Followers

Wednesday, March 18, 2020

இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..பாபாவின்....
தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்... ....ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியது... பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......அவர் தம் புண்ணியக் கதைகளை கேட்போம் நாமும் புண்ணியம் சேர்ப்போம்....அன்புறவுகளே................
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 8 தொடர்கிறது......................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
48. ப்ரேம ப்ரதாய நமஹ
பிரேமையை நல்குபவருக்கு நமஸ்காரம் டு
ப்ரேம = Intense overflowing love = பொங்கிவழியும் அன்பு.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடி மக்களின் பிரேமைக்கும் குந்திதேவி, விதுரர் போன்ற பக்தர்களின் பிரேமைக்குமே வசப்பட்டார். ஆட்சிபலம், செல்வ பலம், படைபலம் போன்ற வேறு எந்தவிதமான சக்திக்கும் வசப்படவில்லை. ஸாயி பக்தர்கள் முதற்படியாக வளர்த்துக்கொள்ள வேண்டியது ஸாயியிடம் பிரேமை கொள்வதுதான். இது காலப்போக்கில் வளர்ந்து எல்லா மனிதர்களிடமும் பிரேமை, ஸகல ஜீவராசிகளிடத்தும் பிரேமை என மலர்ந்து பக்தரைப் பிரேமைக் கடல் ஆக்கிவிடும். அந்நிலையில் அவர், அன்பே சிவம் என்று அமர்ந்திருப்பாரே!
ஒப்பு நோக்குக :-
1. அன்பால் கரைந்து கண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்கு உன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே. -- பராபரக்கண்ணி 95 ஸ்ரீதாயுமான ஸ்வாமிகள்.
2. அப்பா! நான் வேண்டுதேல்கேட் டருள்புரிதல் வேண்டும்,
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும். -- திருவருட்பா திருவருட் பிரகாச வள்ளலார்.
இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 618 ஆவது நாமம்.
OM PREMA PRADAYA NAMAH
ॐ प्रेमप्रदाय नमः
My humble salutation to the Master who grants abundant love to his devotees - hence known as Prema Sai.
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 8 தொடர்கிறது……….
*
*
*
அத்தியாயம் - 8
. நரஜன்ம மஹிமை - பிச்சை எடுத்து உண்டது - பாயஜாபாயியின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மஹால்ஸாபதியுடனும் மசூதியில் உறங்கியது
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 கடந்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்று எப்படி எவராலும் நிர்ணயிக்க முடியாதுபோயிற்று என்பதும் பாபா தம்முடைய வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்ட சிர்டீ வானளாவிய பாக்கியம் பெற்றது என்பதும் விவரித்துச் சொல்லப்பட்டன.
2 பாபா முதன்முத­ல் ஓர் இளைஞனாக வந்து, பிறகு மக்களுக்கு ஒரு 'பைத்தியக்காரப் பக்கீராகஃ எவ்வாறு மாறினார் என்பதுபற்றியும் கரடுமுரடான கரம்பு நிலத்தை ஓர் அழகான பூந்தோட்டமாக அவர் ஆக்கியதுபற்றியும்--
3 சிலகாலத்திற்குப் பிறகு, அவ்விடத்தில் ஒரு சத்திரம் எவ்வாறு எழுந்தது, எவ்வாறு பாபா தோதி-போதி, கண்டயோகம் போன்ற தைரியமான யோகப்பயிற்சிகளில் தலைசிறந்து விளங்கினார் என்பனபற்றியும்--
4 பக்தர்களின் ரட்சகரான பாபா எவ்வாறு அவர்களுடைய துன்பங்களைத் தம்முட­ல் ஏற்றுக்கொண்டு மெய் வருந்தினார் என்பதுபற்றியும், நான் எப்படிப் போதுமான அளவுக்கு வர்ணிப்பேன்?
5 நரஜன்மத்தின் மஹிமை, பாபா பிச்சை எடுத்த விவரம், ஞானிகளுக்கு பாயஜாபாயி செய்த தன்னலமற்ற ஸேவை, பாபா உணவு உண்ட விசித்திரம்,
இவற்றைப்பற்றியும்--
6 தாத்யா, மஹால்ஸாபதி, பாபா, இம்மூவரும் எப்படி மசூதியில் உறங்கினர் என்பதுபற்றியும் ரஹாதாவி­ருந்த குசால்சந்தின் இல்லத்திற்கு பாபா சென்ற பழக்கத்தைப்பற்றியும் மேற்கொண்டு கேளுங்கள்.
7 தினமும் காலையில் சூரியன் உதிக்கிறான்; மாலையில் மறைகிறான். இவ்விதமாக வருடங்கள் விழுங்கப்படுகின்றன. பாதி வாழ்வு தூக்கத்தில் தொலைகிறது; மீதி பாதியும் சாந்தியையோ சந்தோஷத்தையோ கொண்டுவருவதில்லை.
8 பால பருவம் விளையாட்டில் கழிந்துவிடுகிறது. இளமைப் பருவம் சிற்றின்பத்தில் கழிகிறது; வயோதிகப் பருவம், தள்ளாமையும் வியாதிகளும் பலவிதமான அவஸ்தைகளும் தரும் அலுப்பிலும் ச­ப்பிலும் கழிகிறது.
9 உடலைப் புஷ்டியாக வளர்ப்பதற்காகவும் தொண்டுகிழமாகும்வரை மூச்சுவிட்டுக் கொண் டிருப்பதற்காகவுமா நாம் இவ்வுலகிற்கு வந்தோம்? மனித ஜன்மம் எடுத்ததன் பயன் இதுதானா?
10 பரமாத்மாவை அடைவதே மனித ஜன்மத்தில் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும். அவ்வாறு இல்லையெனில் நாய்களும் பன்றிகளும் மற்ற மிருகங்களும் நடத்தும் வாழ்வில் குறை என்ன சொல்ல முடியும்?
11 நாய்களும் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றன; யதேஷ்டமாகப் பிரஜைகளை (குட்டிகளை) உற்பத்தி செய்கின்றன. நாய்களும் மனிதர்களும் இவ்விதத்தில் ஒரே நிலையில் இருப்பின், மனித ஜன்மத்தின் சிறப்புதான் என்ன?
12 உடலைப் பேணிப் போஷாக்காகக் காப்பதும் சிற்றின்பமுமே மனித வாழ்க்கையின் இலட்சியத்தைத் திருப்திசெய்யுமெனில், இந்த நரஜன்மத்திற்கு அர்த்தமேதும் இல்லாமல் போகிறது.
13 ஆஹாரம், நித்திரை, சிற்றின்பம், பயம் ஆகிய நான்கு செயல்பாடுகளிலேயே வாழ்க்கை கழிந்துவிட்டால், நாய்களுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
14 இதுதான் நரசரீரம் எடுத்ததன் பலன் என்றால், வண்டுகளுக்கும் தாவரங்களுக்கும் வாழ்க்கையில் என்ன குறை? துருத்திகளும் உள்மூச்சு வெளிமூச்சு வாங்குகின்றன; நாய்களும் நன்கு தின்று கொழுக்கின்றன அல்லவோõ
15 ஆனால், மனிதனோ பரிணாம வளர்ச்சியடைந்தவன்; பயமற்றவன்; சுதந்திரமானவன்; சாசுவதமானவன். இந்த விழிப்புணர்வு இருந்தாலே ஜன்மம் சாபல்யம் அடைகிறது.
16 நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண்.
17 தூங்காவிளக்கின் சுடர் ஆரம்பத்தி­ருந்து கடைசிவரை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் ஒவ்வொரு கணமும் அது மாறுபாடு அடைந்துகொண்டே இருக்கின்றது; மனித உடலும் அவ்வாறே.
18 பிள்ளைப் பருவம், இளமை, முதுமை-இந்த மூன்று நிலைகளும் எல்லாருக்கும் வெளிப்படையாக நன்கு தெரிந்ததே. ஆனால், அவை இயல்பாக வந்துபோவதை எவரும் உணர்வதில்லை.
19 இந்தக் கணத்தில் நாம் பார்க்கும் (தூங்காவிளக்கின்) சுடரின் நிலை இந்தக் கணத்தோடு சரி; ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக்கொண்டே இருந்தாலும், அது ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. அதுபோலவே, இந்தக் கணத்தில் மனித உடல் இருக்கும் நிலை அடுத்த கணத்தில் மாறிவிடும்.
20 மலம், மூத்திரம், சளி, சீழ், எச்சில், அழுக்கு ஆகியவற்றை வெளியிடும், கணத்திற்குக் கணம் மரணம் அடைந்துகொண் டிருக்கும் மனிதவுடல் துர்லக்ஷணம் நிரம்பியது.
21 புழுக்களும் கிருமிகளும் வாழும் இடமாகிய மனிதவுடல், பல ரோகங்களின் வாஸஸ்தலம் (இருப்பிடம்); நிலையற்றது; மரணமடையக்கூடியது.
22 மாமிசம், ரத்தம், தசைகள், ஓர் எலும்புக்கூடு, தோல் இவையெல்லாம் ஏற்றப்பட்ட பாரவண்டியே மனிதவுடல். மலமும் மூத்திரமும் நிறைந்த குழிகளுடன் உயிருக்குக் கவசமாக அமைந்துள்ளது.
23 தோல், மாமிசம், ரத்தம், சதை, கொழுப்பு, எலும்புகள், மஜ்ஜை, வாயு இவற்றுடன் பிறவி உறுப்பு, குதம் போன்ற அசிங்கமான பாகங்களுடன் சேர்ந்து அமைந்த இம்மனிதவுடல் அற்பகாலமே வாழக்கூடியது.
24 இவ்வளவு அமங்கலமானதாகவும் நசித்துப்போகக்கூடியதாகவும் கணநேரத்தில் முடிந்து போகக்கூடியதாகவும் மனிதவுடல் இருப்பினும், சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமான பரமேச்வரனை அடைவதற்கு உண்டான கருவி அது ஒன்றேõ
25 ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொண்ட மானிடன் மரணத்தைப்பற்றிய கற்பனையிலும் பயத்திலுமே வாழ்நாளைக் கழிக்கிறான். ஆயினும், உயிர் பிரியும்போது கணநேரத்தில் பறந்துவிடுகிறது.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch…
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 8
*
*
*
CHAPTER VIII
Importance of Human Birth-Sai Baba Begging Food - Bayajabai's Service - Sai Baba's Dormitory - His Affection for Khushalchand.
As hinted in the last Chapter, Hemadpant now explains at length, in his preliminary remarks, on the importance of human birth; and then proceeds to relate how Sai Baba begged His food, how Bayajabai served Him, how He slept in the Masjid with Tatya Kote Patil and Mhalsapati and how He loved Khushalchand of Rahata.
Importance of Human Birth
In this wonderful universe, God has created billions (84 lacs according to Hindusastra calculation) of creatures or beings (including Gods, demigods, insects, beasts and men) inhabiting heaven, hell, earth, ocean, sky and other intermediate regions. Of these, those creatures or souls, whose merits preponderate, go to heaven and live there till they enjoy the fruits of their actions, and when this is done, they are cast down while those souls, whose sins or demerits preponderate, go down to hell, and suffer the consequences of their misdeeds for so long a time as they deserve. When their merits and demerits balance each other, they are born on earth as human beings, and are given a chance to work out their salvation. Ultimately when their merits and demerits both drop down (are got rid of) completely, they get their deliverance and become free. To put the matter in a nutshell, souls get their births or transmigrations according to their deeds and intelligence (development of their minds).
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch…
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 8 தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
/
/
/

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...