Followers

Monday, February 24, 2020


Image result for accept your imperfections


குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்!!!!

திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப் படாதீர்கள்..

கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே கவலைப் படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப் பட்டவர் தான்..கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்...

மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப் படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை... மனைவியை புரிந்து கொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்...

குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப் படாதீர்கள்! தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் பல குழந்தைகள் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள் பல இல்லங்களில்...

பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! உங்கள் கஷ்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும் படி கஷ்டத்தை உணர்த்துங்கள்..

சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப் போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும் வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்....

தீராத நோய் என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப் படுங்கள் சுகமடைவீர்கள்....

பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்....

படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இன்றைய உலக பணக்காரர்கள் 90% மாணவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே...

உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப் படாதீர்கள்! யாரும் உங்களுடன் கூடப் பிறக்கவில்லை என நினைத்து விடுங்கள்...

திருமணம் ஆகவில்லையே எனக் கவலைப் படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்...

கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால், அவர்கள் முதுகில் குத்தி விட்டார்களா? கவலைப் படாதீர்கள்! உங்களின் கஷ்ட காலம் அவர்களோடு போய் விட்டது என நினையுங்கள்...

உம்மீதும், குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா? கவலைப் படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர் கொண்டவர்கள் தான்....

மொத்தத்தில் தன் மனைவியை கணவனை குழந்தையை சகோதரர்களை பெற்றவர்களை கொலை செய்யும் இவ்வுலகம்  நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப் போகிறார்கள்!

மனிதர்கள் அப்படித் தான்! *எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!* சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித் தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.

ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப் பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.
-----------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
courtesy வாத்தியார் ayya tq ayya.
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=============================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...