Good evening dear friends.
அம்மாவே
தெய்வம் உலகிலே !
பெற்ற
தாய்க்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்பதற்கு ஐயப்பனே உதாரணம். பந்தள
மகாராஜா ராஜசேகரனின் பிள்ளையாக வளர வேண்டும் என்பதற்காக காட்டில் அவதரித்தார்
தர்மசாஸ்தா. அவரை ராஜா கண்டெடுத்த போது, கழுத்தில்
மணி கட்டப்பட்டிருந்ததால் "மணிகண்டன்' என்று
பெயர் என்ற பெயர் பெற்றார். இதற்கு "மணி கட்டப்பட்ட கழுத்தை உடையவன்' எனப்
பொருள். மணிகண்டனின் ஆற்றலைப் பொறுக்க முடியாத அமைச்சர்கள் சிலர் அவன் மேல் பொறாமை
கொண்டனர்.
பிள்ளையில்லாத பந்தள ராஜாவுக்கு மணிகண்டன் வந்த பிறகு ஒரு குழந்தை
பிறந்தது. அந்தக் குழந்தையே அரசாள வேண்டும், மணிகண்டனைக் கொன்று விட வேண்டுமென ராணியிடம் தூபம்
போட்டனர் அந்த அமைச்சர்கள். ராணி முதலில் மறுத்தாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கு இணங்க மனம்
மாறி விட்டாள். தனக்கு தலை வலி போல நடித்து, அரண்மனை வைத்தியரைக் கொண்டு புலிப்பால் கொடுத்தால்தான்
குணமாகுமெனக் கூறி, அதைக்
கொண்டு வர மணிகண்டனை அனுப்பினாள்.
பெற்றாலும், வளர்த்தாலும் அவள் தாயல்லவா! தாயின் குறைதீர்க்க மணிகண்டன்
சற்றும் கலங்காமல் காட்டுக்குச் சென்று புலிகளுடன் வந்தார். பெற்றவள் நமக்காக
செய்யும் தியாகத்தை விட,பெற்றவர்களுக்கு
பிள்ளைகள் செய்யும் தியாகமே உயர்ந்தது என்பதை உலகுக்கு எடுத்துரைத்தார்.
My
dearest friend / friends
Have a happy Sunday!!!
Have a happy Sunday!!!
அன்பான இனிமையான வணக்கம்!!!
வாழ்க வளமுடன் நலமுடன்.
அன்புடன் vicknasai.
வாழ்க வளமுடன் நலமுடன்.
அன்புடன் vicknasai.
==================================
No comments:
Post a Comment