யாதுமாகி
நிற்பவள்!.....பெண்கள் தினத்தை அல்ல... பெண்களை கொண்டாடுவோம் இன்று சர்வதேச மகளிர்
தினம்.........................
மகத்தான மகளிர்
பூமிக்கு
துணையாய்
பிறந்தவள் நீ
எந்த சாமிக்கும்
இணையாய்
இருப்பவள் நீ!
உயிர்களை
சுமக்கும்
உன்னதம் நீ
உன்னை நினைத்திட
மறந்தவள் நீ!
உன்னால் மனித
குலம் தழைக்கும்
உன் அமுதால்
பல உயிர்கள்
பிழைக்கும்!
பெண்ணால் உலகம்
பெருமை கொள்ளும்
பெரும் சோதனைகளை
உந்தன்
பொறுமை வெல்லும்!
எல்லா உயிர்களும்
உன்னை வணங்கும்
உன் தாலாட்டு
இசையில்
அமைதி கொள்ளும்!
உலகின் அதிசயம்
நீ தானம்மா
உறவை வளர்ப்பது
பெண் தானம்மா!
உன் காலடி
படும் இடம்
பூ வனமே - உன்
கரம் படும்
பொருள் எல்லாம்
பூ மணமே!
courtesy of Bro
— ரா.வடுகம் சிவகுமார், ஈரோடு.
குழந்தையாய்
மண்ணில் பிறந்து, குடும்பம்
என்னும் அழகிய கூட்டில் பெற்றோர், உற்றாரின்
அன்பில் வளர்ந்து, சாதனைப் பெண்கள்
பலரின் வாழ்க்கையில் பாடம் பயின்று, தானும் அந்த
வரிசையில் முன் நிற்க முயல்கிறாள் பெண். அப்போது பருவம் வந்த பெண்ணுக்கு கல்வியை
விட, உற்ற துணை நல்ல
ஆண் என்று எண்ணிய பெற்றோரின் மனம் மகிழ மணவாழ்வு கண்டோர் பலர்.
வேலை வைராக்கியம்
: நாட்டின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற, மகளிரைப்
புகழ்ந்திருக்கிறோம், வாழ்த்தியிருக்கிறோம்.
தன் சுற்றத்திற்காக, தன் கனவுகளைப்
புதைத்து வாழும், மகளிருக்கும் நம்
கரங்கள் சேரலாம், ஓசை எழுப்ப!
வேலைக்கு போக வேண்டும் என்ற வைராக்கியம் எதுவும், பாலுக்கு அழும் குழந்தையின் முன் தோற்றுப் போகிறது. தோளில்
பையுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தையுடன், நாமும் வெளியுலகம்
காணலாம் என்று கால் எடுத்து வைக்கப் போனால்... 'அம்மா! பள்ளி முடிந்து வீடு வரும் போது, ஓடி வந்து அணைத்துக் கொள்ள உன் மடி வேண்டும்' என்று கூறும் பிள்ளையின் வார்த்தைக்கு முன், பெண்ணின் கொள்கை எல்லாம் தகர்ந்து விடுகிறது.
வீட்டிற்குள்
விஞ்ஞானி : பெண்ணும் நீரும் ஒன்று; இருக்கும்
வடிவத்திற்கு ஏற்றாற் போல் வடிவத்தை மாற்றிக் கொள்வர். வங்கிகளில் நிதி நிலை
சரிசெய்யும் மேலாண்மையாளராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், நான்கு சுவர்களுக்குள் நிதி அமைச்சர் ஆனவள். தயிரைப்
பக்குவமாக புளிக்க வைக்கும் போது வீட்டிற்குள் விஞ்ஞானியாகிறாள்.தன் குழந்தையை
பெரிய அறிஞனாக்கி, பாடகனாக்கி, கலைஞனாக்கி வாழ்வில் வெற்றி நடை போடச் செய்த எத்தனையோ
அன்னையரைப் போற்றியிருப்போம்.
ஆனால், இந்த குழந்தை நடந்தாலே பெரிய வெற்றி என்று, பல மருத்துவர் சொன்ன குழந்தைகளை, பேணிக் காக்க தன் அறிவையும், அன்பையும் அந்த குழந்தைக்கே அர்ப்பணித்து வாழும்
தாய்மார்களின் சாதனை போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும்
உரியது. வீட்டிற்குள் இவர்களது சாதனை புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறது.
அன்னை எனும்
ஆசிரியர் : பள்ளி ஆசிரியர்களால், இந்த குழந்தையால்
படிக்க முடியாது என்று நிராகரிக்கப்பட்ட சிறுவனை, தானே ஆசிரியராக இருந்து அறிஞனாக்கிய, தாமஸ் ஆல்வா எடிசனின் அன்னை நான்சி என்றும் நின்றிருப்பாள்
தனது மகனின் வெற்றியில்.தன் லட்சியத்தை மறந்து, குடும்பத்தில் உள்ளவர்களை உயரப் பறக்கச் செய்யும் நுாலாய்
நிற்கும், மகளிரும் சாதனை
மகளிர் தான். நாட்டிற்காக, கணவரை
அனுப்பிவிட்டு, அவன் வேலைகளையும்
சேர்த்து வீட்டிற்கு காவல் செய்யும் பெண்கள் சாதனையாளர்கள் தான்.தன் மகள் பெரிய
அறிவாளியாக வரவேண்டும், நடனத்தில் சிறக்க
வேண்டும், அவரது பாட்டில்
உள்ளம் இன்புற வேண்டும், வீரத்தில் அவள்
விண்ணளவு வளர வேண்டும் என, தன் வீட்டு ராணியாக மகளை கொண்டாடும் ஒவ்வொரு தந்தையும், தன் அருகில் இதே போல் கனவு கண்ட ஒரு தந்தையின் ராணி தான்
மனைவியாக இருக்கிறாள் என உணர வேண்டும்.
கனவுகளை
மெய்யாக்குபவள் : மனைவியின் திறமையை கண்டறிந்து, அவளின் 'கனவு மெய்ப்பட' கணவன் துணையாய் நின்றால், அந்த பெண்ணுக்கு தினமும் மகளிர் தினமே. தான் சாதனை படைக்க
வேண்டும் என்று நினைக்கும் எல்லா பெண்களுக்கும் போற்றப்படும் மேடை கிடைப்பதில்லை.
சிலருக்கு சமுதாயம் மேடை அமைத்து தருகிறது. அவர்களின் சாதனைகள் மக்களின்
கைதட்டுகளால் உரக்கச் சொல்லப்படுகின்றன, உலகில்
அனைவருக்கும்.சிலரின் சாதனைகள் வீட்டிற்குள் நான்கு சுவற்றுக்குள் களம்
காண்கின்றன. மேடை ஏறாவிட்டாலும் அவர்களின் சாதனைகளும், தியாகங்களும் உரக்க உலகிற்கு சொல்லப்படாவிட்டாலும், உறவுகளுக்கு உறுதி அளித்துக் கொண்டிருக்கும், அத்தனை மகளிருக்கும் இந்நாளில் வாழ்த்துக்கள் கதவை தட்டும்.
குடும்பமே உலகம்
: திருமணம் ஆன பின்பு, குடும்பமே உலகம்; நம் நிறைவேறா கனவுகளுக்கு எல்லாம் நம் குழந்தைகளே கருவி
என்று, அவர்களை
கட்டாயப்படுத்தாமல், நாமே செயல்
மாதிரியாக வாழலாம். சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல. சாதனைப் பெண்களை, கதையாக நகர்த்திக் கொண்டிருக்கும் மெகா சீரியல்களின்
மோகத்தில் சிக்கிக் கொள்ளாமல், கதாபாத்திரமாக
நாமே மாறலாம்.
குடும்பத்தையே, தனது அரணாக கொண்டு ஜெயித்திருக்கும் எத்தனையோ பெண்களின்
வரிசையில் நாமும்இடம் பெறுவோம்.
சமுதாய ஆலமரம் :
தன் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு, முகத்துக்கு நேரே
எதிரிகளைப் பந்தாடிய 'ராணி லட்சுமிபாய்' துவங்கி, இரண்டு
குழந்தைகளைப் பெற்று தாயான பின்பும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம் வரை
கண்டது தான் நம் சமூகம். வேரின் ஊட்டம் தான் விருட்சமாக வளரும். கனியினைச் சுவைத்தோரின்
பாராட்டு, கனிக்கு
சென்றாலும், வேரில்லாமல்
மரமில்லை என்பது அறிந்ததே.வேர்,
மண்ணுக்குள்
இருந்து மரமாகவும், பழமாகவும், பலன் தரும் மரங்கள் எத்தனை இருப்பினும், வேரும் விழுதாக சமுதாயத்திற்கு பயன்படும் ஆலமரம் தான், இந்தியாவின் தேசிய மரமாக உள்ளது. ஆணிவேராக இருக்கும்
பெண்களும், சமுதாயத்திற்கு
வேரோடு பயன்படும் ஆலமரமாக, தன்னை
வெளிப்படுத்திக் கொண்டால் நம் சமூகம் நிச்சயம் உயர்வு பெறும்.
courtesy of
sister ...லாவண்ய ஷோபனா திருநாவுக்கரசுஎழுத்தாளர், சென்னை
shobana.thiruna@gmail.com
Tq sako.
====================================
பெண்கள் தினத்தை
அல்ல... பெண்களை கொண்டாடுவோம் நாளை சர்வதேச மகளிர் தினம்..........
ஒவ்வொரு வருடமும்
பெண்கள் தினத்தன்று, குறைந்தது மூன்று
நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறேன். காலையில் ஒரு கல்வி நிறுவனம், பிற்பகல் ஒரு கல்வி நிறுவனம், மாலையில் ஏதேனும் ஒரு பெண்கள் அமைப்பு என மிக மகிழ்வோடு,மேடையில் பெண்ணின் பெருமைகள் குறித்து, மிகுந்த ஆர்வமுடன் பேசுவேன். ஆனால் இந்த வருடம், தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்
கொடுமைகளும், மூன்று வயது பெண்
குழந்தைக்கும்
கூட பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் வாழ்கிற பதற்றமும், என்ன பெரியபெண்கள் தினம் என மிகுந்த அயர்ச்சியை உண்டு
பண்ணுகின்றன.
கொண்டாட்டங்கள்
வருடத்தில்
ஒருநாள், பெண்கள் தினம்
அன்று மட்டும், பெண்களைத் தாயாக
மதிப்போம், பெண்களைப்
போற்றுவோம் என கோஷம் போட்டு விட்டு, மற்ற நாட்களில்
எல்லாம் பெண்கள் மீது வன்முறையைச் செலுத்துவது என்றாகி விட்ட சூழலில், பெண்கள் தினம் என்பதே ஒரு சம்பிரதாயத்திற்காகத் தான் கடைபிடிக்கப்படுகிறதோ
என தோன்றுகிறது.பெண்கள் தினத்தை, பெரும்பாலான
நிறுவனங்கள், மகளிர்
அமைப்புகள் சமையல் போட்டி, கோலப் போட்டி, கூந்தல்
அலங்கார போட்டி
நடத்தித் தான் கொண்டாடுகின்றன.
கசக்கும்
உண்மைகள்
நான்கு
மாதங்களுக்கு முன், எங்களுக்கு
இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்தான். முதல் குழந்தை பெண். பயணங்களில், உணவகங்களில், திரையரங்குகளில்
நிறைசூலிக்கான கரிசனத்தோடு என்னிடம் பேசிய பெண்கள் எல்லோருமே, இது ஆண் குழந்தை தான் என்றே அசரீரி சொன்னார்கள். பிரசவ
அறைக்கு என்னைத் தயார்
படுத்திய
பணிப்பெண், "கவலைப்படாதம்மா...ஆம்பள
புள்ளயாவே பொறக்கும்" என்றார். எனக்கென்னம்மா கவலை... ஏற்கனவே பொண்ணு
இருக்குறதால, இது பையனா
இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, அதுக்காக பையன்
தான் வேணும்னு நினைக்கல, பொண்ணா
இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்" என்ற என்னை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
"நீ மட்டும் தாம்மா இப்படி சொல்ற, ரெண்டாவது பொண்ணா பொறந்தா, பெத்தவங்க அந்த குழந்தை முகத்தைக்கூட பாக்க வரமாட்டாங்க என
வருத்தப்பட்டார்.ஆபரேஷன் தியேட்டரில், நான்
மயக்கத்திலிருந்த போதும், ஒரு செவிலிப்
பெண், என்
உறவினர்களிடம் இதையே கூறி இருக்கிறார். "இரண்டாவது பெண் குழந்தையா இருந்தா, குழந்தையை வாங்கவே மாட்டாங்க" என.
கருக்கலைப்பு
ஏறக்குறைய எல்லா
மருத்துவமனைகளிலும், கருவில்
இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என
தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என்கிற அறிவிப்பு பலகை இருக்கிறது. கள்ளிப் பாலின்
நவீன வடிவம் தான் கருக்கலைப்பு. என்றைக்கு மருத்துவமனைகளில், இந்த
அறிவிப்பு பலகை
இல்லாமல் போகிறதோ, அன்றைக்கு
பெண்கள் தினத்தை இன்னும் அதிக மகிழ்வோடு கொண்டாடலாம்.இந்த மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை நிபுணர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களைப்
பார்த்த பிறகும், ஆண் குழந்தைகளைப்
பெற்றுக் கொள்வது தான் கவுரவம் என சில பெண்களே நினைப்பது தான் மிகு துயர்.
அம்மாக்களின்
பதற்றம்
பெண்
பிள்ளைகளைமகிழ்வோடு பெற்று வளர்க்கும் அம்மாக்களும் கூட, எந்நேரமும் பதற்றத்தில் இருக்கும் படியான சமூக சூழலின்
அவலம், பெரும் வலியைத்
தருகிறது.என் சிறுவயதில், மாலை நேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை
நாட்களில், பக்கத்து
தெருவிற்கு சென்று, அங்குள்ள
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அதற்கும்
பக்கத்துத் தெருவிற்கு சென்று, மணிக்கணக்கில்
விளையாடி இருக்கிறேன். யார் வீட்டிலும் தேடவே
மாட்டார்கள்.
எங்க போகப்போறா, வந்துடுவா என்ற
நம்பிக்கை அன்று அவர்களுக்கு இருந்தது. அண்ணே, அந்த இருட்டைத் தாண்டி, வீட்டுக்குப் போக பயமாயிருக்குண்ணே, கொண்டு வந்து விடுங்கண்ணே என்ற எங்கள் வேண்டுகோளை ஏற்று, பத்திரமாக வீடு வரை கொண்டு வந்து விட்டுப் போன முன், பின்
அறிமுகமில்லாத
அண்ணன்கள் இருந்தார்கள்.இன்று பக்கத்துத் தெருகூட வேண்டாம், நம் வீட்டின் அருகிலேயே, நம் பெண் குழந்தை களை விளையாடவிட பயமாக இருக்கிறது. மாலை
முழுதும் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொள்ள விடாமல்,
மகிழ்வாக
விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தையை, போதும் வா....என
இழுத்துக் கொண்டு போய் கதவை சாத்துவது எவ்வளவு கொடூரம்.
மாறிப்போன காலம்
ஊரில் திருவிழா, கல்யாணம், சாவு போன்ற
நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் என் பெற்றோர், சுமதிக்கு பரீட்சை நடக்குது, உங்க வீட்ல இருக்கட்டும் என பக்கத்து வீட்டில் அடைக்கலப்
படுத்தி செல்வார்கள். அங்கிள், ஆன்ட்டி
வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்நாட்களில்,
பக்கத்து வீட்டு
அத்தை, மாமா, என்னை அவர்களின் குழந்தையோடு குழந்தையாகப் பார்த்துக்
கொண்டார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற போது, அவர்களின்
குழந்தைகள் எங்கள் வீட்டில் தங்கினார்கள். இன்று அப்படி பெண் குழந்தைகளை பக்கத்து
வீட்டில் விட்டுச் செல்கிற சூழல் இருக்கிறதா... இல்லை யெனில் பெண் விடுதலை என்பது
கேள்விக்குறி தான் இல்லையா...?ஆட்டோ டிரைவர்
முதல் ஆசிரியர்கள் வரை, நம் பெண்
குழந்தைகளுக்கு யாரால், எப்போது பாலியல்
துன்புறுத்தல் நேருமோ என்கிற பயத்தில், என்ன பெரிய
பெண்கள் தினம் என்கிற சலிப்பே மிஞ்சுகிறது.ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு என காதலின் பெயரால் இன்னும் எத்தனை
பெண்களைத் தான் பலி கொடுக்கப் போகிறோம்..?ஒவ்வொரு முறையும், ஒரு அசம்பாவிதம் நடக்கும் போதும், அது கொஞ்சமேனும் இச்சமூகத்தை உலுக்கி இருந்தால், மனசாட்சியைத் தொட்டிருந்தால், அடுத்தடுத்து குற்றங்கள்
குறைந்திருக்கும்.
ஆனால் ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகமான
உக்கிரத்துடன் தான் பெண் மீதான கொடூரத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.
'எதிலும் பெண்களே இலக்கு
அரசியல், சினிமா,கலை,இலக்கியம் என பொது தளத்தில் இயங்கும் பெண்களை, கருத்து ரீதியாக எதிர் கொள்ளாமல், வார்த்தைகளால் புற முதுகிட்டு ஓட வைக்கிறார்கள். இங்கே
பெண்களைத் திட்டுவதற்கான வார்த்தை கள் ஏராளம். ஆனால், ஒரு ஆணைத் திட்ட வேண்டுமெனில், தனியே வார்த்தைகள் தேவைப்
படுவதில்லை.
பெண்களைத் திட்டுகிற வார்த்தையால், அந்த ஆணின்
அம்மாவைத் திட்டுகிறார் கள். எப்படியாயினும் அந்த வசவுகளின் இலக்கு ஒரு பெண்ணே.
மாறாத காட்சிகள்
இப்போதெல்லாம்
நான் சொற்பொழிவிற்காக செல்கிற, எல்லா மகளிர்
கல்லுாரிகளிலும், ஒருவேளை உங்கள்
புகைப்படம் தவறாக பயன் படுத்தப் பட்டிருந்தால், அதை செய்தவன் தான், வெட்கப்பட
வேண்டுமே தவிர, நீங்கள் அல்ல.
எந்த தவறும் செய்யாத நான் ஏன் அழ வேண்டும், நான் ஏன் உயிரை
விட வேண்டும் என்ற உறுதியோடு வாழ்வை எதிர் கொள்ளுங்கள் என தொடர்ந்து வலியுறுத்திப்
பேசி
வருகிறேன்.நாங்கள்
பள்ளிக்குச் செல்லும் போது, வழியில் சில
இளைஞர்கள் நின்று கொண்டு பாட்டுப் பாடி கேலி செய்வார்கள். அதற்கு பயந்து கொண்டு,இரண்டு கிலோ மீட்டர் சுற்றி தான் பள்ளிக்குப் போவோம்.
இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு என் மாணவி சொல்கிறாள், "தினமும் நான் வர்ற வழியில் பசங்க நின்னு கிண்டல் பண்றாங்கனு
நான் வேற வழியில் வர்றேன் மேம்" என. இந்த இருபத்தைந்து வருடங்களில், அதே போல் ஆண்கள் கிண்டல் செய்வதும், அதே போல் பெண்கள் வேறு பாதையில் சுற்றிக் கொண்டு செல்வதும்
மாறவே
இல்லையெனில், என்ன வளர்ச்சியடைந்திருக்கிறோம்?, என்ன பெண் விடுதலை பெற்றிருக்கிறோம்?
தைரியம்
வளர்ப்போம்
ஆண் பிள்ளைகளைப்
பெற்ற ஒவ்வொரு அம்மாவும், அந்த குழந்தையை, பெண்களை மதிப்பவனாக, பெண்ணை இழிவு
செய்யாதவனாக, எந்த சூழலிலும்
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் தராதவனாக, காதல் என்ற
பெயரில் பெண்கள் மீது வன்
முறையை
கட்டவிழ்ப்பவனாக இல்லாமல் வளர்க்க வேண்டும்.அதை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு
இருக்கிறது. இந்த பெண்கள் தினத்திலாவது, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்திற்கான, நம் கடமையை உறுதி மொழியாக ஏற்போம்.
கவிக்கோ அப்துல்
ரகுமான், குழந்தைகள்
தினத்தைக் கொண்டாடுவதை விட்டு விட்டு, குழந்தைகளைக்
கொண்டாடுங்கள் என்று சொன்னது போல், பெண்கள்
தினத்தைக் கொண்டாடுவதை விட, பெண்களைக்
கொண்டாடுவது தான் முக்கியம்.
courtesy of
Sister -சுமதிஸ்ரீசொற்பொழிவாளர்sumathi.ben@gmail.com
Tq sis.
=========================================
No comments:
Post a Comment