்கித்தருவது, மூலஸ்தானத்தில் எரியும் தீபத்திற்கு நெய் அல்லது சுத்தமான நல்லெண் ணெய் தருவது, மின் சாதனங் களை
வாங்கித்தர பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.
ரிஷபம், கன்னி, மகர லக்னத்தினர் (நிலத் தத்துவம்)
அங்கப் பிரதட்சணம், அடிப் பிரதட்சணம் செய்வது, நிலதானம் செய்வது போன்றவற்றின்மூலம் குலதெய்வ சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள
முடியும்.
மிதுனம், துலாம், கும்ப லக்னத்தினர் (காற்றுத் தத்துவம்)
ஆன்மிகச் சொற்பொழிவு கேட்டல், பக்திப் பாடல்களைக் கேட்டல், படித்தல், கோவிலுக்கு மணி வாங்கித்தருதல், மின்விசிறி, ஹோமப் பொருள்கள் வாங்கித் தருவதன்மூலம் குலதெய்வக் குற்றத்தைக்
குறைக்கமுடியும்.
கடகம், விருச்சிகம், மீன லக்னத்தினர் (நீர்த் தத்துவம்)
திரவப் பொருட்களால் அபிஷேகம் செய்தல், திரவப் பொருட்களை தானம் செய்வது, கோவிலுக்கு நீர் வசதி செய்து கொடுப்பது போன்றவற்றின்மூலம் குலதெய்வ
அனுகிரகத்தைப் பெறமுடியும்.
courtesy;Nakkiran/balajothidam.
செல்: 98652 20406
==========================
No comments:
Post a Comment