உங்களுடைய காரியம் கைகூடும்..................
நம்பிக்கையுடன் பாபாவை வணங்கும் எல்லா இடமும் துவாரகாமையியே! பாபாவை தவிர வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர்களாலேயே இது உணரப்படும். அப்படிப்பட்ட பக்தர் கடல் கடந்து இருந்தாலும் பாபா அவருடனேயே இருப்பார்.
தனக்காக எந்த விதமான பூஜை முறைகளையோ, விரதம் இருக்கவோ பாபா கூறியது இல்லை. அவர் கேட்பது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமே. பாபா மீது அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இயலாத காரியம் என்று எதுவுமில்லை.
என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக
--- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
=========================================================
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
- ஐயன் திருவள்ளுவர்.
அதிகாரம் 38. ஊழ் - திருக்குறள்
என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக
--- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
மிருகம் மனித நிலைக்கு உயர்வது கடினம்,ஆனால் மனிதனால் தெய்வநிலைக்கு உயரமுடியும்.
அதற்கு மனிதன் மனம் வாக்கு காயத்தால் சக மனிதனை (ஏல்லா உயிரினங்களையும்) காயப்படுத்தி வேதனைப்படுத்தாமல் அன்புகாட்டி அரவணைத்து வாழ்ந்தால் தெய்வீகம் சித்திக்கும்.
அருளுகின்றார்
அன்பு பகவான். ஓம் ஸ்ரீ சாயி ராம் சுவாமி....
=======================================
No comments:
Post a Comment