அச்சம் என்பது மடமையடா: கைகழுவுவது கடமையடா...

இந்தியர்களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், 'கொரோனாவை' கண்டு அஞ்ச தேவையில்லை. 'வைரஸ்' பாதிக்காதவர்களுக்கு முகக்கவசம் அவசியமில்லை. கைகளை நன்றாக கழுவினாலே போதும். 'கொரோனா' வைரஸ் குடும்பத்தில் இருந்து 'கோவிட்-19' வைரஸ்', சீனாவின் வூஹான் நகரில் இருந்து கிளம்பியது. இப்போது இந்தியா, இத்தாலி உட்பட உலக நாடுகளை மிரட்டுகிறது. இந்த வைரசைவிட ஆயிரம் மடங்கு வேகமாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவுகின்றன. மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இறப்பு குறைவு
உண்மையில் 'கொரோனாவால்' உயிரிழப்பு குறைவு. வூஹானில் இறப்பு சதவீதம் 5.6 என்றால், ஒட்டுமொத்த சீனாவில் 0.7 சதவீதம் தான். 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 60 வயதுக்குட்ப்பட்டவர்களுக்கும் பெரிய பாதிப்பு இல்லை. 80 வயதை கடந்து சர்க்கரை, இருதய பாதிப்பு, கேன்சர், மூச்சுப் பிரச்னை உள்ளவர்களை தான் அதிகம் தாக்குகிறது. தற்போது மருந்துகள் இல்லாததால், முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் எளிதில் தப்பலாம்.
காக்குமா கவசம்
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைந்து வருவதால், பதட்டப்பட வேண்டாம். கள்ள சந்தையில் 6 மடங்கு விலை கொடுத்து 'மாஸ்க்' வாங்க வேண்டாம். முகக்ககவசம் உங்களை முழுமையாக பாதுகாக்காது. ஏனெனில் காற்று மூலம் 'கொரோனா' பரவாது. பாதிக்கப்பட்டவர் தும்மும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் படும் மேற்பரப்பு மூலம் பரவும். யாராவது உங்களது முகத்திற்கு நேராக தும்மினால் அல்லது இருமினால் மட்டுமே கவசம் பாதுகாக்கும்.
நீங்கள் 'மாஸ்க்' அணிந்திருந்தால், அதை சரி செய்வதற்கு அடிக்கடி கையால் முகத்தை தொடுவீர்கள். ஒவ்வொரு முறையும் கைகளை கழுவி இருக்க மாட்டீர்கள். ஒருவேளை 'வைரஸ்' பரவி இருக்கும் மேற்பரப்பை(மேஜை, நாற்காலி) தொட்டு, 'மாஸ்கை' அட்ஜெஸ்ட் செய்யும் போது, உங்களது அசுத்தமான கைகள் முகத்தில் படும். அப்போது கண், மூக்கு, வாய் வழியாக 'வைரஸ்' உடலில் செல்லும். எனவே, 'வைரஸ்' உங்களை பாதித்திருக்கும் என்று உணர்ந்தால் மட்டும் 'மாஸ்க்' அணியுங்கள். இதன் மூலம் மற்றவர்களுக்கு 'வைரஸ்' பரவாமல் தடுக்கலாம்.

பலமான இந்தியா
உலகில் இந்தியர்களுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அசுத்தமான சூழலில், மாசுபட்ட பகுதியில் வாழ்ந்து பழகியவர்கள். இதனால், வளர்ந்த நாடுகளின் மக்களைவிட நமக்கு எதிர்ப்பு சக்தி கூடுதல். 2003ல் 'சார்ஸ்' வைரஸ் 29 நாடுகளில் பரவியதில், ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அப்போது இந்தியாவில் வெறும் 3 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களும் விரைவாக குணமடைந்தனர். 2012ல் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கிய 'மெர்ஸ்' வைரஸ், இந்தியா பக்கம் தலைகாட்டவில்லை.
அமெரிக்காவில் 2010-11 முதல் 2018-19 வரை புளூ காய்ச்சலால், ஆண்டுக்கு 37,444 பேர் என்ற விகிதத்தில் 3,37,000 பேர் மரணம் அடைந்தனர். இதுவே இந்தியாவில் புளூ காய்ச்சலுக்கு 2010-19 காலக்கட்டத்தில் 11,030 பேர்(ஆண்டுக்கு 1,103 பேர் மட்டுமே) மரணம் அடைந்தனர். அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக மக்கள் இருந்த போதும், நமது இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. நாம் எதையும் தாங்கும் பலமான உடல் அமைப்பை பெற்றவர்கள். தேவையில்லாமல் பீதியடையாதீர்கள். அவசியமில்லாமல் 'மாஸ்க்' வாங்கி பணத்தை வீணாக்காதீர். சாப்பிடுவதற்கு முன் கைகழுவும் பழக்கம் நமக்கு உண்டு. இனி அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவோம். எதற்கும் அஞ்சாமல் அன்றாட வாழ்க்கையை தொடருவோம்.

courtesy; தினமலர் செய்தி
===================================================
No comments:
Post a Comment