Followers

Monday, April 13, 2020

‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ .
அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார்.
எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்து விழுந்துகொண்டிருந்தது.
இன்னும் சில மணிநேரத்தில் கொள்கலன் நிரம்பிவிடும். இவருக்கு மரணபயம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஃபாக்டரியின் காவலாளி அந்த பகுதிக்கு வந்து எட்டிப் பார்க்க, இவர் உள்ள கிடப்பதை பார்த்து சைரனை ஒலிக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறார்.
இவருக்கு ஒரே ஆச்சரியம். “உன் வேலை ஃபாக்டரி வாயிலை காப்பது. இங்கே எப்படி சரியாக வந்து எட்டிப் பார்த்து என்னைக் காப்பாற்றினாய்?”
“ஐயா நான் இந்த பாக்டரியில் பல வருடங்களாக பணிபுரிகிறேன். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தினம் வந்து போனாலும் நீங்கள் ஒருவர் தான் காலை என்னை பார்க்கும்போது ‘குட் மார்னிங்’ சொல்லி விஷ் செய்வீர்கள். அதே போல, மாலை போகும்போதும் ‘குட் ஈவ்னிங்… நாளைக்கு பார்க்கலாம்!’ என்று சொல்வீர்கள். இன்று காலை வழக்கம்போல வேலைக்கு வரும்போது எனக்கு ‘குட் மார்னிங்’ சொன்னீர்கள்.
ஆனால் மாலை உங்களிடம் இருந்து ‘குட் ஈவ்னிங்’ வரவில்லை. உங்களையும் பார்க்கவில்லை. சரி… ஏதோ தவறு நடந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆகையால் பாக்டரியின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று செக் செய்தேன். நீங்கள் இங்கு விழுந்திருப்பதை கண்டுபிடித்தேன்” என்றார். இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். ‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ உங்களை சுற்றியிருப்பவர்களிடம் எப்போதும் அன்பாய் இருங்கள். குறிப்பாக உங்களுக்கு கீழே பணி புரிகிறவர்களிடம். நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகைகளில் உங்கள் ‘அன்பு முத்திரை’யை பதியுங்கள். அன்பு செலுத்துங்கள்.
அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
நிம்மதியான மதிப்பிற்குரிய வாழ்க்கைக்கு பத்து கட்டளைகள் 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி ‘நான்’,'எனது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
10. ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
இவற்றையயெல்லாம் கடைபிடியுங்கள். அப்புறம் பாருங்கள்…. உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் நீங்களாகத் தான் இருப்பீர்கள்!
நன்றி:- சரியான மந்திரம். (ப-பி)
அன்பை விதை .
* இளம் உள்ளங்களில் எப்போதும் அன்பை விதையுங்கள். அதனால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.
* பணம், அதிகாரம் எல்லாம் மனிதனுக்கு தேவையானவை தான். ஆனால், அதனால் அகந்தை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ஆடம்பரம் என்பது அரக்க குணம். மற்றவர்கள் நம்மைக் கண்டு ஏங்கும் விதத்தில் ஆடம்பர நாட்டம் இருக்கக் கூடாது.
* சுயநலமற்ற சேவையில் ஈடுபடுபவன் மனித தன்மையில் இருந்து தெய்வநிலைக்கு உயர்கிறான்.
"God is Love, Love is God"
"Love all Sever all".
- சாய்பாபா
நகைச்சுவை.........சிரிங்க...உறவுகளே.......
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின்
பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர்
கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
காதல் என்பது கரண்ட் போன
நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது...
தூரத்தவும் முடியாது....
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்
எல்லாம் வைக்க முடியாது...
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
நான் ஒன்னு சொல்லுவேன்...
எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா?பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க... ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. உன் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
குறிப்பு:- எல்லாமே சுவைகளில் சிறந்த (நகை) ச் சுவை...ஓகேவா................
ப-பி
என்றும் அன்பு நன்றிகள் தோழ்மைகளே உங்கள் பொன்னான
சில மணித்துளிகளை என்னுடன் செலவிட்டதற்கு.....மீண்டும்
அன்பு நன்றிகள்.............
=========================================================
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
GOOD MORNING DEAR FRIEND(S)!!!
HAVE A WONDERFUL DAY!!!
=================================
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக சகோ(ஸ்)..
கருடாழ்வாரை வழிபட்டால் புண்ணியங்கள் கிடைக்கும் என்றும், பெருமாளை கருட வாகனத்தில் தரிசனம் செய்தால் மறுபிறவி கிடையாது என்றும் பக்தர்கள் மத்தியில் நீங்காத நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், சிறப்புமிக்க கருடாழ்வாரை பற்றிய சில விஷயங்களை பார்ப்போம். தட்சணின் மகளான வினதை என்பவருக்கும், காசிப முனிவருக்கும் பிறந்தவரே கருடன்.
அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயரும் உண்டு. ஆவணி மாத சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம். இதுவே கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக கருட பஞ்சமி, ஆடி மாதம் வரும் சுவாதி நட்சத்திர நாள் கருடாழ்வாரின் அவதார நாட்களாகும். தமிழில் கருடன் என்ற சொல் செம்மண் நிற இறக்கைகளும், உடல் பகுதியின் நடுவில் வெண்ணிறமாக உடைய செம்பருந்தை குறிக்கும்.
கருடன் பறவை மங்களம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வானில் கருடனை பார்த்தாலும், அதனுடைய சத்தத்தை கேட்டாலும் நல்ல சகுணமாக நம்பப்படுகிறது. கருடனின் பார்வை மிக கூர்மையானது. கருடக் குரலில் ‘கருடத்வனி’ என்று ஒரு ராகமே அமைந்துள்ளது என்று இசை வல்லுனர்கள் அறிந்துள்ளனர். பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குபவர் கருடாழ்வார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோவில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும், கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமாலுக்கு எப்போதும் தொண்டு செய்து கொண்டிருக்கும் நித்யசூரிகளில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலின் வாகனமாக தொண்டு செய்து வருகிறார். இதனால் கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகிறார்கள்.
பெயர் காரணம் :
கிருத யுகத்தில் அகோபிலத்தை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அகோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ரண்யனின் அரண்மனை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் இன்றி தனியாக சென்றார்.
இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள்பாலிக்குமாறு வேண்டினாராம். ஆனால், அதற்கு பெருமாள் கருடனை அகோபிலம் சென்று தவம் இருக்க வேண்டும் என்றார். அதன்படி, பல இன்னல்களை கடந்து கருடன் தவமிருந்தார். இதையடுத்து மலைக்குகையில் உக்ர நரசிம்மிராய் பெருமாள் கருடனுக்கு காட்சியளித்தார்.
இதனை கண்ட கருடன், பெருமாளிடம் பூரண சரணாகதி அடைந்தார். இதையடுத்து கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகிறார். மேலும், சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்ரியன், மங்களாயன், சுவர்ணன், புன்னரசு என்ற திருநாமங்களும் இவருக்கும் உண்டு.
பலன்கள்...
பொதுவாக கருடன் 16 வகையான விஷத்தை தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். அதனால், விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட கருடனை தரித்தால் பல்வேறு பலன்கள் நமக்கு கிடைக்குமாம்.
ஞாயிற்றுகிழமைகளில் தரிசனம் செய்தால் நோய் அகலும், மனக் குழப்பம், பாவங்கள் நீங்கும். திங்கட்கிழமைகளை கருடனை தரிசனம் செய்தால் குடும்ப நலம், செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்தால் தைரியம் ஏற்படும், புதன்கிழமை தரிசனம் செய்தால் எதிரிகள் மறைவர், வியாழக் கிழமை தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள், வெள்ளிக் கிழமை அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்குமாம்.
கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிஷேன் (நாகம்) அரவணையாகவும் அமைய பெற்றுள்ளது சிறப்பாகும். அந்த வகையில், கருடாழ்வார் அவதாரம் செய்த நாளான கருட ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து வைணவ தலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. அவற்றில் நாம் கலந்து கொண்டு கருட பகவானின் முழுஅருளை பெறுவோம்.
வரதராஜ பெருமாள்கோவில் :
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி விழா நாளை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு கருடமகாஹோமம், வேதபாராயணம் ஆகியவை நடக்கிறது. காலை 11 மணிக்கு பெரிய திருமஞ்சனம் நடக்கிறது. இதில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களாலும், பால், தேன், வெல்லம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களாலும் அபிஷேகம் நடக்கிறது.
இதற்காக இமாசலபிரதேசத்தில் இருந்து தேனும், திருவண்ணாமலையில் இருந்து வெல்லம் போன்றவையும் வரவழைக்கப்பட்டுள்ளது. மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் எதிர் சேவையில் கருடாழ்வார் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. இதில் பல்வேறு வகையான பூக்களால் 1008 சகஸ்சர நாம அர்ச்சனை நடக்கிறது. முன்னதாக வரதராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடக்கிறது.
---------------------------------------------------------
ஜூலை 24 கருடாழ்வார் திருநட்சத்திரம்
காக்கும் கடவுளான திருமாலுக்கு, விஷ்ணு எனும் திருநாமம் உண்டு. விஷ்ணு என்றால், எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். இவருக்குரிய வாகனம் கருடன்; அதனால், இதை, தெய்வீகப் பறவை என்பர்.
கந்தர்வர்கள் இருவர் தாங்கள் செய்த தவறின் காரணமாக, கஜேந்திரன் என்ற யானையாகவும், கூகு என்ற முதலையாகவும் பிறக்க சாபம் பெற்று, திரிகூடமலை பகுதியில் உள்ள ஆற்றில் கூகுவும், காட்டில் கஜேந்திரனும் வாழ்ந்து வந்தனர்.
விஷ்ணுவை வழிபாடு செய்தால் தான், சாப விமோசனம் கிடைக்குமென கருதிய யானை, தினமும் ஆற்றில் இறங்கி மலர் பறித்து, விஷ்ணுவுக்கு சமர்ப்பித்தது. அவ்வாறு ஒருமுறை மலர் பறிக்க, ஆற்றில் இறங்கிய யானையின் காலை பிடித்துக் கொண்டது கூகு முதலை. வலி தாளாமல் கதறிய யானை, 'ஆதிமூலமே... இந்த மலரை உனக்கு அர்ப்பணித்து விட்டு இறக்க தயாராக இருக்கிறேன்; என்னைக் காப்பாற்று...' என்று கதறியது.
இந்த ஓலம், வைகுண்டத்தில் இருந்த விஷ்ணுவின் காதில் விழுந்தது. அப்போது, அருகில் இருந்த கருடன், கணநேரம் கூட தாமதிக்காமல் விஷ்ணுவை ஏற்றி, மின்னல் வேகத்தில் பறந்து ஆற்றை அடைந்தது. கஜேந்திர யானை காப்பாற்றப்பட்டது. கூகு முதலையும், பகவானின் அருட்பார்வையால் முக்தி பெற்றது.
இதனால் தான், விஷ்ணு கோவில்களுக்குள் நுழையும் போதே, முதலில், கருடன் சன்னிதியை அமைத்தனர். கருடனை வணங்கி அனுமதி பெற்ற பின்தான், விஷ்ணு தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி. கருடனிடம் கோரிக்கை வைத்தால், விஷ்ணுவிடம் அது எடுத்துச் சொல்லப்பட்டு, விரைவில் நிறைவேறும். இவரை, ஆழ்வார்களுக்கு இணையாக, 'கருடாழ்வார்' என சிறப்பித்து சொல்வர். பெரிய திருவடி என்ற சிறப்பு பெயரும் கருடனுக்கு உண்டு.
இவர் விஷ்ணுவின் பாதங்களை தன் கைகளில் தாங்கியிருக்கும் வகையில், கருடசேவையின் போது அலங்கரிப்பர். பெருமை மிக்க திருமாலின் திருவடிகளைத் தாங்குவதால் இவர், 'பெரிய திருவடி' என சிறப்பிக்கப்படுகிறார்.
கருட வழிப்பாட்டில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஞாயிற்றுக்கிழமை வணங்கினால் நோய், திருஷ்டி நீங்கும்; திங்கள் - கஷ்டமெல்லாம் விலகும். செவ்வாய் - நிலப்பிரச்னைகள் தீரும். புதன் மற்றும் வியாழன் - கிரக தோஷங்கள் விலகும். வெள்ளி மற்றும் சனி - தீர்க்காயுள், செல்வவளம் கிடைக்கும்.
கருடனைத் தரிசிக்கும் போது, 'ஹரி' என்றும் 'கிருஷ்ணா' என்றும் விஷ்ணுவின் திருநாமங்களை ஏழு முறை சொல்ல வேண்டும். கருடன் வானில் பறப்பதைப் பார்த்தால், எதிர்காலத்தில் நற்பலன்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
பெருமாள் கோவில் பிரம்மோற்சவங்களில் கருடசேவைக்கே முக்கியத்துவம் தரப்படும். திருப்பதியில் நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளான கருடசேவையன்று ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
பறக்கும் தெய்வமான கருட பகவான், ஆடி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் பிறந்த நன்னாளன்று, அவரது அருள் பெற புறப்படுவோமா!
தி.செல்லப்பா
நன்றி சகோநாளை (24.7.15) கருட ஜெயந்தி: கருடனின் தரிசனமும் கிடைக்கும் நன்மைகளும்...
.
  • =============================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...