2020 இல் கொரோனா தாக்கும் : 40 வருடத்துக்கு முன்னரேயே எழுதிய தீர்க்கதரிசி எழுத்தாளர்...........
தற்போது உலகை அச்சுறுத்திவரும் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பில் நம்ப முடியாத பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நோயை பற்றி 40 வருடத்துக்கு முன்னரேயே ஒருவர் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நோயை பற்றி ஒரு எழுத்தாளர் 1981-ல் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.. இவரது பெயர் டீன் கூன்ட்ஸ்.. அந்த புத்தகத்தின் பெயர் த ஐஸ் ஒப் டாக்னஸ் (The eyes of Darkness)-.. இது ஒரு திரில்லர் கதை!
கதை சுருக்கம்
கிறிஸ்டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி, ஒரு முகாமுக்கு செல்கிறார்.. அங்கு போன ஒரே மாதத்தில் மகன் இறந்துவிடுகிறார்.. இந்த தகவல் கிரிஸ்டினாவுக்கு சொல்லப்படுகிறது... இதை அம்மாவால் தாங்கவே முடியவில்லை... மகனின் இழப்பையும் ஜீரணிக்க முடியவில்லை.. அதனால், ஒரு வருடத்திற்கு பிறகு மகனுக்கு அந்த முகாமில் என்னதான் ஆனது என்று கண்டுபிடிக்க முடிவு செய்கிறார்.
அப்படி முயற்சி செய்யும்போதுதான், தன் மகன் டேனி சாகவில்லை.. உயிருடன் ஒரு இராணுவ முகாமில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்கிறார்.

சீனாவின் வுகானில் ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் போன்ற ஒரு ஆயுதத்தால் டேனி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கிறிஸ்டினாவுக்கு தெரியவருகிறது. இந்த வைரஸ் பற்றி சீன விஞ்ஞானி லீ சென் என்பவர், அமெரிக்க இராணுவத்திடம் சொல்கிறார். அந்த வைரசுக்கு அதாவது ஆயுதமாக கருதப்படும் அந்த வைரஸுக்கு "வுகான் 400" என்று பெயரிடுகிறார்.. இப்படி அந்த பல திருப்பங்களுடன் அந்த கதை செல்கிறது.
இப்போது இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், வுகான் 400 வைரஸ்தான் கொரோனா என்கிறார்கள்.. அந்த கதையில் வுகான் நகரில் தான் இந்த வைரஸ் தொடங்குவதுபோலவே, இப்போதும் இந்த கொரோனா சீனாவின் அதே வுகான் நகரில்தான் தொடங்கி உள்ளது.. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த கொரோன வைரஸ் பற்றி முதல் எச்சரிக்கை விடுத்த டொக்டர் பெயரும் லீ..தான்!
அதேபோன்று பிரபல அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிரவுன் 2008-ல் End of Days என்ற புத்தகம் எழுதியுள்ளார்.. இதில் அவர் ஒரு நோயை பற்றி சொல்கிறார்.
அதாவது "2020-ம் வருடத்தில் நிமோனியா போன்ற ஒரு நோய் வரும்.. அது உலகம் முழுதும் பரவும்.. நுரையீரல்களையும் சுவாச குழாய்களையும் நாசம் செய்து அது பலருக்கு எமனாக முடியும்... எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது.. எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்தும் விடும்" எனத் தெரிவித்துள்ளார்.
========================
courtesy;IBCTAMIL.tq
=========================
No comments:
Post a Comment