வெயிலுக்கேற்ற,
'ஜூஸ்!'
கோடை காலம்
ஆரம்பமாக போகிறது. இப்போதிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து,
வெயிலை தைரியமாக
எதிர்கொள்வோம்!

நெல்லிக்காய்
ஜூஸ்!
தேவையான
பொருட்கள்: கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிய பெரிய நெல்லிக்காய் - 6, கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு
நைசாக அரைத்து வடி கட்டவும். 'ப்ரிஜ்'ஜில் வைத்து
பரிமாறவும்.
தாகத்தை தணிக்கும்;
வைட்டமின், 'சி' நிறைந்தது.
பீட்ரூட் லஸ்சி!
தேவையான
பொருட்கள்: பீட்ரூட் துருவல் - கால் கப், கெட்டி தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக விடவும்.
ஆறியபின், மிக்சியில்
விழுதாக அரைக்கவும். தயிருடன், சர்க்கரை, பீட்ரூட் விழுது
சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ரத்த சோகையை சரி
செய்யும்; கால்சியம்
நிறைந்தது.
வெள்ளரி மோர்!
தேவையான
பொருட்கள்: வெள்ளரி துருவல், மாங்காய் துருவல் - தலா 4 தேக்கரண்டி, மோர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பெருங்காய துாள், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரி துருவல், மாங்காய் துருவல்
இரண்டையும் தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைக்கவும். இதனுடன், மோர், உப்பு, பெருங்காயதுாள், பச்சை மிளகாய் சேர்த்து நுரை வரும் வரை அரைத்து
பரிமாறவும்.
உடலுக்கு
குளிர்ச்சியை தரும் பானம் இது.
மசாலா மில்க்
ஷேக்!
தேவையான
பொருட்கள்: காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 5, பனங்கற்கண்டு துாள் - 2 தேக்கரண்டி, மிளகு - 4, ஏலக்காய் - ஒன்று, சுக்கு துாள் - அரை தேக்கரண்டி.
செய்முறை:
வாணலியில், பாதாம், முந்திரி, பிஸ்தா, மிளகு, ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
ஆறியபின், பனங்கற்கண்டு
துாள், சுக்கு துாள்
சேர்த்து மிக்சியில் பவுடராக அரைத்து எடுக்கவும். பாலுடன் அரைத்த பவுடரை கலந்து,
'ப்ரிஜ்'ஜில் வைத்து பருகவும்.
குட்டீஸ்கள்
விரும்பும் பானம் இது.
நன்னாரி சர்பத்!
தேவையான
பொருட்கள்: நன்னாரி சிரப் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - ஒரு
கப், எலுமிச்சை சாறு -
ஒரு தேக்கரண்டி மற்றும் ஐஸ் கட்டிகள்.
செய்முறை:
தண்ணீருடன் நன்னாரி சிரப், எலுமிச்சை சாறு
சேர்த்து கலக்கவும். பிறகு, ஐஸ் கட்டி
சேர்த்து பருகலாம்; சர்க்கரை
தேவையில்லை.
கோடையில்
வெப்பத்தால் வரும் நோயிலிருந்து தப்பலாம்.
வாழைத்தண்டு -
தயிர் ஜூஸ்!
தேவையான
பொருட்கள்: வாழைத்தண்டு - ஒன்று, தயிர் - ஒரு கப், சீரகம் - ஒரு
தேக்கரண்டி, உப்பு தேவையான
அளவு.
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி, சிறிய துண்டுகளாக
நறுக்கவும். சீரகம், உப்பு சேர்த்து
மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் தயிர் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று
சுற்றி எடுக்கவும்.
சிறுநீரக
பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
=================================
courtesy;dinamalar.
==========================
No comments:
Post a Comment