Followers

Tuesday, March 10, 2020


Image may contain: 5 people, shoes and text



Good morning dearest friends.

சோம்பேறி மனிதன்

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி மனிதன் இருந்தானாம்.
எந்த வேலையும் செய்யாமல் தின்பதும்,தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.
வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல்
ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.

அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு.சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.

சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.
எதற்கு?எப்போது வேர்க்குமென்று.
அப்போது அவன் மனை சொன்னாளாம்நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்என்று.
அவனும் தன் துணிகளைத் துவைப்பது,தோட்ட வேலை செய்வது,கடைக்குப் போவது,நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.

ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.
கொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.
ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.

மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம்எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானதுஎன்று.

அதற்கு அவர்உன் வியாதி மருந்தால் தீரவில்லை.சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய்.நான் கொடுத்தது மருந்தேயில்லை.வெறும் துளசி,வெல்லம் கலந்ததுஎன்றாராம்.

அவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.
புது வார்த்தை:சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து.


நீதி:சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.




Kadi jokes...

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது  நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம்
பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......சீனாவுல தான் பிறந்தது.....ஏனெனில்"Anything made in China
has NO GUARANTEE
 & NO WARRANTY".

4) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப்
பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

5) மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..
அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்,
 பால் போடுறவன் பால்காரன்,
அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்..
 ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?




ஆன்மிகம்.

காயமே இது பொய்யடா- வெறும்காற்றடைத்த பையடா!

காயமே இது பொய்யடா- வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா!'

என்று சித்தர் ஒருவர் பாடினார்.

காயம்- இந்த உடல் நிரந்தரமானது என்று நினைத்து, இந்த நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்!

ஆடம்பர ஆடை- அணிகலன்கள், அலங்காரங்கள், தைலப் பூச்சு, சத்தான- சுவையான உணவு, காயகல்பலேகியங்கள்- இப்படியெல்லாம் கவனம் செலுத்தி நிலையற்ற இவ்வுடலை வளர்க்கிறோம்.

இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது?''

"மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே' .

கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. உலகையே ஆள நினைத்தான் அலெக்ஸாண்டர். படை யெடுத்தான்; சமர்புரிந்தான்; பல நாடுகளை வென்றான். தான்வென்ற நாடுகள், சம்பாதித்த செல்வம், அடைந்த கீர்த்தி, மதிப்பு எல்லாவற்றையும் பற்றி ஒருமுறை நினைத்துப் பார்த்தான். "இவற்றால் நாம் அடையப் போகும் பயன்தான் என்ன? நான் இறந்து போகும்போது நம்முடன் இதையெல்லாம் எடுத்துச் செல்லப் போகிறோமா' என்ற தத்துவ உணர்வு அவனுக்குத் தோன்றியது.

அலெக்ஸாண்டரின் இறுதிக் காலம் வந்தது. அவன் மரணப் படுக்கையில் கிடக்கும்போது தன் பிரதம சேனைத் தலைவரை அழைத்துக் கூறினான்:

""நான் மரணமடையும் நேரம் வந்துவிட்டது. நான் இறந்து போனவுடன் என்னை அடக்கம் செய்யத் தயாரிக்கும் சவப்பெட்டியில், எனது இரு கரங்களும் வெளியே நீட்டும் வசதியுள்ளபடி இரு துளைகள் அமைப்பாய்'' என்றார்.

இதைக் கேட்ட படைத்தலைவன் திகைப் புற்று அலெக்ஸாண்டரை நோக்கினான். ""எதற்கென்று யோசிக்கிறாயா? நான் என் வாழ் நாளில் வென்ற நாடுகள், சொத்துகள், அரண்மனைகள், உடைமைகள் எதையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை. வெறும் கைகளுடன்தான் போகிறேன் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த ஏற்பாடு'' என்றான்.

பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்போது என்ன எடுத்துச் செல்லப் போகிறோம்? ஏதுமில்லையே! இதை மகான்கள், சித்த புருஷர்கள் எல்லாம் உணர்த்திச் சென்றுள்ளனர்.

இந்த சரீரம் நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து, பற்றுகளைத் துறந்து, தெய்வ சிந்தனையுடன் வாழ்வோமாக.

 My dearest friend, friends
Have a wonderful morning!!!

அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய  காலை வணக்கம்.!!!
அன்புடன் vicknasai.
=============================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...