Followers

Thursday, April 16, 2020

மகிழ்ச்சி ராஜாங்கம் செய்யட்டும்!
என்றும் மகிழ்ச்சி
இதுவே மந்திரம்!
மழை பொழிகிறதா
வெயில் காய்கிறதா
வெறுக்க வேண்டாம்
குடை பிடிப்போம்
குதூகலமாய் செல்வோம்!
சேறு அடித்துவிட்டதா...
நீரிருக்கு
தூய்மையாக்க!
இழப்பா...
அழ வேண்டாம்
ஈட்டிக் கொள்ளலாம்!
நோயா...
நூதன மருந்துகள்
வேதனை போக்கும்!
கவலை நுழைகிறதா...
மனதின் வாசலை
மாற்றி அமைப்போம்!
கண்ணீர் திவலையா...
கண் ஒளியில்
காய வைத்திடுவோம்!
புள்ளிபோன்ற கவலையையே
பூதாகரமாக்கும்
உள்ளம் தவிர்ப்போம்!
சிறுதானிய மகிழ்ச்சியிலேயே
குறுமுகை விண்மீன்
குளிர் ஒளியை ரசிப்போம்!
ஏற முடியாதவனுக்கே
அடிவாரத்தில்
ஆயிரம் துயரங்கள்!
துயரத்தின்
உயரத்தில்
துள்ளும் மகிழ்ச்சி
துரத்திப் பிடிப்போம்!
வானம்
நிலவொளியை
மண்ணுக்கு அனுப்புகிறது
பதிலுக்கு நாம்
பரவச மனங்களைப்
பறக்க விடுவோம்!
பறக்கும்
திசையெங்கும்
இசை பரப்பும்
பறவை போல்
நாம்
வாசம் செய்யும்
இடமெங்கும்
மகிழ்ச்சி
ராஜாங்கம் செய்யட்டும்!
.
நன்றி : கே.ஜி.ராஜேந்திரபாபு, சென்னை.
அறிஞர் அண்ணாவின் நாட்குறிப்பு.
மாஜிஸ்திரேட், 'நாலு மாதம்' என்றார். 'நாலு மாதம்' என்று, லேடி டாக்டர் கூறுவது கேட்டு, மகிழும், ஆரணங்கு போலானேன். கடந்த,
1968-ல், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்தது. என் மீது, குற்றம் புரியும்படி தூண்டி விடுதல் மற்றும் உடந்தையாக இருத்தல், எனும் குற்றங்களுக்காக, வழக்கு நடைபெற்றது. அன்று, சென்னை கோர்ட்டில், 'நாலு மாதம் சிறை தண்டனை' என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், 'கொள்கைக்காக கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம், இவனுக்கு உண்டு என்று, இயக்கம் நினைக்கும்படி, நல்ல தீர்ப்பு அளித்து விட்டனர்.
பரீட்சையிலேயே தேறி விட்டோம் என்று எண்ணி, விவரிக்க இயலாத மகிழ்ச்சி என்னுள் ஏற்பட்டது. ஆனால், மகிழ்ச்சியை தொடர்ந்து, அனுபவிக்க முடியவில்லை; காரணம், வீட்டை விட்டு இந்தக் கூண்டுக்குள்ளே வந்து விட்டோம் என்ற கவலையில்லை; போட்டுக் கொள்ள, மூக்குப்பொடி இல்லை! என் முதல் சிறை அனுபவம், மூக்குப் பொடிக்காக அவஸ்தை பட வைத்தது...
— 'தம்பிக்கு கடிதங்கள்' நூலில் அண்ணாதுரை.
மனம் பாபாவைப்பற்றியே சிந்திக்கும்
மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது,ஆலோசிப்பது.அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது.புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப்பற்றியே சிந்திக்கும்;பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் பாபாவைப்பற்றியே சிந்திக்கும்.
எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள்
மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு நம்பிக்கையுடன் சாயியை வழிபட்டால்,நிச்சயம் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும்.கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள்.அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.
எதற்காக பயப்படுகிறாய்
எல்லா திசைகளிலும் நான் உன்னை சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்?நீ எனது பிடியிலேயே இருக்கிறாய்.நானே உனது தந்தை[பாதுகாவலன்].உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன்.வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்?உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார்.
ஷீரடி சாய்பாபா.
இனிய காலை வணக்கம்
அன்பின் தோழமைகளே!!!
அன்புடன்
Vickna Sai
=======================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...