தாயாய், தாரமாய், தங்கையாய்,அக்காவாய் தரணியில், ஏன் முகநூலிலும்
கூட அன்பின் மறு
உருவாய் வாழும் அன்புத் தெய்வங்களுக்கு அன்பு நன்றியுடன் வாழ்த்துவோம்...வாழ்க
வளமுடன் நலமுடன் நாநிலம் செழிக்க வாழ்க பல்லாண்டு
பல்லாண்டு.....வாழியவே...........
ஆண்களுக்கு
மட்டுமே தெரியும்… பெண்கள் மீதான
பிரியம் எல்லாம் காதல் மட்டுமே இல்லையென்று!
இந்த கட்டுரைக்கு
பின்னால் உங்களுக்கு தெரிஞ்ச பல பெண்கள் இருக்கலாம் என்பதுதான் உண்மை. இந்த
கட்டுரையை அன்புள்ள அம்மா, சகோதரி, தோழி, காதலி என எப்படி
வேண்டுமானாலும் ஆரம்பித்து கொள்ளுங்கள். கட்டாயம் இந்த அழகான ராட்சசி உங்க
வாழ்க்கைல கண்டிப்பா இருப்பா…!
நாம என்ன
செய்தாலும், அது சரி என
நம்புவதற்கு ஒரு தைரியம் வேண்டும். எவ்வளவு கோபப்பட்டாலும் பேசாமல் போனாலும், அடுத்த நாள் காலை அலைபேசியில் ஒரு குரல் ‘சாப்ட்டியா…?’ என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கும். அதுதான் அம்மா.
வேலைக்காக
வெளியூரில் வசிப்பவர்களில் பல பேருக்கு தெரியும், செல்போன் சார்ஜ் இல்லாமல் போன் செய்ய மறந்தாலோ, தியேட்டர் சினிமாக்களில் மூழ்கி இருக்கும் போது அழைப்பை
ஏற்க மறுத்தாலோ அடுத்த நிமிடம் பதறிப்போய் எங்கு இருக்கிறானோ என பதறும் அம்மாவை.
நமக்கே தெரியும்
நாம சொதப்புவோம்னு. ஆனால் இந்த அம்மாக்கள் மட்டும், ‘நீ இருக்கும்போது வேற யாரு ஜெயிப்பாங்க?’னு சொல்றதுதான் நம்மளை ஓட வைக்கும் மந்திரம். அதெல்லாம் ‘ஆடி போய் ஆவணி வந்தா என் மகன் டாப்பா வருவான்’னு சொல்லுற அம்மாக்கள்தான் வேலையில்லா பட்டதாரிகளை விஐபி
ஆக்குறாங்க.
எல்லாரோட
லைஃப்லயும் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி கேரக்டர் இருக்கும். அது அவங்களோட அக்காவோ, தங்கச்சியோ, அத்தை/மாமன்
பொண்ணாவோ இருக்கும். அடி வாங்குறது ஆரம்பிச்சு, நம்ம மொபைல்ல எந்த பொண்ணு போன் நம்பர் இருந்தாலும் அந்த
பொண்ண நம்மளோட சேர்த்து வைச்சு கலாய்க்கற வரைக்கும் எல்லாமே அவங்களால மட்டும்தான்
முடியும்.boy-claire-colburn
எல்லா அண்ணன்
தம்பிகளுமே அவுங்க அக்கா/தங்கச்சிக்கு மரப்பாச்சி பொம்மைதான். ஹேர் ஸ்டைலிஸ்ட், பியூட்டிசியன்னு பல வேலைகள டெஸ்ட்டிங்கா நம்மள வைச்சு
சோதிப்பாங்க அவங்க. அம்மா திட்டினா… அப்பா அடிச்சா
அவுங்க முன்னாடி எதுவும் பேசாம தனியா கூப்பிட்டு அட்வைஸ் பண்ணும்போதும், ’டேய் நா வேற வீட்டுக்கு கல்யாணம் ஆகி போகப்போறேன்’னு சொல்லும்போதும் ஆட்டோமேட்டிக்கா கண்ணு வேர்க்கும்.
அடுத்து ரொம்ப
முக்கியமான கேரக்டர். அம்மா, தங்கச்சி தாண்டி
நம்மளை நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கற ஒரு கேரக்டர். ’மச்சான்… அவ உன்னதான்டா
பாக்குறா’னு சொல்ல நிறைய
பசங்க இருப்பாங்க. ’ஏய் அவன் நல்லவன்… அவன் உனக்கு செட் ஆவான்’னு நம்ம சார்பா பேச ஒரு பொண்ணு வேணும். அந்த மாதிரி
ஃப்ரெண்ட்தான் இந்த கேரக்டர்.
ஆரம்பத்துல நிறைய
பேர் கலாய்ப்பாங்க, சேர்த்து வைச்சு
பேசுவாங்க. இதெல்லாம் தாண்டி ’நீ என் ஃப்ரெண்டு… மத்தவங்க சொல்றதுக்கு நா ஏன் ஃபீல் பண்ணனும்’னு சொல்ற இந்த கேரக்டர்தான் பல நேரங்கள்ல நம்மளோட ஸ்ட்ரெஸ்
பஸ்டர். நம்மளோட பல மாற்றங்களுக்கு காரணமா இருக்கறதும் இந்த ஃப்ரெண்டுதான்.
மொக்கையா ட்ரெஸ் பண்றங்கறதுல ஆரம்பிச்சு, ’நீ சைட் அடிக்குற பொண்ணு அழகா இருக்குனு என்கிட்டயே சொல்வ… அது செம கடுப்பா இருக்கும்’னு பொசஸிவ்வா பொங்குற வரைக்கும்னு எல்லாமே…. க்யூட்டி நாட்டியா பண்ணுவாங்க!
வாழ்க்கைல காபியே
குடிக்காதவனை நாலு மணி நேரம் காஃபி ஷாப்ல காத்திருக்க வைக்க இந்தப் பொண்ணாலதான்
முடியும். ஞாயித்துக்கிழமை 12 மணி வரைக்கும் தூங்குறவனை காலை 8 மணி ஷோவுக்கு கெளம்பி ஓட வைக்க அவளாலதான் முடியும்.
ராத்திரி 10-11 மணிக்குலாம்
குட்-நைட் சொல்லி பழக்கப்பட்டவனை அர்த்த ஜாமம் 2 மணிக்கு ’குட் நைட்
சொல்றதா…
இல்ல குட் மார்னிங்
சொல்றதா’னு யோசிக்க வைக்க
அந்தப் பொண்ணாலதான் முடியும். ஒரு நாள்கூட மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்க வைக்கிற
இந்த பொண்ணுக்கு காதலி, பெட்டர் ஹாஃப்னு
என்ன பேர் வேணும்னாலும் வைச்சுக்கலாம்.
மகள்களைப் பெற்ற
அப்பாக்களுக்குத்தான் தெரியும்… மகள்கள்தான்
அவர்களுக்கு எல்லாமே என்று. எல்லா வீட்லயும் பையன் அம்மா செல்லமா இருப்பான்…ஆனா பொண்ணுங்க, அப்பா செல்லமா
மட்டுமே இருக்கும். தனக்கு ஒரு பையன புடிச்சிருக்குங்கறது ஆரம்பிச்சு, ‘அப்பா எனக்கு இப்ப இந்த கல்யாணம் வேணாம்ப்பா, நா படிக்க போறேன்’ங்ற வரைக்கும்
சொல்லுற எல்லாத்தையும், இல்லனு சொல்லாம
செய்ய வைக்க இந்த மகள்களுக்குதான் தெரியும்.
இவுங்க
யார்கிட்டயுமே நாம ரொம்ப அன்பாவோ இல்ல கோவப்படாமலோ பேசினதே கிடையாது. நம்மளோட
எல்லா எமோஷன்களும் இவங்களுக்கு நல்லா தெரியும். இவங்கள சில சமயம்
காயப்படுத்தியிருக்கோம், திட்டி
இருக்கோம். ஆனா அதெல்லாம் எதையுமே பொருட்படுத்தாம, மறுநாள் காலைல ‘என்னப்பா
சாப்ட்டியா…?னு கேக்குற அம்மா, “டேய் கொட்டிக்கிட்டியா…?”னு கேக்குற தங்கச்சி, “சாப்பாடு இருக்கு… சாப்பிட போலாமா?” னு கேக்குற ஃப்ரெண்ட், “டேய் என்ன விட்டுட்டு சாப்பிட்ட கொன்றுவேன்…”னு மிரட்டுற காதலி, ” அப்பா நீ சாப்பிடலனா நா சாப்பிட மாட்டே”ன்னு அடம்பிடிக்குற பொண்ணு….இப்படி எல்லாரும் நம்ம மேல வைச்சிருக்கறது ஒரே மாதிரியான
பாசம். இவுங்க இல்லனா நாம இல்லை….இவங்களை எங்க
வேணும்னாலும் பாக்கலாம்…
இப்பகூட இந்த
கட்டுரைய படிச்சுட்டு, ’ஏய் இந்த லைன்ல
இருக்கறது நான்தானே’ கேக்குற
எல்லாருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!
..
எல்லோர்க்கும்
என்றும் அன்பு வந்தனங்கள் சகோ தோழமை களே..........மகளிர் தின வாழ்த்துகளுடன் இனிய வணக்கங்கள்..
படித்தேன் பகிர்ந்தேன்..........
=============================
No comments:
Post a Comment