Followers

Thursday, February 13, 2020


அவளும் நானும்...அமுதும் தமிழும்..இன்று காதலர் தினம்...............


இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள் தோழமைகளே......


=======================================
அவளும் நானும்...அமுதும் தமிழும்..இன்று காதலர் தினம்....


காதல் என்று சொல்லும் போதே நெஞ்சமெல்லாம் பரவசம் ஏற்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இரு இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல்.
உலகம் முழுவதும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்., 14ல் 'காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் பரிசுகள், வாழ்த்து அட்டைகள் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
சிலர் காதலிப்பவர்களிடம், தங்களது காதலை தெரிவிப்பதற்காகவும் இந்நாளை பயன்படுத்துகின்றனர்.காதல் பற்றி தமிழ் இலக்கியங்களான திருக்குறள், குறுந்தொகை, ஐங்குறுநூறு, புலவர்கள், கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக விவரிக்கின்றனர்.


எப்படி வந்தது
'காதலர் தினம்' உருவான கதை சுவராஸ்யமானது. காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். 14ம் நூற்றாண்டில் ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்களத்திற்கு அழைத்தார்.
இதற்கு வரவேற்பு இல்லாததால் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில்தான் வேலன்டைன் தினம் 'காதலர்
தினமாக' மாறியது.


'அவசர' காதல்...................


இன்றைய காதலர்கள் வாழ்க்கை பற்றி எவ்வித தெளிவான கருத்தும் இல்லாமல் அழகு, பணம், வேலை போன்ற காரணங்களை பார்த்து அவசரப்பட்டு காதலில் விழுகின்றனர். இந்த காதல் விரைவில் வீழ்ந்து விடுகிறது.
விபரீத காதலையும் பார்க்க முடிகிறது. தன்னை காதலிக்காத குற்றத்திற்காக பெண்ணிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. இந்நிலை மாற வேண்டும். விரும்புவதை அடைவதற்கு காதல் ஒன்றும் கடைப் பொருள் அல்ல. பள்ளிப்பருவத்தில் கூட காதல் வருகிறது. இது ஒருவிதமான ஈர்ப்பே தவிர; காதலாக இருக்க முடியாது.


எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்ள காதலி அல்லது காதலன் கிடைத்துவிட்டால், அந்த வாழ்க்கை தமிழ் போல் அமுதமாய் இனிக்கும். இதுபோன்ற துாய்மையான காதலுக்கு 'ஜே' சொல்வோம்.
'காதல் சாம்ராஜ்யம்'


வேற்றுமை கடந்து ஒற்றுமை ஏற்படுத்தும் சக்தி காதலுக்கு உண்டு. காதலிக்கு கோட்டை கட்டியதும்; காதலர்கள் கல்லாய் மாறிய கதைகளும் நம் நாட்டில் தான் உலா வருகின்றன. காதலுக்கு இந்தியா தரும்
முக்கியத்துவம், இமயம் போன்றது.


courtesy of Dinamalar. tq
=========================================


Friendship is all about understanding. It is all about forgiving. It is all about fighting and then finding it so hard to stay angry. Moreover it is about loving unconditionally. Happy Valentines day my friend(s)........


கண்டதும் மையல் அவனிடத்தில் ,
காத்ததும் மையல் அவளிடத்தில் ,
பூத்தது மையல் இருவரிடத்தில் ,
தெரிந்தது மையல் பெற்றோரிடத்தில் ,
முறிந்தது மையல் இவர்களிடத்தில்,
சடலமாய் அவனோ கல்லறையில் ,
கல்மனதோடு அவளோ மணவறையில் ,
இருப்பினும்
வாழ்கிறது மையல் இவர்களிடத்தில்...!!!!


எழுதியவர் : கிருஷ்ணா
நன்றி சகோ.


இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள் தோழமைகளே......


மலையேற்றம்!


எனக்குள்
எப்படி பரப்பினாய்
பாறைகள் துளைத்து
பூக்கும் உன் வேர்களை!


என்னை
ஒரு மலைவாசியாக்கி விட்டது
உன் காதல்!


வளைத்து வளைத்து
அழைத்துப் போகிறது
உன் கொண்டை ஊசி வளைவு!


பறவைகள் காற்றில் இறைக்கும்
இசைத் துணுக்குகளை
எனக்குள் ஒலிபரப்புகிறது
உன் பேச்சு!


அருவியை அவிழ்த்து விடுகிற
உன் கூந்தலிலிருந்து
தெறிக்கிறது சாரல்!


பெயர் தெரியாத பூக்கள்
அசைகின்றன
சரிவுகளில்
என்மீது
மூடுபனியாய் கவிகிறது
உன் புன்னகை!


மர்மம் துழாவும்
உன் நிழற்பகுதிகளை
துழாவுகிறது மனசு!


பயம் கலந்த ஆவலோடு
நின்று கொண்டிருக்கிறேன்
உன் அழகின்
தற்கொலை முனையில்!


உடைந்த
வளையல் துண்டுகளையாவது
கொடுத்து விட்டு
போ!


கலிடாஸ்கோப்பில்
உன்னை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்!


courtesy of — பழநிபாரதி tq sako.


Good Morning dearest Frnds..................
Boyfriends come and boyfriends go
Girlfriends come and girlfriends go
But friends are forever
Happy Valentine's Day ...


அன்புத்தோழர்களே...........


I know this day is meant for girlfriends and boyfriends, but I still want to wish you a Happy Valentine's Day because you are a special friend(s) in my life.............


இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள் தோழமைகளே......


====================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...