Followers

Monday, February 10, 2020

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானத்தினால் ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுதூட்டுவதற்காக ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தின் வடக்கு வீதியில் அமைந்துள்ள சிவாச்சிரமத்திற்குச் சொந்தமான பெரியபரந்தனில் உள்ள நெல்வயலில் இம்முறை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சிவாச்சிரமத்தின் ஸ்தாபகர் அமரர் திருமதி தங்கம்மா நடராசா அவர்களின் இறுதி விருப்பப்படி பெரியபரந்தனில் உள்ளன நெற்காணிகளில் இம்முறை நான்கு ஏக்கர் காணி பரீட்சாத்தமாக நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அறுவடை நெல்லான சுமார் 110 மூட்டை நெல் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவை ஈழத்துச் சிதம்பர மாணிக்கவாசகர் மடாலயத்தில் இறக்கப்பட்டு அவித்து குற்றி கைக்குத்தரிசியாக்கி நித்திய அன்னதானம் வழங்க ஆலய ஆதீனகர்த்தாக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதே வேளை ஆலய நிர்வாகத்தினால் மாணிக்கவாசகர் மடாலயத்தில் முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நித்திய அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...