Followers

Thursday, February 27, 2020



கழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம்... ( #கருடன் )..............

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும் தான் 70 ஆண்டு ஆயுட்காலம்.70 ஆண்டுக் காலம் வாழ வேண்டும் என்றால், அது 40 வயதில் தன்னையே உரு மாற்றம் செய்ய வேண்டும்.

கழுகு தன் 40 வயதை அடையும் போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயன் அற்றதாகி விடும். அதன் அலகும் வளைந்து விடும்.

அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறி விடும்.

இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலி மிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது,
இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.

கழுகு என்ன செய்யும் தெரியுமா?.

இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்து இருக்கும்.

புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்து எடுக்கும்.
ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.

இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்து இருந்து, வலியை அனுபவித்து, மறு பிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதி உள்ளதாக மாறும்.

வாழ்க்கையில் இது தான் கடைசி என்று நினைப்போம்.
ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக கூட இருக்கலாம்.

ஆனால், அதை ஏற்றுக் கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறு பிறவி கிடைக்கலாம். அதற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறி விடும்.

கழுகைப் போன்று, தன்னம்பிக்கையோடு மறு பிறவிக்கு நாமும் தயாராகுவோமா!

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
courtesy;priya durai.tq
=================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...