Followers

Monday, February 24, 2020


Image may contain: 2 people


நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிமிதமாக இருக்கின்றன. ஆயினும், ஸாயி பக்தர்களுக்கு சிர்டீயே மிகப் பவித்திரமானது. ஸத்குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர பிரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.
ஸமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோõ அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.
ஜய ஜய ஸத்குரு ஸாயீõ ஸாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜயõ ஸத்திய ஞானக்கடலே ஜய ஜயõ கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்கவேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.
சாதகப்பட்சி மேகத்தி­ருந்து விழும் நீர்த்துளிக்காகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருதமயமான கதைக்காகக் காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாகõ


தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டட்டும்; பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;-- அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சி­ர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விம்மிவிம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;-- (கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் ந­யட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர். குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் ஸத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது. குருவினிடத்தில் பக்தி பா(ஆஏஅ)வமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உள் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம்) வெல்லமுடியாது; அஷ்டபா(ஆஏஅ)வங்களை1 அடையவும் முடியாது. .......................


சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;......................................


ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்


''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba


Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......


Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.


Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.


Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................


வேண்டத் தக்கது அறிவோய் நீ,


வேண்ட முழுவதும் தருவோய் நீ,


வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ


வேண்டி என்னைப் பணிகொண்டாய்!


வேண்டி நீ யாது அருள் செய்தாய்,


யானும் அதுவே வேண்டின் அல்லால்


வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,


அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....


Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.


ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்


ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..


Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...


''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"


இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..


ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….


Please see below for English version. Tq


வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 27
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
அத்தியாயம் - 27


27. அருட்பெருக்கு - உபதேசம்


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸத்குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர பிரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.


2 ஸமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோõ அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.


3 ஜய ஜய ஸத்குரு ஸாயீõ ஸாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜயõ ஸத்திய ஞானக்கடலே ஜய ஜயõ கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்கவேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.


4 சாதகப்பட்சி மேகத்தி­ருந்து விழும் நீர்த்துளிக்காகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருதமயமான கதைக்காகக் காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாகõ


5 தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டட்டும்; பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;--


6 அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சி­ர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விம்மிவிம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;--


7 (கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் ந­யட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்.


8 குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் ஸத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.


9 குருவினிடத்தில் பக்தி பா(ஆஏஅ)வமும் கரைகாணாத அன்பும் அசையாத நிட்டையும் இல்லையெனில், ஆறு உள் எதிரிகளை (காமம், கோபம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம்) வெல்லமுடியாது; அஷ்டபா(ஆஏஅ)வங்களை1 அடையவும் முடியாது.


10 பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வளவுக்கவ்வளவு குரு குதூகலம் அடைகிறார்; பக்தனைக் கொண்டாடுகிறார்.


11 'தேகம், வீடு, மனைவி, மக்கள் - இவையனைத்தும் என்னுடையவைஃ என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப்போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.


12 இந்த மாயையின் சுழ­ல் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று விரும்புபவர் வேறெதிலும் நாட்டமில்லாது ஸாயீயிடம் சரணடைந்துவிட வேண்டும்.


13 மாயையின் மர்மத்தை முடிச்சவிழ்க்க முயன்ற வேத சாஸ்திரங்கள் கையை விரித்துவிட்டன. சிருஷ்டி அனைத்திலும் இறைவனைக் காணமுடிந்தவரே மாயையை வெல்ல முடியும்.


14 நிஜாம் ராஜ்ஜியத்தி­ருந்து பக்கீர்ஸாயீயைத் தம்முடன் முத­ல் நெவாஸாவுக்கு அழைத்துவந்த சாந்த்பாய் பாடீல் பாக்கியசா­.


15 அங்கே பக்கீர்ஸாயீ கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாசம் செய்தார். அங்கேதான் அவர் கானட் கிராமவாசியான கமா என்பவருடன் சகவாசமாக இருந்தார்.


16 இருந்தபோதிலும், சிறிதுகாலம் கழித்து, கமாவும் பிரசித்த பெற்ற டாக்ளீ கிராமத்தைச் சேர்ந்த தகடூ தாம்போ­யும் (தாம்பூல வியாபாரியும்) பாபாவுடன் நெவாஸாவி­ருந்து சிர்டீக்கு வந்துசேர்ந்தனர்.


17 நாடெங்கும் புண்ணியத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அபரிமிதமாக இருக்கின்றன. ஆயினும், ஸாயி பக்தர்களுக்கு சிர்டீயே மிகப் பவித்திரமானது.


18 இந்த யோகம் நேர்ந்திராவிட்டால் (பாபாவின் சிர்டீ வருகை) தீனர்களாகிய நமக்கு அவருடைய கூட்டுறவு எப்படிக் கிடைத்திருக்கும்? இது நம்முடைய கிடைத்தற்கரிய பெரும் பேறன்றோõ


19 பக்தர்களில் எவரெல்லாம் முழுமையாக சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லாருடைய நன்மையையும் கருதி ஸாயீ அவர்களை ஸன்மார்க்கத்தில் செலுத்துகிறார்.


20 ஆகவே, கதை கேட்பவர்களேõ ஊன்றிய மனத்துடன் ஸத் சரித்திரத்தைப் படியுங்கள். ஸாயீயின் புண்ணிய சரித்திரமே அவரருளைப் பெறச் சிறந்த வழியாகும்.


21 கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருக்குக் குலகுருவினிடம் இருந்த விசுவாசம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் மற்றொருவருக்கு அக்கல்கோட் சுவாமியைப்பற்றிய சூசகம் அளிக்கப்பட்டு அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதும் விவரிக்கப்பட்டது.


22 மற்றொரு பக்தருடைய தற்கொலை முயற்சி சாமர்த்தியமான திட்டமொன்றால் முறியடிக்கப்பட்டது. அவரைக் கடைசி நிமிடத்தில், எதிர்பாராதவிதமாக, மரணத்தின் வாயி­­ருந்து வெளியே இழுத்து நல்வாழ்வளித்தார் பாபா. இது எவ்வாறு நிகழ்ந்ததென்ற விவரமும் கடந்த அத்தியாயத்தில் அளிக்கப்பட்டது.


23 இந்த அத்தியாயத்தில், பக்தர்களுக்கு அருள் செய்வதிலும் அவர்களுக்கு சந்தோஷமும், திருப்தியும் அளிப்பதிலும் அவர்களை மேன்மையுறச் செய்வதிலும் பாபா பிரீதியடைந்த விவரம் சொல்லப்படும்.


24 பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனடையும் பக்தருக்கு தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்குக் கே­க்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. கேட்பவர்கள் இதை நுணுக்கமாகக் கவனியுங்கள்.


25 உபதேசம் அளித்ததும் அருள்மழை பொழிந்ததும் அநேக ரீதிகளில் நடந்தன. இதை ஏற்கெனவே இந்நூ­ல் விவரித்திருக்கிறேன். யாரால் எதை கிரஹிக்க (சாரம் வாங்க) முடிந்ததோ, அந்த வழி அவருக்கு உபதேசிக்கப்பட்டது.


26 வைத்தியர்தான் நோயின் தன்மையையும் மருந்தின் குணத்தையும் அறிவார். இவ்விரண்டையுமே அறியாத நோயாளியோ வெல்லம் தின்னவேண்டுமென்று விரும்புகிறார்.


27 வெல்லம் இனிப்புதான்; சந்தேகமேயில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்குக் கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயத்தைக் குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முத­ல் வெல்லக்கட்டி வைக்கப்பட வேண்டும்õ


28 நோயாளியிடம் பலாத்காரம் செல்லுபடியாகாது. ஆகவே, வைத்தியர் ஒரு யுக்தி செய்து, முத­ல் வெல்லக்கட்டியையும் பிறகு கஷாயத்தையும் கொடுக்கிறார். இவ்வாறு வைத்தியர் காரியத்தை சாதித்துவிடுகிறார்.


29 வெல்லத்தின் தோஷத்தை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறேõ


30 ஆயினும், இப்படித்தான் ஒவ்வொருமுறையும் செய்தாரென்றில்லை. அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின் மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷகுணம் இவற்றுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.


31 பாபாவின் அற்புதமான லீலைகள் திகைப்பூட்டக்கூடியவைõ யாரிடமாவது பிரியமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார். அவ்வாறு செய்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளைப் பற்றிக் கேளுங்கள்.


32 யாருக்காவது அனுக்கிரகம் செய்யவேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பந்தப்பட்ட பக்தர் அதுபற்றிக் கனவிலும் நினைத்திருக்காவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும் சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். இதுவும் அதிகப் பிரயாசையின்றி நகைச்சுவைக்கும் கே­க்கும் இடையே நடந்துவிடும்.


33 பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முத­ல் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளி­ருந்து பிரசாதமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.


34 அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப் புத்தகத்தைப் போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாகப் பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.


35 சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களைக் கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்னி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.


36 சிலர் தாஸகணு இயற்றிய ஸந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களைக்கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேகசிந்துஃ என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தையும் சாமாவிடம் ஒப்படைத்தார்.


37 பாபா அப்பொழுது கூறுவார், ''சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று.ஃஃ சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துவந்தார்.


38 பக்தர்கள் கடைகளி­ருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டுவந்து, பிரசாதமாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.


39 சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.


40 ஆகவே, அவர்மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமைமட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.


41 பக்தர்கள் புத்தகங்களை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலெழுந்தவாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.


42 ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, ''சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்ஃஃ என்று சொல்­விடுவார்.


43 சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே) வினவுவார், ''ஆர்வத்துடன் கைநீட்டிய இவர்களுடைய புத்தகங்களைத் திருப்பியளித்துவிடட்டுமா?ஃஃ அப்பொழுதும் பாபா சொல்வார், ''நீயே வைத்துக்கொள்.ஃஃ


44 ஒருசமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட ஸாயீ பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு சிர்டீக்கு வந்தார்.


45 அவரை சந்திப்பதற்கு வந்த மாதவராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்குச் சென்றபோதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார்,--


46 ''சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?ஃஃ சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தைத் தம் கையிலெடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தார்.


47 ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடமிருந்து பிரசாதமாகப் பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.


48 மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனியினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்கவேண்டுமென்ற ஆவல் யதேச்சையாகத் தோன்றியதால், கையிலெடுத்துக்கொண்டு வந்ததாகவும் விளக்கமாகச் சொன்னார்.


49 இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், ''நான் இதை உனக்குக் கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்.ஃஃ


50 இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி சிர்டீக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை ஸாயீயின் கரங்களில் வைத்தார்.


51 பாபா அவருக்கு அதைப் பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், ''இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்.ஃஃ இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதலளிக்கப்பட்டார்.


52 பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், ''இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்.ஃஃ இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.


53 பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவராதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களைச் (புத்தகங்களைச்) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?


54 பாபாவின் மனத்தி­ருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.


================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது…………………………
=================


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.


ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 27
*
*
*


============================================


CHAPTER XXVII


Favour Shown by Giving Bhagwat and Vishnu-Sahasra Nam - Dixit's Vitthal Vision - Gita Rahasya - Khapardes.


This Chapter describes, how Sai Baba favoured His devotees by granting them religious books after he had touched and consecrated them, for parayana (reading regularly) and certain other matters.


Preliminary


When a man takes a plunge into the sea, he gets the merit of bathing in all the Tirthas and sacred rivers. Similarly when a man takes refuge at the feet of the Sad-guru, he gets the merit of bowing to the Trinity, i.e. Brahma, Vishnu and Mahesh and also Para- Brahma. Victory be unto Shri Sai the wish-fulfilling tree and the ocean of knolwedge, who gives us self-realisation. Oh Sai, create in us regard for Your stories. Let the readers and audience devour them with the same relish with which the chatak bird drinks the water from the clouds and becomes happy. While listening to Your stories, let them and their families get all the sattwik emotions, viz. let their bodies perspire, let their eyes be full of tears, let their prana be steady, let their minds be composed, let their hair stand on end, let them cry, sob and shake, let their hostilities and their distinctions, great and small vanish. If these things happen, that is a sign of the grace of the Guru dawning upon them. When these emotions develop in you, the Guru is most pleased and will certainly lead you on to the goal of self-realisation. The best way, therefore, to get free from the shackles of Maya is our complete and whole-hearted surrender to Baba. The Vedas cannot take you across the ocean of Maya. It is only the Sad-guru, who can do so and make you, see the Lord in all creatures.


Granting Consecrated Book


The variety of imparting instructions followed by Baba has already been noticed in the previous Chapters. In this, we shall deal with one aspect of it. It was the habit of some devotees to take some religious books, of which they wanted to make a special study, to Baba and to receive the same back from Him, after they were touched and consecrated by Him. While reading daily such books, they felt that Baba was with them. Once, Kaka Mahajani came to Shirdi with a copy of Ekanathi Bhagwat. Shama took that book to read and taking it with him went to the Masjid. There Baba took it from him, touched it and turning some pages here and there gave it back to Shama and asked him to keep it with him. When Shama said that it belonged to Kaka and had to be returned to him. "No, no", said Baba. "As I have given it to you, better keep it with you for safe custody; it will be of use to you." In this way many books were entrusted to Shama. Kaka Mahajani after a some days came again with another copy of the same Bhagwat and gave it in Baba's hand. Then Baba gave it back as Prasad and asked him to preserve it well and assured him that it would stand him in good stead. Kaka accepted it with a bow.


Shama and Vishnu-Sahasra-Nam...........................


To be continued............


===============================================


Bow to Shri Sai -- Peace be to all


To be continued............


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................


ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/


/
/
/


ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.


"I say things here. There they happen."


=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH


Sai Samarth...........Shardha Saburi


Bow to Shri Sai - Peace to be all


************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=


''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"


ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ


சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!


Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....


You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.


Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.


Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.


Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.


Think positive and positive things will happen.................


Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.


======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...