Followers

Monday, March 2, 2020


ஓம் ஸ்ரீ சாயி ஸம ஸர்வ மத ஸம்மதாய நமஹ |


எல்லா மதங்களையும் சமமாக ஏற்றுக்கொண்டவருக்கு நமஸ்காரம்.


My humble salutation to Him who preached and practiced the equality and oneness of all religions.........


இக் கதாமிருதம் சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள் பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவர். ........என்பது திண்ணம்....


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.................
Image may contain: 1 person



இது வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று; சந்திரகாந்தக் கல் ஆகும். இதிலிருந்து ஸாயீயின் கதைகள் என்னும் சந்திரனுடைய அமிருதம் சதா பொழிந்துகொண்டே யிருக்கிறது. தாகம் கொண்ட சகோரப் பட்சிகளை ஒத்த பக்தர்கள், மனம் நிறையும் வரை அருந்தித் திருப்தியடைவீர்களாக.....


அன்பார்ந்த நேயர்களே இப்பொழுது ஸாயீயின் புனிதமான கதைகளை மனமொன்றிச் சுணக்கமேதுமின்றிக் கேளுங்கள். கலியுகத்தின் மலங்களை எரித்துவிடும் சக்திவாய்ந்தவை இக் கதைகள்.


ஸாயீயிடம் அனன்னிய நிட்டை ஏற்பட்டுவிட்ட பக்தனின் விருப்பங்களை எல்லாம் ஸாயீ நிறைவேற்றிவைக்கிறார்; விரும்பாதவற்றையும் கஷ்டங்களையும் நிவாரணம் செய்துவிடுகிறார் இது சத்தியம்.


Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"


இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..


ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq


ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................


97.ஓம் ஸ்ரீ சாயி ஸம ஸர்வ மத ஸம்மதாய நமஹ |


எல்லா மதங்களையும் சமமாக ஏற்றுக்கொண்டவருக்கு நமஸ்காரம்.


OM SAMA SARVAMATA SAMMATAYA NAMAH
ॐ समसर्वमतसंमताय नमः


My humble salutation to Him who preached and praticed the equality and oneness of all religions.


மதத்தால் பிளந்துகிடந்த பாரததேச மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒன்றுபடச் செய்து மேன்மையுறச் செய்வதற்காகவே இறைவன் எடுத்த அவதாரம் ஸ்ரீ சிர்டீ ஸாயீபாபா. அவருக்கு இரண்டு ஆண்டுகள் முந்திப் பிறந்த குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகத்திற்கு அளித்த போதனையும் "ஸர்வ மத ஸம்மதமே'. தமிழ்நாட்டின் ராமலிங்க அடிகளும் அவ்வாறே.


page 46 of 52


ஒப்பு நோக்குக :-


1. ""மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு''


""புத்தர் பிரானருள் பொங்கிய நாடு


பாரத நாடு பழம்பெரு நாடே''


எனப் புதுவைக்குயில் பாரதியாரால் பெருமையாகப் பேசப்படுவது நம் இந்தியத் திருநாடு. இந் நாட்டில் பண்டுதொட்டு முனிவர் பலர் தோன்றி, நாட்டு மக்கட்கு நன்னெறி காட்டி மறைந்துள்ளனர்.


அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மூவர் தோன்றி இறைநெறியையும் நன்னெறியையும் மக்கட்குப் புகட்டிப் பொன்றாப் புகழ் அடைந்தனர்.


இம் மூவருள் தமிழ்நாட்டில் தோன்றிய இராமலிங்க அடிகள் (கி.பி. 1823 - 74) முந்தையவர் ஆவார். இவர் ஒளி வழிபாட்டினை உலகுக்கு உணர்த்தியவர்; வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாட்டமுற்றவர்; சமரச சன்மார்க்கம் கண்டு பரப்பியவர்; வடலூரில் சத்திய ஞான சபையையும் தருமச் சாலையையும் ஏற்படுத்தியவர்; கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக விழைந்தவர்; திருவருட்பாப் பாடிய செம்மல்.


இவரை அடுத்து வங்காளத்தில் இராமகிருட்டினர் தோன்றினார் (கி,பி, 1836 -86). காளிகோயில் பூசாரியான இவர், இறையன்பில் மூழ்கித் திளைத்தவர்; அடிக்கடி சமாதிநிலை அடைந்து தம்மை மறந்தவர்; நாத்திக மனப்பான்மை கொண்ட நரேந்திரரைத் தம்பால் ஈர்த்துக் கட்டிப் போட்டவர். சுவாமி விவேகானந்தராக ஆகிய நரேந்திரர், வடஅமெரிக்க நாட்டுச் சிகாகோ நகரில் கி.பி. 1893ல் நடந்த அனைத்துலகச் சமய மகாநாட்டில் இந்தியாவின் பெருமையையும் இந்துமதத்தின் பெருமையையும் பறைசாற்றினார்; உலக முழுவதும் இராமகிருட்டின மடங்கள் தோன்றக் காரணமாய்த் திகழ்ந்தார்.


மூன்றாவதாக, மகாராட்டிர மாநிலத்தில் நம் சாயி பாபா கி.பி. 1838ல் தோன்றினார். இந்துவாகப் பிறந்தாலும் இசுலாம் சமயத்தைச் சார்ந்தவரால் வளர்க்கப்பட்டார். முந்தைய இருவரும் மணஞ் செய்து கொண்டவர்கள் எனினும் துறவியராகவே வாழ்ந்தார்கள். இவரோ பிள்ளைப் பருவத்திலிருந்தே துறவியாக வாழ்ந்தவர்.


page 47 of 52


இந்துமதம், இசுலாமிய மதம் இரண்டினையும் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தார்; 1918ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர் காட்டிச் சென்ற நெறி உலக முழுதும் பரவிவருகின்றது.


இராமகிருட்டினருக்கு ஒரு விவேகானந்தர் கிடைத்ததுபோல், மற்ற இருவருக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தக்கவர் கிடைக்கவில்லை. எனினும், இன்று உலக முழுதும் பரவும் வாய்ப்பு உருவாகிவருகின்றது.


மூன்று பெரியார்களும் சித்தி கைவரப் பெற்றவர்கள்; அன்பு நெறியைப் பரப்பியவர்கள்; மக்கட்கு நன்னெறியைப் புகட்டியவர்கள். சாயி செய்த சித்திகளும், வருவதுரைக்கும் திறனும், ஆற்றிய மக்கள் தொண்டும் அவர் புகழைப் பரப்பின; மக்களை அவர்பால் ஈர்த்தன.


அவர் ஆற்றிய விந்தைச் செயல்கள் பலப்பல. காணாமற் போன குதிரையைத் தேடி அலைந்த சாந்துபாய் பாடீலுக்கு, அஃது இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினார்.


மனக்கவலை கொண்டோரும் பிணியுற்றோரும் பாபாவை நாடிச் சென்றனர். பகலவனைக் கண்ட பனி போலக் கவலைகளும் பிணிகளும் அகன்று இன்புற்றனர்.


ஸ்ரீமத் ஸாயீராமாயணம் -- மதிப்புரை (பகுதி) -- புலவரடல் அ. நக்கீரன்.


வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 16 தொடர்கிறது……….
*
*
*


=====================================


எப்பொழுது நான்முகன், 'நான் ஈசுவரன், நான் அனைத்தையும் நிர்வகிப்பவன்ஃ என்று நினைத்துத் தம்முடைய உண்மையான நிலையை மறந்துவிடுகிறாரோ, அப்பொழுதே இப் பிரபஞ்சம் சிருஷ்டி செய்யப்படுகிறது.


82 ஆனால், 'நானே பிரம்மமாக (முழுமுதற்பொருளாக) இருக்கிறேன்ஃ என்ற ஞானம் உதிக்கும்போது, அறிபவர் பிரம்மத்தோடு ஐக்கியமாகிவிடுகிறார்; அக்கணமே இப் பிரபஞ்சமென்னும் மாயை தூக்கியெறியப்படுகிறது. இங்ஙனம் வேதங்கள் மொழிகின்றன.


83 எப்பொழுது ஒருவர் பிரம்மத்துடன் ஐக்கியமான உணர்வுடன் 'தன்னையறிந்துஃ கொள்கிறாரோ, அப்பொழுது இப்பிரபஞ்சம் பிரம்மமாகிய அக்கினிக்கு ஆஹுதி (படையல்) ஆகிவிடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சம் சாம்பலாகிப்போகிறது.


84 மற்ற ஜீவன்களுக்கும் இதே நிலைதான். அவர்களுடைய பிரமைகள், சூரிய ஒளி வந்தபின் பாம்பு மற்றும் வெள்ளி போன்ற இருட்டுநேர பிரமைகள் விலகுவது போன்று, உடனே விலகிவிடுகின்றன. (கயிறு பாம்பாகவும் கிளிஞ்சல் வெள்ளியாகவும் தெரிவது பிரமை.)


85 கிளிஞ்சல் என்று தெரியாத அறியாமை, வெள்ளியோ என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது. வெள்ளியைப்பற்றிய உண்மையான ஞானம், நாம் பார்த்தது கிளிஞ்சல்தான் என அறிந்துகொள்ள வைக்கிறது. அந்தக் கணத்தில் வெள்ளியென்னும் மாயை மறைந்து கிளிஞ்சல் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிகிறது.


86 அஞ்ஞானத்தால் ஒன்றை மற்றொன்றாக அறியும் நிலைமை இது. ஞானதீபத்தைத் தேய்த்துத் துலக்கிச் சுத்தம் செய்து அஞ்ஞான மலத்தை அகற்றுங்கள். எல்லா பிரமைகளும் ஒழிந்துவிடும்.


87 பிறப்பு, இறப்பு, என்னும் பந்தங்கள் இல்லையென்றால் மோக்ஷத்திற்கு நிர்ப்பந்தம் என்ன இருக்கிறது? வேதாந்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிரபந்தம் (நூல்) எதற்காக?


88 'நான் கட்டுண்டிருக்கிறேன்; விடுதலை பெற வேண்டும்;ஃ என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருப்பவரே பிரம்ம ஞானம் தேடுவதற்கு அதிகாரியாவார்; சுத்தமான அஞ்ஞானியோ அல்லது முற்றுமுணர்ந்த ஞானியோ அதிகாரி அல்லர்.


89 கட்டுகளே இல்லாதபோது எதி­ருந்து விடுதலை பெறுவது? இதுவே வாஸ்தவமான நிலைமை. முக்குணங்களின்1 சம்பந்தத்தாலேயே பந்தமும் முக்தியும்; இதுவே அனைவருடைய அனுபவமும்.


90 துவைத பா(ஆஏஅ)வமே இல்லையென்றால் யார் கட்டுகிறார், யார் விடுதலையடைகிறார்? துவைத பாவனை அத்துவைத பாவனையால் மறைந்துவிடும்போது, அங்கு எவரும் கட்டுண்டில்லை; எவரும் விடுதலை செய்யப்படுவதும் இல்லை.


91 பகலும் இரவும் சூரியனால் உற்பத்தி செய்யப்படுபவையா என்ன? அது நம் பார்வையின் தோஷத்தினால் ஏற்படும் விவகாரம். சூரியன் எங்கோ இருக்கிறது; நம்முடைய பார்வையால் பாதிக்கப்படுவதில்லை.


92 சுவர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் இன்னல்களும் 'நானே கர்த்தா, நானே போக்தா (அனுபவிப்பவன்)ஃ என்ற உணர்வோடு அனுபவிக்கப்படும்போது ஆசைகளின் மீதுள்ள பிடிப்பு அதிகமாகிறது.


93 ஆத்மா நித்தியமானது; புராதனமானது; அழிவேயில்லாதது. ஆத்மாவிற்கு ஜனனமரணங்கள் கிடையாது. ஓங்காரமே அதனுடைய சின்னம். அது ஆரம்பமும் முடிவுமில்லாதது; எப்பொழுதும் நிலைத்திருப்பது.


94 எவர் சரீரத்தையே ஆத்மாவென்று நினைக்கிறாரோ, தாம் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று நினைக்கிறாரோ, அவருக்கு எவ்வளவு முயன்றாலும் ஆத்ம அனுபவத்தால் கிடைக்கும் ஞானம் என்றும் கிடைக்காது.


95 பேச்சு மற்றும் எல்லா இந்திரியங்களையும் வென்றுவிடு; மனத்தில் உறுதியை ஏற்றுக்கொள்; மனத்தின் அனிச்சைச் செயல்களை அழித்துவிடு; புத்தியை உறுதியாகப் பற்றிக்கொள்.


96 புத்தி ஒளிமயமான ஞானத்தையளிக்கிறது; அதன்மேல்தான் மனம் ஒருமுகப் படுத்தப்பட வேண்டும். ஏனெனில், மனம் உட்பட எல்லா இந்திரியங்களும் புத்தியினுடைய ஸ்வாதீனத்தில்தான் இருக்கின்றன.


97 குடத்திற்கு ஆதிகாரணம் களிமண்ணே; அதே ரீதியில்தான் இந்திரியங்களுக்கு புத்தியும். புத்தியே இந்திரியங்களின் சாசுவதமான நிலையாகும். புத்தியினுடைய வியாபகம் அவ்வளவு பெரியது.


98 எங்கும் வியாபித்திருக்கும் சக்தியால், அது, மனம் உட்பட்ட எல்லா இந்திரியங்களையும் வியாபித்துவிடுகிறது. ஆகவே, புத்தியை மஹத் தத்துவத்தில் (எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச உணர்வு) கொண்டுபோய்ச் சேர்த்துவிடு; மஹத் தத்துவத்தை ஆத்மாவில் ஸமர்ப்பணம் செய்துவிடு.


99 இவ்வாறு அனைத்தையும் ஒன்றுசேர்த்துவிட்டால், ஆத்மஸ்வரூபம் நிர்த்தாரணம் ஆகிறது (உன்னையே நீ அறிகிறாய்). அதன்பிறகு, கிளிஞ்ச­ல் காணப்படும் வெள்ளியும், பாலைவனத்து மண­ல் தெரியும் கானல் நீரும், கயிற்றில் இருக்கும் பாம்பும் நம்முடைய பார்வையிலுள்ள கோளாறே என்பது தெரிந்துவிடும்.
=====================================


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.


ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 16
*
*
*
===========================


Qualifications for Brahma-Jnana or Self-Realization


All persons do not see or realize the Brahman in their life-time. Certain qualifications are absolutely necessary. (1) Mumuksha or intense desire to get free. He, who thinks that he is bound and that he should get free from bondage and works earnestly and resolutely to that end;and who does not care for any other thinks, is qualified for the spiritual life. (2) Virakti or a feeling of disgust with the things of this world and the next. Unless a man feels disgusted with the things, emoluments and honors, which his action would bring in this world and the next, he has no right to enter into the spiritual realm. (3) Antarmukhata (introversion). Our senses have been created by God with a tendency to move outward and so, man always looks outside himself and not inside. He who wants self-realization and immortal life, must turn his gaze inwards, and look to his inner Self.


(4) Catharsis from (Purging away of) sins. Unless a man has turned away from wickedness, and stopped from doing wrong, and has entirely composed himself and unless his mind is at rest, he cannot gain self-realization, even by means of knowledge. (5) Right Conduct. Unless, a man leads a life of truth, penance and insight, a life of celibacy, he cannot get God-realization. (6) Preferring Shreyas, (the Good) to Preyas (the Pleasant). There are two sorts of things viz., the Good and the Pleasant; the former deals with spiritual affairs, and the latter with mundane matters. Both these approach man for acceptance. He has to think and choose one of them. The wise man prefers the Good to the Pleasant; but the unwise, through greed and attachment, chooses the Pleasant. (7) Control of the mind and the senses. The body is the chariot and the Self is its master; intellect is the charioteer and the mind is the reins; the senses are the horses and sense-objects their paths. He who has no understanding and whose mind is unrestrained, his senses unmanageable like the vicious horses of a charioteer, does not reach his destination (get realization), but goes through the round of births and deaths; but he who has understanding and whose mind is restrained, his senses being under control, like the good horse of a charioteer, reaches that place, i.e., the state of self-realization, when he is not born again. The man, who has understanding as his charioteer (guide) and is able to rein his mind, reaches the end of the journey, which is the supreme abode of the allpervading, Vishnu (lord).


(8) Purification of the mind.


Unless a man discharges satisfactorily and disinterestedly the duties of his station in life, his mind will not be purified and, unless his mind is purified, he cannot get self-realization. It is only in the purified mind that Viveka (discrimination between the Unreal and the Real), and Vairagya (Non-attachment to the unreal) crop up and lead on the self-realization. Unless egoism is dropped, avarice got rid of, and the mind made desireless (pure), selfrealization is not possible. The idea that 'I am the body' is a great delusion, and attachment to this idea is the cause of bondage. Leave off this idea and attachment therefore, if you want to get to the Self-realization. (9) The necessity of a Guru. The knowledge of the self is so subtle and mystic, that no one could, by his own individual effort ever hope to attain it. So the help of another person-Teacher, who has himself got self-realization is absolutely necessary.


What others cannot give with great labour and pains, can be easily gained with the help of such a Teacher; for he has walked on the path himself and can easily take the disciple, step by step on the ladder of spiritual progress. (10) and lastly the Lord's Grace is the most essential thing. When the Lord is pleased with any body, He gives him Viveka and Vairagya; and takes him safe beyond the ocean of mundane existence, "The Self cannot be gained by the study of Vedas, nor by intellect, nor by much learning. He, whom the Self chooses, by him It is gained. To him the Self reveals Its nature", says the Katha Upanishad.
==============================
Bow to Shri Sai -- Peace be to all


To be continued............


வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 16 தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/


என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
/
/
/


ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH


Sai Samarth...........Shardha Saburi


Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=


''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"


ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ


சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!


======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...