Followers

Wednesday, April 15, 2020

Image may contain: 6 people, people smiling, text

ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...

ஸமுத்திரத்தின் உப்புநீர் மேகங்களாக மாற்றம் அடைந்து, சுத்தமான குடிக்கத்தகுந்த நீராக மாறுகிறது. அவ்வாறே குருவின் பொன்னடிகளில் மூழ்கினால் சுகம் கிடைக்கிறது. 

நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண். .உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப்போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய்தந்தையரின் பாடைகளைத் தோள்மேல் சுமந்துசென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலைபற்றிய உண்மையை உணர்வதில்லை.
இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..பாபாவின்....
தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்... ....ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியது... பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......அவர் தம் புண்ணியக் கதைகளை கேட்போம் நாமும் புண்ணியம் சேர்ப்போம்....அன்புறவுகளே................ 

ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq

ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................

52. ஸுர்த்த ஸத்வ ஸ்திதாய நமஹ 

தூய ஸத்துவ குணத்தில் நிலைத்தவருக்கு நமஸ்காரம். 

   ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 301ஆவது நாமம் சம்பந்தப்பட்டது. விரிவுரையைப் படித்துப் பயனுறுக! 

OM SHUDDHA SATVASTHITAYA NAMAH
ॐ शुध्दसत्वस्थिताय नमः
My humble salutation to Him who is established in pure truth and goodness.

வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 8 தொடர்கிறது……….
*
*
*
சுயதர்மத்தை அனுஷ்டானம் செய்; ஆத்மாவுடன் சம்பந்தப்படாதவற்றை விலக்கி, எந்நேரமும் ஆத்மாவிலேயே எண்ணத்தைச் செலுத்து. தன்னிலேயே மூழ்கிப் போகும் இந்தத் திருப்தியும் சாந்தியுமே நரஜன்மத்தின் முடிவான இலக்காகும். 

77 தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம், (அறம் - பொருள் - இன்பம் - வீடு) ஆகிய நான்கு மனித வாழ்வின் லக்ஷணங்களை அடைவதற்கு, உடலைவிட்டால் வேறு வழியே இல்லை. இந்த நான்கு புருஷார்த்தங்களை2 எப்படி அடைவது என்பதை அப்பியாசம் செய்யும் மானுடன் ஸ்ரீவைகுண்டபதவியை அடைந்துவிடுவான். 

78 ஆகவே, இவ்வுடல் கீழே வீழ்வதற்கு முன்பே ஆத்மஞானம் பெறுவதற்கு முயற்சி செய்வீராக. நரஜன்மத்தின் ஒரு நொடியைக்கூட வீண் செய்துவிடாதீர். 

79 ஸமுத்திரத்தின் உப்புநீர் மேகங்களாக மாற்றம் அடைந்து, சுத்தமான குடிக்கத்தகுந்த நீராக மாறுகிறது. அவ்வாறே குருவின் பொன்னடிகளில் மூழ்கினால் சுகம் கிடைக்கிறது. 

80 குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால்தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள். 

81 மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், பிராமணர்கள், ஜோசியர்கள், வைத்தியர்கள், ஏழாவதாக குரு -- இந்த ஏழுக்கும் ஒருவருடைய விசுவாசத்தைப் பொருத்தே பலன்கள் அமையும். 

82 நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே ஸித்திகளின் பரிமாணமும் அமையும். 

83 ஞானிகள், பந்தங்களால் கட்டுப்பட்ட மனிதனை முமுக்ஷுவாக1 மாற்றுகிறார்கள். முமுக்ஷுவை முக்தனாக2 ஏற்றமடையச் செய்கிறார்கள். இதைச் செய்வதற்காக அவர்கள் தோன்றாநிலையி­ருந்து தோன்றியநிலைக்கு மாறுகிறார்கள்; இவை அனைத்தும் பரோபகாரம் கருதியே. 

84 வியாக்கியானங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக அடைய முடியாததை, ஞானிகளின் பாதங்களை தரிசித்து சுலபமாக அடைந்துவிடலாம். அவர்களுடைய அங்க அசைவுகளும் நடத்தையும் மௌன உபதேசங்களாகும். 

85 மன்னிக்கும் குணம், சாந்தி, தனிமை, காருண்யம், பரோபகாரம், புலனடக்கம், அஹங்காரமின்மை ஆகிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனிதனைக் காண்பது அரிது. 

86 புத்தகத்தைப் படித்து அறிந்துகொள்ள முடியாததையெல்லாம் ஒரு மாமனிதரின் செயல்முறைகளைப் பார்த்து சுலபமாக அறிந்துகொள்ளலாம். கோடிக்கணக்கான வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அளிக்கமுடியாத ஒளியை, சூரியன் ஒன்றே கொடுத்துவிடுகிறது அன்றோõ 

87 உதாரகுணம் படைத்த ஞானிகளும் அவ்வாறேõ அவர்களுடைய பலப்பல ஸஹஜமான செயல்கள் மனிதர்களை பந்தங்களி­ருந்து விடுபடச்செய்து அவர்களுக்கு அத்தியந்த சௌக்கியத்தை அளிக்கின்றன. 

88 ஸாயீமஹராஜ் இம்மாதிரியான தலைசிறந்த ஞானிகளுள் ஒருவர்; அளவிலா ஆன்மீகச் செல்வம் பெற்றவர்; ஸ்ரீமான். ஆத்மாவிலேயே எந்நேரமும் மூழ்கியவராயினும் அவர் ஒரு பக்கீரைப்போலவே வாழ்க்கை நடத்தினார். 

89 அவர் எல்லாரையும் சமமாகவே பார்த்தார்; 'நான்ஃ 'எனதுஃ என்னும் எண்ணமே அவருக்கு இல்லை; எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டதால் அவற்றிடம் தயை காட்டினார். 

90 இன்பம் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; துன்பம் அவருக்கு சோகத்தைக் கொடுக்கவில்லை. செல்வரும் ஆண்டியும் அவருக்குச் சரிசமானம். அம் மனோநிலை சாதாரணமாகக் கிடைக்கக்கூடியதா என்ன? 

91 புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோ­யைத்1 தோளில் மாட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்றார். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII

*
*
*
How to Proceed?

The most effective and speedy way to gain our object is to approach a worthy Saint or Sage - Sadguru, who has himself attained God-vision. What cannot be achieved by hearing religious lectures and study of religious works, is easily obtained in the company of such worthy souls. Just as the sun alone gives light, which all the stars put together cannot do, so the Sad-Guru alone imparts spiritual wisdom which all the sacred books and sermons cannot infuse. His movements and simple talks give us 'silent' advice. The virtues of forgiveness, calmness, disinterestedness, charity, benevolence, control of mind and body, egolessness etc. are observed by the disciples as they are being practiced in such pure and holy company. This enlightens their minds and lifts them up spiritually. Sai Baba was such a Sage or Sad-Guru. Though He acted as a Fakir (mendicant), He was always engrossed in the Self. He always loved all beings in whom He saw God or Divinity. By pleasures He was not elated. He was not depressed by misfortunes. A king and a pauper were the same to Him. He, whose glance would turn a beggar into a king, used to beg His food from door to door in Shirdi, and let us now see how He did it.
Bow to Shri Sai -- Peace be to all

Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok

வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 8 தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்

என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.

“ஓம் சாயி நமோ நமோ 
ஸ்ரீ சாயி நமோ நமோ 
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH 
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...