தொடர்ச்சியாக மூன்று இரவுகளில், ''இன்னும் என்மேல் அவநம்பிக்கையா?ஃஃ என்ற குரல் அவருக்குத் தூக்கத்தில் கேட்டது. தொடர்ச்சியாக மூன்று இரவுகளில் தோன்றிய அந்த அசரீரிச்
செய்தியைக் கேட்டு டாக்டர் வியப்படைந்தார். அந்தச் செய்தியைப் பொருள் செறிந்ததாக
ஏற்றுக்கொண்டு அவர் சிர்டீ பிரயாணத்தை நிச்சயம் செய்துகொண்டார். ஆயினும், அவர் அந்த சமயத்தில், டைபாய்டு ஜுர நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண் டிருந்தார்.
அவருக்குச் சிறிது குணமேற்பட்டவுடனே சிர்டீ செல்லலாம் என நினைத்தார். நோயாளிக்கோ ஜுரம் அதிகமாக இருந்தது; எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. நோயாளி லவலேசமும்
(சிறிதளவும்) குணமடையவில்லை. ஆகவே சிர்டீ செல்வதற்கு முடியவில்லை. டாக்டர் தமது மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார், ''இந்த நோயாளியின் நிலைமையில் இன்று ஏதாவது முன்னேற்றம்
தெரிந்தால், மேலும் ஒரு கணமும்
தாமதியாது நாளை நான் சிர்டீ செல்வேன்.ஃஃ இந்த திடமான சங்கேதத்தை (குறிப்பை) ஏற்றுக்கொண்டபின், ஆறு மணி நேரத்திற்குள்ளாக ஜுரம் கொஞ்சங்கொஞ்சமாக
இறங்கியது. அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால் டாக்டர் உடனே சிர்டீக்குக்
கிளம்பினார்.
சங்கற்பம் செய்துகொண்டவாறே டாக்டர் சிர்டீக்குச் சென்றார். பக்தியுடன்
பாபாவின் பாதங்களை வணங்கினார். இவ்விதமாக, பாபா அவருக்கு அகமுகமான அனுபவத்தின் மூலம் விசுவாசம் ஏற்படச் செய்து, அவரை குருசேவைக்கு இழுத்தார். டாக்டரின் தலைமேல் அருட்கரத்தை வைத்து உதீ பிரசாதமும்
அளித்தார். ஸாயீயின் அளப்பரிய சக்தியைக் கண்டு டாக்டர் பிரமித்துப்போனார்.
தொடர்ந்து படியுங்கள் மேலும் சாயி அற்புதம் தொடர்கிறது..............
Please see below for
English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள்
பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான
வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;......................................
ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை.
அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும்
க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு
கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body,
mend the senses and end the mind - this is the way to Immortality." -
Baba.
Spreading the life and
teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes
things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't
see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai
doesn't mean you stop believing.
Sai has perfect timing;
never early, never late. It takes a little patience and it takes a lot of faith
but it's worth the wait. .......... Think positive and positive things will
happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his
feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and
miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb
the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா
ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம்
செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு
வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு
நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக
இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும்.
கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us
saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for
English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப்
பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான
கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 34
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
மாலே காங்வில் இருந்த சிறுவனின் சிற்றப்பா (டாக்டர்) இதைப்பற்றிக்
கேள்விப்பட்டு, ஸாயீதரிசனம் செய்வதற்கு
உற்சாகங்கொண்டார். பம்பாய் செல்லும்போது சிர்டீக்குச் சென்று மனவிருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமக்குள்ளேயே தீர்மானித்தார்.
35 ஆனால், பின்னர் அவர் பம்பாய்க்குப் புறப்பட்டபோது, மாலேகாங்விலும் மன்மாடிலும் சிலர் அவருடைய மனத்தில்
விகற்பத்தைக் கிளறிவிட்டனர். டாக்டர் சிர்டீ செல்லும் திட்டத்தைக்
கைவிட்டுவிட்டார்.
36 எந்த நல்ல காரியத்திற்கும் இதுவே ரீதி. ஆரம்பத்திலேயே
கெடுமதியாளர்கள் சில தடங்கல்களை உண்டாக்குவர். அவர்கள் சொல்வதை லட்சியம்
செய்யாதவர்களே கடைசியில் நல்ல பாதையில் சென்று நன்மையடைவர்.
37 டாக்டர், ஞானியை தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு நேராக பம்பாய்க்குச்
சென்றார். மீதியிருந்த விடுப்பை அலீபாக்கில் கழிக்கலாம் என முடிவெடுத்தார்.
38 இவ்வாறு அவர் முடிவு செய்தபின், தொடர்ச்சியாக மூன்று இரவுகளில், ''இன்னும் என்மேல் அவநம்பிக்கையா?ஃஃ என்ற குரல் அவருக்குத் தூக்கத்தில் கேட்டது.
39 தொடர்ச்சியாக மூன்று இரவுகளில் தோன்றிய அந்த அசரீரிச்
செய்தியைக் கேட்டு டாக்டர் வியப்படைந்தார். அந்தச் செய்தியைப் பொருள் செறிந்ததாக
ஏற்றுக்கொண்டு அவர் சிர்டீ பிரயாணத்தை நிச்சயம் செய்துகொண்டார்.
40 ஆயினும், அவர் அந்த சமயத்தில், டைபாய்டு ஜுர நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண் டிருந்தார்.
அவருக்குச் சிறிது குணமேற்பட்டவுடனே சிர்டீ செல்லலாம் என நினைத்தார்.
41 நோயாளிக்கோ ஜுரம் அதிகமாக இருந்தது; எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. நோயாளி லவலேசமும்
(சிறிதளவும்) குணமடையவில்லை. ஆகவே சிர்டீ செல்வதற்கு முடியவில்லை.
42 டாக்டர் தமது மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார், ''இந்த நோயாளியின் நிலைமையில் இன்று ஏதாவது முன்னேற்றம்
தெரிந்தால், மேலும் ஒரு கணமும்
தாமதியாது நாளை நான் சிர்டீ செல்வேன்.ஃஃ
43 இந்த திடமான சங்கேதத்தை (குறிப்பை) ஏற்றுக்கொண்டபின், ஆறு மணி நேரத்திற்குள்ளாக ஜுரம் கொஞ்சங்கொஞ்சமாக
இறங்கியது. அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால் டாக்டர் உடனே சிர்டீக்குக் கிளம்பினார்.
44 சங்கற்பம் செய்துகொண்டவாறே டாக்டர் சிர்டீக்குச்
சென்றார். பக்தியுடன் பாபாவின் பாதங்களை வணங்கினார். இவ்விதமாக, பாபா அவருக்கு அகமுகமான அனுபவத்தின் மூலம் விசுவாசம்
ஏற்படச் செய்து, அவரை குருசேவைக்கு
இழுத்தார்.
45 டாக்டரின் தலைமேல் அருட்கரத்தை வைத்து உதீ பிரசாதமும்
அளித்தார். ஸாயீயின் அளப்பரிய சக்தியைக் கண்டு டாக்டர் பிரமித்துப்போனார்.
46 டாக்டர் சிர்டீயில் நான்கு நாள்கள் தங்கியபின்
ஆனந்தமான மனத்துடன் வீடு திரும்பினார். பதினைந்து நாள்கள்கூட முடியவில்லை; விஜாபூருக்குப் பதவி உயர்வில் அனுப்பப்பட்டார்õ
47 வேதனை மிகுந்த ஹாட்யாவ்ரணம் ஸாயீதரிசனத்திற்கு
வழிவகுத்தது. தரிசனம் ஞானியின் பாதங்களின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வீர்ப்பு
என்றும் குறையாத ஆனந்தத்தை அளித்தது.
48 இவ்வாறே டாக்டர் பிள்ளை ஒரு சமயத்தில்
நரம்புச்சிலந்தி நோய் கண்டு வருந்தினார். ஒன்றன்பின் ஒன்றாக ஏழு சிலந்திகள்
தோன்றின. டாக்டர் மிகவும் கஷ்டப்பட்டார்.
49 இந்த டாக்டர் ஸாயீ பாபாவின்மீது மிகுந்த பிரேமை
வைத்திருந்தார். பாபாவும் அவரைச் செல்லமாக பாவூ என்று அழைத்தார். அவரை தினமும்
மிகுந்த அன்புடன் குசலம் விசாரிப்பார்.
50 மசூதியில், மரத்தாலான கிராதியின் அண்மையே காலையிலும் மாலையிலும் பாவூவின் இடம். நெடுநேரம்
பாபாவும் பாவூவும் அநேக விஷயங்களைப்பற்றிப் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம்
செய்துகொள்வர்.
51 பாவூ இல்லாமல் பாபா சிலீம் பிடிக்கமாட்டார்; பீடி பிடிக்கும்போது பாவூ அருகில் இருக்கவேண்டும்; நியாயம் பேசுவதற்கும் பாவூ அருகில் இருக்கவேண்டும்.
சுருங்கச் சொன்னால், பாவூ இல்லாமல்
பாபாவுக்குப் பொழுது இனிமையாக நகராது.
52 அதுவே அப்போதைய நிலைமை. ஆயினும் நரம்புச்சிலந்தி
நோயின் வேதனை பொறுக்கமுடியாமற்போன நிலையில் பாவூ படுத்த படுக்கையாகிவிட்டார். வயும்
வேதனையும் மனக்கொந்தளிப்பையும் சோகத்தையும் அளித்தன.
53 இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அவருடைய வாய்
இடைவிடாது ஸாயீ நாம ஜபத்தைச் செய்துவந்தது. ''போதும், இந்த யாதனை (நரக வேதனை); மரணமே இதைவிட மேல்ஃஃ என்று சொல் அவர் ஸாயீயிடம்
சரணாகதி அடைந்தார்.
54 அவர் பாபாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார், ''இந்தத் துன்பத்தை அனுபவித்து நான் ஓர் எல்லைக்கே
வந்துவிட்டேன். அங்கமெல்லாம் எத்தனையோ ரணங்கள்õ இனியும் சகித்துக்கொள்ள எனக்குத் திராணியில்லைõ--
55 ''நல்வழி நடக்கும் நான் ஏன் இந்த வேதனையை
அனுபவிக்கவேண்டும்? கெட்ட செயல்களின்
பாதையில் நான் சென்றதில்லையே. நான் என்ன பாவம் செய்தேன், என்மீது இவ்வளவு துன்பத்தையளிக்கும் அவஸ்தை
இறங்கியிருக்கிறது?--
56 ''நரம்புச்சிலந்தி நோயின் வேதனை மரணவேதனைக்கு ஒப்பாக
இருக்கிறது. பாபா, என்னால் இப்பொழுது இந்த
வேதனையை சகித்துக்கொள்ள முடியவில்லையேõ நான் மரணமடைவதே நல்லது. என்ன யாதனை மீதமிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில்
அனுபவித்துக்கொள்கிறேன். --
57 ''அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டும்.
அதற்காகவே பல ஜன்மங்கள் எடுக்கவேண்டியிருக்கலாம். ஊழ்வினையால் விதிக்கப்பட்டதைத்
தவிர்க்கமுடியாது. மந்தமதி படைத்த எனக்கும் இது தெரிந்திருக்கிறது.--
58 ''என்னுடைய கர்மவினையை அனுபவிப்பதற்குப் பத்து
ஜன்மங்கள் வேண்டுமானாலும் சந்தோஷமாக எடுக்கிறேன். ஆனால், இந்த ஜன்மத்தை இத்தோடு முடித்துக் கொடுத்து எனக்கு
தருமம் செய்யுங்கள்.--
59 ''போதும், போதும், போதும் இந்த ஜன்மம்õ எனக்கு இந்த ஜன்மத்திருந்து விடுதலை தாருங்கள்.
என்னால் இந்தக் கஷ்டத்தை இனியும் அனுபவிக்கமுடியாது. இதுவே உங்களிடம் நான்
செய்யும் பிரார்த்தனை, ஒரே பிரார்த்தனை.ஃஃ
60 சித்தர்களின் அரசராகிய ஸாயீ இந்தப் பிரார்த்தனையைக்
கேட்டு தயையால் உள்ளம் நெகிழ்ந்தார். டாக்டர் பிள்ளைக்கு ஆறுதல் கூற அவர் பொழிந்த
கருணாமிருதத்தைக் கேளுங்கள்.
61 மேலும், பக்தர்களின் கற்பகவிருக்ஷமான ஸாயீ, பக்தனின் இன்னல் தரும் அவஸ்தையை விலக்குவதற்கு எப்படி ஓர் உபாயத்தைத்
துவக்கிவைத்தார் என்பதையும் கேளுங்கள்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for
English version. Tq
CHAPTER 34
*
*
*
============================================
After knowing this, the
doctor, the uncle of the boy became wonder-struck and desired to see Baba while
he was on his way to Bombay for some business; but at Malegaon and Manmad
somebody spoke to him against Baba and poisoned his ears. He therefore, dropped
the idea of visiting Shirdi and went to Bombay direct. He wanted to spend the
rest of his leave at Alibag, but at Bombay he heard three successive nights, a
voice crying out,"Still you disbelieve me?". Then the doctor changed
his mind and resolved to go to Shirdi. He had to attend in Bombay to a case of
Infectious Fever, which showed no signs of abatement soon.
So he thought that his
Shirdi trip would be postponed. He however proposed a test in his mind and
said,"If the patient gets all right today, I start for Shirdi tomorrow."
The wonder is that exactly at the time when the determination was taken, the
fever began to abate and the temperature became normal. Then he went to Shirdi
as per his determination, took Baba's darshan and prostrated himself before
Him. Baba gave him such experiences that he became His devotee. He stayed there
for four days and returned home with Baba's Udi and blessings. Within a
fortnight he was transferred on promotion to Bijapur. His nephew's case gave
him an opportunity for seeing Baba and this visit engendered in him a
neverfailing love for the Saint's feet.
Dr. Pillay
One Dr. Pillay was an
intimate Bhakta of Baba. He was much liked by Baba, Who always called him Bhau
(brother). Baba talked with him off and on and consulted him in all matters and
wanted him always at His side.
===============================================
To be
continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace
be to all
To be
continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here.
There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai
Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace
to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita
twameva
Twameva bandhushcha
sakha twameva
Twameva vidya dravinam
twameva
Twameva sarvam mama deva
deva
Twameva sarvam Sai deva
deva....
You alone are my mother
and my father,
You alone are my friend
and my beloved companion,
You alone are my
knowledge and my wealth,
O Supreme Lord, you
alone are everything for me.
Sometimes Sai removes
things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't
see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai
doesn't mean you stop believing.
Sai has perfect timing;
never early, never late. It takes a little patience and it takes a lot of faith
but it's worth the wait.
Think positive and
positive things will happen.................
Saying sorry doesn't
solve the problem. It's what you do after that truly counts.
=============================================================
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை
பொழியட்டும்.
பல கோடி நன்றிகள் ஐயா / அம்மணி.
=========================================================================
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
என்றும் சாயியின் அடிமை.........
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
==================================
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
==================================
No comments:
Post a Comment