திருவாசகம் சில சிந்தனைகள்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே
வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே
வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
மனித மனத்தின் சில விநோதமான கூறுபாடுகள்
இப்பாடலில் விரிவாகப் பேசப்பெற்றுள்ளன. மனம் ஒன்றை அவாவி நின்றால், எல்லா அவாவிற்கும் தருக்க ரீதியாகக்
காரணம் கூறுதல் இயலாது. பல சமயங்களில் அப்பொருளை இப்பொழுது
பெற்றால் அது பின்னர்த் தீமை பயக்கும் என்று அறிந்தும்கூட, உடனடியாக ஏற்படும் இன்பத்திற்காக அதனை விரும்பி ஏற்பது மனித மனத்தின்
இயல்புகளில் ஒன்று. நீரிழிவு நோயாளி இளிைப்புப் பண்டம்
தனக்குத் தீமை பயக்குமென்று அறிந்திருந்தும், அதனைத் தேடி உண்ணுதல் இன்றும் நாம்
காண்கின்ற ஒரு காட்சியாகும். தீமை பயக்கும் என்று தெரிந்திருந்தும் ஆசை காரணமாகச்
செய்யப்படும் தவறாகும் இது. இதையல்லாமல் மற்றொரு வகையும் உண்டு. பொருளின்மேற் கொண்ட ஆசை, தீமை பயக்குமா, நன்மை பயக்குமா என்று பாகுபடுத்தி உணரமுடியாத குழந்தை நிலையாகும் அது பளபள
என்றிருக்கும் சவரப் பிளேடை தன் கையில் பெறவேண்டும் என்று குழந்தை பிடிவாதம்
பிடிக்கிறது. ஆனால், அது கையில் கிடைத்தவுடன் உள்ளங்கையில் காயங்கள் ஏற்பட்டுவிடும். குழந்தைக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. எனவே, பெரியவர்கள் குழந்தை எவ்வளவு அழுதாலும் அதன் கையில் இதனைத் தாரார். குழந்தையிடம் கொடுக்கக்கூடியது எது, கொடுக்கக் கூடாதது எது என்பதை அறிவு முதிர்ந்த பெரியோர்கள் நன்கு அறிவர். இந்தக் கருத்தைத்தான் வேண்டத் தக்கது
அறிவோய் நீ என்றார். அடுத்து உள்ளது வேண்ட முழுதும் தருவோய் நீ
என்பதாகும். இதில் வரும் முழுதும் என்ற சொல் மிகப்
பரந்துபட்ட பொருளைத் தந்துநிற்கின்றது. பின்னர்த் தீமை பயக்கும் என்பதை அறிந்தோ
அறியாமலோ இப்பொழுது மிக்க அழுத்தத்துடன் ஒன்றை வேண்டினால் அதனையும் இறைவன் தருவான்
என்று பொருள் செய்யவும் இதில் இடமுள்ளது. முற்றறிவினன் ஆகிய இறைவன், பின்னர்த் தீமை பயக்கும் என்பதை நன்கு
அறிந்திருந்தும் ஏன் அதனைத் தருகிறான் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, தொடக்கத்தில் ஒன்றை மகிழ்ச்சியுடன்
அனுபவித்து, பின்னர் அது தீமை பயப்பதை அறிகிறான். அப்படி அறியும்போது அனுபவமும் விரிவடைந்து, இனி ஒன்றை வேண்டும்போது இத்தகைய தவற்றைச்
செய்யக்கூடாது என்ற அனுபவத்தைப் பெறுவதற்கு இது உதவுகிறது. இரண்டாவது, மிக நுணுக்கமான ஒன்றாகும். தீமையை அனுபவிக்கவேண்டிய வினை
உந்துமேயானால், தீமையை விளைக்கும் அப்பொருளை மனம் நாடச் செய்யும். இறைவனும் அப்பொருளைப் பெறுமாறு செய்கிறான். இதனால் பெறும் அனுபவம், அறிவு விசாலத்தைத் தருவதுடன் வினை
அனுபவித்து அழிவதையும் செய்கிறது.

இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு நன்மை, தீமையென்று எதை வேண்டினாலும் அவற்றை முழுவதுமாகத் தருகிறான் என்ற கருத்தை வெளிப்படுத்த வேண்ட
முழுதும் தருவோய் நீ என்கிறார். அடுத்துள்ளது வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ, வேண்டி, என்னைப் பணிகொண்டாய்” என்பதாகும். இங்குச் சொல்லப்பெற்ற கதை மிகப் பழைய
கதையாயினும் அதனை எடுத்துக்கூறித் தம் அனுபவத்தையும் உடன் சேர்த்ததன் மூலம்
அவனுடைய கருணைக்கு எல்லையே இல்லை என்பதைத் தெரிவிக்கின்றார். - வேண்டுதல் வேண்டாமை இலானாகிய ஒருவனை அடைய, அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்கிச் சரணம்
என்று தம்மையே அவர்கள் தந்திருப்பார்களேயாயின் அவர்களுக்கு அரியனாக அவன்
இருந்திருக்க மாட்டான். இந்த நுண்ணிய கருத்தை அறிவுறுத்தவே, அயன், மால்' என்ற தொடருக்கு முன்னர் வேண்டும்’ என்ற சொல்லைப் பெய்கின்றார். வேண்டும்’ என்ற அடை இருவருக்கும் பொதுவாய் நின்றது. சரண்புகுந்து திருவடிக் காட்சி தரவேண்டும்
என்று வேண்டிக்கொள்வதற்குப் பதிலாக, அடியையும் முடியையும் காணவேண்டும் என்ற
தற்போதத்துடன் புறப்பட்டனர் இருவரும் அறிவு (அயன்), செல்வம் (மால்) என்ற இரண்டிற்கும் இயல்பாக நிற்பது தன்முனைப்பு. தன்முனைப்பின் இலக்கணமே எல்லாவற்றையும் தனக்கு வேண்டும் என்று நினைப்ப தாகும். எனவே, அவர்கள் இருவருக்கும் அவன் அரியனாகினான். - திருவாதவூரராக இருந்தபொழுதுகூட அமைச்சர்
பதவி முதல் எதனையும் வேண்டும் என்று அவர் நாடிச் செல்லவில்லை. தற்போதம் குறைந்திருந்தமையின் எந்த ஒன்றையும் வேண்டும், வேண்டாம் என்று நினைக்கும்

நினைவும் அவர்பால்
அதிகமில்லை. இவ்வாறு நினைப்பதற்கு ஒரு காரணமுண்டு. ஒரு பேரரசின் அமைச்சராக இருந்த
ஒருவர் குதிரை வாங்கும் பணிக்கு ஏவுதற் கர்த்தாவாக இருந்திருக்க வேண்டும்.
அவ்வாறின்றி இயற்றுதல் கர்த்தாவாக இருந்து, தாமே புறப்பட்டுச்
செல்வது தம்முடைய பதவிக்கு ஏற்றதன்று என்று அவர் நினைக்கவில்லை. இந்தச் செயலே
தன்முனைப்பு அவர்பால் பெரிதாக இடம்பெறவில்லை என்பதைத் தெரிவிக்கின்றது.
இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டு பார்த்தால் வேண்டி என்னைப் பணிகொண்டாய்” என்பதன் நுணுக்கம் நன்கு விளங்கும். வேறு வகையாகக் கூறுமிடத்து, தன்முனைப்பு மிக மிக இறைவன் எட்டிப் போய் விடுகிறான்; தன்முனைப்புக் குறையக் குறைய இறைவன் நெருங்கி வருகிறான் என்பதை
உணரலாம். வேண்டும் என்ற இருவர்க்கும் அரியோன், எதனையும் வேண்டும் என்று விரும்பாத ஒருவருக்குத் தானே நெருங்கி
வந்து, பிறர் காணமுடியாத திருவடியைத் தம் கையால் பிடிக்கவும், தலையால் சூடவும் அருள் செய்தான். இந்த இடத்தில் 499 ஆம் பாடலில் சீர் மறப்பித்து இவ் ஊனே புக எந்தனை நூக்கி’ என்று வரும் பகுதியை உடன்வைத்து எண்ணினால், வேண்டி என்னைப் பணி கொண்டாய் என்பதன் பொருள் நன்கு விளங்கும்.
அடுத்துள்ள பகுதியில் இரண்டு அருங் கருத்துக்களைப் பேசுகிறார். அடிகளார், முதலாவது, வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே
வேண்டின் அல்லால்' என்பதாகும். அதாவது எந்த ஒன்றை எனக்குத் தரவேண்டும் என்று நீ ...............

விரும்பித்
தந்தாலும், அதனையே நானும் விரும்பி ஏற்கும் பொருளாகக் கருதி
ஏற்றுக்கொள்வேன்’ என்பது உண்மை அன்பில் திளைத்துநிற்கும் கணவன் மனைவி இருவரிடையே
இந்த மன நிலையைக் காணலாம். மகளிர் விரும்பி அணிவது புடைவையாகும். அதன் நிறம், அமைப்பு முறை, சாயல் என்பவற்றில் ஒவ்வொரு பெண்ணின்
கற்பனையிலும் இவை தனித்து இடம் பெறும். இவற்றையல்லாத ஒரு புடவை எவ்வளவு சிறப்புடைய
தாயினும் அந்தப் பெண் விரும்பி அணியமாட்டாள். என்றாலும், கணவன் தான் விரும்பி ஆசைப்பட்டு ஒரு புடைவையை வாங்கித்
தருவானேயானால் அதனைப் பெருவிருப்பத்தோடு மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளுகிறாள். காரணம்
அவன் தந்தது என்பதுதான். அதே மனநிலையில்தான் அடிகளாரும் யாது நீ அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டுகிறேன் என்கிறார். இரண்டாவது, மனித மனநிலையின் ஒரு வெளிப்பாட்டை உணர்த்துகிறது. மிக உயர்ந்த
மனநிலையில் சத்துவ குணத்திலேயே அமர்ந்திருப்பவர்கள் கூடத் திடீரென்று கீழிறங்கி
வந்து அற்பப் பொருளுக்கு ஆசைப்படுதலும் உண்டு. இவ்வாறின்றித் தம் மனம் இவ்வாறு
கீழிறங்கிச் செல்வது, தம் ஊழ் வினையின் விளையாட்டு என்று கருதுபவர்களும் உண்டு.
தற்போதத்தை அறவே ஒழித்துவிட்ட அடிகளார் போன்றவர்களின் மனத்தில் ஏதோ ஒன்று
வேண்டுமென்ற ஆசை அல்லது விருப்பம் தோன்றுமானால் அது இறைவனால் தோற்றுவிக்கப்பெற்றது
என்றே அவர்கள் கருதினர். அதனையே வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும்
உந்தன் விருப்பன்றே என்று பாடுகின்றார்.

======================================
No comments:
Post a Comment