Followers

Tuesday, March 10, 2020

உலகை உலுக்கும் கொரோனா தொடர்பில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? மிக முக்கிய தகவல்கள்...................

Image result for coronavirus


சீனாவில் தோன்றி இன்று உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல உயிர்களை இழந்து நிற்கிறார்கள் உறவுகள்.
இன, மத, பேதங்களை இந்த வைரஸ் பார்ப்பதில்லை. கடகடவென அடுத்தடுத்த நபர்களுக்கு பரவி உயிர்களை காவு கொண்டிருக்கிறது.
இது தொடர்பில் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு சர்வதேச சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இதற்கிடையில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை உடனடியாக சந்தைக்கு வரும் சாத்தியம் இல்லை என்கிற தகவல்களையும் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்களின் தொகுப்பாக வருகிறது இந்தப் பகுதி,
  • சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தின் மீன் சந்தையைத்தான் தற்போதைய ‘கோவிட்-19’ இன் நதிமூலமாகக் கருதுகிறார்கள். அங்கே வந்த வாடிக்கையாளர்கள், அங்கே பணிபுரிந்தவர்கள் போன்றோருக்குத்தான் முதலில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டது.
  • கொரோனா வைரஸ் டிஸீஸ்-2019 (கொரோனா வைரஸ் நோய்-2019) என்பதன் சுருக்கம்தான் ‘கோவிட்-19’. இந்த நோய் ‘சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2, அதாவது சார்ஸ் வைரஸ்-2 என்ற வைரஸால் ஏற்படுகிறது.
  • கொரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள வைரஸ்களுள் இதுவும் ஒன்று. 2003-ல் உலகைப் பீதிக்கு உள்ளாக்கிய சார்ஸ் வைரஸின் இன்னொரு வடிவம்தான் தற்போது ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கிய வைரஸ்.
  • ‘சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’ எனப்படும் சார்ஸ் நோயானது 2002-ல் 37 நாடுகளில் பரவி உலகெங்கும் பீதியைக் கிளப்பியது. இதனால் 8,000 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. 750 பேர் பலியானார்கள்.
  • இன்னொரு மோசமான கொரோனா வைரஸ் ‘மிடில் ஈஸ்டர்ன் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’ எனப்படும் மெர்ஸ், 2012-ல் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவியது. இதனால் 2,500 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 35% உயிரிழந்தனர்.
  • வைரஸ் நோயால் நுரையீரல் அழற்சி (pneumonia) ஏற்படுகிறது. இருமல், கடுமையான காய்ச்சல் போன்றவற்றுடன் மூச்சுவிடவே சிரமமாக இருக்கும்.
  • உடல்நிலை மோசமானால் பல முக்கியமான உள்ளுறுப்புகள் செயலிழக்கவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
  • கொரோனாவுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே மற்ற காய்ச்சலுக்கு இருக்கும் எந்த மருந்தும் கொரோனாவுக்குப் பலனளிக்கவில்லை.
  • நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பவர்கள் விரைவில் குணமாகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
  • இதேவேளை, எச்ஐவிக்கான தடுப்பு மருந்தினை ஏற்றி சில நாடுகள் சோதனை நடத்திவருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
  • அதேபோன்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் வயதானவர்களும் ஏற்கெனவே நோயுற்று இருப்பவர்களும் கொரோனாவின் தாக்குதலில் பலியாகும் வாய்ப்பு அதிகம்.
  • மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றன.
  • உலக அளவில் கொரோனா பாதிப்பால் 3,800 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் 3,120 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
  • மொத்தம் 108 நாடுகளில் 1,10,000 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை 61 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்.
  • சீனாவில் மட்டும் 81,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இதுவரை 58,600 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.
  • முக உறை அணிவதால் நூற்றுக்கு நூறு சதவீதம் கிருமித் தொற்றைத் தடுத்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. வைரஸ் என்பது மிகவும் நுண்மையானது. அது கண்களின் வழியாகக்கூட பரவும்.
  • முக உறைகளையும்கூட ஊடுருவக்கூடியது. எனினும், கொரோனா தொற்று உள்ள நபர் இருமும்போது வெளிப்படும் துளிகளை முக உறைகள் தடுக்கக்கூடியவை. எனவே, அவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டும்.
  • கொரோனா நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை முக உறை பயன்படுத்துவதால் ஐந்து மடங்கு தவிர்க்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • ஒரே முக உறையை அடுத்தடுத்த நாட்கள் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய பின் சாலையோரத்தில் எறிந்துவிடாமல் முறையான குப்பைத்தொட்டியில் போடவும். குப்பைத்தொட்டிகளை முறையாக அப்புறப்படுத்துவது அரசின் பொறுப்பு.
  • கொரோனா வைரஸ் தனித்துக் காற்றின் மூலம் பரவுமா என்பது இதுவரை அறியப்படவில்லை. அடுத்தவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் துளிகளில் கொரோனா வைரஸ் இருந்து, அது நம் உடலுக்குள் செல்லும்போதுதான் தொற்று ஏற்படும்.
  • பலருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் தான் இது. கொரோனா நோயானது வகை மாற்றம் அடைகிறது. வைரஸ்களின் உள்வகைகள் (strain) மாற்றமடையும் இயல்பு கொண்டவையே.
  • அதேபோல் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸும் மாற்றமடைந்துகொண்டிருக்கிறது.
  • இதுவரை ‘எஸ்’, ‘எல்’ ஆகிய இரு வகைகள் பிரிந்திருக்கின்றன. ‘எஸ்’ வகை பழையது. புதியதான ‘எல்’ வகைதான் சீனாவில் 70%-க்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது.
  • எப்போதும் புதிய வகை வைரஸ்களுக்குத் தீவிரம் அதிகம். எனவே, அவை உடலுக்குள் எளிதில் பெருக்கமடைவதுடன் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். ‘எல்’ வகைதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இருமிக்கொண்டோ தும்மிக்கொண்டோ இருப்பார்கள். அவர்களுக்கு அருகில் இரண்டு மீட்டர் தொலைவில் நின்றுகொண்டிருந்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • நோயாளிகள் இருந்த இடத்தில் நாம் இருந்தாலே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.
  • நோய்த் தொற்று கொண்ட ஒருவர் தும்மும்போது சிறு சிறு சளித் துளிகள் மேசையிலோ நகரும் படிக்கட்டின் கைப்பிடியிலோ படுகிறது எனில் சற்று நேரம் கழித்து அங்கே வரும் இன்னொருவர் அந்த இடங்களில் கை வைத்துவிட்டுத் தன்னுடைய வாய், கண், மூக்கு போன்ற உறுப்புகளை விரலால் தொட்டால் நோய்த் தொற்று ஏற்படலாம்.
  • கொரோனவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் அறிவியலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். விலங்குகளுக்குத் தடுப்பூசி கொடுத்து பரிசோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
  • ஒருவருக்கு கொரோனா தொற்றியவுடன் அறிகுறிகள் ஏதும் தென்படாது. 1-14 நாட்கள் வரைக்குள் அறிகுறிகள் தென்படலாம். சராசரியாக ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.
  • கொரோனா வைரஸ்கள் பெரும்பாலும் வன உயிர்களிடமிருந்து பரவுபவை. எடுத்துக்காட்டாக, சார்ஸ் வைரஸ் புனுகுப் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது.
  • மெர்ஸ் வைரஸ் ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. கொரோனாவுக்கு குறிப்பாக எந்த விலங்கிடமிருந்து பரவியது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
  • ஒரு பொருளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் எத்தனை மணி நேரம் தாக்குப்பிடிக்கும் என்பது பற்றி இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கவில்லை.
  • எனினும், இதுவரை கிடைத்த தகவல்களின்படி சில மணி நேரங்களிலிருந்து சில நாட்கள் வரை இந்த வைரஸ்கள் மனித உடலுக்கு வெளியே நீடிக்கும் என்று தெரிகிறது.
  • இது, எந்தப் பரப்பின் மீது வைரஸ் இருக்கிறது, அந்த இடத்தின் தட்பவெப்பம் எவ்வளவு என்பதையெல்லாம் பொறுத்துதான் அமையும். ஆகவே, அடிக்கடி தரையைக் கிருமிநாசினி திரவங்கள் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • கொரோனா வைரஸ் தொற்று எந்த அளவுக்குத் தீவிரம் கொண்டது என்பது குறித்து சீனாவில் ஆய்வொன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில் 80% பேர் மெலிதான அறிகுறிகளையே கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு நுரையீரலில் மெல்லிய தொற்று ஏற்பட்டிருந்தது. 15% பேருக்கு மோசமான அறிகுறிகள் வெளிப்பட்டன.
  • மூச்சுவிடுவதில் சிரமம், ரத்தத்தில் ஒக்ஸிசன் குறைவாகக் காணப்படுதல், நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் அவர்களிடம் தென்பட்டன. மேலும் 5% பேருக்குத்தான் மிக மிக மோசமான அறிகுறிகள் தென்பட்டன.
  • மூச்சுவிடுவதில் மிகவும் சிரமம், முக்கியமான உள்ளுறுப்புகள் சரிவர இயங்காதது போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன.
  • ஏற்கெனவே நுரையீரல் பிரச்சினைகளும் இதய நோயும் கொண்டவர்களின் நிலைதான் மிகவும் ஆபத்தாக இருக்கிறது.
  • கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்த்தல் நல்லது. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • நோய்த் தொற்று உள்ள பகுதிகள், மாநிலங்கள், நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கொரோனாவின் இந்த வீரியத்தை கட்டுப்படுத்துவது இப்போதைக்கு சாத்தியமற்றது என்றாலும், அதிலிருந்து பாதுகாப்பான முறையில் செயல்படுவது நமது செயல்பாடுகளில் தான் தங்கியிருக்கிறது.
பொதுவாக அதிகளவான மக்கள் கூடும் இடங்களில் இருந்து பாதுகாப்பான முறையில் செயல்படுவது சிறந்ததாகும்.

====================================================================



ஏடிஎம் மெசின்களிலிருந்தும் கொரோனா பரவும்! தற்போது வெளியான தகவல்....



கொரோனா வைரஸானது ஏடிஎம் மெசின்களிலிருந்தும் பரவும் ஆபத்து இருப்பதாக பூச்சியியல் முதுநிலை வல்லுனர் மணிவர்மா தெரிவித்துள்ளார்.
உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பில் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
இதுவரை 650 வைரஸ் உள்ள நிலையில் 651 வது வைரஸ் ஆக கொரோனா பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடம் இருந்தோ, பூச்சிகளிடம் இருந்தோ பரவுவதில்லை. சுத்தத்தை பேணாத மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவும்.
சீனாவில் சுத்தம் பேணப்படாமல் இருந்ததாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அங்கு கொரோனா வேகமாக பரவுகிறது.
சாதரணமாக ஒருவர் தும்மும் போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் மூச்சுத்துகள்கள் காற்றில் பயணிக்கும் என்றும், ஒரு மீட்டர் சுற்றளவுக்கு அந்த நோயானது பரவும்.
ஒரு கழிவறையில் இருக்கின்ற வைரஸ் கிருமிகளுக்கு இணையாக ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விரல்களால் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் வைரஸ் கிருமிகள் தேங்கி இருப்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.மில் பணம் மட்டும் அல்ல கொரோனா வைரஸ் கிருமியும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகையினால் முன் எச்சரிக்கையுடன் கையுறை பயன்பாட்டினை அதிகரித்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
=====================================================================
courtesy;IBCTAMIL   
  • S.P. Thas
  •   . tq.
    ===================================================================

    Q&A on coronaviruses (COVID-19)


    Coronavirus (COVID-19): UK government response


    Coronavirus (COVID-19) is a new strain of coronavirus first identified in Wuhan City, China in December 2019.
    Public Health England is working to contact anyone who has been in close contact with people who have coronavirus.
    Read the latest information about the situation in the UK, along with guidance for what to do if you think you’re at risk.
    Go to NHSUK/coronavirus for information about the virus and how to protect yourself. Use the 111 online coronavirus service to check if you need medical help.
    The government has published its coronavirus action plan and expanded its public information campaign.
    Read Public Health England’s blog posts about its response to coronavirus and how it uses contact tracing to prevent the spread of infection............





    ================================================================

    No comments:

    Post a Comment

      அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...