Followers

Sunday, March 22, 2020

Greed and Brahma are poles apart; they are eternally opposed to each other.
ஆவேஷமும் ஆன்மீகமும் இரு துருவங்கள், பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்துவிட முடியாது. பாக்கியசா¬லிக்கு நல்லநேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக்கொள்கிறது. எவன் பற்றறுத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகிவிடுவதைப்பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன்.
எவர் பாவச்செயல்களை விலக்கிவிட்டவரோ, எவர் குருவின் பாதங்களில் விநயத்துடன் பணிந்துகிடக்கிறாரோ, எவர் செயல்களின் பலனைத் துறந்துவிட்டவரோ, அவருக்குத்தான் ஆத்மஞானம் கிடைக்கும்.
''ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப் போகுமுன் ஞானம்பெற்றவன், மனிதவாழ்வின் குறிக்கோளாகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு-இறப்பு என்னும் சுழல் அவனை விடாது துரத்துகிறது.--
''பிரம்மத்தை அறியுமுன்னரே இந்த உடல் வீழ்ந்துவிட்டால், ஸம்ஸார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்துசெல்லும். மறுபடியும் பிறவியெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். -- பிரம்மத்தை நாடுபவர், பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனத்தையும் (பிரம்மத்திற்கு) ஸமர்ப்பணம் செய்துவிட வேண்டும். —

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...