அரசனுக்கு
அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.
இதனால் காலையில்
பீதியுடன் எழுந்த
அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய்
முதல் வேலையாக ஒரு நாடி
ஜோதிடரை
வரவழைத்தான்.


எல்லோர்க்கும்
என்றும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை
களே........................................
எதை எப்படிச்
சொன்னார் நாடி ஜோதிடர்?
அரசனுக்கு
அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.
இதனால் காலையில்
பீதியுடன் எழுந்த
அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய்
முதல் வேலையாக ஒரு நாடி
ஜோதிடரை
வரவழைத்தான்.
அந்த நாடி
ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை
வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை
வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள்
மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள்
எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’
என்று பலன்
சொன்னார்.
உடனே அந்த அரசன்
மிகவும்
கோபமுற்று, ‘இவனைப் பிடித்து
சிறையில் தள்ளுங்கள்!’
என்று
உத்தரவிட்டான்.
அதன் பிறகும்
மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன்
பொக்கை வாய்
கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.
அந்த ஜோதிடரும்
அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்.
அவரும் அதைப்
பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம்
விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி
வாழ்வீர்கள்’ என்று பலன்
கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு
தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான்.
இருவரும் அதே
ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும்
இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர்
எல்லோரையும்
கடந்து
வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.
பேசும்
வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.! நாம் பேசும்
வார்த்தைகள் மற்றவரை சந்தோஷம் படுத்த வேண்டுமே தவிர எந்த விதமனகசப்பும் ஏற்படாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
courtesy வாத்தியார்
அன்பும் நன்றியும்
ஐயா...........
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நாடகத்தால் உன்
அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே
புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர்
மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத்
தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே.
பதப்பொருள் :
எம் உடையானே -
எம்மை அடிமையாக உடையவனே, நான் - நான், நாடகத்தால் -
போலியாக, உன் அடியார் போல் - உன் மெய்த்தொண்டர் போல, நடுவே -
அம்மெய்த்தொண்டர்களுக் கிடையே, நடித்து -
தோற்றம் காட்டி, வீடு அகத்தே புகுந்திடுவான் - முத்தியுலகத்திற்புகுதற்கு, மிகப் பெரிதும்
விரைகின்றேன் - மிகப் பெரிதாகவும் விரையாநின்றேன்; ஆதலால், சீர் - சிறப்பு
வாய்ந்த, ஆடகக் குன்றே - பொன் மலையே, மணிக்குன்றே -
மாணிக்க மலையே, உனக்கு - உன்னிடத்து, இடையறா அன்பு -
எப்பொழுதும் நிகழும் அன்பினை, என் அகத்தூடு -
என் நெஞ்சினூடே, நின்று - நிலைத்து நின்று, உருக - அதனால்
என் நெஞ்சம் உருகும் வண்ணம், தந்தருள் -
உதவியருள்வாயாக.
விளக்கம் :
நாடகத்தில்
நடிப்பவர்களது நடிப்புகள் அவர்களது மனத்தோடு பொருந்தாது இருப்பதை உலகியலிற்
காணலாம்; அது போல, இறை இயலில் அடியார்கள்
போல நடிக்கின்ற என் செயல்கள் என் மனத்தோடு பொருந்தா திருக்கின்றன என்பார், ‘நாடகத்தால்
உன்னடியார் போல் நடித்து’ என்றார். உண்மையன்பு இல்லையென்றபடி, ஆனால், அடியார் பெறும்
உண்மையான பயனைமட்டும் விரும்புகின்றேன் என்பார். ‘வீடகத்தே
புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்’ என்றார். எனினும், இறைவன் தம்மை
உடையனாதலால், இறைவனையடைதற்குரிய அன்பையருளி நெஞ்சத்தை உருகச்செய்தல் அவன்
கடமை என்பார், ‘நின்றுருகத் தந்தருள் எம் உடையானே’ என்றார். ஆடகம், நால்வகைப்
பொன்னில் ஒன்று. உனக்கு என்றதிலுள்ள நான்கனுருபை ஏழனுருபாக மாற்றிப் பொருள் கொள்க.
இதனால், இறைவன்பாற்கொள்ளுகின்ற
அன்பையும் அவனையே வேண்டிப் பெறுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
தரவு கொச்சகக்
கலிப்பா
===================
ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை
உமையும் உமையொரு
பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு
அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும்
இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு
தோளியர் மேல் வைத்த ஆசையுமே
உமையும் உமையொரு
பாகனும் ஏக உருவில் வந்து – உமையன்னையும்
சிவபெருமானும் ஒரே உருவாக வந்து
இங்கு எமையும்
தமக்கு அன்பு செய்ய வைத்தார் – இங்கே இந்த
உலகிலேயே மிக கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள்
இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை – இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய சமயங்களும் இல்லை (இறை
அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில்
செல்வதா, யோகவழியில் செல்வதா, கருமவழியில்
செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை)
ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை – (பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி
எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு
தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அழகிய தோள் உடைய
பெண்கள் மேல் வைத்த ஆசையும் தானாகவே அமைதியுற்றது.
***
அம்மையும்
அப்பனுமாக ஒரே உருவமாக வந்து அவர்கள் அருளால் அவர்கள் தாளை வணங்க வைத்துவிட்டதால்
இனி எந்த வழியில் செல்ல வேண்டும் என்று நான் எண்ணிக் குழம்ப வேண்டாம்; அவர்களே
அவர்களின் கருணையால் வழியைக் காட்டிவிட்டார்கள்; பிறப்பிறப்புப்
பிணியும் தீர்ந்தது; பெண்களின் மேல் வைத்த ஆசையும் (பெண்களுக்கு ஆண்கள் மேல்
வைத்த ஆசை) தானாக அமைதியுற்றது; அதனால்
புதிதாகவும் எந்த பந்த பாசமும் தோன்றாது.
அமைதி பெற ,சம்சார பந்தம் தொல்லை
கொடுக்காமல் இருக்க இந்தப் பாடலைப் படிக்க சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்பாடலை
தொடர்ந்து பாராயனம் செய்தால் ‘மறுமையில் இன்பம்
உண்டாகும்’.
======================================
ஆவியோடு காயம்
அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!
மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!
எல்லோர்க்கும்
என்றும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை
களே........................................
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ
நம! சத்குரு சாயி நமோ நம!
====================================
No comments:
Post a Comment