
காதலர் தின
வாழ்த்து
திருமணத்துக்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்துக்கு
பின் தன் துணையை காதலிப்பவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும், காதலில்
வெற்றிப் பெற்றவர்களுக்கும் என அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள்.
காதல்னு சொன்னா எப்பவும் எனக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு தான் நியாபகத்துக்கு
வரும்.
ஆசிரியர், மாணவர்களிடம் காதலுக்கும், அன்புக்கும்
என்ன வித்தியாசம்னு கேட்கிறார்.
அதற்கு ஒரு
மாணவன், சார்
நீங்க உங்க பெண்ணிடம் வைத்திருப்பது அன்பு.
நான் உங்க
பெண்ணிடம் வைத்திருப்பது
காதல்னு சொல்றான்.
எல்லோரிடமும்
உண்மையாக இருப்பவன்.
=================================================
காதலர் தின கிறுக்கல்கள்
உலகில் காதலர்களுக்கெல்லாம் இன்று
காதலர் தினம்- காதலை
உதறித் தள்ளும் எனக்கும் உன்னக்கும்
இன்று என்ன தினம்?
.............................
காதலர்கள் மட்டும் காதலைக்
கொண்டாடலாம்- ஆனால்
காதலர்களை காலத்திற்கு ஒரு தரம்
மாற்றும்
நீயும் நானுன் மாத்திரம் எதைக்
கொண்டாடலாம்?
...............................
அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!
................................
கண்ணும் கண்ணும் பேசியது அந்தக் காலம்
பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி
ஊர் சுற்றி பிள்ளை வாங்கி அழிப்பது
இந்தக் காலம்!
.................................
அடியே உனக்குத் திருமணமா?
அதனையேன் இப்படி விம்மி வெடித்துக்
கண்ணீரோடு சொல்கிறாய்;
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;
ஆதலால் நோ பீலிங்ஸ்!
....................................
உன் பார்வை என்னும் சுனாமி வைரஸ்ஸை
எதிர்க்க
உலகில் இதுவரை எந்தவொரு அன்ரி
வைரஸ்சுகளும் இல்லை!
........................................
கோபத்தில் நீ பாத்திரங்களை உருட்டும்
போது தான் தெரிகிறது
என் மெமரியும் அடிக்கடி ஸ்ரக்(Stuck) ஆகிறது எனும் உண்மையும்.
..........................................
நிலா வெளிச்சத்தில் நீ அழகு என்றோர்
அசிங்கமான பொய்யை சொல்ல மாட்டேன்;
உன்னை உள்ளூர ரசித்த பிறகு பொய்யெதற்கு?
உதறித் தள்ளுவதற்கா?
உடனே போய்க்கிட்டிருப்பேன்:))
..........................................
காதலி அடுத்த சந்திப்பிற்கு வரும்
போதாவது
நீ ஐந்தாறு தொலை பேசி கொண்டு வருவதை
நிறுத்தி விடு
நீயும் நானும் பேசும் போது அவை
எழுப்பும்
அசிங்க ஒலிகளை என்னால் கேட்க
முடியாதுள்ளது.
.............................................
உனக்கு ஒவ்வோர் நம்பருக்கு ஒருவனா?
உன் சிம் கார்ட்டை போல
நீ என்னையும் கழற்றி வீசப் போகிறாய்
எனச் சொன்ன போது தான்
இந்த உண்மையும் புரிந்தது-:)
இன்றைய தினம் காதலர் தினத்தைக்
கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
My dearest friend / friends
I wish all of you a Happy Valentine's Day!!
அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் vicknasai.
======================================================
No comments:
Post a Comment