மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விட, காதல் மேன்மையான உணர்வு. தாயுணர்வையும் தாண்டியது தான் இந்த காதல்
உணர்வு.அப்பா, அம்மாவை தேர்ந்தெடுக்கும் உரிமை எப்படி நமக்கில்லையோ, அது போல, இவரிடம் தான் காதல் வர வேண்டும் என்பதை வரையறுக்க முடியாது..................
அன்புறவுகள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
தமிழன் என்று சொல்லடா!!!
காதலர்கள் தினம் மேற்கத்திய திருவிழா என்று
நினைத்திருப்பதை, அறியாமை என்கிறது ஒரு வரலாற்று சான்று. 2500 ஆண்டுகளுக்கு முன், இந்திர விழா, காதல் விழா, காமன் விழா என்ற பெயர்களில், காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்தது.
தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்கவில்லையென்றால்
ஆண் மடலேறுவது, அந்தக் கால பழக்கம். இந்த காலத்தில் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும்
கிடைக்கக் கூடாது எனச் செயல்படுவது, பழக்கமாகி விட்டது.
மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விட, காதல் மேன்மையான உணர்வு. தாயுணர்வையும் தாண்டியது தான் இந்த காதல்
உணர்வு.அப்பா, அம்மாவை தேர்ந்தெடுக்கும் உரிமை எப்படி நமக்கில்லையோ, அது போல, இவரிடம் தான் காதல் வர வேண்டும் என்பதை வரையறுக்க முடியாது.
காதல் உணர்வுக்கு, எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பருவத்திலும், பருவம் தாண்டியும் தோன்றி, மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதல். ஏதோ ஒரு
சமயத்தில் நமக்கு ஆறுதலாக இருந்த உறவுகள், ஆயுள் முழுவதும் நம்முடன் ஆறுதலாக இருப்பர் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கை
வைப்பது, நம் முட்டாள்தனமே. இதனால் நடத்தப்படும் கொலைகளும், தற்கொலைகளும், வன்முறையும், தடுக்கப்பட வேண்டும்.
காதல் நகரம் காதலர் தினத்தைக் குறிக்கும், வாலன்டைஸ், லவ்லேண்ட் என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.
முதல்,'கார்டு' இங்கிலாந்தில், 1415ல், 'டியூக் ஆப் ஆர்லீன்ஸ்' மன்னர், பிரான்ஸ் நாட்டிலிருந்த தன் மனைவிக்கு, தானே வாழ்த்து அட்டையைத் தயார் செய்து, அதில், ஒரு காதல் கவிதையை எழுதி அனுப்பினார். இதுதான் முதல் காதலர் தின வாழ்த்து
அட்டை!
உண்மையான காதல் பெண் என்பவள் வெறும் உடல் மட்டும்
தான் என்ற சிந்தனையை, சமூகத்தில் இருந்தும்; தங்கள் உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும், பெண்களிடமிருந்தும்; பெண் என்றால் ஏற்படும் ஒரு மாயையான பிரமிப்பை, ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது தான், உண்மையான காதலுக்கு உருவம் உண்டாகும்.
அவரவர் விருப்பம் காதலோ, காதலர் தினமோ நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். அது நம்
விருப்பம்; உரிமை. அதேபோல், பிறர் காதலிப்பதும், அவரவர் உரிமை. காதலர் தினம் கொண்டாடுவதும், அவரவர் உரிமை. இதில் தலையிடுவதோ, நம் காதல் மறுப்பு கொள்கையை திணிப்பதோ சரியாக
இருக்காது.
முக்கியமாக, வன்முறையாக தம் எதிர்ப்பைக் காட்டுவது, மிக மிகத் தவறு. ஒரு பெண்ணின், ஆணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவை பற்றி, மற்றொரு பெண்ணோ, ஆணோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமை கிடையாது.
அடையாளம் காதலர் தினத்தின் அடையாளமாக பலரும்
நினைப்பது வில், அம்பு மற்றும் இறக்கையுடன் கூடிய குழந்தை. அதன் பெயர், 'கியூபிட்!' ரோமானியர்களின் காதல் தெய்வம் வீனஸ் மற்றும் போர் தெய்வம் மார்ஸ்சின் குழந்தை
தான், 'கியூபிட்' என, இதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. பிப்ரவரி காதல் திருவிழாவின் அடையாளமாக
பார்க்கப்படுகிறது.
சிறந்த இடம் உலகம் முழுவதும் காதலர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு காதலரும், இத்தினத்தை ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். சிலர் விரும்பிய இடங்கள், விரும்பிய பொருட்கள், உணவு என பரிசளிக்கின்றனர். இந்தியாவில் காதலர்கள் அதிகம் விரும்பும்
இடங்கள்: ஷில்லாங் - - மேகாலயா, கோவா -- கோவா, உதய்பூர் -- ராஜஸ்தான், ஊட்டி - - தமிழகம், ஸ்ரீநகர் -- காஷ்மீர்.
காதல் ஜோசியம்
மேஷம் - நிச்சயம் காதலிப்பர்; காதலிக்கப்படுவர். காதலிக்க ஏற்ற குணம். எண்ணம்
முரண்டு பிடிக்கும்.
ரிஷபம் - எளிதில் கவர்ந்து காதலிக்க வைக்கப்படுவதில்
கில்லாடி. தூய்மையான காதலுக்கு சொந்தக்காரர்.
மிதுனம் - தங்களையே காதலிக்கும் இயல்பு குணம் உண்டு.
பிற காதலை ஏற்க, ரொம்ப யோசிப்பர்.
கடகம் - வேண்டாமென ஒதுங்கிப் போய் விடுவர். தானாக
தவிர்ப்பதால், தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்வர்.
சிம்மம் - காதலை மகத்துவமாய் எடுத்துக் கொள்வர்.
இதயத்தில் இருக்கும் சிறந்த காதலை, வெளிப்படுத்த தெரியாது.
கன்னி - அன்போடு, கடமை உணர்வும் கொண்டவர்கள்; யோசித்தே காதலில் ஈடுபடுவர்.
துலாம் - கை வந்த கலை, காதல். எளிதாக காதல் வாய்க்கும்; ஆனால் திருமணத்தில்முடியாது.
விருச்சிகம் - காதலை அதிகம் காதலிப்பர்; தன்னை பிறர் காதலிக்க வேண்டும் எனகாத்திருப்பர்.
தனுசு - திறமையாக காதலை கையாண்டு, வெற்றி பெறுவர்; ஆயுள் முழுவதும், காதலிலேயே வாழ்க்கையை செலவழிப்பர்.
மகரம் - காதல் இல்லாமல் இருக்க முடியாதவர்; காதலுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்.
கும்பம் - உண்மை, உயிர் என காதலை கொண்டாடுபவர்; புரிந்து கொள்வதும்,புரிந்திருப்பதுமே காதல் என நம்புவர்.
மீனம் - அன்பும், பொறுமையும் நிலைத்திருப்பது போல், காதலும் அதில் வெற்றியும் நிலையாய் பெறுபவர்; அன்பிற்காக அனைத்தையும் இழப்பவர்.
அன்பும் நன்றியும் சகோதரி-- ம.வான்மதி -
அன்புறவுகள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
===========================================
No comments:
Post a Comment