Come what may, leave not, but stick to your Guru and be in union with Him.
எச்சூழ்நிலையிலும், எதுவரினும், உனது சற்குருவையே இறுகப்
பற்றி அவரின் சிந்தனையிலே மூழ்கிவிடு வெற்றி நிச்சயம்.
Be a seeker for the truth and cultivate "loving devotion". You
will attain stability and peace of mind.
''பக்தியில்லாத ஜபமும் தவமும் விரதங்களும் யோகஸாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும் பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்துமே) வீண். வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே தேவை.-- அதுவே உம்முடைய மனத்தை உறுதிப்படுத்தி கம்பீரமாக்கும்; எல்லா உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லை எனில், மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டு அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்…..

Where there is no fear, no afflictions and no worries, that is truely the
Divine heavenly state. எங்கு அச்சம், வருத்தம், கவலை ,ஆகிய பற்றுக்கள் இல்லையோ அங்கு பரிபூரண தெய்வீக ஆனந்தம் நிலவும். ''யார் ஒருவர் தன்
இருகரங்களையும் குவித்து ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் ஏழு
கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன. எவர்கள் என்னுடைய
இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.”
Why fear when I am here?
Why should one be afraid of anyone, if there is no evil thought in him?-sai baba
Why should one be afraid of anyone, if there is no evil thought in him?-sai baba
I am formless and everywhere,,,, “God is not so far away. He is not in the
heavens above, nor in hell below. He is always near you.”------------sai baba
om sainathaya namaha
Ignorance is the source of Maya. Remove Maya and self-realisation will come
naturally.
'ஸத்யம் ஞானம் அநந்தம்
ப்ரஹ்ம.ஃ (முழுமுதற்பொருள் ஸத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது.) மாயையும் அவித்யையும்
மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரமைகள் விலக்கப்படுகின்றனவோ, அப்பொழுதுதான்
ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும். ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும்
தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.
By going away to a forest, you cannot escape Samsara (world).
“வாழ்வைத் துறந்து
வனத்திற்கு சென்றாலும் சம்ஸார உலக பந்தங்களிலிருந்து தப்ப முடியாது, எதை நீ விதைத்தாயோ அதையே
நீ அறுவடை செய்கிறாய், போன ஜன்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறாய், கர்மவினையின் விளைவுகளை
அனுபவித்துத்தான் இவ் உடலை துறக்க வேண்டும், ஆனால் என்னை நம்பியவனை எதையும் தாங்கும் சக்தியை தந்து
நான் என்றும் வழிகாட்டிக் காப்பேன்.”

No comments:
Post a Comment