Followers

Tuesday, April 14, 2020

''காட்சி என்று அதற்குப் பெயர் கொடுத்து என்னுடைய வார்த்தைகளை எடைபோடப் பார்க்கிறீரா? என்னுடைய வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவை. அவற்றில் ஓர் எழுத்துக்கூட அர்த்தமில்லாமற்போகாது.ஃஃ மேகா பதிலுரைத்தார், ''நானும் முத­ல் நீங்கள் என்னை எழுப்பினீர்கள் என்றே நினைத்தேன். ஆனால், ஒரு கதவும் திறந்திருக்கவில்லை. ஆகவே, நான் கண்டது ஒரு காட்சியே என்று அனுமானித்தேன்.ஃஃ பாபா இதற்கு என்ன விடையிறுத்தார் என்று கேளுங்கள், ''நான் நுழைவதற்குக் கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன்.-- ''தம்முடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான சகல விவகாரங்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன்.ஃஃ
கதை கேட்பவர்களே, இப்பொழுது பாபாவின் லீலையை மேற்கொண்டு கேளுங்கள். ....பரமானந்தம் எய்துவீர்கள்..............................
Please see below for English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 28
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
ஒரு மகர ஸங்க்ராந்தி தினத்தன்று (பொங்கல் திருநாள்) கோதாவரி நதியி­ருந்து நீர் கொணர்ந்து, பாபாவுக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காயும் வாசனைத் திரவியங்கள் கலந்த சந்தனமும் தேய்த்து, உடம்பு முழுவதும் குளிப்பாட்ட விரும்பினார் மேகா.
165 பாபாவை அனுமதி கேட்டுப் பிடுங்கியெடுத்தார். கடைசியில் பாபா சொன்னார், ''சரி, உம் இஷ்டப்படி செய்யும்.ஃஃ மேகா நீர் கொண்டுவரக் குடத்துடன் சென்றார்.
166 சூரிய உதயத்திற்கு முன்பே, கா­க் குடத்துடன், செருப்பு அணியாது குடையும் இல்லாது கோமதி (கோதாவரி) நதியி­ருந்து நீர் கொண்டுவர மேகா கிளம்பினார்.
167 போகவரப் பதினாறு மைல்கள் இருந்த தூரத்தைப்பற்றியோ, சென்றுவருவதில் இருந்த கடுமையான சிரமத்தைப்பற்றியோ, கஷ்டங்களைப்பற்றியோ எந்த எண்ணமும் அவருடைய கனவிலும் எழவில்லை.
168 இவற்றைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை. அனுமதி கிடைத்த உடனே அவர் கிளம்பிவிட்டார். திடமான தீர்மானமே எடுத்த காரியத்தில் உற்சாகத்தை ஊட்டுகிறதன்றோõ
169 ஸாயீயை கங்கை நீரால் குளிப்பாட்ட வேண்டுமென்ற விருப்பம் எழுந்தபின், சிரமம் என்றால் என்ன? அசதி என்றால் என்ன? திடமான சிரத்தையே இங்கே பிரமாணம் அன்றோõ
170 இவ்விதமாக கோதாவரி நீர் கொண்டுவரப்பட்டு, தாமிரத் தவலையில் நிரப்பப்பட்டது. எழுந்துவந்து குளிப்பதற்குத் தயாராகும்படி பாபாவை மேகா மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினார். ஆனால், பாபா இதை ஏற்றுக்கொள்பவராக இல்லை.
171 மதிய ஆரதி முடிந்துவிட்டிருந்தது. பக்தர்கள் அவரவர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டனர். ''குளிப்பதற்கு சகலமான பொருள்களும் தயாராக இருக்கின்றன. சாயங்கால நேரம் நெருங்குகிறதுஃஃ என்று மேகா சொன்னார்.
172 லீலைக்காகவே அவதாரம் செய்த பாபா, மேகாவின் விடாமுயற்சியைக் கண்டு மேகாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்துக்கொண்டு சொன்னார்.
173 ''ஓய்õ எனக்கு இந்த கங்கா ஸ்நானம் வேண்டா. நீர் என்ன இவ்வளவு மதியீனமாக இருக்கிறீர்õ என்னைப் போன்ற பக்கீருக்கு கங்கைநீர் எதற்காக?ஃஃ
174 ஆனால், மேகா இதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை. அவருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அவரைப் பொறுத்தவரை பாபாவும் சங்கரரும் (சிவனும்) ஒன்றே; சங்கரர் கங்கைநீர் அபிஷேகத்தால் பிரீதி அடைகிறார்.
175 மேகா சொன்னார், ''பாபா, இன்று மகர ஸங்க்ராந்திப் பண்டிகை நாள் (பொங்கல் திருநாள்). இன்று கங்கைநீரால் அபிஷேகம் செய்தால் சங்கரர் பிரீதியடைகிறார்.ஃஃ
176 மேகாவின் அளவுகடந்த பிரேமையையும் தூய உள்ளத்தையும் திடமான தீர்மானத்தையும் கண்டு பாபா சொன்னார், ''சரி, உம்முடைய ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ளும்.ஃஃ
177 இவ்வாறு சொல்­க்கொண்டே, இருக்கையி­ருந்து எழுந்துவந்து குளிப்பதற்காக இடப்பட்டிருந்த குட்டையான ஆசனத்தில் பாபா அமர்ந்தார். மேகாவுக்கெதிரே தலையை நீட்டிக்கொண்டே சொன்னார், ''இங்கே சிறிது ஜலம் தெளியும்.--
178 'எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். தலையில் சிறிது நீர் தெளித்து விட்டீரானால், அது உடம்பு முழுக்க ஸ்நானம் செய்ததற்கு சமானம். இந்த அளவிற்காவது நான் சொல்வதைக் கேளும்.ஃஃ
179 ''சரி, சரிஃஃ என்று சொல்­விட்டுக் கலசத்தைப் பிரேமையுடன் உயர்த்தி, பாபாவின் தலைமீது கோதாவரி நீரை மேகா அபிஷேகம் செய்தார். ''ஹர் கங்கேஃஃ என்று கோஷமிட்டுக்கொண்டே நீரைத் தலையில் மட்டுமின்றி உடல் முழுவதும் அபிஷேகம் செய்துவிட்டார்.
180 ''என் சிவனை ஆடைகளுடன் சேர்த்து முழுமையாகவே அபிஷேகம் செய்துவிட்டேன்ஃஃ என்று நினைத்து, மேகா தம்முடைய செய்கையைத் தாமே பாராட்டிக்கொண்டு ஆனந்தமடைந்தார். ஆனால், என்னே அதிசயம்õ கா­க் குடத்தைக் கீழே வைத்துவிட்டு பாபாவைப் பார்த்தார்; பெருவியப்படைந்தார்.
181 உடம்பு முழுவதும் நீரை அபிஷேகம் செய்திருந்த போதிலும், பாபாவின் தலை மாத்திரமே நனைந்திருந்தது. உட­ன் மற்ற பாகங்கள் நனையவேயில்லை. உடைகளின்மீது ஒரு சொட்டு நீரும் இல்லைõ
182 மேகா தலைகுனிய நேரிட்டது. சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். பக்தர்களின் ஆசைகளை பாபா பூர்த்தி செய்துவைக்கும் விநோதம் இவ்வாறே.
183 ''நீர் என்னைக் குளிப்பாட்ட விரும்பினீர். உம்முடைய விருப்பப்படியே செயல்படும். ஆனால், அதிலும் என் மனத்துள் இருக்கும் சூக்குமத்தை சுலபமாகவே அறிந்து கொள்வீர்.ஃஃ
184 இதுதான் ஸாயீபக்தியின் ரஹஸியம். அவருடைய அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்; அதன் பிறகு, தாண்டமுடியாதது எதுவுமே இல்லை. கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.
185 ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, காலையிலும் மாலையிலும் ஒரு சுற்று எங்காவது போய்வருவதோ, எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத சிரத்தையைக் கடைப்பிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
186 ஆனாலும், ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீகப் பாதையில் ஈடுபாடு ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்தினார் பாபா.
187 மேகாவைப்பற்றி இதேமாதிரியாக இன்னொரு கதையும் உண்டு. கேட்பவர்கள், பக்தர்கள்மீது பாபா செலுத்திய பிரேமையைக் கண்டு ஆனந்தமடைவார்கள்.
188 நானாஸாஹேப் சாந்தோர்கர் அன்பளிப்பாக அளித்த, புதியதும் பெரியதுமான படம் ஒன்று மேகாவிடம் இருந்தது. அதை வாடாவில் வைத்து பக்தியுடன் பூஜை செய்துவந்தார்.
189 மசூதியில் பாபா பிரத்யக்ஷமாக இருந்தார். வாடாவிலோ உருவத்தின் அச்சாக முழு உயரப்படம் பெரியதாக இருந்தது. இரண்டு இடங்களிலும் மேகா பூஜையும் ஆரதியும் செய்துவந்தார்.
190 இம்மாதிரியான சேவை பன்னிரண்டு மாதங்கள் தொடர்ந்து ஸஹஜமாக நடந்தது. பின்னர் ஒருநாள் விடியற்காலை நேரத்தில், மேகா படுக்கையில் விழித்துக் கொண்டிருந்தபோது ஒரு தெய்வீகக் காட்சி கண்டார்.
191 படுக்கையில் இருந்தபோதே கண்கள் மூடியிருந்தாலும் விழிப்புடனிருந்த நிலையில் பாபாவின் உருவத்தைத் தெளிவாகப் பார்த்தார்.
192 மேகா விழித்துக்கொண் டிருந்தார் என்பது நன்கு தெரிந்து, பாபா அவர்மீது அக்ஷதையைத் தெளித்து, ''மேகா, திரிசூலம் வரையுமய்யாõஃஃ என்று சொல்­விட்டு மறைந்துவிட்டார்.
193 பாபாவின் வார்த்தைகளைச் செவியுற்ற மேகா கண்களைத் திறந்து பார்த்தார். பாபாவின் உருவம் மறைந்துகொண் டிருந்ததைப் பார்த்து வியப்பிலாழ்ந்தார்.
194 மேகா சுற்றுமுற்றும் பார்த்தார். படுக்கை முழுவதும் அக்ஷதை இறைந்து கிடந்தது. வாடாவின் கதவுகளோ முன்போலவே சாத்தப்பட்டிருந்தன. அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
195 உடனே மசூதிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்தார். தாம் கண்ட காட்சியை விவரித்தபின், திரிசூலம் வரைவதற்கு பாபாவின் அனுமதி வேண்டினார்.
196 மேகா தாம் கண்ட காட்சியை விரிவாக எடுத்துச் சொன்னார். பாபா அப்பொழுது வினவினார், ''என்ன காட்சி? நான் உம்மைத் திரிசூலம் வரையும்படி சொன்னது உமது காதுகளில் விழவில்லையா?--
197 ''காட்சி என்று அதற்குப் பெயர் கொடுத்து என்னுடைய வார்த்தைகளை எடைபோடப் பார்க்கிறீரா? என்னுடைய வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவை. அவற்றில் ஓர் எழுத்துக்கூட அர்த்தமில்லாமற்போகாது.ஃஃ
198 மேகா பதிலுரைத்தார், ''நானும் முத­ல் நீங்கள் என்னை எழுப்பினீர்கள் என்றே நினைத்தேன். ஆனால், ஒரு கதவும் திறந்திருக்கவில்லை. ஆகவே, நான் கண்டது ஒரு காட்சியே என்று அனுமானித்தேன்.ஃஃ
199 பாபா இதற்கு என்ன விடையிறுத்தார் என்று கேளுங்கள், ''நான் நுழைவதற்குக் கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன்.--
200 ''தம்முடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான சகல விவகாரங்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன்.ஃஃ
201 கதை கேட்பவர்களே, இப்பொழுது பாபாவின் லீலையை மேற்கொண்டு கேளுங்கள். திரிசூலம் எதற்காக வரையச் சொன்னார் என்ற சம்பந்தம் அப்பொழுது விளங்கும்.
202 மேகா வாடாவுக்குத் திரும்பிவந்து, சுவரில் பாபாவின் படத்திற்கருகில் திரிசூலம் வரைய ஆரம்பித்தார். திரிசூலம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டது.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 28
*
*
*
============================================
Ganges-Bath
On one Makar-Sankranti day, Megha wanted to besmear the body of Baba with sandalpaste and bathe Him with Ganges water. Baba was first unwilling to undergo this operation, but at his repeated requests, He consented. Megha had to traverse a distance of eight koss (going and returning) to bring the sacred water from the Gomati river. He brought the water, made all preparations for the bath at noon and asked Baba to get ready for the same. Then Baba again asked him to be freed from his bath saying that, as a Fakir He had nothing to do (or gain) with Ganges water; but Megha did not listen. He knew that Shiva is pleased with a bath of Ganges water and that he must give his Shiva (Baba) that bath on that auspicious day. Baba then consented, came down and sat on a pat (wooden board) and protruding his head said -
"Oh Megha, do at least this favour; head is the most important organ of the body, so pour the water over that only-it is equivalent to the full or whole bath." "Alright" said Megha and lifting the water pot up, began to pour it on the head but in doing this he was so much overwhelmed with love that he cried out 'Har Gange' and emptied the pot on the whole body. He kept the pot aside and began to look at Baba, but to his surprise and amazement he found that Baba's head was only drenched but the body quite dry.
Trident and Pindi
Megha worshipped Baba in two places; in the Masjid he worshipped Baba in person and in the Wada, Baba's big picture, given by Nanasaheb Chandorkar. This he did for 12 months. Then in order to appreciate his devotion and confirm his faith, Baba gave him a vision. Early one morning when Megha was still lying down on his bed with eyes closed but internally awake, he saw clearly Baba's Form. Baba knowing him to be awake threw Akshata (rice-grains marked red with Kumkum) and said, "Megha, draw a Trident" and disappeared. Hearing Baba's words, he eagerly opened his eyes but did not see Baba, but saw only rice grains spread here and there.
He then went to Baba, told Him about the vision and asked permission to draw Trident.
Baba said - "Did you not hear My words asking you to draw Trident? It was no vision but direct order and My words are always pregnant with meaning and never hollow." Megha said - "I thought you woke me up, but all the doors were closed, so I thought it was a vision".
Baba rejoined - "I require no door to enter. I have no form nor any extension; I always live everywhere. I carry on, as a wirepuller, all the actions of the man who trusts Me and merges in Me."
===============================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...