Followers

Thursday, April 16, 2020


Image may contain: 2 people, text

He, who loves me most, always sees Me...........


''யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.” ''அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார்; நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும் எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக்கொண் டிருப்பார்.--


''இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார். எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன்.--


''என்னிடம் அனன்னியமாக சரணடைந்து என்னையே அகண்டமாக எவர் நினைத்துக்கொண் டிருக்கிறாரோ, அவருடைய ருணத்தை (கடனை) என்னுடைய தலையில் ஏற்றிக்கொள்கிறேன். அவரைக் கைதூக்கிவிடுவதன் மூலம் அக் கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன்.-- ''எவர் எனக்கு முத¬ல் ஸமர்ப்பணம் செய்யாமல் உணவுண்பதில்லையோ-பானங்கள் அருந்துவதில்லையோ, எவர் என்னை நிதித்யாசனம் (திரும்பத் திரும்ப நினைத்தல்) செய்கிறாரோ, அவருடைய ஆதீனத்தில் (வசத்தில்) நான் வாழ்கிறேன்.--


''எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, எவர் எனக்கு சமானமானவர் என்று எவரையும் அறியமாட்டோரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன்.--


''தந்தை, தாயார், உறவினர்கள், நண்பர்கள், மனைவி, மக்கள் இவர்களிடமிருந்து எவர் பிரிந்துவிட்டாரோ, அவ்வகையானவர் என்னுடைய பாதங்களின்மீது காதல் கொள்கிறார்.-- ''மழைக்காலத்தில் பல்வேறு நதிகள் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடி சமுத்திரத்தை சந்திக்கின்றன. நதிகள் என்னும் அடையாளத்தைத் துறந்துவிட்டு மஹா சமுத்திரமாகவே ஆகிவிடுகின்றன.--


''நதிகளின் உருவங்கள் மறைந்துபோகின்றன; பெயர்களும் மறைந்துபோகின்றன. நீர்ப்பெருக்கு மாத்திரமே சமுத்திரத்துடன் கலந்துவிடுகிறது. நதிக்கும் சமுத்திரத்துக்கும் திருமணம் நிகழ்கிறது. இரண்டென்னும் நிலை, ஒருமையில் காணாமற்போகிறது.--


''இவ்வாறான சமரசநிலையைக் கண்டவுடன் சித்தம் உருவத்தையும் பெயரையும் மறந்துவிடுகிறது. தன் நிஜமான இயல்பால் சுய இயக்கத்தாலேயே என்னைப் பார்க்கிறது. என்னைத் தவிர அதற்கு வேறு இடம் இல்லாமற்போகிறது.--


Baba's Nectar-like words
The kind and merciful Sai Baba, said many a time the following sweet words in the Masjid - "He who loves Me most, always sees Me. The whole world is desolate to him without Me, he tells no stories but Mine. He ceaselessly meditates upon Me and always chants My name. I feel indebted to him who surrenders himself completely to Me and ever remembers Me. I shall repay his debt by giving him salvation (self-realization). I am dependent on him who thinks and hungers after Me and who does not eat anything without first offering it to Me. He who thus comes to Me, becomes one with Me, just as a river gets to the sea and becomes merged (one) with it. So leaving out pride and egoism and with no trace of them, you should surrender yourself to Me Who am seated in your heart."


Who is this ME?


Sai Baba expounded many a time Who this ME (or I) is. He said "You need not go far or anywhere in search of Me. Barring your name and form, there exists in you, as well as in all beings, a sense of Being or Consciousness of Existence. That is Myself. Knowing this, you see Me inside yourself, as well as in all beings. If you practise this, you will realize all-pervasiveness, and thus attain oneness with Me."


Hemadpant, therefore, makes a bow to the readers and requests them humbly and lovingly that they should love and respect all Gods, saints and devotees. Has not Baba often said "He who carps and cavils at others, pierces Me in the heart and injures Me, but he that suffers and endures, pleases Me most." Baba thus pervades all beings and creatures and besets them on all sides. He likes nothing but love to all beings. Such nectar, pure auspicious ambrosia always flowed from Baba's lips. He therefore, concludes - Those who lovingly sing Baba's fame and those who hear the same with devotion, both become one with Sai.


Bow to Shri Sai - Peace be to all —


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...