''மற்றவர்களுடைய
நைவேத்தியத்தைத் தள்ளிவைத்துவிடுகிறீர். சிலசமயங்களில் வெள்ளித்தட்டுகளையும்
விசிறியடித்துவிடுகிறீர். இந்தப் பெண்மணியின் (காபர்டேவின் மனைவியின்) நைவேத்தியம்
வந்தவுடனே உற்சாகமாக எழுந்து உணவுகொள்ள ஆரம்பிக்கிறீர். உண்மையில் இது ஒரு விநோதம்õ--
''ஓ தேவாõ இந்தப்
பெண்மணியின் உணவுமட்டும் எப்படி அவ்வளவு சுவை மிகுந்ததாக அமைகிறது என்பது
எங்களுக்கெல்லாம் விளங்காத மர்மமாக இருக்கிறது. இதென்ன நீர் செய்யும் தில்லுமுல்லு
வேலை? ஏன் இவ்வாறு
விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கிறீர்?ஃஃ பாபா சொன்னார், ''ஓ சாமாõ இந்த உணவு
எவ்வளவு அபூர்வமானது என்பதை நான் எவ்வாறு விளக்குவேன்? முற்பிறவியில் இப் பெண்மணி ஒரு வியாபாரியின் பசுவாக இருந்தாள்.
நல்ல ஊட்டமளிக்கப்பட்டு நிறைய பால் கொடுத்தாள்.--
''பிறகு அவள் எங்கோ காணாமற்போய் ஒரு விவசாயியின்
குடும்பத்தில் பிறந்தாள். அடுத்த ஜன்மத்தில் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்து ஒரு
வைசியனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.--
''இந்த ஜன்மத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில்
பிறந்திருக்கிறாள். பல காலத்திற்குப் பிறகு அவளை நான் கண்டேன். மிகுந்த
பிரேமையுடன் அளிக்கப்பட்ட இந்த உணவில் இரண்டு கவளமாவது என்னை நிம்மதியாகவும்
மகிழ்ச்சியுடனும் சாப்பிட விடுõஃஃ
சாயியின்
சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை.
அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;......................................
ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும்
அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன்
என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba
Spreading the
life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai
removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you
can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see
Sai doesn't mean you stop believing.
Sai has perfect
timing; never early, never late. It takes a little patience and it takes a lot
of faith but it's worth the wait. .......... Think positive and positive things
will happen.................
வேண்டத் தக்கது
அறிவோய் நீ,
வேண்ட முழுவதும்
தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப்
பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது
அருள் செய்தாய்,
யானும் அதுவே
வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு
ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன்
விருப்பு அன்றே!.....
Who so ever puts
his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and
miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb
the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து
அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம்
செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப்
பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும்
எப்போதும் க்ஷேமம்
உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின்
பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை
பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது
சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான
ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted
us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
இனிய சுபகுருதின
வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below
for English version. Tq
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர்
மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 27
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
மாதவராவை விவாதம்
செய்யவைத்தது ஸாயீயின் சுத்த போதனைமுறைக்கு ஒரு விவரணம். பரமானந்தம் நிறைந்த
நகைச்சுவையே விவாதமேதுமில்லாத சுகத்தை அளித்ததுõ
131 அதுபோலவே, பிரம்ம வித்தையை
(இறைவனை அறியும் கல்வி) அப்பியாசம் செய்யும் பக்தர்களிடம் பாபாவுக்கு அதிகப்
பிரீதி. தக்க சமயத்தில் இதை எவ்விதமாகத் தெளிவாக நடைமுறையில் செய்துகாட்டினார்
என்று பாருங்கள்.
132 ஒருசமயம் ஜோக்(எ)குக்குத் தபால் மார்க்கத்தில் சிர்டீ தபால்
நிலையத்திற்கு ஒரு பார்ஸல் வந்தது. ஜோக்(எ) அதைப் பெற்றுக்கொள்வதற்காக உடனே தபால்
நிலையத்திற்குச் சென்றார்.
133 பிரித்துப் பார்த்தபோது அது பாலகங்காதர திலகர் எழுதிய 'கீதாரஹஸ்யம்ஃ (பகவத் கீதைக்குத் திலகர் எழுதிய விரிவுரை)
புத்தகமாக இருந்தது. பார்ஸலைக் கையில் இடுக்கிக்கொண்டவாறு அவர் உடனே
தரிசனத்திற்காக மசூதிக்கு வந்தார்.
134 பாபாவின் பாதங்களில் நமஸ்காரம் செய்தபோது, பார்ஸல் பாபாவின் பாதங்களில் விழுந்தது. பாபா அப்பொழுது
கேட்டார், ''என்ன பாபுஸாஹேப்õ இது என்ன?ஃஃ
135 பார்ஸல் பாபாவின் எதிரில் மறுபடியும் பிரிக்கப்பட்டது. ஜோக், உள்ளே என்ன இருந்ததென்பதையும் சொன்னார். பிரிக்கப்பட்ட
பார்ஸல், புத்தகத்தோடு
பாபாவிடம் சேர்ப்பிக்கப்பட்டது. பாபா அதைப் பார்த்தார்.
136 பாபா புத்தகத்தைக் கையிலெடுத்து பக்கங்களை மேலோட்டமாகப்
புரட்டினார். பாக்கெட்டிருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மேல் மகிழ்ச்சியுடன்
வைத்தார்.
137 புத்தகத்தை ரூபாயுடன் சேர்த்து, ''இதை முதருந்து கடைசிவரை படியும்; மங்களமடைவீர்ஃஃ என்று ஆசி கூறிக்கொண்டே ஜோக்கின்
மேல்துண்டில் வைத்தார்.
138 பாபா இவ்வாறு அநுக்கிரஹம் செய்த கதைகள் எண்ணற்றவை. இப்
புத்தகம் மிகப் பெரியதாகிவிடும் என்னும் காரணத்திற்காகவே சில கதைகளை மட்டும்
சுருக்கமாகச் சொல்யிருக்கிறேன்.
139 ஒரு சமயம் தாதாஸாஹேப் காபர்டே சிர்டீக்குக் குடும்பத்துடன்
வந்தார். பாபாவின் அன்பையும் ஆதரவையும் அனுபவித்துக்கொண்டு சிலகாலம் அவர்
சிர்டீயில் வாசம் செய்யும்படி நேர்ந்தது.
140 காபர்டே சாமானியர் அல்லர்; அவர் ஒரு பெருங்குடிமகன்; பேரறிஞரும் ஆவார். ஆனால், ஸாயீயின் சன்னிதியில் பயபக்தியுடன் கைகூப்பித் தலைவணங்கி
நிற்பார்.
141 ஆங்கிலத்திலும் சிறந்த பாண்டித்தியம் படைத்த காபர்டே, சட்டசபையில், கேட்பவர்கள்
மனத்தில் தாக்கத்தையும் சமூகத்தில் நல்விளைவுகளையும் ஏற்படுத்தும் சொற்பொழிவாளர்
எனக் கீர்த்தி பெற்றவர். ஆயினும் ஸாயீயின் சன்னிதியில் அவர் பேச்சற்று மௌனமாக
இருப்பார்.
142 பாபாவுக்கு எத்தனையோ பக்தர்கள் இருந்தனர். ஆனாலும், காபர்டே, புட்டி, நூல்கர் இம்மூவரைத் தவிர மற்றவர்கள் எவரும் பாபாவின்
சன்னிதியில் மௌனத்தைக் கடைப்பிடித்தார்களல்லர்.
143 மற்றவர்கள் அனைவரும் பாபாவிடம் உரையாடினர். சிலர் பயமோ
பக்தியோ இன்றி வாதாடவும் செய்தனர். இவர்கள் மூவர் மாத்திரம் சன்னிதியில்
மௌனவிரதமாக இருந்தனர்.
144 பேச்சில் மாத்திரமின்றி நடத்தையிலும் இவர்கள் மூவரும்
செம்மையாக விளங்கினர். பாபாவின் சன்னிதியில் எப்பொழுதும் தலைதாழ்ந்தவாறே இருப்பர்.
பாபாவின் திருவாய்மொழியை இவர்கள் செவிமடுக்கும்போது காட்டிய அடக்கமும் பணிவும்
பயபக்தியும் விவரணத்திற்கு அப்பாற்பட்டவை.
145 வித்தியாரண்யர் ஸமஸ்கிருதத்தில் இயற்றிய பஞ்சதசியை (அத்வைத
சித்தாந்த நூல்) காபர்டேவிடமிருந்து பாடம் கேட்பது ஒரு பெருமையாகவும் கௌரவமாகவும்
கருதப்பட்டது. அத்தகைய புலமை வாய்ந்த காபர்டே, மசூதிக்கு வந்துவிட்டால் வாயைத் திறக்கமாட்டார்õ
146 சப்த பிரம்மத்தின் (வேதத்தின்) ஒளி, சுத்த பிரம்மத்தின் பேரொளியின் முன்னிலையில் மங்கிவிடும்.
பர பிரம்ம மூர்த்தியான ஸாயீயின் எதிரில் வித்தைகள் அனைத்தும் தலைவணங்கி நிற்கும்.
147 சிர்டீயில் காபர்டே நான்கு மாதங்களும் அவர் மனைவி ஏழு
மாதங்களும் வாசம் செய்தனர். ஒவ்வொரு நாளையும் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன்
கழித்தனர்.
148 காபர்டேவின் மனைவி ஸாயீபாதங்களின்மீது அசைக்கமுடியாத
நம்பிக்கையும் அத்தியந்த பிரேமையும் உடையவராக இருந்தார். தினமும் மசூதிக்குத்
தம்முடைய கைகளாலேயே ஏந்தியவாறு நைவேத்தியம் கொண்டுவருவார்.
149 இப்பெண்மணி, தம்முடைய
நைவேத்தியத்தை பாபா ஏற்றுக்கொள்ளும்வரை உணவைக் கையால் தொடமாட்டார். ஸாயீ மஹராஜ்
உணவேற்றுக்கொண்ட பிறகே, தாம்
உண்ணச்செல்வார்.
150 இவ்வாறிருக்கையில் ஒருநாள் நல்லகாலம் பிறந்தது.
பக்தர்களின்பால் தாய்போல் அன்புகாட்டும் ஸாயீ, இப் பெண்மணியின் சிரத்தையையும் பக்தியையும் கண்டு
மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஒளிமயமான ஆன்மீக மார்க்கம் காட்டினார்.
151 ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி; ஆனால், பாபாவின் வழியோ
அலாதியானது. கேக்கும் சிரிப்பிற்குமிடையே செய்யப்பட்டாலும், அநுக்கிரஹம் பக்தரின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.
152 ஒருமுறை காபர்டேவின் மனைவி ஒரு தட்டில் பலவகையான
சுவைமிகுந்த உணவுப் பொருள்களையும் இனிப்புகளையும் பாபாவுக்கு நைவேத்தியமாகக்
கொண்டுவந்தார். சாதம், பருப்பு, பூரி, ரவாகேசரி, ஸாஞ்ஜா, பாயஸம், அப்பளம், பூசணி வடகம், கோசுமல் ஆகிய பண்டங்கள் அந்தத் தட்டில் இருந்தன.
153 அந்தத் தட்டு வந்தவுடனே பாபா தம் கப்னியின் கைகளை
மடித்துவிட்டுக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கையிருந்து எழுந்துவிட்டார்.
154 சாப்பிடும் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டார். அந்தத்
தட்டைத் தம்மெதிரில் எடுத்து வைத்துக்கொண்டார். தட்டிருந்த உணவைச் சுவைக்கும்
ஆர்வத்தில் மூடியை எடுத்து அப்பால் வைத்தார்.
155 சுவை மிகுந்ததாக எத்தனையோ நைவேத்தியங்கள் தினமும் வரும்.
அவையெல்லாம் பாபாவின் கவனிப்பின்றி அங்கேயே நெடுநேரம் கிடக்கும். இந்தத்
தட்டின்மீது மாத்திரம் ஏன் இவ்வளவு ஆர்வம்?
156 இது சாதாரணர்களின் நடத்தையன்றோõ ஒரு ஞானி ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்? மாதவராவ் சட்டென்று ஸமர்த்த ஸாயீயைக் கேட்டார், ''பாபா, ஏன் இவ்வாறு
பாரபட்சம் காட்டுகிறீர்?--
157 ''மற்றவர்களுடைய நைவேத்தியத்தைத் தள்ளிவைத்துவிடுகிறீர்.
சிலசமயங்களில் வெள்ளித்தட்டுகளையும் விசிறியடித்துவிடுகிறீர். இந்தப் பெண்மணியின்
(காபர்டேவின் மனைவியின்) நைவேத்தியம் வந்தவுடனே உற்சாகமாக எழுந்து உணவுகொள்ள
ஆரம்பிக்கிறீர். உண்மையில் இது ஒரு விநோதம்õ--
158 ''ஓ தேவாõ இந்தப்
பெண்மணியின் உணவுமட்டும் எப்படி அவ்வளவு சுவை மிகுந்ததாக அமைகிறது என்பது
எங்களுக்கெல்லாம் விளங்காத மர்மமாக இருக்கிறது. இதென்ன நீர் செய்யும் தில்லுமுல்லு
வேலை? ஏன் இவ்வாறு
விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கிறீர்?ஃஃ
159 பாபா சொன்னார், ''ஓ சாமாõ இந்த உணவு
எவ்வளவு அபூர்வமானது என்பதை நான் எவ்வாறு விளக்குவேன்? முற்பிறவியில் இப் பெண்மணி ஒரு வியாபாரியின் பசுவாக
இருந்தாள். நல்ல ஊட்டமளிக்கப்பட்டு நிறைய பால் கொடுத்தாள்.--
160 ''பிறகு அவள் எங்கோ காணாமற்போய் ஒரு விவசாயியின்
குடும்பத்தில் பிறந்தாள். அடுத்த ஜன்மத்தில் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்து ஒரு
வைசியனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.--
161 ''இந்த ஜன்மத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில்
பிறந்திருக்கிறாள். பல காலத்திற்குப் பிறகு அவளை நான் கண்டேன். மிகுந்த
பிரேமையுடன் அளிக்கப்பட்ட இந்த உணவில் இரண்டு கவளமாவது என்னை நிம்மதியாகவும்
மகிழ்ச்சியுடனும் சாப்பிட விடுõஃஃ
162 இவ்வாறு பதிலளித்தபின், பாபா தாம் திருப்தியடையும்வரை உணவுண்டார். கைகளையும்
வாயையும் அலம்பிக்கொண்டபின், வயிறு
நிரம்பியதன் அறிகுறியாக ஏப்பம் விட்டார். பிறகு அவர் தம்முடைய இருக்கைக்குச்
சென்று அமர்ந்துகொண்டார். ................
=================================================================
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும்
சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below
for English version. Tq
CHAPTER 27
*
*
*
============================================
Vitthal-Vision
One day, while
Kakasaheb Dixit was in mediation after his morning bath in his Wada at Shirdi
he saw a vision of Vitthal. When he went to see Baba afterwards, Baba asked him
- "Did vitthal Patil come? did you not see Him? He is very elusive, hold
Him fast, otherwise He will give you the slip and run away". Then at noon
a certain hawker came there, with 20 or 25 pictures of Vitthal of Pandharpur
for sale. Mr. Dixit was surprised to see that the form of Vithal he saw in his
mediation exactly tallied with that in the picture and he was also reminded of
Baba's words. He therefore, bought one picture most willingly and kept it in
his shrine for worship.
Geeta-Rahasya
Baba always
loved those who studied Brahma-vidya (metaphysics) and encouraged them. To give
an instance - Once Bapusaheb Jog received a post-parcel. It contained a copy of
Geeta-Rahasya by Lokamanya Tilak. Taking it under his armpit he came to the
Masjid and prostrated himself before Baba, when the parcel fell at Baba's Feet.
Baba enquired what it was. It was opened then and there and the book was placed
in Baba's hand. He turned some pages here and there for a few minutes and took
out a rupee from His pocket placed it on the book and handed the same with the
rupee to Jog and said to him - "Read this completely and you will be
benefited".
Mr. and Mrs.
Khaparde
Let us close
this Chapter with a description of the Khapardes. Once Dadasaheb Khaparde came
with his family and lived in Shirdi for some months. (The diary of his stay has
been published in English in the Shri Sai Leela Magazine first Volume.)
Dadasaheb was not an ordinary man. He was the richest and the most famous
advocate of Amraoti (Berar) and was a member of the Council of State, Delhi. He
was very intelligent and a very good speaker. Still he dared not open his mouth
before Baba. Most devotees spoke and argued with Baba off and on, but only
three, viz. Khaparde, Noolkar and Booty kept always silent. They were meek,
modest, humble and goodnatured. Dadasaheb, who was able to expound Panchadashi
(A well-known Sanskrit treatise on the Adwaita Philosophy by the famous
Vidyaranya) to others, said nothing or uttered no word when he came to the
Masjid before Baba. Really a man, however learned he may be even in Vedas,
fades away before one, who was realised Brahman and become one with it.
Learning cannot shine before Self-reaisation. Dadasaheb stayed for four months,
but Mrs. Khaparde stayed for seven. Both were highly pleased with their Shirdi
stay. Mrs. Khaparde was faithful and devout, and loved Baba deeply. Every noon
she brought naivedya herself to the Masjid, and after it was accepted by Baba,
she used to
return and take her meals. Seeing her steady and firm devotion, Baba wanted to
exhibit it to others. One noon she brought a dish containing Sanza
(wheat-pudding), purees, rice, soup, and kheer (sweet rice) and other sundry
articles to the Masjid. Baba, who usually waited for hours, got up at once,
went up to His dining seat and removing the outer covering from the dish began
to partake of the things zealously.
Shama then asked
Him - "Why this partiality? You throw away dishes of others and do not
care to look at them, but this You draw to You earnestly and do justice to it.
Why is the dish of this woman so sweet? This is a problem to us."
Baba then
explained - "This food is really extraordinary. In former birth this lady
was a merchant's fat cow yielding much milk. Then she disappeared and took
birth in a gardener's family, then in a Kshatriya family, and married a
merchant. Then she was born in a Brahmin family. I saw her after a very long
time, let Me take some sweet morsels of love from her dish." Saying this,
Baba did full justice to her dish, washed his mouth and hands, gave out some
belches as a mark of satisfaction, and resumed His seat.
===============================================
Bow to Shri Sai
-- Peace be to all
To be
continued............
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும்
சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ
நமோ
ஜெய ஜெய சாயி நமோ
நமோ
சற்குரு சாயி நமோ
நமோ”.
"I say
things here. There they happen."
=
=
OM SAI NAMO
NAMAH
SHREE SAI NAMO
NAMAH
JAI JAI SAI NAMO
NAMAH
SADGURU SAI NAMO
NAMAH
Sai
Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai
- Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்
தெளிவு குருவின்
திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு
சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே
சாயிநாதாய
அமிர்த வாக்ய
வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ
நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா
சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா
சரணம்! சரணம்!
அற்புத ஒளியே
சரணம்! சரணம்!
அன்பே அருளே
சரணம்! சரணம்!
நித்திய சாயி
சரணம்! சரணம்!
நிர்மல வடிவே
சரணம்! சரணம்!
பொற்பதம்
பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா
சரணம்! சரணம்!
Twameva mata cha
pita twameva
Twameva
bandhushcha sakha twameva
Twameva vidya
dravinam twameva
Twameva sarvam
mama deva deva
Twameva sarvam
Sai deva deva....
You alone are my
mother and my father,
You alone are my
friend and my beloved companion,
You alone are my
knowledge and my wealth,
O Supreme Lord,
you alone are everything for me.
Sometimes Sai
removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you
can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see
Sai doesn't mean you stop believing.
Sai has perfect
timing; never early, never late. It takes a little patience and it takes a lot
of faith but it's worth the wait.
Think positive
and positive things will happen.................
Saying sorry
doesn't solve the problem. It's what you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
==============================
No comments:
Post a Comment