Followers

Sunday, March 8, 2020

Image may contain: 1 person, flower and text

Let things happen as they will. Our good life's only in meditating on Him.

''' நடப்பது நடக்கட்டும் வாழ்வில் எப்போதும்இறைவனைத் தியானிப்பாயாக, நான்ஃ 'என்னுடையது, என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே. இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி; இதனுடைய பிரமாணம் பலரால் உணரப்பட்டது.

'''நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே.ஃஃ

இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி; இதனுடைய பிரமாணம் பலரால் உணரப்பட்டது. வாழ்நாள் முழுவதும் சிர்டீயை விட்டு எங்கும் செல்லாமலேயே. பக்தர்களுக்கு அவர் எங்கும். எதிலும் - ஜனக்கூட்டம் நிறைந்த இடங்களிலும் ஜனநடமாட்டமே இல்லாத வனங்களிலும் - காட்சியளித்தார்.

நினைத்த மாத்திரத்தில். அவர் சிலருக்கு மச்சிந்தர்கட்டிலும் பலருக்கு கோல்ஹாபூர். ஸோலாபூர். இராமேச்வரம் போன்ற நகரங்களிலும் காட்சியளித்தார்.

சிலருக்குத் தாம் எப்பொழுதும் இருக்கும் உருவத்திலும் உடையிலும் காட்சியளித்தார். மற்றவர்களுக்குப் பக¬லோ. இரவிலோ. விழித்திருந்தபோதோ. கனவிலோ. அவர்களைத் திருப்திசெய்யும் வகையில் தரிசனம் அளித்தார்.

இம்மாதிரியான அனுபவங்கள் ஒன்றில்லை. இரண்டில்லைõ ஓ. நான் எத்தனையைச் சொல்லி வர்ணிப்பேன்? பாபா சிர்டீயில் வசித்தாலும் எவரும் அறியாதவாறு எங்கெங்கோ சென்றுவந்தார்.
====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...