தாமதமாகப்
போவதற்கு இன்று வீட்டில் திட்டு விழப் போகிறது என்கிற மனத் தயாரிப்போடு
வீட்டிற்குள் நுழைந்தால், எதுவும் உறைப்பது இல்லை. மனத்தயாரிப்பு இன்றிச் சென்றாலோ, வாக்குவாதமாக முற்றி, சண்டையில் முடிகிறது.
ஒவ்வொன்றிலும்
வெற்றியை மட்டுமே எண்ணிப் பார்க்கும் நம் மனம், மனத் தயாரிப்பு இல்லாத காரணத்தால், தோல்வியைச் சந்திக்கும் போது, துவண்டு போகிறது; மீண்டு எழ முடியாமல் தவிக்கிறது.
இனிய வணக்கம் தோழமை(களே)!!!
வீழ்வதற்கல்ல
வாழ்க்கை - மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி,,,,,,,,,,,,,,,,,,
பல நாட்கள்
முன்னதாகத் தெரிந்துவிட்டால், நீண்ட நெடிய பயணத்திற்குக் கூட, எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், திடுதிப்பென்று சொன்னால், ஊர் எல்லையில் உள்ள இடத்திற்கு செல்லக் கூட, 'முடியாது... அசதியா இருக்கு; தூக்கமா வருது...' என்கிறோம்.
இவ்வளவு ஏன்? வீட்டில், பரணில் இருப்பதை எடுத்துத் தரச் சொல்பவர்களுக்கும், கண்ணெதிரே இருக்கும் அலமாரியில், ஓர் பொருளைத் தேடித் தரச் சொல்பவர்களுக்கும் கூட, சாக்குப் போக்குச் சொல்லி தவிர்த்து விடுகிறோம்.
இதற்கு
காரணம் என்ன தெரியுமா?
முதல்
விஷயத்தில் மனத் தயாரிப்பு பல நாட்களுக்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது; இரண்டாவது விஷயத்தில், மனத் தயாரிப்பு நிகழவில்லை!
ஒரு வாகன
உரிமையாளர், தன் வாகன ஓட்டுனரிடம், 'நான் இறங்கிய பின், சாரை அவர் வீட்டில் இறக்கி விட்டுடுப்பா...' என்று, வாகனத்தில் ஏறும் போதே சொல்லி விட்டால், ஓட்டுனரும், 'சரி சார்...' என்பார்; மாறாக, வாகனத்திலிருந்து இறங்கிய பின், முதலாளி இதைச் சொன்னால், ஓட்டுனர் சாக்குப் போக்குச் சொல்லவோ, நழுவவோ செய்வார் அல்லது பயணியை இறக்கி விடப் போகும் போதே, 'கை காலெல்லாம் அசந்து போச்சு சார்... இன்னைக்கு, 'ஓவர் டிரிப்!' சொன்னா எங்க முதலாளிக்குப் புரியவே மாட்டேங்குது...' என்று சலித்துக் கொள்வார்.
தாமதமாகப்
போவதற்கு இன்று வீட்டில் திட்டு விழப் போகிறது என்கிற மனத் தயாரிப்போடு
வீட்டிற்குள் நுழைந்தால், எதுவும் உறைப்பது இல்லை. மனத்தயாரிப்பு இன்றிச் சென்றாலோ, வாக்குவாதமாக முற்றி, சண்டையில் முடிகிறது.
ஒவ்வொன்றிலும்
வெற்றியை மட்டுமே எண்ணிப் பார்க்கும் நம் மனம், மனத் தயாரிப்பு இல்லாத காரணத்தால், தோல்வியைச் சந்திக்கும் போது, துவண்டு போகிறது; மீண்டு எழ முடியாமல் தவிக்கிறது.
'ஒரு சிபாரிசுக்காக ஒருத்தர சந்திக்கப் போனேன். வேலை
ஆகலைங்கிறது கூட ஏமாற்றமில்ல; ரொம்ப அசிங்கப்படுத்திட்டார். மனசு தாங்கல...' என்றார் நண்பர் ஒருவர். 'இதுவும் நடக்கும், எதுவும் நடக்கும் என்ற மனத் தயாரிப்புடன் நீங்க
போயிருந்தால், இவ்வளவு காயம்பட்டிருக்க மாட்டீங்க...' என்றேன்.
இப்போதும்
கூட, ஏதாவது ஒரு
கூட்டத்தில் நான் பேசப் போகும் போது, 'இன்றைய கூட்டத்தில், சபையினர் ரசனை மிகுந்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது
ரசனையற்ற மனிதர்களின் தொகுதியாகவும் அமைந்து விடலாம். எனவே, இன்று நீ எடுபடாமல் போனால், கவலை கொள்ளாதே...' என்று, எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். இதனால், கூட்டத்தின் முடிவு எப்படி இருந்தாலும், அது என்னைப் பாதிக்காது.
புது
ஊருக்குப் போய் இறங்கு முன், 'பருவநிலை எப்படி இருந்தாலும் சமாளிப்போம்...' என்கிற மனத் தயாரிப்புடன் சென்றால், குளிரோ, மழையோ, வெயிலோ, பனியோ ஒன்றும் செய்யாது.
மனத்
தயாரிப்பு இன்றி, 'பே...' என்று போய் இறங்கினால், பருவநிலை மிகவும் வருத்தும். 'ஐயோ... முடியலைடா சாமி...' என்று அலுத்துக் கொள்வோம்.
'புது வேலை கடினம்; மாமியார் பொல்லாதவள்; செலவு நிறைய இருக்கிறது; நேரத்தை விழுங்கும்; படம் அநேகமாக படு போராக இருக்கும்; நாம் தேடிப் போகிறவர் இருப்பது சந்தேகம்...' இவைகள் அனைத்தையும் எதிர்மறைச் சிந்தனைகளுக்குள் அடக்கி
விடாதீர்கள். இவை யாவும் அருமையான மனத் தயாரிப்புகள்.
மனம் இறுகிப்
போனால், அது, எந்த அடியையும் தாங்கிக் கொள்வதோடு, 'எனக்கு வலிக்கலை; வலிக்கவே இல்லை...' என்று, வடிவேலு பாணியில் வசனம் கூடப் பேசும்!
courtesy லேனா தமிழ்வாணன்
எதிரதாக் காக்கும்
அறிவினார்க்கு இல்லை
அதிர
வருவதோர் நோய்.
இந்தக்
குறளின் பொருள்
வரப்போவதை
முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
திருக்குறள் (எண்: 429) அதிகாரம்: அறிவு உடைமை
=====================================
No comments:
Post a Comment