Birth and death are
manifestations of God's Leela. You cannot separate the two...................
எல்லா
உயிரும் அவர் அவர் முந்தய பிறவி வினைகளுக்கேற்ப பிறப்பெடுக்கின்றன..பிறப்பும்
இறப்பும் இறைவன் திருவிளையாடல் இதைப் பிரிக்க முடியாது. எம் மேனி மட்டும் அழிந்து
இன்னோர் உடல் எடுக்கும் மானிட ஆன்மா மரணமெய்தாது. அடுத்தவரை புண்படுத்தின் அடுத்த
பிறவி நிச்சயம்....
பொல்லா
வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
''எதை
அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை
அனுபவித்தே தீரவேண்டும்.--நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும்
வலியாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க
முடியும்?--”
''மேலும், துன்பத்தையும் வலியையும் முழுமையாக
அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை
முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும். ஆகவே இந்தத் துன்பத்தை
இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே.”
ஸ்ரீ சாயியின் உபதேஸம்.
==========================================
No comments:
Post a Comment