Followers

Thursday, February 27, 2020

Image may contain: 2 people, people smiling



என்ன டீச்சர்... பையன் படிக்கவே மாட்டேங்கறான்... சரியாச் சொல்லிக் குடுக்கலாம்ல...?
சரியாத்தாங்க மேடம் சொல்லித்தரோம்... வகுப்பிலே கவனிக்கவே மாட்டேங்கறான்...
மிரட்டினாப் பொருட்படுத்தறதே இல்லே. ரொம்ப அலட்சியப் படுத்தறான். அடிக்கவோ எங்களுக்கு உரிமை இல்லை..

கொஞ்சம் சிரிச்சுக் குணமாப் பேசினா... அதுக்கும் அவனோட ப்ரண்ட்ஸ் எல்லாம் அசிங்கமாப் பேசறாங்க.. ஏழாங்கிளாஸ் பையனைக் கூட விட்டுவைக்க மாட்டேங்கறாங்கன்னு...
என்னவோம்மா.. ஆசிரியத் தொழில் மேலே ரொம்ப ஆசைப் பட்டுப் படிச்சுட்டு இங்கே வந்தேன். அதனாலே பல்லைக் கடிச்சுட்டு வேலைக்கு வந்துட்டு இருக்கேன்.. குடும்ப சூழல்..சட்டுன்னு அப்படி வேலையை விட்டுடவும் முடியாது...
உங்க கிட்டயும் நெறையத் தடவை நான் சொல்லிட்டேன். ஆனா, நீங்க என்னடான்னா.. 'சம்பளம் வாங்கறீங்கல்ல...?? உங்களுக்கு வேறென்ன வேலை....?'. ன்னு உங்க பசங்க முன்னாடியே கேக்கறீங்க.... அவங்க எப்படி எங்களை மதிப்பாங்க????
கொஞ்சம் உங்க பசங்ககிட்டே சொல்லிக் கொடுங்க... "பாடம் சொல்லித் தரவங்களை தெய்வம் ரேஞ்சுக்கெல்லாம் வேண்டாம்..மனுஷப் பிறவிகளா மதிச்சு நடங்க...."ன்னு..
எனத் தாழ்ந்த குரலில் அந்த ஆசிரியை பேசி முடிக்க,
திகைத்து நின்ற அந்தத் தாயினால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இந்த இளம் ஆசிரியையைக் கூட்டிச் செல்ல வந்த தன் அப்பாவை பார்த்ததும்...
"போலாம்ப்பா...." எனக் கம்மிய குரலில் கூறியவாறே.. விழிகளில் துளிர்த்த நீரைப் பிரயத்தனப் பட்டு உள்விழுங்கிக் கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்... செய்வதறியாமல்
அந்தப் பெண்ணின் பின்னாலேயே போக எத்தனித்த என் மனதைப் பிடித்து இழுத்துக் கொண்டு, வீடு திரும்பினேன்.
ஷண்முக வடிவு
==========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...