Followers

Wednesday, March 18, 2020

தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.
பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார். —
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..
For the sake of My devotees, I am ever ready to help them.
''யார் ஒருவர் தன் இருகரங்களையும் குவித்து ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருக்கிறாரோ அவரின் துன்பத்தை அழிக்க, நான் ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து எப்போதும் எக்கணமும்ஏன் இக்கணமும் உங்களைக் காப்பாற்றுவேன் என்பது உறுதி. எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.”
Foes and friends, kings and paupers are the same to Me.
எனக்கு அரசனும்,ஆண்டியும்,எதிரியும்,நண்பனும் ஒன்றே, சகல உயிரும் ஒன்றே, எல்லோரும் எல்லாம் என் குழந்தைகளே அறிவாய் மனிதா,
''சில சமயம் நான் ஒரு நாய்; சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை; சில சமயம் ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர்வாழ் பிராணி -- பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.—இவைகளுக்கு உணவு கொடுப்பது எனக்கு தருவதாகும்.” ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே ஈதனைத்தும் தெய்வீகப் பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானே.” ''உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேதபுத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்..”
தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை. பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார். —
===========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...