Followers

Wednesday, February 19, 2020




'சாமி கிட்ட போன பாட்டி, எப்போ வருவாங்க...' என்று கேட்டு, தினமும் நச்சரித்த அபிஷேக்கிற்கு, பாட்டி இறந்து போனதை புரிய வைக்க முடியவில்லை. இரவில் அவனை தூங்க வைப்பது பெரும்பாடாக இருந்தது......................


எல்லோர்க்கும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே.......................


கதை சொல்ல ஒரு பாட்டி!.............


'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... ஒரு காட்டுல, சிங்கம் இருந்துச்சாம்...' என, தினமும் ஒரு கதை கூறி, தன் பேரனை தூங்க வைப்பாள் பாட்டி. ஒன்றாம் வகுப்பு படிக்கும் அபிஷேக், கதை விறுவிறுப்பாக இருந்தால், தூங்காமல் விழித்திருப்பான்; இல்லை என்றால் அடுத்த சில நிமிடங்களில் தூங்கி விடுவான்.
காலையில் பள்ளிக்கு கிளம்பும் அபிஷேக், உணவு ஊட்டும் அம்மாவிடம், பாட்டி கூறிய கதையை, ஒப்பித்தபடியே சாப்பிடுவான்.


'ஓ... அப்படியா... சரி அப்புறம் என்னாச்சு...' என்றபடியே தோசையை ஊட்டுவாள் அம்மா மணிமேகலை.
பாட்டி கூறும் ஒவ்வொரு கதையும், யோசிக்கத் தூண்டும் விதத்தில் இருந்ததால், சுறுசுறுப்பாகவும், சிந்திக்கும் திறனையும் பெற்றிருந்தான் அபிஷேக்.
அன்று, பாட்டிக்கு இரண்டாவது, 'ஹார்ட் அட்டாக்!' அவளை மருத்துவமனையில் சேர்த்து, ஆனந்தும் அவன் மனைவி மணிமேகலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். இச்சமயத்தில், 'பாட்டி கதை சொன்னாத் தான் தூங்குவேன்...' என்று அடம்பிடித்தான் அபிஷேக். அவர்களுக்கு, அவனை சமாளிப்பது பெரும்பாடாகி விட்டது. ஒரே வாரத்தில், மூன்றாவது, 'அட்டாக்' வந்து, இறந்து போனாள் பாட்டி.


'சாமி கிட்ட போன பாட்டி, எப்போ வருவாங்க...' என்று கேட்டு, தினமும் நச்சரித்த அபிஷேக்கிற்கு, பாட்டி இறந்து போனதை புரிய வைக்க முடியவில்லை. இரவில் அவனை தூங்க வைப்பது பெரும்பாடாக இருந்தது.
இரவு


''எனக்கு கதை சொல்ல பாட்டி வேணும்; இல்லேன்னா நான் தூங்க மாட்டேன்,'' என்று அடம் பிடித்தான் அபிஷேக்.


''சின்ன வயசிலேயே, பாட்டி பக்கத்தில படுத்து, கதை கேட்டு தூங்கி பழகியவன், இப்போ, அவங்கள பிரிஞ்சு, தூக்கம் வராம கஷ்டப்படுறான். இப்போ என்னங்க செய்றது...'' என்றாள் மணிமேகலை.
''அதான் எனக்கும் புரியல; இன்னிக்கு ஒருநாள் எப்படியாவது சமாளிச்சு தூங்க வைப்போம். நாளைக்கு இதுக்கு ஏதாவது ஒரு வழி பாக்கலாம்,'' என்றான் ஆனந்த்.


''ஆனந்த்... உன் நிலைம புரியது; எனக்கு தெரிஞ்ச பாட்டி ஒருத்தங்க இருக்காங்க; கதை சொல்றதுல, அவங்கள அடிச்சிக்கவே முடியாது. ஓரளவு படிச்சவங்க; நிறைய நாட்டு நடப்புகள அறிஞ்சவங்க. அந்த காலத்து கதை, இந்த காலத்து கதைன்னு நிறைய விஷயம் தெரிஞ்சவங்க. உன் பையனை தூங்க வைக்க, அவங்க தான் சரியான ஆளு,'' என்றான் ஆனந்தின் நண்பன்.
''இப்போ அவங்க எங்க இருக்காங்க?'' என்று கேட்டு, அவன் சொன்ன இடத்திற்கு சென்று, சாந்தா என்ற பாட்டியை, வீட்டிற்கு அழைத்து வந்தான் ஆனந்த்.


''மணிமேகலை... இனிமே இவங்க தான் நம்ம


பையனுக்கு கதை சொல்லப் போறவங்க; இவங்களை, முதியோர் இல்லத்திலிருந்து, என் அம்மாவாக தத்து எடுத்து வந்திருக்கேன்; உனக்கு இனிமே இவங்க தான் புது மாமியார்,'' என்றதும், மணிமேகலைக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
''வாங்க அத்தே...'' என, அன்போடு உபசரித்தாள்.
''எங்க என் பேரன்...'' என்று கேட்டபடி, சுற்றும் முற்றும் பார்த்தாள் சாந்தா பாட்டி.


''டியூஷன் போயிருக்கான்; இப்போ வந்துடுவான். உங்களுக்கு பசங்க யாருமே இல்லியா, எப்படி முதியோர் இல்லத்துல சேர்ந்தீங்க?'' என்று அவளைப் பற்றி விசாரித்தாள் மணிமேகலை.


''எனக்கு மூணு பசங்க; பொம்பள புள்ள கிடையாது. பசங்க சின்னப் புள்ளைகளா இருக்கும் போதே, அவரு போயிட்டாரு. கஷ்டப்பட்டு என் புள்ளைகள காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு, கல்யாணமும் செய்து வச்சேன். மூன்று மருமகள்களும் சேர்ந்து, என்னை துரத்துறதுலேயே குறியா இருந்தாங்க. பசங்களும் கண்டுக்கல. சொத்தை பிரிச்சி கொடுத்தாத் தான், சாப்பாடு போடுவோம்ன்னு சொன்னாங்க. அதை நம்பி, சொத்தை பிரிச்சுக் கொடுத்தேன். இப்போ, என்னை முதியோர் இல்லத்துல சேர்த்திட்டாங்க,'' என்று அழுதாள் சாந்தா பாட்டி. இதை பார்த்ததும், இருவரின் கண்களிலும் கண்ணீர் பொங்கியது.


''நன்றி கெட்ட மகன்களையும், இரக்கமில்லாத மருமகள்களையும் நினைச்சு அழாதீங்க. இவர் தான் இனிமே உங்க புள்ளை; நான் உங்க மருமகள். உங்களுக்கு இனிமே நாங்க இருக்கோம்; ஒரு பேரன் இருக்கான்,'' என்று சொல்லும் போதே, அவளை கையெடுத்துக் கும்பிட்டாள் சாந்தா.
டியூஷனிலிருந்து அபிஷேக் வந்ததும், அவனை, தன் மடியில் உட்கார வைத்து, பேச்சு கொடுத்தாள் சாந்தா.


''நீங்க நல்லா கதை சொல்வீங்களா பாட்டி?''
''ம்... சொல்வேனே... உனக்கு பிடிக்கிற மாதிரி, அறிவுப்பூர்வமான கதைகளை சொல்லப் போறேன்,'' என்றதும், மடியிலிருந்து இறங்கி துள்ளிக் குதித்தான் அபிஷேக்.
இரவு, சாந்தா பக்கத்தில் படுத்திருந்தான் அபிஷேக்.
''உங்க பாட்டி எப்படிப்பட்ட கதை சொல்வாங்க?'' என்று கேட்டாள்.
''ராஜா கதை, சிங்கம், நரிக்கதைன்னு சொல்வாங்க. கடைசியா, யானைக்கதை சொன்னாங்க,'' என்றான் அபிஷேக்.
''அப்படியா... இனிமே உனக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய, கதைகளை சொல்லப் போறேன்,'' என்றாள் சாந்தா.
''என்ன கதை பாட்டி?''


''நீ மாடியில நின்னு வானத்தை பார்க்கும் போது, சின்ன சின்னதாய் தெரியுமே நட்சத்திரம்... அதுக்கு பக்கத்துல போக என்னைக்காவது ஆசைப் பட்டிருக்கீயா?'' என்று கேட்டாள் சாந்தா.
''ஆமாம் பாட்டி... ஆனா, எங்கம்மா, அதுகிட்ட யாருமே போக முடியாதுன்னு சொல்வாங்க.''


''போக முடியும் கண்ணு... நம்ம நாட்டுல பிறந்த ஒரு பொண்ணு, வானத்துல பறந்து, அந்த நட்சத்திரத்து பக்கத்துல போய் வந்திருக்கா தெரியுமா...'' என்றாள்.
''எப்படி போனாங்க பாட்டி...'' என்று ஆர்வமாக கேட்டான் அபிஷேக்.


''சொல்றேன் கேளு... அரியானா மாநிலம், கர்னால் என்ற சின்ன கிராமத்துல, ஒரு பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள். அதுல கடைசியா பிறந்த பெண் குழந்தை ஒரு நாள் வானத்துல நட்சத்திரத்தை பாத்துச்சாம். அப்பவே அதுக்கு நட்சத்திரத்துக்கு பக்கத்துல போகணும்ன்னு ஆசை வந்துச்சாம். அன்னயில இருந்து, எப்பப் பாத்தாலும், வானத்தையே பாத்துட்டு இருக்குமாம்.


''மற்றக் குழந்தைகள் எல்லாம் பொம்மை வைச்சு விளையாடும் போது, இந்தக் குழந்தை மட்டும், பேப்பர்ல விமானத்தை வரைஞ்சு, அதுக்கு ஓவியம் தீட்டுவாளாம். எந்நேரமும் அதே நினைப்போட ஸ்கூல் படிப்ப படிச்சு முடிச்சதும், பஞ்சாப் விமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிச்சாளாம். விண்வெளி பற்றியே அவள் எண்ணம் இருந்ததால, அமெரிக்காவே அவளை தன் நாட்டுக்கு கூப்பிட்டுக்குச்சாம். இதனால, விண்வெளி பொறியியல் துறையில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் வாங்கி, நாசா அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்தா.
''அப்பத் தான், விண்வெளியில பறக்கற அவளோட கனவு நிறைவேற, 1997ல் விண்வெளியில முதன்முதல்ல பறந்தாங்களாம். 16 நாட்கள் பறந்து, வானம், நட்சத்திரங்கள் பக்கத்துல போய், 'ஹாய்... ஹாய்...'ன்னு நலம் விசாரிச்சாளாம். விண்வெளிய சுற்றி வந்த முதல் இந்தியப் பொண்ணு இந்தப் பொண்ணு தான்,'' என்று பாட்டி கூற, ''அப்படியா பாட்டி... அவங்க பேரை சொல்லவே இல்லியே...'' என்றான் அபிஷேக்.
''உனக்கு கேள்வி கேட்கும் திறன் இருக்கான்னு சோதிக்கத் தான், சொல்லாம இருந்தேன். என் சமத்து... நீயே கேட்டுட்ட... அந்த பெண் தான் கல்பனா சாவ்லா!''


''கல்பனா சாவ்லாவா... பாட்டி கதை நல்லாயிருக்கு! இனிமே, எனக்கு இதுமாதிரி கதைகளா சொல்லுங்க,'' என்றான் அபிஷேக்.
''நாளைக்கு, சாதனை படைத்த இன்னொருத்தரோட கதைய சொல்லப் போறேன்; அவர் இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர்...''
''யாரு பாட்டி அது?''
''அப்துல் கலாம்.''
''அவர எனக்குத் தெரியுமே... கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், சாமிக்கிட்டே போயிட்டாராம். அதனால ஸ்கூலுக்கு லீவு கூட விட்டாங்க...''


''ஆமாம் அவரு தான்; இனிமே, தினமும் இதுபோன்ற சாதனையாளர்களைப் பற்றிய கதையத் தான் சொல்லப் போறேன். சரியா... சரி... நேரமாச்சு தூங்கு,'' என அவனை தட்டிக் கொடுக்க, ஒரு நல்ல கதையை கேட்ட மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்கினான் அபிஷேக். அவன் தூங்குவதைப் பார்த்து, ஆனந்தும், மணிமேகலையும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


''இவங்களைப் போன்ற எத்தனையோ அறிவுக் களஞ்சியங்கள், யாருக்கும் பயன்படாமல் முதியோர் இல்லத்துல இருக்கிறது வேதனையா இருக்கு; அவங்க சொல்ற கதைகளை பேரன், பேத்திங்க கேட்டா, குழந்தைகளின் யோசிக்கும் திறன் அதிகரித்து, அவர்கள் வாழ்வு செம்மைப்படுமே...'' என்று மணிமேகலை கூறியதும், 'ஆம்' என்பது போல் தலையாட்டினான் ஆனந்த்.


பால் கண்ணன்
அன்பு நன்றி சகோ.


===========================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!


அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
====================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...